19 May 2015

The phallus - நீதி அதிகாரியின் பார்வையில் முதல்மந்திரி என்ற அதிகாரம்

(முதல்நாள் தொடர்ச்சி)
ஒரு மாநிலத்தின் முதல்மந்திரி என்றால் என்ன? வழக்கமான கருத்தியல் அடிப்படையில் எல்லோருக்கும் தெரியும். மன அலசல்படி அதைத் தெரியவேண்டும் என்றால் THE MEANING OF THE PHALLUS  என்ற கேள்வி வேண்டும்.
       இதில் இரண்டுவகை அதிகாரம் (  Phallus  )  உள்ளது  (  oedipus) ஆனால் நமக்கு இங்கு தேவையானவற்றை மட்டும் எடுக்கிறோம்.

“ அதிகாரமானது (the phallus) அதிகாரக் குறிப்பானாக (phallic signifier) குறியீட்டுச் செயல்பாட்டுடன் (symbolic function) விதிப்படி பிணைக்கப்பட்ட, முன்னுரிமை பெற்ற/ தனிச் சிறப்புடைய குறிப்பானாகும் (privileged signifier ). எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு செயல்படும்போது Phallus (அதிகாரம்) குறியீட்டுக்கட்டமைப்பின் நங்கூரமாக ( anchoring point ) செயல்படுகிறது “ லக்கான்
 (இந்த அதிகாரத்திற்குள் ஒரு மாநிலம் அடங்கும் ).  
எளிமையாகச் சொன்னால், அது ஒரு மொத்த அமைப்பின் பிரதான இயக்கு விசை    main switch ) எனலாம். இது ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு முற்றிலும் பொருந்துமல்லவா?
       இங்கு ஜெயலலிதா  அல்லது  கலைஞர் என்ற நபர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக மாநில முதல்வர் என்பது Logos  / தளம்; அதைத்தான் குறிப்பிடப்படுகிறது.
       இந்தத் தளத்தை பிரதிநிதித்துவம் பண்ணுபவர், முதல் மந்திரி ( Chief Minister ) அவ்வளவே..
       இப்போது மற்றொரு அதிகாரத்தை அறியலாம். ஒரு வருமானவரித்துறை அதிகாரி ( income tax officer ) என்பதும் ஒரு phallic power தான். ஆனால் அது மிகக் குறிப்பான செயல்பாடுகளுக்கான அதிகாரத்தை உடையது. இவரின் அதிகாரம் மாநிலத்தில் செல்லாத நாணயம். இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட துறையுடன் , குறிப்பிட்ட வேலையுடன் சம்பந்தப்பட்டது அவ்வளவே.
       முதலில் கூறிய phallic power  மொத்த மாநிலத்தின் “ நங்கூரம் ’. ஆனால் 2-வதாக கூறிய Phallic அந்தஸ்து ஒரு துறையில், ஒரு பதவி  சம்பந்தப்பட்டது.
       இப்போது கோட்பாட்டுப் பிரச்சினையிலிருந்து நடைமுறைக்கு வருவோம்.
இந்த இரண்டு அதிகாரங்களும், அதாவது முதல்மந்திரி என்ற அதிகாரமும் ( மக்களின் முதன்மைப் பிரதிநிதி ) வருமானவரித் துறையின் அதிகாரியின் அதிகாரமும் ஒன்றா?

இந்த இரண்டு அதிகாரங்களின் அதிகார வீச்சும் ஒன்றா? அதிகாரத்தின் செல்வாக்கும் ஒன்றா?

இரண்டு அதிகாரத்திற்கான சம்பளம், படி, வசதிகள் அனைத்தும் ஒன்றா?
         ஒன்றல்ல என்று பொதுவாக  எல்லோரும் சொல்லிவிடுவார்கள். இரண்டுக்குமுள்ள உறவு என்ன? அரசு ஊழியம் என்பதுதான்.முதல் மந்திரி -5 வருடம். அரசின் கடைநிலை ஊழியர் (peon ) கூட 60 வயதுவரை நிரந்தரம். ஓய்வூதியம் உண்டு.
       இப்போது எழும் கேள்வி என்னவென்றால், ஊழல் புரிந்த வழக்கு வந்தால். முதலமைச்சரையும் வருமானவரி அதிகாரியையும் நீதிபதி பார்க்கும்கோணம் ஒன்றாகத்தான் இருக்குமா? வேறாகவா? அப்படி கோணம் ஒன்றாக இருந்தால் அது நீதியா? ஜனநாயகமா? அனைத்து அதிகாரமும், செல்வாக்கையும் Vs   ஒரு துறையின் அதிகாரத்தையும் சமச்சீராக்கம் செய்வது எந்ததெந்த வகையில் நியாயம்?
       ஜெயலலிதா வழக்கில் விடுதலை கிடைத்தற்கு முழுக்காரணம்  Krishnanand vs The State Of Madhya Pradesh on 17 December, 1976 வழக்காகும்.  மேற்கூறிய வழக்கில் குற்றவாளிக்கு கிடைத்த தீர்ப்பை மாதிரியாகக் கொண்டு இங்கே ஜெயலலலிதா வழக்கில், சொத்துக்குவிப்பு வழக்கில் கணக்குக் காட்டமுடியாத வகையில் 10%  சொத்து கூடுதலாக இருக்கலாம் என்றும், ( அதற்கும் குறைவாக சொத்து உள்ளதால் அவர் நிரபராதி ) தீர்ப்பு வழங்கி விடுதலை பண்ணியிருக்கிறார் நீதி அதிகாரி.
       இதையும் ஒரு கற்றுத் தேர்ந்த ஒருவர் இது The Judgement  Personam ?  அல்லது The Judgement in Rem - ஆ எனக் கேள்வி எழுப்புகிறார். (என்று வைத்துக் கொள்வோம்). அதாவது அந்தத் தீர்ப்பு அந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமா? அல்லது அனைத்து வழக்கிற்குமா? என்ற  நியாயமான கேள்வி வருகிறது. இதற்கு எல்லாம் யார் பதில் சொல்வது....??
       நீங்கள் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்  நடத்துவது உங்கள் சுதந்திரம்....ஆனால் ஒரு முதலமைச்சரின் C M ) ஊழல் வழக்கு என்பது மக்கள் பிரதிநிதியை / பிரதிநிதித்துவத்தை கேள்விக்குட்படுத்துவதால் அந்த அதிகாரம் அப்பழுக்கற்ற நெறியாக இருப்பதுதான் ஆரோக்கியம்.
       இன்னும் வரணும்....
க.செ
                    
Painting: Sacred India Tarot  - Bheeshma instructs Yudhishtara in the art of government

No comments:

Post a Comment