“ மிகச் சாதாரணமான விசயத்திலிருந்து மிகப்பெரிய விசயத்திலும் வெளிப்படும்
நனவிலியான உணர்வு இது.
Triangular oral relation -ல் ( முக்கோண பேச்சு உறவில் ) ஏற்படும் நனவிலி சார்ந்தது. மகிழ்வளிக்கக்கூடிய பேச்சுப் பரிமாற்றத்திலிருந்து ஒருவள் / ஒருவன் விலக்கப்படும்போது ( ஏமாற்றத்தில் ) பொறாமை உருவாகிறது ”.
Triangular oral relation -ல் ( முக்கோண பேச்சு உறவில் ) ஏற்படும் நனவிலி சார்ந்தது. மகிழ்வளிக்கக்கூடிய பேச்சுப் பரிமாற்றத்திலிருந்து ஒருவள் / ஒருவன் விலக்கப்படும்போது ( ஏமாற்றத்தில் ) பொறாமை உருவாகிறது ”.
மேலும், “ பொறாமை (envy) , பேராசை, வெறுப்பு , காழ்ப்பணர்வு (jealous) ஆகியவைகள் வன்ம
புனைவுருக்களுக்கான ( aggressive phantay ) முக்கிய தூண்டல்களாக உள்ளன. பொறாமை வன்மத்தை ( aggression ) தூண்டுகிறது ; வன்மம் பொறாமையைத்
தீர்மானிக்கிறது ”
என்கிறார் கெலின்.
தன்
பெற்றோருடன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் பெண் /ஆண் தன் பெற்றோர் பாராட்டப்படும்போது
பொறாமை கொள்வதும், அடையாளப்படுத்தியும் கொள்கிறது. அதே நேரத்தில், பெற்றோர்
விமர்சனத்திற்குள்ளாகும்போது விமர்சிப்பவர் மீது வன்மம் கொள்வது (விமர்சிக்கப்படுவர் தந்தை, தாத்தா, பாட்டி,
மாமா, பள்ளி ஆசிரியர் etc)
தவிர்க்கவியலாததாகிறது,
பெற்றோர்
, அக்காளின் படிப்பிற்காக பணம் அதிகம் செலவிடுவதாகவும் , வீட்டில் அவளுக்கு தனிஉரிமை பாராட்டுவதாகவும்
எண்ணும் . அந்தப்பெண் அந்தப் பள்ளியிலேயே படிப்பாளி என்றும், சிறந்தவள் என்றும்
பெற்றோர்களால் (விபரமறியாதவர்கள் ) பாராட்டப்பட்டு சுயமோகம் உச்சபட்சத்திற்கு
வளர்ந்து ,
எதற்கும் சிணுங்கும் குணத்தை வளரவிட்டு விட்டால் தான் தனிப்பிறவி என்ற எண்ணம் உண்டாகிவிடுகிறது.
இது நோய்க்கூறு சுயமோகத்திற்கு வழிதிறந்துவிடுகிறது.
தன்மேல்
அன்பு கொண்ட ஒருவர் அக்காளுடன் நெருக்கம் அதிகமானால் ( no
perversion ) அதன் காரணத்தை அறிய முயற்சிக்காமல், அவர்கள்
மீது வன்மம் வருகிறது. அதுவும் தன் தந்தையைப் போன்றோ, பாட்டியைப் போன்றோ
நோய்க்கூறு சுயமோகியாய் அப்பெண் /ஆண் இருக்கும்போது அவள் /அவன் வன்மத்திற்கு அந்த
அப்பாவி பலிகடாதான்.
சில
ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மாணவனை நல்வழிப்படுத்த முயற்சிக்கும் போது அந்த
மாணவனாலேயே அந்த ஆசிரியை கொலை செய்யப்பட்டார் . மேலும், பொறாமை யதார்த்தம் குறித்த
புரிதலின் விளைவாகும். கூட்டாளிகளிடையே ( peer ) நிலவும் சமச்சீரற்ற தன்மை ; ‘ மற்றவர்களிடம் அதிகமாக உள்ளது, என்னிடம் எதுவுமில்லை ’ என்ற உணர்வு . Idealized object - provider
பிறருக்கு இருப்பது நியாயமற்றதாகப்படுகிறது.
இதனால் வள்ளுவர் ,
“ பொறாமை , அழுக்காறு பல பாவச்
செயல்களுக்கும் , துன்பத்திற்கும் ஏதுவாகும் “ என்கிறார் .
164
: அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படு பாக்கறிந்து .
பொறாமையின்
பாரதூரமானதை பதின்ம வயதில் மட்டுமல்ல ; தொடக்கப் பள்ளியிலேயே கூட காத்திரமாக
வெளிப்படும் ..
பொறாமை
ஒரு நனவிலி . அம்மா , அப்பா கூட விதி விலக்கல்ல.
இது
மூவகை உறவில் காரணமின்றிக் கூட வரும் ;
ஒதுக்கப்படுகிறோம்
,நம்மைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என்ற மன அழுத்தம் கூடினால் அது பாவச்
செயலில்தான் முடியும் .
இனியாகும் மனிதத்திற்கு , பரஸ்பர உறவுக்கு
, அது விரோதியாகும் போக்காகும் .
க.செ
17-11-2015
No comments:
Post a Comment