11 May 2016

" ஜெ " : காண்பதற்கரிய பரப்பிரம்மம்

       கணக்கிடமுடியாத காலத்தைக் கடந்த ஒன்றல்ல இது .
       இது , அதுவாகப் பாவித்து Virtual Reality யாக தொலைதூரத்துப் பிம்பமாகத் தெரியும்.
       அரூபமான தொப்புள்கொடி உறவு கொண்டாடும்.
       ஒரு பழங்கதை நிஜமாகிறது :
      இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் உயர்ந்த மலை உச்சியில் நின்றுகொண்டு ஒரு மனிதன் “ Hai ! Hitler “ என்று ஓங்கி சமவெளியை நோக்கிக் கத்தினானாம் . யார் என்று பார்த்தால் , அது ஹிட்லர் தானாம் . அவன் மனதில் ஹிட்லர் என்பது மா வல்லமை
( omnipotent ); எங்கும் நிறைந்தது ( omnipresence) . [ நம்மூர் , மூன்று உலகையும் தன் காலடியால் அளந்த வாமனன் மாதிரி ] .இது ஹிட்லரின் அகப்புறம்.
       பிந்தைய நவீன காலக் கட்டத்தில் , மூலதனத்தின் சட்டசபைப் பிரதிநிதிகளை 110 விதியின் ( rule ) பேரில் கற்சிலைகளாக்கிவிட்டு , கையாலாகாத ஜடங்களாக்கி தன் விருப்பத்தை நட்த்திக் கொள்ளலாம்.
       விதி 110 என்பது  ( ஹிட்லருக்காக ) பாசிஸ்டாக இயங்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளே வசதி செய்திருக்கிறது போலும்.
         Evil   கண்ணுக்கு நெறி தெரியாது . நெறியை , நல்லதை அழிக்கத்தான் செய்யும் .
       பரப்பிரம்மத்தை மக்கள் காணொலிக் காட்சியில்தான் தரிசிக்கமுடியும்.
       [ நூற்றுக் கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதும் காட்சியளிக்க மனமிரங்கவில்லை ]
       சக மந்திரிகள் , M.L.A  -க்கள் எல்லாம் மூலவிக்கிரகத்திற்கு முன் துவாரபாலகர்களாக மட்டுமே நிலைகொண்டிருக்க முடியும் .
       கொந்தளிப்பு வசப்பட்ட நேரமானால்.......தொப்புள்கொடி உறவு பிறந்துவிடும் .
                    

உங்களால் நான் .
உங்களுக்காக நான் ”.


                                       சென்னையில் வெள்ளம் ( வாட்ஸ் அப் )
                      உங்கள் அன்புச் சகோதரி  ஜெயலலிதா பேசுகிறேன்.
                     உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்.
                     எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது.
                     எனக்கு சுயநலம் அறவே கிடையாது.
                     எனக்கு எல்லாமே நீங்கள்தான்.
                     என்  இல்லமும் உள்ளமும் தமிழ்நாடுதான் “. –www.youtube.com /water
                தமிழக முதல்வரின் பேச்சில் குறிப்பான்கள் காணாமல் போயிருக்கிறது.
       உதாரணமாக  , அதிகாரம் எப்படி ஒடுக்குகிறது என்ற குறிப்பான் இல்லை .
       அந்த ஒடுக்குதலின் துவக்கப் புள்ளியை சிம்பாலிக்காக ( symbolic ) உணரமுடியும்.
       நழுவி விட்ட குறிப்பான் ஆதிஒடுக்குதலை ( primarily repressed ) குறிப்பிடுகிறது .
       ஒடுக்குதல் தொப்புள்கொடி உறவை முன்னிலைப்படுத்துவதால் ஒடுக்குதலின் குறிப்பான்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை “.
       இது Ernest Jones –ன்  Theory of Symbolism .( இது Symbolic Register  -ல் இருந்து வேறுபட்டது )
       இதை எளிமையாக்கினால் ஜெ. இரட்டை விரலை ‘  V ’  வடிவில் காட்டினால் இரட்டை இலை ; அவர் கட்சிச் சின்னமான இரட்டை இலைச் சின்னம் நினைவுக்கு வரும் .
       கறுப்புச்சட்டை அணிந்த மனிதர்கள் கூட்டம் கண்ணில் பட்டால் அங்கே தி.க.வினர் குழுமியுள்ளனர் என்று மனம் அறிந்துகொள்கிறது. இது சிம்பாலிக் ( Symbolic ).
              அதாவது ,  ‘  V  ‘ - யும் , கறுப்புச் சட்டையும் பதிலிகள் ( substitution ) . நாகரீகம்  கூட முடிவற்ற பதிலிகளின் தொடராக இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும் என்கிறார் ஜோன்ஸ். இது ஒரு நீண்ட கோட்பாடு .
       முதல்வர் ஜெயலலிதாவின் மேலே கூறிய கூற்று ஒரு குறியீடு . அது தொடக்ககாலக் கூறை ( primary element ) பிரதிநிதித்துவம் செய்கிறது.
       ஏனெனில், குறிப்பீடானது ( அன்புச் சகோதரி ) தொடக்க காலக் கூறுடன் தொடர்புடைய ஒன்றைக் கொண்டுள்ளது ; ஒன்றை ஒன்று பதிலீடு செய்து கொள்கிற சொற்களுக்கு இடையில் உள்ள நெருக்கமான உறவுக்கு அழுத்தம் கொடுக்கிறார். செய்திகளுக்கும் விசயங்களுக்கும் இடையிலான முரண்பட்ட தன்மைகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை .
       மக்களுக்கும் தமிழக முதல்வருக்குமான முரண்பட்ட உறவு எப்படி மாற்றம் ( பதிலி ) ஆகிறது பாருங்கள் .
       மக்கள் = உங்கள் ஆகிறது ; முதல்வர் = சகோதரி ஆகிறது.
       மக்களுக்கு வரும் துன்பங்கள் = உங்களுக்கு வரும் துன்பமாகிறது ( intimacy ) .
                     எனக்கு எல்லாமே நீங்கள்தான் .
                     முதல் மந்திரி = எனக்காகிறது.
                     4 1/2 கோடி மக்கள் = நீங்கள்தான் ( உறவு ) ஆகிறது.
       என் இல்லமும் உள்ளமும் தமிழ்நாடுதான் ” . ( கொடநாடு , சிறுதாவூர் , போயஸ் கார்டன் தவிர . அப்படித்தானே ?)
       மக்களின் அரசியல் , பொருளாதாரம் , சாதியப் பிரச்சினைகள் அனைத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஜெ. சொல்வதாக மக்கள் உணரவேண்டும் என்கிற ஜெ.யின் நனவிலி ஆசையின் வெளிப்பாடு அது.
       இம்மாதியான தாய் , சகோதரி குறியீட்டு முழக்கங்கள் பலவுண்டு . சமயத்திற்கு தகுந்த பயன் உண்டு அவைகளுக்கு.
       இறுதியாக , இதிலிருந்து , மிக முக்கியமான , அடிப்படையான, குடிமகன் / குடிமகள் என்பது ஜெ.-யின் குறியீடுகளால் நனவிலி உணர்விலிருந்து மறக்கடிக்கப்படுகிறது.
       ரத்த உறவு முன்னிறுத்தப்படுகிறது.
       இந்தக் குறிப்பீடு மற்றொரு EVIL  -ஐ செய்ய வித்திடுகிறது.
       மக்களை (  ரத்த உறவின் பேரில்)  சமூக விலக்கம் செய்கிறது.
       சமூக விலக்கம் என்றால் என்ன? A Bionian Approach by Ana Archangelo
       சமூக விலக்கம் என்பது சமூகக் குழுக்கள் ( communities ) , நிறுவனங்கள் , இவர்கள் வாழ்கிற வாழுமிடங்கள் போன்ற பிரதானமான சமூக அமைப்புகளில் , பொருளாதார மூலாதாரங்களில் தனியன்களும் , குழுக்களும் எந்தளவிற்கு பங்கேற்க அனுமதிக்கப்  படுகின்றனர் என்பதுடன் தொடர்புடையதாகும் . சமூகப் பங்கேற்பிலிருந்து விலக்குதல் அல்லது ஓரங்கட்டப்படுவது ( marginalization ) என்பது தனியன்கள் , உரிமைகளைக் கொண்டுள்ளனரா? இல்லையா? என்ற பிரச்சினையோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல . அது , தனியன்கள் , தம்மை உரிமைகளைக் கொண்டுள்ள தன்னிலைகளாகத் தம்மளவில் உணர்ந்து கொள்வதற்கான சிம்பாலிக் சாத்தியப்பாட்டை ( symbolic possibility ) கொண்டுள்ளனரா ? இல்லையா? என்பதையும் சார்ந்ததாகும்.
       மேலும் அக்கருத்து கூறுவது ;
       “  இந்த உலகில் ’  ( நாம் யார் என்பதை ) நமக்கு நாமே கண்டுகொள்வதற்கு ; இந்த உலகில் உள்ள ஒரு இடத்தை நம்மளவில் உடைமையாக்கிக் கொண்டுள்ளோம் ‘ என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும் என்று கோருகிறது . இந்த இடமானது இவ்வுலகில் உள்ள சாத்தியமான பல்வேறு இடங்களுள் ஒன்றாகும் ; தனிமனிதர்களுக்கிடையிலும் , பொருளாதார ரீதியாகவும் உள்ள உறவுகளின் வலைப்பின்னலில் உள்ள ஒரு இடமாகும் ; சமூகத்தில் , வாழும் இடத்தில், அதிகாரத்தில் , ஒற்றுமையில் ( solidarity ) அல்லது இவற்றின் ஏதோவொரு சேர்க்கையில் உள்ள இடமாகும் . கட்டமைக்கின்ற , கண்டுகொள்ளுகிற செயல்பாட்டில் இரண்டு வழிகள் பிரதானமாகக் குறுக்கிடுகிறது. அவை (1). தன்னிலையின் தேவைகளை நிறைவு செய்கின்ற ஒன்று. (2). தன்னிலைக்கு ஒரு சமூகம் எவற்றை வழங்கவேண்டும் என்று ஒருங்கிணைக்கின்ற , திட்டமிடுகின்ற ஒன்றாகும்.
       ஜெ-யின் ரத்த உறவு  ( 1 ) . மக்களுக்கான அவசியப்பட்ட நேரத்தில் அவர்களின் தேவையை நிறைவு செய்யவில்லை. ( 2 ). தன்னிலைக்கு சமூகம் எவற்றை வழங்கவேண்டும் என்று ஒருங்கிணைப்பதிலும் , திட்டமிடுவதிலும்.... மக்கள் ஒதுக்கப்பட்டுவிட்டனர்.
       மக்களின் நனவிலியில் உள்ள ரத்த உறவை மீட்டுறவு செய்வதற்காகவே...
                       “  எனக்கு எல்லாமே நீஙகள்தான்.
                       எனக்கென்று குடும்பம் எதுவுமில்லை.
                       நீங்கள்தான் என் குடும்பம்....
                               
உடன்பிறவா சகோதரி  ?
                      
       இந்த நனவிலி அரசியலை முறியடிக்கும்போதுதான் [ அதாவது , இரண்டு கூறாக்கப்பட்ட உடலை தலைமாற்றாக போட்டபின்தான் ஜராசந்தன் செத்து ஒழிந்தான். கிருஷ்ண பரமாத்மாவே அப்புறம்தான் பெருமூச்சு விட்டார் ] , அதாவது , நனவிலிதான் அரசியலாக உள்ளது.
மொழியாக்கம் : பிட்சுமணி
                                                  
நண்பர்களுக்கு ,
                இனிவரும் நாட்கள் மற்றமையில் ஓய்வுநாட்கள் எனக்கொள்ளலாம்.
                கடந்த ஒருவருட காலத்தில் தொடர்ச்சியாக 48  ஆய்வுக்கட்டுரைகள் . இவைகளை மற்றமை 7 – வது ஆய்விதழாக கொண்டுவரலாம் என எண்ணுகிறோம் . இதழாகக் கையில் இருப்பது இன்னும் வசதிதானே.
       அவசியமென்றால் இடையில் ஒரு சில கட்டுரைகள் வரலாம்.
       இன்னும் ,விமர்சனங்களும் Opinion – களும் மற்றமையைச் செழுமையாக்கும் .
அன்புடன்
க.செ
     11-5-2016 
      
                    
       

1 comment:

  1. ஜராசந்தன்(நனவிலி அரசியல்) எப்படி சாத்தியம் ஆனது? உங்கள் வார்த்தைகளில் சொன்னால் எப்படி விருப்பபடு பொருளானது? இந்த தொப்புள் கொடி உறவை அதே பதவியில் மற்றவர்கள்(உதாரணமாக கருணா‌நி‌தி மற்றும்) இதே சூழ்நிலையில் இருந்து வெளிப்படுத்தினால் ஜராசந்தன் சக்தியில்லாமல் போய்விடுகிறதே!!அது ஏன்? ஜெ-இன் சாதிய ஆளுமையை மனம் தன்னறியாமல் விரும்பி ஏற்றுக்கொள்கிறதோ? ஊடகம்+சாதி+சிவப்பு+அழகு = ஜராசந்தன் என்று எடுத்து கொள்ள லாமா? ஜெ-இன் தவறுகளுக்கு, ரெடியாக பாவ மன்னிப்பை கொடுக்க முடிகிற தமிழ் மனம் மற்றவர்களை குதறிய பிறகே ஆறுகிறது. ஏன்? இப்படி நிறைய கேள்விகளை இந்த கட்டுரை எழுப்புகிறது. சரியான நேரத்தில் வந்த கட்டுரை.

    ReplyDelete