13 Feb 2017

வாடிவாசலைத் திறக்க மறுக்கும் கவர்னர்





தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டை, மீண்டும் வாடிவாசலை காளைகள் மிதிக்க வைத்தது மக்களின் தன்னிச்சைப் போராட்டம்.
ஆனால் , செயல்படாமல் இருக்கும் அரசு இயந்திரத்தை இயக்கும் சாவியான முதல்வர் பதவியை ( power ) கைப்பற்ற , தொழில்முறை அரசியல்வாதிகளின் அசிங்கமான இயக்கத்தை சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதில் கவர்னரின் இயக்கம் தனித்தன்மையானது . ஏன் ? எதற்கு ? என்ற எந்தக் கேள்விக்கும் பதில் கூறத் தயாராய் இல்லாத அளவிற்கு அது கட்டப்பட்டிருக்கிறது.
ஊடகங்களும் அதிகாரத்தின் சாத்யக்கூறுகளை பட்டியல் போட்டு ,பேட்டியெடுக்க வாடிவாசல் வீரர்களாய் செயல்பட்டனர்.
கவர்னரின் discrete power ( தனிப்பட்ட /தன்விருப்ப அதிகாரம் ) ஜனநாயகத்திற்கு விரோதமாக உள்ளது . நடப்பது ஆங்கிலேயராட்சி மாதிரி discrete power என்ற வானளாவிய அதிகாரத்தை அந்த கவர்னர் என்ற நாற்காலிக்கு ஏன் இன்னும் விட்டுவைத்துள்ளனர் ?. சட்டப்படி என்பதைவிட , நீதிப்படி என்பதைவிட discrete power ஐ ஏன் உச்சாணியில் இனியும் வைத்திருக்கவேண்டும் .
விசுவாச அரசியல் நெடி மக்களுக்கு இன்னும் குமட்டவில்லை .
“ இலவச சுகம் “ அப்படி.


விரைவில் வரவிருக்கும் கட்டுரை
........PUBLIC INTELLECTUAL & ACADEMIC CELEBRITY
இந்தியத் துணைக்கண்டத்தின் சமூக வெளியில் இதுபற்றி ஆய்வு உண்டா? தெரியவில்லை . ஆனால் , பொதுப்புத்தியில் அலங்கார மேடைப்பேச்சு , பட்டப்படிப்பு ,பட்டயம் போன்றவைகள் ( காசு கொடுத்து வாங்கியிருந்தாலும் ) அறிவின் சின்னமாக பேசப்படுகிறது . இது பற்றி ஒரு மேற்கத்திய பார்வையை அறிந்து கொள்ளலாமே.


.
க.செ

ஆசிரியர்

No comments:

Post a Comment