2 May 2016

வைகோ மனமாற்றத்தின் பின்னணி என்ன ?

                                                [ தி இந்து ஏப்ரல் 24 -2016 ]

“  தன்னை மையமாக வைத்து ஜாதி மோதலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் . அதற்கு நாம் இரையாகக் கூடாது என்று கூறிவிட்டு வைகோ கோவில்பட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை .
       சில அரசியல் கட்சித் தலைவர்கள் ,“ தோல்வி பயத்தால் போட்டியிலிருந்து விலகி விட்டார் “ என்று கூச்சமில்லாமல் கூறியிருக்கின்றனர்.
       வைகோவிற்கு வெற்றியும் தோல்வியும் பழக்கமானதே ; ஆகையால் தோல்வி பயம் என்று பேசுவது முறையற்றது .
       வைகோ தன் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நிகழ்ச்சியாக வடக்குத் திட்டங்குளம் கிராமத்தில் மாலை 5மணிக்கு முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முயற்சிக்கும் பொழுது அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் வைகோ , தேவருக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்....
       உடுமலைப்பேட்டை சங்கர் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததையும் அவரது மனைவி கவுசல்யாவுக்கு ஆறுதல் கூறியதையும் குறிப்பிட்டு வைகோவிற்கு எதிராக கோஷமிட்டனர் ; இது பிரச்சினையின் துவக்கம்.


இந்திய அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் சாதி ஆணவத்தின் Phallic Power – யை , தீண்டாமையை பரப்புவதை தேர்தல் கமிஷன் கண்டிக்காமல் வாய்மூடி மௌனம் சாதிப்பதேன்.

கொந்தளிப்பு வசப்பட்ட மனம்
       வைக்கோ மைக்கைப் பிடித்து  “ தேவர்-நாயக்கர் மக்களுக்கிடையே ஜாதி மோதலை உருவாக்க முயற்சி நடக்கிறது ;
       தேர்தல் சமயமாக இருக்கிறது . இல்லையெனில் 100 பேர் வேல் , கம்பு அரிவாளுடன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி எனக்குண்டு. துப்பாக்கிகளைக் கண்டு அஞ்சாதவன் நான். இதற்குப் பயப்பட மாட்டேன் என்று ஆவேசமாகக் கூறினார் ”.
       மன எழுச்சிக் கிளர்ச்சி உணர்வுகளைத் தவிர்த்துவிட்டு குறிப்பானை ( போட்டியிட மாட்டேன் சாதி மோதலை தவிர்ப்பதற்காக ) ஆய்வு செய்யமுடியாது . மேலும் மன உணர்வுகளும் இயல்பாக ஒன்றிணைந்துள்ளன . வார்த்தைகளானது உடல் சார் உருவங்களையும் ( bodily metaphor ) புலனுணர்வு சார்ந்த (sensual connotations ) கருத்துகளும் நிரந்தரமாக பிணைந்ததாக உள்ளன. மேலும் மன எழுச்சிகளை (emotions ) அவற்றின் உடல் ரீதியான மூலத்திலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாது “ சிசாக்  .
       வைகோவின் பேச்சு , உடல் மொழியின் பொருளை சிசாக்கின் மன அலசல் ஆய்வைக் கூர்ந்து படித்து புரிந்துகொள்ள முடியும்தானே !
       இந்து மக்கள் ஜாதி ரீதியாக பிளவுண்ட சமூகம்தான் . ஆனால் , சாதி மோதலைப் பற்றி கவலைப்பட்டது உண்மையாக இருக்கக்கூடும் ; வைகோவின் முடிவு இப்படி இருந்திருந்தால்......
       ஆனால் , வைகோ பாராளுமன்ற அரசியல் தன்னிலையாக முடிவெடுத்துவிட்டார். ஆணவ , ஆதிக்க சாதியினரின் இக்கிளர்ச்சி இவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு . தேர்தல் வெற்றியை இங்கு குறிப்பிடவில்லை .
       தேர்தலும் ஜாதியும் பிரிக்க முடியாத மகா கூட்டணி என்பது வைகோவிற்குத் தெரியாதா ?
       திருமணம் என்பது ஒரு அடிப்படைக் குடியுரிமை . மேலாதிக்கத்திற்காக (super power ) தயாராகப் போவதாக ( 2020 – வல்லரசு ) ஏகாதிபத்திய முடைநாற்றம் கொண்டவர்களுக்கு விளங்காது .
       உடுமலைப்பேட்டை சங்கர் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன ?
       சங்கர் தலித் . அவர்  , ஆதிக்க மனோபாவம் கொண்ட மேல் சாதியைச் சார்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் பண்ணியதால் , ஆதிக்க மனோபாவம் கொண்ட அவர்கள் சங்கருக்கு கொலைத் தண்டனை வழங்கி தன் சக சாதியினருக்கு தங்களைப் புனிதன் எனக் காட்டிக் கொண்டனர் .
      சுதந்திரம் பற்றி சிசாக் பேசும்போது ,       “ ஒரு தன்னிலை எந்த சமூகத்தைச் சார்ந்ததோ அந்தச் சமூகத்துடன் தன்னிலைக்குள்ள உறவில் குறிப்பிடத்தக்கதொரு முரணெதிர் இயக்கம் ( paradoxical thing ) உள்ளது . அச்சமூகம் தன்னிலையிடம் பின்வருமாறு கூறுகிறது . அதாவது , சரியானதை நீ தேர்வு செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உனக்கு தேர்வுச் சுதந்திரம் உண்டு ; உதாரணமாக , நீ சரியானதைத் தேர்வு செய்யவேண்டும் ; அதாவது, சூளுரையில் ( oath ) நீ கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் , சூளுரையில் நீ கையொப்பமிடுவதற்கு அல்லது கையொப்பமிடாமல் இருப்பதற்கான தேர்வுச் சுதந்திரம் உண்டு. நீ தப்பான தேர்வை மேற்கொண்டால் நீ தேர்வுச் சுதந்திரத்தையே இழந்துவிடுவாய் “ என்கிறது அச் சமூகம் .
       [ தமிழகத்தில் காதல் திருமணத்திற்கு நாங்கள் எதிரி அல்ல . ஆனால் , அது பெற்றோர் சம்மதத்துடன் ( ஈடிபல் கட்டளை ( oedipal law ) ) நடக்கவேண்டும் எனக் கட்டளையிடும் கட்சிகளும் உண்டு ].
சிசாக் மேலும் இதுபற்றி விவரிக்கிறார் :
       அதாவது , ஒரு தன்னிலையானது தனது சொந்தத் தேர்வுமுறையைச் சாராமல் அத்தன்னிலை ஏற்கனவே எந்தச் சமூகத்தைச் சார்ந்ததோ அந்தச் சமூகத்தின் தேர்வுகளுக்குள்ளேயே சுதந்திரமாகத் தேர்வு செய்யவேண்டும் என்கிற உண்மையில்தான் திணிக்கப்பட்ட சுதந்திரத்திற்கான ( forced freedom ) சூழல் உள்ளது .
      அதாவது,அவன் /அவளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதையே தேர்வு செய்யவேண்டும் “.
      இந்த ஈடிபல் கட்டளையை பெண் கவுசல்யாவும் சங்கரும் மீறி உள்ளனர் .
                ஆனால் , சங்கர் தலித் என்பதால் ஆதிக்க மனோபாவம் முதலில் சங்கருக்குத் தண்டனை
( கொலை) வழங்கியுள்ளது . ஈடிபல் நீதியை மீறிய பெண்ணும் தப்பிவிட முடியாது ; என்றாவது ஒருநாள் தண்டணை ஏற்றாக வேண்டும் .
       இந்த ஈடிபல் சட்டம் மேல் சாதி , ஆதிக்க ஆணவ சாதி , தலித் என பலவகையில் இடம் , வல்லாண்மை , அதிகாரம் , அரசியல் வாக்கிற்கிணங்க சற்று நீட்டுப்போக்காக இருக்கிறது .
       சிசாக் கூறும் ஈடிபல் விதி ,  இந்து ஜாதி சமூகத்திற்கு பொருத்தமாகத்தான் உள்ளது .
       மீண்டும் வைகோ கதைக்கு வந்துவிடலாம். சிலைக்கு மாலை அணிவிக்கும் தகுதி வைகோவிற்கு மறுக்கப்படுகிறது . வைகோ , சங்கர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தது ; சங்கரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லப்போனது ; மறவர் சாதிக்கு ஈனம் என்பதால் வைகோவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
       வைகோ தீரமானவர் ( அவரே சொல்லுகிறார் ) கோவில்பட்டி தேர்தலில் நிற்காமல் என வைத்துக் கொள்வோம் ;
       சட்டசபைத் தேர்தலை பொருட்படுத்தாமல் , மேற்கூறிய பிரச்சினையை மையமாக வைத்து ஒரு சமூகப் போராட்டமாக மாற்றி , அவரும் சமூகப் போராளியாய் மாறிவிட்டால்...  எப்படியிருக்கும் என்று சற்று கற்பனை செய்யுங்கள் ;
1.        சங்கர் கொலையை ஆதரிப்பவர்தான் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலையிட  வேண்டுமா ?
2.        இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்த எந்தக் கட்சித் தலைவராயினும் கோவில்பட்டிக்கு வரக்கூடாதா ? ; சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாதா ?
3.        தேர்தலில் போட்டியிடும் பிரமுகர்களும் இந்தக் கட்டளையை ஏற்கவேண்டுமா ?
4.        தி.மு.க விற்கு ஓட்டளிக்குமுன் இந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்கள்தான் தி.மு.க.விற்கு ஓட்டளிக்கவேண்டுமா ?
 என்று வைகோ தேர்தலில் நின்றுகொண்டு , மேற்கூறிய கோஷங்களை மேடையில் முழங்க , உண்ணாவிரதமிருக்க ஆரம்பித்துவிட்டால் ; [ அங்கு சி.பி.ஐ ; சி.பி.எம்.-ற்கு ஓரளவு செல்வாக்கு உண்டு ; வைகோவிற்கு ஆதரவு கிட்டும் ]
வைகோவை நிர்ப்பந்தித்தவர்களின் கோரிக்கைகள்தான் அவைகள் . ஆகவே அவர்களிடமே ஆதரவு கேட்கலாம். அதற்கு வைகோவிற்கு உரிமை உண்டு .
       இப்போது கோவில்பட்டிக்கு வரும் தலைவர்கள் / கலைஞர் , தளபதி , அம்மா , அன்புமணி, விஜயகாந்த் , ஜி.கே. வாசன், மோடி போன்றவர்கள் என்ன செய்வார்கள் ? என்ன பேசுவார்கள் ?
              அரசியல்வாதித் தன்னிலை வைகோ
                            Vs
          சமூக விடுதலைத் தன்னிலை வைகோ
       இதில் யார் யார் ?.......யாரையெல்லாம் எதிர்ப்பார்கள் ?
       எந்த வைகோவிற்கு (  தன்னிலைக்கு ) ஆதரவு பெருகும் இந்திய அளவிலே .
       வைகோவின் கொந்தளிப்பு வசப்பட்ட மனம் தவறான தன்னிலைக்கு வித்திட்டுவிட்டது.
       அவருக்கு வழிகாட்டவேண்டிய ( சமூக ) நெறியும் வழிகாட்டவில்லை அவ்வளவுதான் .
       இறுதியாக , சிசாக் மற்றொரு பரிமாணத்தை முன்வைக்கிறார் :
       சுதந்திரம் என்பது தீயதிற்கு ( evil ) காரணமாக முன்வைக்கப்படுகிறது ( as cause of the evil ) . அதாவது , தன்னிலையின் சுதந்திரத் தேர்விலிருந்து , இத்தேர்விற்கான அவன் ( சங்கர் போன்றோர் ) முடிவிலிருந்து தீயது ( evil ) விளைகிறது . ஆனால் , சுதந்திரம் என்பது தீயதற்குக் காரணம் என்றால் , நமது பிரக்ஞைபூர்வமான விருப்பத்தைச் சார்ந்திராதவை என்று கருதப்படுகிற எண்ணிலடங்காத தீயவைகளை ( moral , physical ) எப்படிக் கணிப்பது ? நமது பிரக்ஞைபூர்வமான தேர்வுகள் , முடிவுகளுக்கு முன்பு சில முக்கியமான தேர்வுகளை அல்லது நனவிலித் தேர்வுகளை முன்னனுமானித்துக் கொள்ள வேண்டும் ( presuppose) என்பதே சாத்தியமான தீர்வாக இருக்கமுடியும் என்கிறார் “.
       இச்சமூகத்திற்கு சாதித் தன்னிலையாக இருப்பதுதான் உன்னதமானது ;அப்படித்தானே ?
                வைகோ சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுத்த ; கொல்லப்பட்ட சங்கர் திருமணத்தை முன்னிலைப்படுத்திய தன்னிலைகளால் வைகோ தனக்குத்தானே உருவாக்கிக்கொண்ட தற்செயல் கட்டமைப்பை [ போட்டியிடமாட்டேன் என்பது ] அறிய லெக்கானின் கேள்வி இங்கு , இந்த இடத்தில் முக்கியமாகப்படுகிறது . அதாவது , பிளவுபட்ட தன்னிலைகளுக்கிடையில் எவ்வகையான நெறி உறவு ( Ethical bond ) இருக்கவேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார் லெக்கான் .
       வைகோ திராவிட , இனமான , etc… பரம்பரை என்று சொல்லிக் கொள்பவர் ; ஒழுக்கம் ,நெறி போன்றவைகளை முக்கியப்படுத்துபவர் .ஆகையால் அவரிடம் லெக்கானின் கேள்வியை கேட்பது தவறல்ல.
       முரண்பாடு , உறவில் வந்துவிட்டது . ஆனாலும் , பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் மதிக்கின்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அவர்கள் முன் கோரிக்கையாக வைத்திருக்க வேண்டாமா ? வெளிப்படையாக என்னவிதமான விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டாமா? ஒரு முன்னணித் தலைவர் என்ற முறையில் அரசியல் மட்டும்தானா ? நெறிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் வேண்டாமா ?
      நம்முடைய பிம்பத்துடன் நாம் கொண்டுள்ள உறவின் மையத்தில் அல்லது நானுணர்வில் அன்னியமாதல் பிரதானமாக உள்ளது ( basic alienation ).....மேலும்,பரஸ்பரமாக தாக்குதலுக்கு     ( mutual aggressivity ) நம்மை நிர்ப்பந்திக்கிறது “.....- லெக்கான் .
      மேற்கூறிய கூற்று , வைகோவின் பிளவுபட்ட தன்னிலைக்கு , “ அன்னியமாதல் உறவு “ மேலோங்கி இருந்திருப்பதால் அத்தொகுதியை புறக்கணித்துவிட்டார் என்று புரிந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது . 
   .
 மொழியாக்கம் : பிட்சுமணி      
                                                                    க.செ
                                                                   2-5-2016                                                                                                                                                                             

1 comment:

  1. திட்டமிட்ட செயலுக்கு காரணத்தை அகத்தில் தேடுவது சரியாக இருக்குமா? கருப்பு கொடி காட்டியது அ.தி.மு.க சார்பான கருணாஸ் புலிப்படை இயக்கம். தேவர்கள் சாதி அல்ல. நடந்த சாதி கொலை ஒன்று வட தமிழகம் மற்றொன்று மேற்கு தமிழகம்.இரண்டிலும் தேவர்கள் சம்பந்தமில்லை.மேலும் கருப்பு கொடி இல்லாமல் திருமாவே உலா வரும்போது வைகோவுக்கு மட்டும் கருப்பு கொடி யா? சந்தேகம் வரவில்லையா? ஏன்,எதற்கு என்பது வியாபார அரசியல் சார்ந்தது. தோல்வி என்பது தேர்தலுக்கு பின்புதான் ருசித்திருக்கிறூர். மனதளவில் தீர்மானிக்கப்பட்ட மூன்றாம் இடம் தேர்தலுக்கு முன் என்பது...அதுவும் ஆர்பாட்டமாக தன்னால் உருவாக்கப்பட்ட கூட்டணியில் அதிகார தோரணையில் கூட்டணி தலைவர்களிடையே உலா வந்து கொண்டிருக்கும் போது....
    எப்பொழுதும் வைகோ சிக்கலானவர்

    ReplyDelete