குறிப்பாக இளைஞர் முதல் முதியோர்வரை virtual real ஆகவும், கற்பனையிலும், விளம்பரங்களில் வாழ்தலும் , “ SELFI MOVEMENT “ (தன்னைத்தானே
புகைப்படமாக்கி மகிழ்வது ) அதிகரித்துவருகிறது.
ஏன்?
அது
தனியனின் நனவிலியான சுயமோக வெறியைத் தூண்டி, அது இல்லாவிட்டால் வாழ்வு இல்லை
என்பது போலான பித்தைத் தலைக்கு ஏற்றுகிறது பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள்.
மேகி நூடுல்ஸ் உடலை மட்டும் கெடுக்கும்.
“ SELFI MOVEMENT ” கற்பனா உலகை (தற்பெருமையை ) முன்னிலைப்படுத்தி , இந்தப் புகைப்படம்
எடுப்பதால் அடையாளம் கிடைக்கிறது என்று நம்பவைக்கிறது ; அத்துடன் சுயமோக ஆசைக்கான
ரகசியத் தீர்வையும்
முன்வைக்கிறது. (சும்மாவே வெய்யிலில் தன் நிழலை நிஜமாக்கி வெக்குநடை போடும் மோகிகள் இப்போது SELFI MOVEMENT-ல் திளைக்கிறார்கள் )
முடியாதவர்கள்
ஏக்கம்,எப்படியாவது பெறவேண்டும் என்ற தூண்டலுக்கு ஆட்படுகிறார்கள்.
குறிப்பாக
மாணவ உலகம் அதைக் கதையாடலாகவே கதைக்கின்றனர்.
SELFI MOVEMENT-ற்கான தருணங்களின் வீரதீரம் எங்குபோய்நிற்குமோ?
பன்னாட்டு
நிறுவனங்களும் அதன் தரகர்களும் நுகர்வுக் கலாச்சாரம் என்பதையும் தாண்டி
“ விளம்பர முதலாளித்துவமாகி ” வருகிறது.
இளைஞர்களின் எதிர்காலம்கூட விளம்பரமாகி வருகிறது.
என்ன படிக்கலாமிலிருந்து மாதச் சம்பளம் ஒரு லட்சம் வேணுமா? என்கிறது.
காரட்டை குதிரை முன் காட்டுகிறது.
மாணவர்களை லக்கான் கோழியாக்கி வருகிறார்கள்.
சமூக உணர்வு என்பது மருந்துக்குக்கூட இல்லாமல் செய்யும் முயற்சி
இது.
அத்துடன் குனியக் குனியக் குத்தினாலும் , இன்னும் குனியும் அளவுக்கு
சகிப்புத்தன்மை (tolerance ) வந்துகொண்டிருக்கிறது.
இந்த உறைபனி நிலையை உடைக்க மாணவர்களின் மகாசக்தி எப்போது , எப்படித்திரும்பும்?
பி.கு : “ நூடுல்ஸ் விளம்பரத்திற்கு ரூ 445 கோடி
தர பரிசோதனைக்கு ரூ 19 கோடி “ - தினமலர் 9-6-2015
கவனித்தீர்களா. இந்தியப்
பிரதமர் மோடிஜி சீனா சென்றபோது சீனக் குழந்தைகளுடன் SELFI எடுத்து மகிழ்ந்ததை.
கவர்ச்சியின் வீச்சு புரிகிறதா ?
க.செ
No comments:
Post a Comment