24 Nov 2015

தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.

ஒரு பழமொழி 
தண்ணீரில் இறந்தவரிலும் 
சாராயத்தில் இறந்தவர் அதிகம்.

[போதைக்கான காசில் ( தின்றது போக ) மிச்சம் விலையில்லாப் பொருட்கள் –இலவசம்.] 

  நம்மின் ஒவ்வொருவரின் நனவிலியிலும் தான் சாகாவரம் பெற்றவராக கருதிக் கொள்கிறோம் . _ப்ராய்டு

இந்த நிலையானது மனித மனத்திலிருந்து சாவு பயத்தை ( death fear ) விலக்கி விடுகிறது. மகிழ்விற்கு முன் சாவு பயம் மணடியிட்டு விடுகிறது.

சாராயம் என்பது அதை குடிப்பவர்களுக்கு மற்றமையாய் உள்ளது .சாராயத்தின் ஆட்சிக்குட்பட்டு வாழ்வதற்கு இசைவாகிப் போன அடிமைத்தனம் .ஆனால் , பேசும் தன்னிலையானது , சாராயத்திலிருந்து விடுபட்டு சாவில் நிலைகொண்டுள்ளது .ஆகையால் , அது சுனாமி போன்ற பேரண்ட அழிவை விட சாராயத்தின் சாவு அதிகாரத்தின் வீச்சு அதிகம் என்ற நிலைப்பாடு கொண்டுள்ளது.

தண்ணீரைப் பற்றிய சாவு பயத்தைவிட சாராயத்தை பற்றிய சாவு பயம் இல்லாமையே காரணம் என்பதால் ; தன்னிலை தண்ணீருடன் சாவை ஒப்பிட்டு சாரயத்திற்கும் சாவுக்கும் உள்ள நெருங்கிய உறவைக் குறியீட்டு ஒழுங்கில் ( symbolic order  ) , மொழியில் , அறமாக, சமூக விழுமியமாகக் கட்டுகிறது எனலாம் .

இப்போதைக் காலக் கட்டத்தில் அரசின் சாராயக் கடையில் விற்பனையாகும் மது ஒரு நுகர்வுப் பண்டமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக (  legitimize ) ஆகிவிட்டிருக்கிறது மனத்தளவில்.
நுகர்வு சட்டரீதியான மகிழ்விற்கான பண்டமாக மனதில் கட்டமைக்கப்பாகியுள்ளது .
.ஆகவே ,தானாக மனம் வருந்தி சுய கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான சூழலும் இல்லை. . தூண்டலின் நிறம் பல வண்ணங்களில் விரவிக் கிடக்கிறது _ சினிமா , சின்னத்திரை , இத்ழ்கள்  மொழியாக - தனிமனித உறவுகள் etc. அதுபோக , மனிதனுக்கு தன் நெருக்கடியை சமனப்படுத்த உறவுகளும் இல்லை ; மனதைச் சமனப்படுத்துமளவிற்கான பொதுவெளி (park) கூட இல்லை.
தானாக மனித இயல்பு மாறுவதற்கான , மகிழ்விற்கான , சட்டரீதியான நுகர்வுப் பண்டமாக சாராயம் இருப்பதாலும் ; தானாக மாறச் சூழலும் இல்லாததாலும் போதை தலைகேறியுள்ளது .
முற்றிலும் வேரோடு ஒழிக்கப்படவேடிய Evil  தான்  (  தீது ) சாராயம் ,மது. உடனடியாக , மக்களின் விழிப்பு , அக்கறைக்கான வெகுஜனக் கருத்தை எல்லா மட்டத்திலும் எடுத்துச் செல்லவேண்டும் .




க.செ.
18-11-2015

No comments:

Post a Comment