19 Apr 2017

முஸ்லீம் சகோதரிகள் மீது பிரதமரின் கருணை..!?

[ “ MUSLIM  SISTERS SHOULD GET JUSTICE ” …. ]

          ககட்டுரையை எழுதத் தூண்டியவர் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
      விதுரர் கூறியது :
      குற்றம் நடைபெறும்போது , அதைப் பார்த்துக்கொண்டு , அமைதியாக இருப்பவர்களும் அந்தக் குற்றத்தைப் புரிந்ததற்குச் சமமே . அதைப்போன்ற நிகழ்வுதான் இதுவும் என்பார்  விதுரர் “.   
- தி இந்து.18-4-2017
       இவர் நெஞ்சைத் தொட்டது யார் ? 
       பதிலை நரேந்திர மோடி ,பிரதமர் சொல்கிறார்
             “ MUSLIM  SISTERS SHOULD GET JUSTICE
            “ not questioning the validity of triple  talaq….but want to end exploitation
-The Hindu 17-4-2017
அதாவது , “  இஸ்லாமியர்களின் முத்தலாக் முறைக்கு முடிவு கட்டுவது அவசியம் என்கிறார்.                                            
 மோடியின் முஸ்லீம் சகோதரிகள்  ‘அதிர்ஷ்டசாலிகள்என்று கூடச் சொல்லலாம் . ஏனெனில் , இந்து என்று சொல்லிக்கொண்டு , ஊரிலிருந்து தள்ளிவைக்கப்பட்டு வாழும் தலித் சகோதரர்களுக்கு இன்னும் இந்த வாய்ப்பை  யோகியும் கொடுக்கவில்லை ; நரேந்திர மோடியும் கொடுக்கவில்லை.
ஏன் , இவர்களின் “ஆதி“  மனு நீதியும் தலித்துகளுக்கு நீதி வழங்கவில்லையே ? அதனால்தான் முஸ்லீம் சகோதரிகள் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறத் தோன்றியது.
யோகி , மோடியின் கரிசனம் எங்கிருந்து வருகிறது ?
வள்ளலார் கூறினாரே “ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் “ என்று , அப்படிப்பட்ட அன்பா இது ?
பா.ஜ.க ; ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பிற்கு தொடக்கத்திலிருந்தே முஸ்லீம் மதத்தின் மீது தீராக் கோபம் / வெறி. இந்த நோய்க்குறி அப்பட்டமாக வெளிப்பட்டது பாபர் மஸ்ஜித் இடிப்பில் ; குஜராத் கலவரத்தில் முஸ்லீம் உடல்கள் சிதைக்கப்பட்டன ; தீ வைப்பும்தான்.
இப்படிப்பட்ட மனம் உண்மையில் முஸ்லீம் பெண்களுக்காக நிற்குமா ?
தன் வீட்டில் தலித்துகளை புழக்கடையில் வாழ விட்டுவிட்டவர்கள் இவர்கள் . இவர்களிடமிருந்தா “ நீதி “ கிடைக்கும் .
‘ முத்தலாக்’-ன் கொடுமையை முதலில் சொல்லாடலாக நாடு முழுவதும் பரப்புரை செய்வதன் மூலம் முஸ்லீம் மனத்தை அவமானத்திற்கு உள்ளாக்குகிறார்கள் ( humiliation ). அவமானத்தில் கூனிக் குறுகி குனியவைக்க நினைக்கிறார்கள் .
முஸ்லீம்களை , மாட்டுக்கறி , முத்தலாக் போன்றவற்றை ஊதிப் பெருக்குவதின் மூலம் இவர்களை ஆட்டிப்படைக்கும் ஊன்றிய கருத்து வெறியால் ( Obsession ) இவர்கள் இயக்கப்படுகிறார்கள்.
மன அலசல் படி இதனை Obsessional Neurosis  எனலாம் . இதன் மூலம் அடையும் மனப் பதட்டத்தால் , இஸ்லாத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க இந்தப் பிரச்சினையை பயன்படுத்துகின்றனர் எனலாம் .
முத்தலாக்கில் அக்கறை காட்டும் விதுர நீதி ; கவுரவக் கொலைகள் நாடு முழுவதும் பரவிக் கொண்டேதானே இருக்கிறது . இதற்கு விதுர நீதி , யோகி ஆதித்யநாத் நீதி மவுனம் காக்கிறதே ! மாட்டைக் காப்பது சரி ; அத்துடன் கவுரவக் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்படும் திருமணமான பெண்களைக் காப்பாற்ற விதுர நீதி செல்லாதா ? கொலைக் களத்தின் பலி ஆடுகள் உங்கள் இந்து சகோதரிகள்தானே !?
மன அலசலில் இருக்கும் FANTASY பற்றிய கருத்து இங்கு முக்கியமாகிவிடுகிறது.
ஏனெனில் , பா.ஜ.க . எப்போதுமே இந்து மதம் பற்றிய புனைவுருவை ( fantasy )  தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் குணாம்சம் கொண்டது.
விநாயகனுக்கு யானைத் தலை “. இதுபற்றி மோடி கூறுகையில் ,பாரதத்தில் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை முறை இருந்திருக்கிறது என்று சொன்னவர் . இவர்களின் புனைவிற்கு அளவே இல்லை.
புனைவு பற்றி மன அலசல் கூறுவது ;
புனைவு  இயல்நிலை கடந்தது , பேரின்பமளிக்கக் கூடியது , இணக்கமானது ( beatific , blissful , harmonious ) என்ற ஒரு கருத்தும் உண்டு.
ஆனால் , இந்த நாணயத்திற்கு மற்றொரு பக்கமும் உண்டு . அதன் பிரதான வடிவம் காழ்ப்பு / பொறாமையாகும் ( jealous ) .நீங்கள் காழ்ப்பு / பொறாமையால் ( jealous )  பீடிக்கப் பட்டிருக்கும்போது , மற்றவர்கள் என்னை எப்படி ( மோசமாக ) நடத்துகிறார்கள் ; மற்றவர்கள் எப்படியெல்லாம் சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது குறித்தே கவனம் செலுத்திக் கொண்டிருப்பீர்கள் என்கிறார் சிசாக்.
சர்வாதிகார , ஒரு கட்சி ஆட்சிமுறைக் கருத்தியல்கள் ( totalitarian ideologies ) ; ஒரு கட்சி ஆதிக்கமுடைய , எதிர்க் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்கு உரியதாக உள்ள கருத்துகள் , கருத்தியல் நடத்தைகளுக்கு , அவர்கள் சார்ந்த அனைத்துப் புனவுருக்களும் ( மதம் உட்பட) தெய்வீகமானது , பேரின்பம் அளிக்கக் கூடியது ; மற்ற புனைவுரு கீழ்த்தரமானது என்ற இரு கருத்துகளும் உண்டு . அதுவும் மற்றொன்று அனைத்தும் கீழ்த்தரமானது என்ற கருத்தும் உண்டு .
இதன்படி பா.ஜ.க-வினர் இஸ்லாமியரை , இஸ்லாமியத்தை , அவர்களுக்கே உரிய கலாச்சாரத்தைக் கொச்சைப்படுத்துவதும் , சிறுமைப்படுத்துவதும் இவர்களின் சர்வாதிகார கருத்தியலிலிருந்தே ( totalitarian ideologies )  வருகிறது . இதிலிருந்தே அவர்களுடைய அரசியல் கருத்துகளும் , கருணைப் பார்வையும் கூட உருவாகிறது .
முத்தலாக் பற்றி வேறுபட்ட , ஆணாதிக்க கருத்துக்கு மாறுபட்ட பார்வையும் எண்ணப்போக்கும் உண்டு. உதாரணத்திற்கு , All  India Muslim personal  law board warned on Sunday ,
…. Whoever gives triple talaq without valid Shariyat reasons will be boycotted by the society …so that  such  cases does not  arise  in  future ”                                  – The Hindu 17-4-2017
[ ஷரியத் சட்ட விதிகளுக்கு மாறுபட்டு முத்தலாக்கைப் பிரயோகிக்கும் எவராக இருப்பினும் , அவர்கள் முஸ்லீம் சமூகத்தால் விலக்கிவைக்கப்படுவார்கள் என்று அகில இந்திய  முஸ்லீம் தனிமனித உரிமை சட்ட வாரியம் எச்சரிக்கிறது . ....இதன் மூலம் இவ்வகையான சம்பவங்கள் எதிர்காலத்தில் எழாது என்கிறது ]
முத்தலாக்கை ஆணாதிக்க வாதம் ஏதோவொரு வகையில் நீடிக்க வைக்கத்தான் முயற்சிக்கும். பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்க்கின்ற போக்கு இருக்கும் வரையிலும் , பெண்களை ஒரு தன்னிலையாக ( subject ) , ஒரு உயிரியாக ( being ) பார்ப்பதற்கு இடம் கொடுக்காது ஆண் ஆணவம்.
சர்வாதிகாரமும் , ஒரு கட்சி ஆட்சி முறைமையும் ( totalitarianism ) ஆணாதிக்க மையவாதத்தின் பிடியில் இருப்பதுதான் . ஆகவே , முஸ்லீம் சகோதரிகளின் விடுதலைக்கான ஆட்டமல்ல இவர்களின் ஆட்டம் . பொது சிவில் சட்டம் என்னும் அடக்குமுறைக்கான ஒரு தப்படி எடுத்து வைக்கிறார்கள் என்று வேண்டுமானால்  இதைப் புரிந்து கொள்ளலாம் .
க.செ

Ref :  Interrogating The RealSlavoj  Zizek

No comments:

Post a Comment