பாராளுமன்றவாதிகளுக்கு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கத்
தெரிந்திருக்கிறது.
பல தேசிய இனங்களின் கூட்டை, ஒரே தேசம் என்று புனைவு (Fantasy) பண்ணுகிறார்கள்.
இந்தப் புனைவில் மாபெரும் உண்மையை
மறைக்கவும் செய்கிறார்கள்.
தேசிய இனங்களின்
சட்டசபைகளுக்குள்ள வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்துவிட்டதை மறைத்துவிட்டார்கள்.
சில மாதங்களுக்கு முன் பண
செலாவணியில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ஒரு கூத்தடித்து ஓயவில்லை. இப்போது வரி விதிப்பதற்குள்ள சட்டசபையின்
உரிமையை பறித்துவிட்டார்கள். இனி சட்டசபை
உப்புக்கு சப்பாணியாய் போலீஸ் துணையுடன் இருக்கும்.
பெரும்பாலும் வரி அதிகம், விலை ஏறும் என்று பொருளாதார வாதம்
( Economism )
பேசுகிறார்களே ஒழிய தேசிய இனங்களின் சட்டசபையின் அங்கவஸ்திரம், டவுசர்
எல்லாம் மோடி பிடுங்கிவிட்டார் எனபதை இன்னும் உணரவில்லை போலும்.
உனக்கு செருப்புப்போடும்
உரிமை இனி கிடையாது என்று சொன்னபிறகும் கூட செருப்பு விலையை குறைக்க குரல்
கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
மிகச் சாதாரணமான
போராட்டத்திற்குக் கூட குண்டர் தடைச் சட்டம் (மே 17 இயக்கத்திற்கு) போட
ஆரம்பித்துவிட்டது சுய அடையாளமில்லாத
மந்திரிசபை உடைமையாளர் குழு.
1000 ரூபாய் நோட்டு இயக்கமும்,
புதிய வரிவிதிப்பு முறையும் எப்படி அரசியல் தளத்திற்கு வந்தது என்று
எண்ணிப்பார்த்தால், மாயக்கள்ளன் மாதிரி ஒரு நாள்,
“ நமது பொருளாதாரம்
பற்றிய முக்கிய முடிவுகள் பொது விவாதம் இன்றி, மிக ரகசியமாக, மூலதன ஆட்சிக்கான
வழிவகைகளைக் கட்டமைக்கின்றன ”.
ஐரோப்பாவின் TISA [ Trade in
Services agreement ( சேவைத் துறைகளில் வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் ) ] ஒப்பந்தங்கள் மாதிரி ஜனநாயகத்தை
குப்புறப் புரட்டிப் போட்டுவிட்டு பொருளாதார சுதந்திரத்திற்கு வெண்சாமரம்
வீசுகின்றனர் சுய-மரியாதை ( self - esteem ) அற்றவர்கள். ......( சிசாக் )
“ இன்றைய முதலாளித்துவ உறபத்திச் சூழலில் சுதந்திரம் என்பது, சுதந்திரமான சந்தை,
சுதந்திரமான வர்த்தகம், சுதந்திரமான விற்பனையும் கொள்முதலும் என்றே பொருள்படும் ”
“ சுதந்திரம் என்பது
சுதந்திரமான மூலதனத்திரட்டலாகும் ”;
தம் குழந்தைகளின் கல்விக்கட்டணம்
ஏறுமுகமாகவே இருக்கிறது. பின் எப்படி அரசு
ஊழிய உடம்பு லஞ்சத்தைக் கைவிடும்.
கல்வித்துறையையும் முற்றிலும்
மத்திய அரசிடம் அடகு வைக்கப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தொழிற்கல்வி, மருத்துவம், பல்கலைக் கழகம்
உள்ளிட்டு கல்வியானது ஏற்கனவே மத்திய-மாநில பொதுப்பட்டியலுக்கு
மாற்றப்பட்டுவிட்டது.
கூடங்குளம் அணுஉலைப் போராளித்
தமிழர்களைச் சமனப்படுத்த, “ அணுஉலையை மறுத்தவர்களுக்கு இங்கிருந்து மின்சாரம் கேட்க உரிமை இல்லை; கூடங்குளத்தில் உற்பத்தியாகும்
மின்சாரம் அனைத்தும் தமிழகத்திறகே” என்று மத்திய எரிசக்தி , சுரங்க அமைச்சர் பியூஸ்கோயல் கூறி, அண்டை மாநில உறவைச் சீர்குலைக்க எத்தனிக்கிறார்.
அரசியல் தளத்தில் இதன்
மறுபக்கம்.;
ஒரு பக்கம் பயங்கரவாதம், மற்றொரு புறம் எல்லையில் பாகிஸ்தான் ,
இமயத்தில் சீனா, தென் கடலில் தினந்தோறும் மீன்பிடித் தமிழர் சாவு , சிறைபிடிப்பு .
ரஜினி / கமலின் அரசியல் பற்றி பட்டிமன்றம் , கருத்து விவாதம் , சரி / தப்பு ; வெங்காய விலையோ டெல்லிவரை, தக்காளியோ பவுன்விலை ; இதில் வெட்கம் இல்லாதவர்கள் விலைவாசி
குறைந்துவிட்டது என்கிறார்கள்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 73 குழந்தைகள் மரணம்.
ஜெ. இறந்து மாதங்கள் பல
கடந்தபின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் கமிஷன் அமைக்கப் போகிறார்களாம்.
ஜனநாயகம் என்றால் என்ன என்று
ஆளும்கட்சியும் அவர்களின் துந்துபி தொலைக்காட்சி ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக்
காட்டுகின்றனர்.
இன்றும் விவசாயிகள் மௌனராகம்
பாடுவது ஏன்? இனியும் என்ன நடக்க
வேண்டும், நாட்டுக்குள் சுனாமி வீசவேண்டுமா?
இலவசத்திற்கு
அடிமையானவர்கள் EVIL- க்கு துணை போவதில்லையா? விலங்குக்கு (மாடு) பரிகாரம் தேடும்
அரசியல்வாதிகள் விவசாயிகளின் தற்கொலைக்கு பேச்சைக் கூடக் காணவில்லை.
ஜனநாயகப் பற்றாக்குறை
ஜெ. இறந்தபிறகு ஜனநாயகப்
பற்றாக்குறை மற்றொரு வடிவம் எடுத்துள்ளது.
பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் சட்டசபையை இடம் பெயர்த்து ( replace ) விட்டு அதிமுக-வின் அணி வாரியாக எரிந்த கடசி, எரியாத கட்சி என மூச்சு முட்ட
பேசுகிறார்கள். ஓரணி, மைனாரிட்டி M.L.A-க்களின் விலைப்பட்டியல்
MRP
Rating - ஆக ஆகிவிடும் போலிருக்கிறது.
தமிழக சட்டசபைக்குப் பதிலாக M.L.A-க்களின் தொலைக்காட்சி பேட்டி, மாறி மாறி, இதில் சரி / தவறு என
பேசுகிறார்கள்.
விவசாயிகள் தண்ணீருக்காக கதறிக் கொண்டிருக்கிறார்கள் ;
நகரத்துக்கு ஆற்று மணல் கடத்தப்படுவதுடன், இப்போது தண்ணீர் இருக்கும் கிணறுகளை
விலைபேசி நகரத்திற்கு தண்ணீர் கடத்தப்படுகிறது. விரைவில் அமேசான்.com –ல் என்னென்ன இலவசங்களுடன், குடம்
தண்ணீர் எவ்வளவு என்று நடிகை ஒருவர் கூறுவார்.
ஜனநாயகம் என்பது குறுங்குழு
வாதமாகிப் போய்விட்டது. அதை வெட்கமில்லாத
ஊடகங்கள் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி இப்தார்
விருந்து (முஸ்லீம்களுக்கு) கொடுக்கவில்லை.
உ.பி. முதல்வர் தாஜ்மஹாலை இந்திய பாரம்பரிய சின்னம்
என்று கூறமாட்டாராம். கீதையையும், ராமாயணத்தையுமே
பூர்வீகம் என்று கூறுவாராம். இதராகள் மீது
இவ்வளவு பகைவெறுப்பு கொண்டவர்கள் இவர்கள்.
இவர்களிடம் எப்படி ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது?
இவ்வளவு தூரம் , மனத்தை வக்கிரம் ஆட்சிசெய்யவிட்டவர்களிடம் ETHICS-ஐ (அறநெறி) எப்படி எதிர்பார்க்க முடியும்?
க.செ
No comments:
Post a Comment