15 Feb 2018

ஆண்டாள் அரசியல்

2018 , ஜனவரியில் கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பற்றிக் கூறிய
 ஒரு விமர்சனத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மற்றும் பாஜக கட்சியின் தலைவரும் காத்திரமாக எதிர்த்தனர்.
ஊடகங்களும் அதை நன்றாக விற்பனைப் பொருளாக்கி, தமிழரின் மிகு உணர்ச்சிக்கு வித்திட்டனர்.
வைரமுத்து மன்னிப்புக் கேட்கணும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்.
பின்பு கொஞ்சநாள் சூடு ஆறியவுடன் மீண்டும் ஜீயர், வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்புக் கேட்கணும் “ என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார் (ஒரு நாள்).பின்பு அங்கு இருட்டுக் கட்டிக் கொண்டது. ஜீயர் உண்ணாவிரதத்தை உடன் முடித்துக் கொண்டுவிட்டார்.
ஜீயர் வைணவர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேசன் பொறுப்பாளர் ( in charge ). வைரமுத்துவை ஸ்டேசனில் வைத்து விசாரணை நடத்தணும் என்று மதக் காவலர் கவலைப்பட்டார் போலத் தெரிகிறது.
குற்றம் நடந்தது ராஜபாளையத்தில். ஆனால், அது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்டேசனுக்கு பாத்தியப்பட்டது என்ற இந்த மதப்போலீஸின் எண்ணப்போக்கிற்கு சாட்சி உண்டு.
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் என்ற பெரியாரின் தொகுப்பு நூல் தொகுதி, பக்கம் 74-ல் ஜீயர் ஏன் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து மன்னிப்புக் கேட்கணும் என்றார் ?; மன்னிப்புக் கேட்டால் வைரமுத்து குறைந்தா போவார் என்ற வாய்ச்சொல் வேறு .இதன் காரணத்தை அறியவே பின்னோக்கி காலச்சக்கரத்தை நகட்டினோம்.
பெரியார் பார்ப்பன அயோக்கியத்தனம் என்ற தலைப்பிட்ட கட்டுரையில்,
  .... பொது ஜனங்களை ஏமாற்றி வாழலாம் என்கிற கவலையில் இருக்கின்றார்களே யொழிய வேறு ஏதாவது மானம், அவமானம், சுரணை, இழிவு என்பதைப் பற்றி கொஞ்சமாவது உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கின்றார்களா ?
.....“ உதாரணமாக, பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க ஸ்ரீமதி முத்துலக்ஷ்மி அம்மாளவர்கள் எடுத்துகொண்ட முயற்சிக்கு விரோதமாக ஒரு‘ பிரபல தேசியவாதி என்கிற பெயர் பெற்ற ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னது என்ன என்பதை சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள். அவர் என்ன சொன்னார்.பெண்களை கடவுள் பேராலும் மதத்தின் பேரால் பொட்டுக் கட்டி விபச்சாரத்திற்கு விடுகிற வழக்கம் தப்பு என்பதாக இன்று நாம் ஒரு முடிவு செய்து விடுவோமானால் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் வரதராஜுலு நாயுடுவும் நாளைக்கு கோவிலில் சுவாமிக்கு (தரகர்கள்) அர்ச்சகர்கள் வேண்டியதில்லை என்று சொல்வார்கள். அதையும் கேட்க வேண்டியதாய் ஏற்பட்டுவிடும். ஆதலால் கண்டிப்பாய் மதத்தில் பிரவேசிக்க (அதாவது ,எவ்வித சீர்சிருத்தமும் செய்ய) இடம் கொடுக்கக்கூடாது ”.
பிராமண மேலாதிக்க மனப்பாங்கு (attitude) என்னவென்று இப்போது
புரிந்துகொள்ள இது ஒரு உதாரணம்
இது வைணவ மேலாதிக்க அரசியல் கருத்தாகும்.
க.செ

1 comment:

  1. மு. இராமமூர்த்தி8 March 2018 at 14:54

    இது அரசியல் களத்திலும் நடப்பு கணக்காக மாறிக்கொண்டிருக்கிறது. சின்ன காஞ்சியின் மேல் காட்டிய வேகம் சோடா பாட்டில் ஜீயர் மேல் காட்டாமல் திமுக தன்னுடைய வைணவ பாசத்தை காட்டியது.ஆரம்பத்தில் திமுக அடிநாதத்தில் வைணவ எதிர்ப்பை கொண்டிருந்தது. இராமனுஜரை என்று கருணாநிதி தேடினாரோ(தன் பிழைப்புக்குத்தான்) அன்றே தமிழக அரசியலில் monopolyயாக வைணவம் உலாவிக் கொண்டு வருகிறது.

    ReplyDelete