ராபின் வில்லியம்ஸ் மறைவிற்கு…..
கமல்ஹாசனின் புகழஞ்சலி.
“திரையில் ஆண் அழுகைக்கு கண்ணியம்
தந்தவர். ஹாலிவுட் நடிகர் ராபின்
வில்லியம்ஸ் என்று அவருக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு இரங்கல்
தெரிவித்து அவர் இன்று வெளியிட்ட செய்தியில், ” நகைச்சுவையாளர்கள் அனைவருமே சமூக
விமர்சகர்கள்தான். தங்களது கோபத்தை நகைச்சுவை என்ற முகமூடியை வைத்து மறைத்துக்
கொள்கின்றனர். ஆனால் தொடர்ந்து அப்படியான
வேடிக்கை முகத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தால், அது மன அழுத்தத்தில் முடியும்.
நடிகர் ராபின் வில்லியம்ஸின் உண்மையான
இயல்பு, எளிதாக அழுவதே. இதை அவரது திரைப்படங்களில் நீங்கள் பார்க்கலாம். 60-களில் அவரால் அமெரிக்க சினிமாவில் நாயகனாக
பரிமளித்திருக்க முடியாது. ஏனென்றால், அந்தக் காலத்தின் நாயகர்கள் யாரும்
திரையில் அழுவதற்கு துணிந்ததில்லை.
வியட்நாம் போர்தான் அமெரிக்காவின் இந்த மனோபாவத்தை மாற்றியது.
திரையில் கூச்சலிட்டும், பீதியில்
அழுவதையும் செய்த முதல் ஆக்ஷன் ஹீரோ ராம்போ .
ஆனால், ராபின் வில்லியம்ஸ் திரையில் ஆண்கள் அழுவதற்கு ஒரு கண்ணியத்தை
எடுத்து வந்தார். அவரது திறமைக்காக நான்
அவரை ரசித்தேன்.
ஒருவேளை அவர் தற்கொலை செய்துகொண்டது
உண்மையென தெரியவந்தால், தனது வாழ்நாள் முடியும் முன்பே தன்னை மாய்த்துக்
கொண்டதற்காக அதற்காக நான் அவரை வெறுக்கிறேன்.
இப்படி வாழ்க்கையிடமிருந்து தப்பிக்கும்
குணம், கலைஞர்களிடமிருந்து நான் எதிர்பார்க்காத ஒன்று. எனது இந்திய ஆதர்ச படைப்பாளி குரு தத்-துக்கும்
இது பொருந்தும்”
என்று நடிகர்
கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த ’அவ்வை சண்முகி’க்கு தூண்டுகோலாக அமைந்தது, ராபின்
வில்லியம்ஸின் ’மிசஸ் டவுட் ஃபயர்’ என்பதும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-சின்
அசலான முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்தின் மூலக்கதைக்கு துணை புரிந்தது. ராபின் வில்லியம்ஸின் “பேட்ச் ஆடம்ஸ்”
என்பதும்
குறிப்பிடத்தக்கது
”. (-http// tamil.
the hindu.com 12-8-2014)
ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின்
மறைவிற்கு கமல்ஹாசன் நீண்ட இரங்கல் செய்தியை வாசித்தவுடன் ஒரு ஆச்சரிய / புதிரான
எண்ணம் தோன்றியது.
யாருக்கு இரங்கல் செய்தியைச் சொன்னாரோ.....
அவரையே “நான் அவரை வெறுக்கிறேன்“ என்று அந்தச் செய்தியிலேயே கூறியிருக்கிறார்.
இரங்கல் செய்தியின் துவக்கத்தில் வேண்டிய
அளவு இறந்தவரை பாராட்டியும் இருக்கிறார்.
பின்னர்தான்
அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால் ......
என்று (ஒரு condition வைத்து ) சொல்லிவிட்டு வெறுக்கிறேன்
என்கிறார்.
இது முரண்பாடல்ல. மன அலசல் ஆய்வின்படி,
இது கமலின் நனவிலியாக Love
& hate உறவிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது.
அப்போது கமலின் சித்தத்தில் ஏற்பட்ட
இல்லாமை- குழந்தை முதன்முதலாக தாயிடமிருந்ததை இல்லாமையாக உணர்ந்த அந்த ஆதி உணர்வு-(Lack) உணர்வானது சிம்பாலிக்காக / மொழியில்
வெளிப்படுத்த முடியாத ஒரு uneasy- யை, “அந்த ஓடிப்போனவரை (வாழ்க்கையை
விட்டுவிட்டு) நோக்கி எழுப்பிய குரல்தான் “வெறுக்கிறேன்”. இப்போது அது கமலின் personal Trauma
(மனக்காயம்). (சித்த இருப்பின்)
அடையாளத்தின் ஓரத்தில் ஒரு பங்கம். ஊனமது. தாங்க முடியாத வலி.
இறப்பு என்ற எதார்த்தத்தின் மீது அவருக்கு
வெறுப்பில்லை. அத்தோடு மரணத்தை ஏற்க
மறுக்கவும் இல்லை. மாறாக, அவர் “வாழ்நாள்
முடியும் முன்பே தன்னை மாய்த்துக் கொண்டதற்காக.... நான் அவரை வெறுக்கிறேன்“. அதாவது சாவின் பொறுப்பை, தன் உயிர்
அழிப்பின் பொறுப்பை மனிதன் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறார் எனலாம்.
தனது
மகிழ்வு களவு போய்விட்ட உணர்வு (castrated)
அப்போதைய சித்தத்திற்கு,
அதனால்தான் காலம் கடந்து குருதத்திற்கும்
அதை நினைவூட்டுகிறது போலும்.
மேலும் “இப்படி
வாழ்க்கையிடமிருந்து தப்பிக்கும் குணம் கலைஞர்களிடமிருந்து நான் எதிர் பார்க்காத
ஒன்று“.
அது
கமலைஒரு “ Social
critic ” காகவும்
மாற்றிவிட்டிருக்கிறது எனலாம்.
கமலின் மனப்பாதிப்பு (affect)
மன அலசல்படி,
மேற்கூறியதை,
“ குறியீடாக (symbolic
-ஆக ) மொழியில் /
கலாச்சாரமாக கட்டமைக்கப்பட்டு கைமாற்றப்பட்டிருக்கிறது இங்கு எனலாம். மன அலசல் இது பற்றி கூறும்போது மனப்பாதிப்பு
குறியீட்டு கட்டமைப்பாக (symbolic construction )
உள்ளது“ என்கிறது.
“கலாச்சாரம்
மன எழுச்சியை (emotion -ஐ) ரத்தமும் சதையுமான குறிப்பானாக்குகிறது (signifier)“.
-
கிரிஷ்ணர்
-
The cultural
construct of affect
தப்பிக்கும் குணம் என்பது ஒரு
வலியிலிருந்து வருவது.
தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் உரிமையை
எப்போது மனிதன் கையிலெடுப்பான் என்பதை எந்த ஆருடமும் கணிக்க முடியாதுதானே!
இருத்தலின்
அத்யாவசியம்- உயிரியாகவும்
உயிர்ப்பாகவும் = (existential need) கேள்விக்குள்ளாகும் பொழுது நேர்கோட்டுப்
பிரயாணம் கேள்விக்குள்ளாகிறது.
மகிழ்வற்றதின்
மகிழ்வு ( “ The pleasure of unpleasure “)
“ what
is pleasure for one system is (super ego) unpleasure for another one (ego)”.
இது நனவிலியின் பொதுவான கூற்று. சித்தத்தின் ஒரு ஏஜென்சிக்கு மகிழ்ச்சியானது
(பேரகன்) மற்றொரு ஏஜென்சிக்கு மகிழ்வற்றதாக (ego ) உள்ளது.
பொதுவாக, மனித சித்தக் கட்டமைப்பு
ஏஜென்சிகளான –Id,
Ego, Super ego, Ego ideal
- இவைகளில் super ego -விற்கு மகிழ்வாக இருப்பது – Pain , சுய அழிப்பு - மற்றொரு ஏஜென்சியான Ego-விற்கு மகிழ்வற்றதுதான். ஆனாலும் பேரகனின் மகிழ்வு பொதுவான வாழ்க்கை
முடிவாக இருக்கிறதே.
-
லேப்லாஞ்சி
-
Life & Death
in Psycho analysis .
[இதைத்தான் விதி முடிஞ்சுருச்சுன்னு
கிராமத்தில சொல்றாங்களோ]
க.செ.
No comments:
Post a Comment