3 Jun 2015

“ நமோ கோஷ்டியின் கத்தி ”

1948 –ல் காந்தியின் கொலைக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் மரண தண்டனைக்குள்ளான “ கோட்சே ” யின் பேச்சுரிமைக்காக கி.பி 2010- க்குப்பின் அதை அரசியலாக்கிய நமோ கோஷ்டியினர் (group) ; படேல் உரிமைக்காக நேருவை ஓரங்கட்ட முயற்சித்த நமோ கோஷ்டியினர் இப்போது IIT சென்னை மாணவர்களின் – பேச்சுரிமையை - ஜனநாயக உரிமைக்குத் தடைவிதித்துள்ளனர். விசித்திரம்.

மாணவர் அமைப்புகளுக்கு தடைக்கான காரணமாக பொதுவாகச் சொல்லப்படுவது நமோ கோஷ்டியின் அரசாங்கத்தின் மீது மாணவர்களின் விமர்சனம்தான்.

( மீண்டும் மேலிருந்து ஒரு முறை வாசிக்கவும் )

நமோவின் கலாச்சாரம் Symbolic System – மாக இருக்கிறது. அதன் அர்த்தம் மொழியில் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

”….. Culture is how you react to it in polite way ; To be very vulgar ……” ( Slavoj Zizek, மனஅலசல் ஆய்வாளர், கலாச்சார விமர்சகர், etc.)

நமோ கோஷ்டியின் ஜனநாயகச் செயல் அடிமாட்டிற்கு கேரளா செல்லும் மாடுகள் மாதிரி உள்ளது.

IIT என்பது கல்வித்துறையின் தலையாயதாகவும் Phallic (அதிகார மையமாகவும்) ஆகவும் உள்ள ஒரு வலைப்பின்னல்.

ஏற்கனவே சென்ற ஆண்டுகளில் தெலுங்கானா போராட்டத்தை முன்னின்று நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழகம், E F L U பல்கலைக்கழகம் போன்றவற்றில் மாணவர்களின் சுதந்திரம், ஜனநாயகத்தை மறைமுகமாக கொன்று, முன்னணி ஜனநாயக மாணவர்களை castrate ( உரிமைகளைப் பறித்தது ) செய்து, ஹைதராபாத்தை விட்டு ஓடி அகதிகளாய் வாழ்பவர்களின் கதை இன்னும் அச்சேறாமல் இருக்கிறது. இப்போக்கு சென்னை IIT க்கு ஆரம்பித்துவிட்டது.

இது, பின் நவீனத்துவத்தில் மனு சாஸ்திர அக்ரஹாரத்தை ( IIT ) அரசியல்சட்டரீதியான அக்ரஹாரமாக்கும் ஒருவகை முயற்சி எனலாம்.

இப்போது IIT மாணவர்களும், சில கட்சிகளும் அடையாளப் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர் . ஒருவேளை கல்லூரி, பள்ளியில் இடம்பிடிக்கும் போட்டா போட்டிக்கான நேரம் என்பதால் அது தமிழ்நாடு மாணவர்களுக்கான பிரச்சனையாக மாறவில்லையோ?

தமிழகத்தின் ஆளும்கட்சி “ நமோ ” கோஷ்டியினரை எதிர்த்து - தற்சமயத்திற்கு - நிற்காது.புரிந்து கொள்ள முடிகிறது. ( இதையொட்டி மனஉளைச்சல் எல்லாம் தமிழ் மனத்திற்கு இருக்கா, என்ன? )

இந்தவகை பயங்கரவாதம் ஆழப்பட்டு வருகிறது. உச்சியில் தொங்கும் கத்தியாக கருத்தமைவை, கலாச்சாரத்தை கட்டமைக்கின்றனர்.

‘ பசுவதை கூடாது ’ - கலாச்சாரச்சட்டம் இது ; வேறு ஒருவகை கலாச்சாரப் பழக்கத்தை தொங்கும் கத்தியால் அச்சுறுத்துவது.

பிரதமர் யூதரானால் “ I don’t eat pork ” - அது ஒரு குறியீட்டு அமைப்பு ( Symbolic order ) ஆகிவிடும்.

( ஆனால் சாதியம் மட்டும் அப்படியே இருக்கிறது ).

மாணவர்கள் அமைப்பு என்பது குறியீடு அல்ல.அது ஒரு குறிப்பான் . பலசாதியாக , மதமாக , மொழியாக , நுழையும் தன்னிலைகள் மாணவர்களுக்கான ஜனநாயக அமைப்பில் ஒன்றுதிரளும்போது பல்வேறு தன்னிலை ஆக்கங்களுக்கு இடையில் ஒரு கொடுக்கல் வாங்கல் உறவும் , ஒரு வகை நிலப்பிரத்துவ பிற்போக்கிற்கு கேள்விக் குறியுமாகிறது. குறுங்குழுவாதத்தில் மிதந்த தன்னிலைகளுக்கு உலகளாவியமும் அறிமுகமாகிறது ; அன்பும் கூட விரிய (எல்லை கடந்து ) வாய்ப்புள்ளது.

பயங்கரவாதம் பகுதிபகுதியாக கதவைத் தட்ட ஆரம்பிக்கிறது.

அரட்டிக்கு அடங்கவேண்டுமா என்ன?.

“ கலாச்சாரம் ஒரு நம்பிக்கை தான். அது எதார்த்தம் அல்ல ” ( Reality-content ; Belief- always thought ) – zizek


       நினைவூட்டவேண்டிய கவிதை


ஜெர்மனியில்
நாசிக்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைத் தாக்கினர்.
நான் கம்யூனிஸ்ட் இல்லையென்பதால்
மௌனமாக இருந்தேன்.
பிறகு
அவர்கள் யூதர்களைக் குறி வைத்தனர்.
நான் யூதனில்லையென்பதால் அப்பொழுதும்
குரல் எழுப்பவில்லை.
பின்
தொழிற்சங்கவாதிகளைத் தாக்குகையிலும்
எனது பதில் மௌனமே : ஏனெனில்
நான்தான் தொழிற்சங்கவாதியில்லையே !
அப்புறம்
கத்தோலிக்கர்களைத் தாக்கினார்கள்
நான் புராட்டஸ்டண்ட் என்பதால்
அமைதியாகவே இருந்தேன்.
பிறகு
அவர்கள் என்னைத் தாக்க வந்தனர்
அந்த சமயத்தில் எனக்காக  குரல் எழுப்ப
                                                                 எவரும் இல்லை

நன்றி : மார்டின் நிமால்லர் (1892-1984)

( புறப்பாடு இதழ்-31. 91-92 ல் வெளிவந்தது )

~க.செ


No comments:

Post a Comment