6 Mar 2017

கல்விப்புல பிரபலங்களும் மக்கள் திரள் அறிவாளிகளும்

                               ( Between Public intellectual and Academic Celebrity )
                                                                                                                                 -Ebiran Bar – El.

              கல்விப்புல பிரபலங்கள் ” (  Academic Celebrity   ) குறித்த ஆய்வு புதியதல்ல.  இந்தத் தலைப்பில் இல்லாவிட்டாலும் பல ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் தொடர்கின்றன .  கல்விப்புல பிரபலங்கள் என்று கூறுவதன் மூலம் நாம் குறிப்பாக எதை , எவரை அர்த்தப்படுத்துகிறோம் ?  புதிய விசயங்களை வெற்றிகரமாக கண்டுபிடிக்கிற கல்வியாளர்களை  ( innovative academic ) நாம் குறிப்பிடுகிறோமா ?  உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளர்களை நாம் குறிப்பிடுகிறோமா ?  என்ற கேள்விகள் எழுகின்றன . 

பொதுவாக பரந்துபட்ட அறிவாளிகளையும் , குறிப்பாக மக்கள் திரள் அறிவாளிகளையும் ( Public intellectuals ) ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் , கல்விப்புல பிரபலங்கள் ( Academic Celebrity )  என்கிற பூடகமான சொல்லை சரியாக வரையறுப்பதற்கும் இக்கேள்விகள் உதவக்கூடும் .  ஆக , இதன் நோக்கம் இருபடியானதாகும் .  முதலாவதாக கல்விப்புல பிரபலங்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பது ;  இரண்டாவதாக , கல்வித்துறை ஆய்வுகளுக்குள் இப்பிரச்சினை எப்படிக் கையாளப்படுகிறது என்பதை விவாதிப்பதுமாகும் .

              கல்விப்புல பிரபலங்கள் (Academic Celebrity )   யார் ?

கல்விப்புல பிரபலங்கள் எனப்படுபவர் யார் ?  இவர்களுக்கும் மக்கள் திரள் அறிவாளிகளுக்கும் ( public intellectuals   ) உள்ள உறவுகள் என்ன?  மக்கள் திரள் தளமும் , கல்வித்துறையும் ஒரு சமூகத்தில் வேறுபட்ட தளங்களாகும் .  ஒரு சில மக்கள் திரள் அறிவாளிகள் ( கலைஞர்களைப் போல ) கல்விப் புலம் சார்ந்தவர்கள் அல்ல .  ஒரு சில கல்விப்புல பிரபலங்கள் மக்களுக்கு அறிமுகமற்றவர்களாக உள்ளனர் ( Bruno  Lator இவர்களுள் ஒருவர் ) ; ஒரு சிலர் இரண்டு பிரிவையும் சார்ந்தவர்களாக உள்ளனர் .

கல்விப்புல பிரபலங்கள் எனப்படுவோர் ஒரு உபகுழுவினர் ( sub - set  ) ஆகும் ; பாப் – கலாச்சாரம் அல்லது விளையாட்டுத்துறை சார் பிரபலங்களைப்போல இவர்களும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் , உதாரணமாக கல்வித்துறையில் , பணிபுரிபவர்கள் .  ஒரு சிலர் மக்களுக்கு அறிமுகமற்றவர்களாக இருந்தபோதிலும் அறிவாளிகள் ( intellectual ) என்ற பரந்தபட்ட பிரிவிற்குள் இவர்களை ஏற்றுக் கொள்ளலாம் .  அறிவாளிகளாக இல்லாத கல்விப்புல பிரபலங்கள் எவரும் இருக்க முடியாது .

கல்விப்புல பிரபலங்கள் கல்வித்துறையில் உள்ள தங்களின் உயர் அந்தஸ்தாலும் ( high  status ) , அங்கீகாரத்தாலும் பயன் பெற்றவர்கள் .   இவர்கள் பிறரால் அறியப்பட்டவர்களாக , கற்பிப்பாளர்களாக , பிறரால் பேசப்படுபவர்களாக (known, taught, talked about) உள்ளதால் கல்வித்துறையில் பெரும் பதவிகளை வகிப்பவரகள் ( occupy much room ) இசைத் துறையில்  Justin Bieber     போன்ற பிரபலமானவர்கள் இவர்கள் .  இவர்கள் வெகுஜனப் பிரச்சினைகளில் ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் .

மக்கள் திரள் அறிவாளிகள் ( Public Intellectual  )  யார் ?

மக்கள் திரள் அறிவாளிகள் எனப்படுவோர் வெகுஜனப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்துபவர்களாவர் (intervening in public affair) .

மக்கள் திரள் தளமானது , கல்விக் கழகங்களிலிருந்து வேறுபட்டதாகும் .  உதாரணமாக , லண்டனும் , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் ;  நியூயார்க்கும் ஏல் பல்கலைக்கழகமும் வேறுபட்ட தளங்களாகும் .

மக்கள் திரள் அறிவாளிகள் , அவர்கள் செயல்படும் வழக்கமான தளத்தில் (routine field of activity ) ( கலை அல்லது அறிவியல் , இன்ன பிற தளத்தில் ) கண்டடைந்த குறியீட்டு ஆதாரங்களை / அறிதலை ( symbolic capital gained  ) , அரசியல் தளத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காகவும் , ஒட்டு மொத்த மக்கள் பிரச்சினையில் ஒரு நெறிசார் நிலைப்பாட்டினை ( ethical stand ) உருவாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்பவர்களாவர்.

             கல்விப்புல பிரபலங்களுக்கும் அறிவாளிகளுக்கும் இடையிலான உறவினை இப்போது பார்க்கலாம் .  முதலாவதாக , அறிவாளிகள் (intellectual ) உள்ளனர் , அறிவாளிகளில் சிலர்  கல்வித்துறை பிரபலங்களாக உருவாகிறார்கள் ; சிலர் (இவர்களாகக்கூட இருக்கலாம் ) மக்கள் திரள் அறிவாளிகளாக உருவாகிறார்கள் .

உதாரணத்திற்கு ஸ்லவோஜ் சிசாக் ( Slavoj Zizek ) இந்த விசயத்தில் குறிப்பிடத்தக்க ஒருவராவார் .  அவர் தத்துவ – சூப்பர்ஸ்டார் (  Philo – super star ) (1) அவர் ஒரு அறிவாளி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை (2) மக்கள் திரள் அறிவாளிகள் குறித்த மேற்கூறிய வரையறைப்படி சிசாக் நிச்சயமாக ஒரு மக்கள் திரள் அறிவாளியாவார் .  (3) கல்வித்துறைக்கு அப்பால் அவர் நன்கு அறியப்பட்டவர் . ஆனால், கல்வித்துறைக்குள் அவர் ஏற்கப்படுவதும் , அவரது புகழும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது  .  உதாரணமாக , பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ( syllabus ) அவர் பெருமளவில் கண்டுகொள்ளப்படவில்லை.  ஆக , கல்வித்துறைக்குள் அவரது பிரபல அந்தஸ்து (Celebrity) பெருமளவில் ஏற்கப்படவில்லை .  இந்த நிலைமையானது , அறிவாளிகளையும் , கல்விப் புலத்தவர்களையும் ஆய்வு செய்வதற்குரிய முக்கியமான விசயத்திற்கு வழிவகுக்கிறது .
              ......... சிசாக் தனக்கென ஒரு நிலைப்பாட்டினையும் ( Positioning  ) செயல்பாட்டையும் (performance ) கொண்டுள்ளார்.
நான் “ சிசாக் விளைவுகள் “ ( Zizek effects ) என்று குறிப்பிடுகின்ற கீழ்க்கண்ட முறைகளில் தனது கருத்துக்களை பரப்புகிறார் .அவை :

(1)     விமர்சகர்களுடன் தெளிவான /  பரந்துபட்ட தொடர்புகள் :  Intricate relation to critic  ) 

பெர்ரி ஆண்டர்சன் , ஜுடித் பட்லர் , அலென் பேடோ , ப்ரட்ரிக் ஜேம்சன் ( Perry Anderson, Judith Butler , Alain Badiou , Fredric Jameson  ) இன்னும் பலருடன் இணைந்து , உலகளாவிய சூழல்கள் குறித்த தீவிரமான , விமர்சன ரீதியான சிந்தனைப் போக்கில் முன்னணியில் உள்ளார் ;   உள்நாட்டுச் சூழல் குறித்த பிரச்சினைகளில் அவர் மூவரணியுடன் சேர்ந்து ஹெகலிய – லக்கானிய அடிப்படையில் ஆய்வுகளை முன்வைக்கிறார் .
                       (2)    இதழியலாளர்களுடன் ( Journalists ) நெருக்கமான உறவுகள்
9 / 11 மனக்காயம் , 2008 களின் பொருளாதார நெருக்கடிகள் முதல் அராப் வசந்தம் ( Arab Spring  ) , அகதிகள் பிரச்சினை வரை , உலகளாவிய மாபெரும் நிகழ்வுகள் குறித்து தனது கருத்தையும் ; ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கருத்துகள் இக்காலக்கட்டத்தில் எப்படி தங்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன என்பதையும் ;  இக்கருத்துகளுக்கு பதிலாக மாற்றுக் கருத்துக்களையும் இதழ்கள் மூலம் தொடர்நது முன்வைத்து வருகிறார் .

(3)    புத்தக வெளியீட்டு தொழிலில் உறுதியான நிலைப்பாடுStrong Position in the Publishing Industry    ) .
VERSO , MIT , DUK   போன்ற பதிப்பகங்களில் சிசாக் ஒரு பதிப்பாசிரியராக  (Editor ) பல ஆண்டுகளாள தனித்தன்மையான நிலைப்பாட்டினை பேணி வருகிறார் .  இந்நிலைப்பாடு அவரை மிகச் சிறந்த படைப்பாளராக ஆக்கியுள்ளது .  அவர் சுமார் 70 புத்தகங்கள் பதிப்பித்துள்ளார் .  பதிப்பாசிரியராக அவர் சக படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியுள்ளார் .

              4 ) பல்வேறு செய்திப் பரவல் சாதனங்களைப் பயன்படுத்துவது : -

பல்வேறு செய்திப்பரவல் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக அணுகக் கூடியவராக உள்ளார் .  அவரது புத்தகங்கள் , திரைப்படங்கள் வலைத் தளங்களில் கிடைக்கின்றன .  இவற்றின் மூலம் அவரது கருத்துரைகளையும் , போதனைகளையும் மணிக்கணக்காக பார்க்க முடியும் .  இவைகள் அறிவார்ந்த நடவடிக்கையில் பங்கேற்கின்றன .

              (5) கலாச்சார உணர்வுகளைப் பிரதிபலிக்கினற ஆய்வுகள் .
தற்போதைய உலகச் சூழலையும் , அதனை வரையறுத்தவர்கள் குறித்தும் அவரது சமசரமற்ற நிலைப்பாடானது அவரை ஒரு தார்மீகமான அளவுகோலாக ( moral compass)   கருதுவதற்கு இடமளித்துள்ளது .  ( குறைந்தபட்சம் இடது சாரிகளுக்கு )  ;  against the usual notion that any grand claim for truth and universality is doomed for being proto – facist .

       மேற்கூறிய 5 செயல்பாடுகளிலும் சிசாக் ஈடுபடுகிறார். அவர் தனித்துவமும் செயல்பாட்டுத் திறனும் கொண்ட சொல்லாடல்களைப் பயன்படுத்துகிறார் . பொதுவாக , அவரது மொழி தனித்துவமான ஒன்றாகும் . அவர் மக்கள் திரளால் வரவேற்கப் படுவதற்கும் , கல்விப் புலத்தால் புறக்கணிக்கப்படுவதற்கும் அவரது மொழி முக்கியமான காரணமாகும் . நோம் சாம்ஸ்கியுடனான ( Noam Chomsky )  விவாதங்களில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும் .
அவர் பிறரைச் சாடுகிறார் / சபிக்கிறார் ( curses ) ; ஆபாசமான எள்ளல்களையும் ( dirty jokes ) , AND ஜோக்குகளையும் பயன்படுத்துவதை தனது வழிமுறையாகக் கடைப்பிடிக்கிறார் . சிசாக்கின் விவாதங்களில் இந்த விசயங்கள் தன்னளவில் பெரும் பங்காற்றுகின்றன . அவை ஒரு கருத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் கருத்தை உருவாக்கவும் செய்கின்றன . ஹெகல் , லெக்கான் கருத்துக்களை கையாண்டுகொண்டு சிசாக் தன்னை ஒரு அறிவாளியாக ( intellectual ) நிலைநிறுத்திக் கொள்கிறார் ; அத்துடன் , மக்கள் திரள் போராட்டங்களில் மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு செயல் பாட்டாளராகவும் ( activist ) உள்ளார். பொது அறிவையும் , அன்றாட உதாரணங்களையும் பயன்படுத்தி மக்கள் திரள் போராட்டங்களுக்கு அர்த்தத்தை / நியாயத்தை ( meaning ) கொடுக்கிறார்.                                                                                                                               
                                                                                                                                         மொழியாக்கம் : பிட்சு


       குறிப்பாக , மேற்கூறியவைகள் அறிவாளிகளின் அடிப்படைக்குணாம்சமாகச் சுட்டப்படுகிறது . இங்கு , நமது சூழலில் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிகள் கூட விலை பேசப்பட்டதாக உள்ளது . இதையும் மீறித்தான் கல்வியாளர்கள் இயங்க வேண்டியுள்ளது . கல்விப்புலங்கள் எல்லாம் நிவாகத்தினரின் மனப்போக்கு ( mood ) பார்த்து இயங்குகின்றன. பொத்தாம் பொதுவான சுதந்திரம் மட்டுமே பேராசிரியர்களுக்கு உண்டு .

       இதை எதிர்த்த சமூகப் போராட்டக் களம் தயாரான மாதிரி காணப்படவில்லை என்ற விசனம் சில கல்வியாளர்களிடமிருப்பது உண்மைதான். ஆனால் , எதிரில் இருக்கும் மலை போன்ற நிலப்பிரபுவத்த அமைப்பை கேள்விக்குட்படுத்த ஒரு ஊழிக் காற்றாவது தேவைப்படுகிறது.

அது எங்கிருந்து புறப்படும் ? கல்விப்புலம் கடந்த சமூகத் தளத்துடன் உறவில்லாமலேயே இது நடப்பது சாத்தியமா ? ஒரு வெளிப்படையான விவாதம் சமூகத் தளத்தில் பேசப்படவேண்டிய அவசியம் தெரிகிறது .

வருமானம் லகரங்களை நெருங்க , நெருங்க பார்வையின் கோணங்கள் குறுகி விடுகிறது என்பதை அரசியல் ஆட்சியாளர்கள் தெரிந்துள்ளனர் . அதை நன்றாக உபயோகப்படுத்தவும் செய்கின்றனர். இதுவும் ஒரு தடைக்கல்தான் சமூகப் பார்வைக்கு.


       அறிவாளிகளின் தளம் ஆரோக்கியமாகப் படவில்லை . முதலாளியப் பத்திரிக்கைகளை உபயோகப்படுத்துவது வேறு ; அதை நம்புவது என்பது ( குத்தகைக்கு எடுப்பது ) வேறு. தொழில்முறை அரசியல்வாதிகளை (  professional politicians ) மையப்படுத்தும் போக்கும் கேள்விக்குரியதே . தொழில்முறை அரசியல் நடைமுறையை விமர்ச்சிப்பதும் பரபரப்புகளை ( sensational ) காட்சிப்படுத்தும் ஊடகங்களை அலங்கரித்து கருத்துரைகள் சொல்வதும் அறிவுப்புலத்திற்கு எவ்விதத்திலும் உதவி புரியாது .
ஆசிரியர்

க.செ

1 comment:

  1. Academic diaspora always handin glove with political machinery.... They ignore public intellectuals whoever rise outside of the'so called academicians'

    ReplyDelete