7 Nov 2015

சகிப்புத்தன்மை Vs அ . சகிப்புத்தன்மை

கோவன், ஷாரூக்கான் & தலைவெட்டி ஆசை.
லெக்கானின் ’ வாழ்க்கைக் கோட்பாடு ‘ :  ‘ வாழ்க்கைக் கோட்பாடானது குறித்தல் சங்கிலியில் ( Signifying chain ) மகிழ்வுக் கோட்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது ’ என்கிறார்.
யதார்த்தத்தில் மகிழ்வு என்பது உடலின் விருப்பப் பொருள். ஆனால் , யதார்த்தத்தில் ?
நீங்கள் இன்று உங்கள் மதிய உணவாக புலால் ( கறியை ) உணவை தேர்ந்தெடுக்க உரிமையும் , விருப்பமும் கொண்டு அமுது செய்யலாம்.
ஆனால் , ‘ மாட்டுக் கறியை  தேர்வு செய்ய யதார்த்த அரசியலில் இடமில்லை.
இந்த நிலையை அலென் மில்லர் , “ வாழ்க்கையானது மகிழ்வு மற்றும் யதார்த்த கோட்பாடு -களுக்கிடையில் நிரம்பி வழிகின்றது என்கிறார்.

லெக்கான் இதனை மேலும் வளர்த்து   வாழ்க்கையானது உண்மையுடன் இணைக்கப்பட- வில்லை ; மாறாக , அறிதலுடன் ( knowledge ) இணைக்கப்பட்டுள்ளது   என்கிறார்.
ஆனால் எப்படி ? வாழ்க்கை , அறிதலை எதிர்கொள்ளமுடியாது.
அறிதலை எதிர்கொள்ள முடியாத வாழ்க்கை குருடாகவும் , ஊமையாகவும் உள்ளது . மேலும் , அது தன்னளவில், ஏன் ? அல்லது  எப்பொழுது ? அல்லது எங்கு ? என்ற எந்தவொரு அறிதலும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது ” .
வெந்ததைத் தின்று
விதி வந்தால் சாகலாம்என்னும் சொலவடை ( மற்றமை ) யுடன் தொடர்புடையதாய் இருக்கிறது வாழும் வாழ்க்கை.
         மாட்டிறைச்சி சாப்பிட்டால்
     சித்தராமையா தலையை வெட்டுவேன்


சித்தராமையா குப்பனுமில்லை , சுப்பனும் இல்லை .கர்நாடகா மாநிலத்தின் முதன் மந்திரி ; அன்னை காவிரிக்குச் சொந்தக்காரர் . அவர் தலையே வெட்டுப்பாறையில் இருக்கும் அவலம்.
இந்தக் கொலைத் தண்டனையை விதித்தது சென்னபசப்பா மாவட்ட பா... செயலாளர். துணைக்கு வந்தது விஸ்வ ஹிந்து பரிஷத் , ஸ்ரீராம் சேனா , சிவ சேனா, பஜ்ரங் தள் முதலிய அமைப்புகள்.
இத்துனைக்கும் கர்நாடக முதன் மந்திரி செய்த குற்றம்   எனக்கு மாட்டிறைச்சி பிடித்தால் சாப்பிடுவேன். அதை யாரும் தடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்ததுதான் . [ ஏற்கனவே மாட்டிறைச்சி சாப்பிட்டதாக உ.பி.யில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கும் ] .
முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்ட முடியாததால் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவருக்கு பன்றிக் கறி பார்சல் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கி , முதல் கட்டமாக பன்றிக் கறி பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.” – தி இந்து 5-11-2015.
ஆக ,  இது தொடர் போராட்டமாக சமூகத்தின் அடிமட்டம்வரை (grass root level ) எல்லா விதிகளையும் , சட்டங்களையும் மீறி கலாச்சார , மத அரசியலுக்கு பாதை வகுத்துக் கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற அரசியலையும் தாண்டி பிரபலமான தனிநபர்கள் மீதும் தாக்குதலைத் தொடர்ந்துவிட்டனர் . இதில் சிக்கியவர் நடிகர் ஷாரூக்கான்.
பா...வின் இந்தப்போக்கை ஷாரூக்கான் இப்படி விமர்சித்துள்ளார் ;
….“  நாட்டுப்பற்றுடைய ஒருவர் மதச் சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் , மதச் சார்பின்மை அற்றவராகவும் இருப்பது ( religious intolerance and not being secular ) மாபெரும் குற்றமாகும் “.- www.Indian Express.com.3 -11-2015.
இதற்கு ஆரவார பதிலடியாக ( rhetoric ) பா...வினர் ஷாரூக்கான் இங்கே ; அவருடைய ஆத்மா பாகிஸ்தானில் ;  அதாவது , ஷாரூக்கானை பாகிஸ்தானின் ரகசிய உளவாளி என்று முத்திரை குத்த ஆரம்பித்துவிட்டனர்.
இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவரிடம் நேரடியாகச் சென்று அதை எதிர்த்து ஒரு பிராது கொடுத்துள்ளது . அந்தப் பிராதில்….
  சமூக நல்லிணக்கத்தை உடைத்து இரு துருவங்களாக மாற்றும் தீய குறிகளை
 (  sinister ) கொள்கையாக்கி மக்களிடம் பரப்புகின்றனர் என்று கூறியுள்ளது.
இதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி ,…. அமைதியும் நல்லிணக்கமும் இந்தியாவில் நிலவுகிறது . இந்த மாதிரி சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கக்  கூடாது . ஆனால், இதை இவ்வளவு பெரிய விசயமாக மாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சகிப்புத் தன்மை எங்கே இல்லை ? என்று காங்கிரஸை கேட்டுள்ளார் ”.   - The Hindu 4-11-2015.
எதிர்க்கட்சிகள் , சிந்தனையாளர்களும், ஒரு சில பத்திரிக்கைகளும் , சின்னத்திரையின் உராய் வீச்சுகளிலும் , சகிப்புத்தன்மை பா.ஜ.க. கம்பெனியில் இல்லை என கடுமையாக விமர்சிக்கும் போக்கு நடைபெறுகிறது.

       தமிழகத்தின் சமீபத்திய சுயமோக அரசியல் செயல்பாட்டிற்கான உதாரணமாக சாராயக் கடையை எதிர்த்து , தெருமுனைப் பாட்டு ஒலிக்கக் கூட உரிமையில்லை ; மேலும் , முதல்வரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் உரிமை இல்லை என்பதற்காக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
                       Sexuation
       அரசு இயந்திரம் பன்முகச் செயல்பாட்டிற்கானது . ஒரு செயல்பாட்டுத் தன்மை எப்படி உள்ளது என்பதுதான் ஆய்விற்குரியது . முரட்டுத்தனமானது , எரிசாராயம் விற்பது  ஆண் தன்மையிலானது .  அதன் தலைமை ஆணா? / பெண்ணா ? என்ற உயிரியல் ( biology ) வரையறையை கணக்கில் கொள்வதில்லை லெக்கானியம் ; அது நவீனத்துவமான கோட்பாடும் கூட.
        Phallic  ( அதிகாரத்தளம் ) என்பது ஆணைக் குறிப்பதல்ல. ஆண் தன்மையைக் குறிப்பது.
       அதிகாரத் தளம் பெண்ணிடம் இருந்தாலும் , அந்த அதிகாரம் ஆண்தன்மையில் -தாக்குதல், கோபம், ஒடுக்குமுறை, ஜனநாயக மறுப்பு போன்றவைகள் - Phallic Power தான். ஆட்சி செலுத்துபவர் ஆணா? / பெண்ணா? என்ற உயிரியல் பார்வை முதலாளியத்திற்கு முந்தியதிலிருந்து , ஏகாதிபத்தியம் வரை நீடித்த பால் ( அடையாளம் ) பற்றிய வரைமுறை அது.
       லெக்கானியம் அதை மறுதலித்து , செயல்முறை , விளைவுகளுக்கேற்ற முரணியக்கத் தன்மையில் ஆண் / பெண் என்ற   Sexuation கருத்தியலை முன்வைத்தது. அதுதான் பிந்தைய முதலாளியத்தில் முன் நிற்கிறது.
       இந்தக் கோணத்தில் பார்த்தால் , ஜெ. என்ற பெண் முதல்வரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமாக கோவன் பாடலை அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
       Moral law divides the Subjects  [ ஒழுக்கவிதி தன்னிலைகளை பிளவு படுத்து கிறது.,  வலியை உண்டாக்குகிறது ] .
       இனி,   தலைவெட்டி ஆசை கொண்ட தன்னிலைகளின் தன்னிலைகள் ; “ அவர்கள் பிறரைத் துன்புறுத்தி இன்புறுபவர்கள் ( sadist ) ;   தன்னைத்தானே  [ அதே  ஒழுக்க முகவர்களால் ( moral agent ) ]  துன்புறுத்தி இன்புறுபவர்கள் ( masochist ) ”.   -  ப்ராய்டின் கண்டுபிடிப்பு இது.
       இவர்களின்  நடைமுறைக்கான - பிறரைத் துன்புறுத்தி இன்புறுதல் ( sadist ) , தன்னைத்தானே துன்புறுத்தி இன்புறுதல் ( masochist ) -   காரணத்தை மனஅலசல் இப்படிப் பார்க்கிறது :
       பிறரைத் துன்புறுத்தி இன்புறுகிறவன் ( sadist ) வலிமையான பேரகனை ( Super Ego ) கொண்டுள்ளான் ; அவன் பேரகனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான் ; அவன், அவனுடைய சொந்தப் பேரகனாகவே ஆகிவிடுகிறான் ( own super ego )  - ப்ராய்டு.
       ஆக, இவர்கள் - பா... , சிவ சேனா, பஜ்ரங் தள், etc ... - தங்களை பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமாக; அல்லது அரக்கர்களை ஒழித்துக் கட்டும் அவதாரமாக எண்ணி பூரிப்படைபவர்களோ? .
       கலாச்சாரத்தால் யார் ஆள்கிறார்கள்?
       இறுதியாக பா... விற்கு சகிப்புத்தன்மை இல்லை / குறைந்துவிட்டது என்பது உண்மைதான். அது அரசியல் கலாச்சாரம் தான்’ .
       வித்தியாசங்கள், அரசியல் வித்தியாசங்கள், அரசியல் சமத்துவமின்மையால் கட்டப்பட்டுள்ள மதங்களும் கூட ; கலாச்சாரமே ( புனித ) காட்டுமிராண்டித் தனத்திற்கு வழி வகுக்கிறது என்கிறார் சிசாக்.
       சாதியையும் , வறுமையையும் , வேலையில்லாத் திண்டாட்டத்தையும்., நுகர்வு முதலாளிய கலாச்சாரத்தையும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு சகித்துக் கொள்ள வேண்டும். (உதவியவர் சிசாக்).
       சிசாக் Joseph Goebbels  என்பவரின் சூத்திரத்தை இப்படிக் கூறுகிறார் ,  When I hear the word culture , I reach for my gun . But not when I hear the word civilization ” .
க.செ
5-11-2015

No comments:

Post a Comment