10 Jun 2015

தமிழகத்தில் எங்கே இருக்கிறது அரசியல் தளம் ?

மிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் இந்தத் தளத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
மற்றவர்கள் சுள்ளான்கள் / சுள்ளிகள்.
இந்த இரண்டு கட்சிகளுமே வலதுசாரிகள்தாம்.
ஒன்றுக்கு வலதுசாரி அதிகாரம் உண்டு;
மற்றொன்று கடைந்தெடுத்த வலதுசாரி.

தேர்தலை அங்கீகரித்து மக்கள் தீர்ப்பே “ மகேசன் தீர்ப்பு   என்பர் ( தோற்றபின் ).
உபதேர்தலில் அபச்சாரம் நடக்குமென்றால் கோவிலை இழுத்துப்பூட்டி , கழுவி, சுத்தப்படுத்திவிட்டு புண்ணியாகவசனம் / சுத்தி ஹோமம் நடத்தவேண்டியதுதானே ?
      இதில் புதுப் பூசாரி தேர்வு என்ன செய்துவிடும் ?
      3 -ம் தலைமை ஒன்று வந்துவிட்டது என்று அடையாளம் காட்டலாம்.
      அதை, உள் கட்சிக்குள் SELFI  MOVEMENT   என்று தம்பட்டம் அடிக்கலாம்.
      தாராளவாதம் “ தமிழக மீனவர்களைப் பார்த்து எல்லை தாண்டாதே ! என்று எச்சரிக்கை விடுக்கிறது.
      மீனவர்கள் கொல்லப்படுவது , சிறைப்பிடிக்கப்படுவது , பொருளாதார ரீதியாக நொடித்துப் போக வைப்பது , இவையெல்லாமே வர்த்தகப் போட்டியினால் மட்டும்தானா ?
      ஒருவேளை புலிகளின் தாகத்திற்கு பின்புலமாக இருந்தவர்கள் தமிழக மீனவர்கள் என்ற யூகநிஜத்தில்  இவைகள் நடந்தால் அது பழிவாங்கல் நடவடிக்கையாகும் .
       அதற்கு அடையாள வேலைநிறுத்தம் போதாது. 5 கோடிகளும் கரையில் நின்று தென்கிழக்கில் ஒரேநேரத்தில் உமிழ வேண்டும். அதுவே சுனாமி ஆகிவிடும் அந்தத் தீவிற்கு.
      இதற்கு அரசியல் தளம் இருக்கிறதா ?
      இதற்கே போராடித்தான் ஆகவேண்டும்.
க.செ

9 Jun 2015

செல்ஃபி அரசர்கள் - Selfi Movement


 குறிப்பாக இளைஞர் முதல் முதியோர்வரை   virtual  real ஆகவும், கற்பனையிலும், விளம்பரங்களில் வாழ்தலும் ,  SELFI  MOVEMENT  (தன்னைத்தானே புகைப்படமாக்கி மகிழ்வது ) அதிகரித்துவருகிறது.
      ஏன்?

      அது தனியனின் நனவிலியான சுயமோக வெறியைத் தூண்டி, அது இல்லாவிட்டால் வாழ்வு இல்லை என்பது போலான பித்தைத் தலைக்கு ஏற்றுகிறது பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள்.
      மேகி நூடுல்ஸ் உடலை மட்டும் கெடுக்கும்.
       SELFI  MOVEMENT  கற்பனா உலகை (தற்பெருமையை ) முன்னிலைப்படுத்தி , இந்தப் புகைப்படம் எடுப்பதால் அடையாளம் கிடைக்கிறது என்று நம்பவைக்கிறது ; அத்துடன் சுயமோக ஆசைக்கான ரகசியத்  தீர்வையும் முன்வைக்கிறது. (சும்மாவே வெய்யிலில் தன் நிழலை நிஜமாக்கி வெக்குநடை போடும் மோகிகள் இப்போது SELFI  MOVEMENT-ல் திளைக்கிறார்கள் )
      முடியாதவர்கள் ஏக்கம்,எப்படியாவது பெறவேண்டும் என்ற தூண்டலுக்கு ஆட்படுகிறார்கள்.
      குறிப்பாக மாணவ உலகம் அதைக் கதையாடலாகவே கதைக்கின்றனர்.
      SELFI  MOVEMENT-ற்கான தருணங்களின் வீரதீரம் எங்குபோய்நிற்குமோ?
      பன்னாட்டு நிறுவனங்களும் அதன் தரகர்களும் நுகர்வுக் கலாச்சாரம் என்பதையும் தாண்டி  
 விளம்பர முதலாளித்துவமாகி    வருகிறது.
      இளைஞர்களின் எதிர்காலம்கூட விளம்பரமாகி வருகிறது.
      என்ன படிக்கலாமிலிருந்து மாதச் சம்பளம் ஒரு லட்சம் வேணுமா? என்கிறது. காரட்டை குதிரை  முன் காட்டுகிறது.
      மாணவர்களை லக்கான் கோழியாக்கி வருகிறார்கள்.
      சமூக உணர்வு என்பது மருந்துக்குக்கூட இல்லாமல் செய்யும் முயற்சி இது.
      அத்துடன் குனியக் குனியக் குத்தினாலும் , இன்னும் குனியும் அளவுக்கு  சகிப்புத்தன்மை  (tolerance ) வந்துகொண்டிருக்கிறது.
      இந்த உறைபனி நிலையை உடைக்க மாணவர்களின் மகாசக்தி எப்போது , எப்படித்திரும்பும்?

      பி.கு :             நூடுல்ஸ் விளம்பரத்திற்கு    ரூ 445 கோடி
                         தர பரிசோதனைக்கு                  ரூ 19 கோடி            - தினமலர் 9-6-2015

                                                கவனித்தீர்களா. இந்தியப் பிரதமர் மோடிஜி சீனா சென்றபோது சீனக் குழந்தைகளுடன் SELFI எடுத்து மகிழ்ந்ததை.  கவர்ச்சியின் வீச்சு புரிகிறதா ?
                               
க.செ

3 Jun 2015

“ நமோ கோஷ்டியின் கத்தி ”

1948 –ல் காந்தியின் கொலைக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் மரண தண்டனைக்குள்ளான “ கோட்சே ” யின் பேச்சுரிமைக்காக கி.பி 2010- க்குப்பின் அதை அரசியலாக்கிய நமோ கோஷ்டியினர் (group) ; படேல் உரிமைக்காக நேருவை ஓரங்கட்ட முயற்சித்த நமோ கோஷ்டியினர் இப்போது IIT சென்னை மாணவர்களின் – பேச்சுரிமையை - ஜனநாயக உரிமைக்குத் தடைவிதித்துள்ளனர். விசித்திரம்.

மாணவர் அமைப்புகளுக்கு தடைக்கான காரணமாக பொதுவாகச் சொல்லப்படுவது நமோ கோஷ்டியின் அரசாங்கத்தின் மீது மாணவர்களின் விமர்சனம்தான்.

( மீண்டும் மேலிருந்து ஒரு முறை வாசிக்கவும் )

நமோவின் கலாச்சாரம் Symbolic System – மாக இருக்கிறது. அதன் அர்த்தம் மொழியில் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

”….. Culture is how you react to it in polite way ; To be very vulgar ……” ( Slavoj Zizek, மனஅலசல் ஆய்வாளர், கலாச்சார விமர்சகர், etc.)

நமோ கோஷ்டியின் ஜனநாயகச் செயல் அடிமாட்டிற்கு கேரளா செல்லும் மாடுகள் மாதிரி உள்ளது.

IIT என்பது கல்வித்துறையின் தலையாயதாகவும் Phallic (அதிகார மையமாகவும்) ஆகவும் உள்ள ஒரு வலைப்பின்னல்.

ஏற்கனவே சென்ற ஆண்டுகளில் தெலுங்கானா போராட்டத்தை முன்னின்று நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழகம், E F L U பல்கலைக்கழகம் போன்றவற்றில் மாணவர்களின் சுதந்திரம், ஜனநாயகத்தை மறைமுகமாக கொன்று, முன்னணி ஜனநாயக மாணவர்களை castrate ( உரிமைகளைப் பறித்தது ) செய்து, ஹைதராபாத்தை விட்டு ஓடி அகதிகளாய் வாழ்பவர்களின் கதை இன்னும் அச்சேறாமல் இருக்கிறது. இப்போக்கு சென்னை IIT க்கு ஆரம்பித்துவிட்டது.

இது, பின் நவீனத்துவத்தில் மனு சாஸ்திர அக்ரஹாரத்தை ( IIT ) அரசியல்சட்டரீதியான அக்ரஹாரமாக்கும் ஒருவகை முயற்சி எனலாம்.

இப்போது IIT மாணவர்களும், சில கட்சிகளும் அடையாளப் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர் . ஒருவேளை கல்லூரி, பள்ளியில் இடம்பிடிக்கும் போட்டா போட்டிக்கான நேரம் என்பதால் அது தமிழ்நாடு மாணவர்களுக்கான பிரச்சனையாக மாறவில்லையோ?

தமிழகத்தின் ஆளும்கட்சி “ நமோ ” கோஷ்டியினரை எதிர்த்து - தற்சமயத்திற்கு - நிற்காது.புரிந்து கொள்ள முடிகிறது. ( இதையொட்டி மனஉளைச்சல் எல்லாம் தமிழ் மனத்திற்கு இருக்கா, என்ன? )

இந்தவகை பயங்கரவாதம் ஆழப்பட்டு வருகிறது. உச்சியில் தொங்கும் கத்தியாக கருத்தமைவை, கலாச்சாரத்தை கட்டமைக்கின்றனர்.

‘ பசுவதை கூடாது ’ - கலாச்சாரச்சட்டம் இது ; வேறு ஒருவகை கலாச்சாரப் பழக்கத்தை தொங்கும் கத்தியால் அச்சுறுத்துவது.

பிரதமர் யூதரானால் “ I don’t eat pork ” - அது ஒரு குறியீட்டு அமைப்பு ( Symbolic order ) ஆகிவிடும்.

( ஆனால் சாதியம் மட்டும் அப்படியே இருக்கிறது ).

மாணவர்கள் அமைப்பு என்பது குறியீடு அல்ல.அது ஒரு குறிப்பான் . பலசாதியாக , மதமாக , மொழியாக , நுழையும் தன்னிலைகள் மாணவர்களுக்கான ஜனநாயக அமைப்பில் ஒன்றுதிரளும்போது பல்வேறு தன்னிலை ஆக்கங்களுக்கு இடையில் ஒரு கொடுக்கல் வாங்கல் உறவும் , ஒரு வகை நிலப்பிரத்துவ பிற்போக்கிற்கு கேள்விக் குறியுமாகிறது. குறுங்குழுவாதத்தில் மிதந்த தன்னிலைகளுக்கு உலகளாவியமும் அறிமுகமாகிறது ; அன்பும் கூட விரிய (எல்லை கடந்து ) வாய்ப்புள்ளது.

பயங்கரவாதம் பகுதிபகுதியாக கதவைத் தட்ட ஆரம்பிக்கிறது.

அரட்டிக்கு அடங்கவேண்டுமா என்ன?.

“ கலாச்சாரம் ஒரு நம்பிக்கை தான். அது எதார்த்தம் அல்ல ” ( Reality-content ; Belief- always thought ) – zizek


       நினைவூட்டவேண்டிய கவிதை


ஜெர்மனியில்
நாசிக்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைத் தாக்கினர்.
நான் கம்யூனிஸ்ட் இல்லையென்பதால்
மௌனமாக இருந்தேன்.
பிறகு
அவர்கள் யூதர்களைக் குறி வைத்தனர்.
நான் யூதனில்லையென்பதால் அப்பொழுதும்
குரல் எழுப்பவில்லை.
பின்
தொழிற்சங்கவாதிகளைத் தாக்குகையிலும்
எனது பதில் மௌனமே : ஏனெனில்
நான்தான் தொழிற்சங்கவாதியில்லையே !
அப்புறம்
கத்தோலிக்கர்களைத் தாக்கினார்கள்
நான் புராட்டஸ்டண்ட் என்பதால்
அமைதியாகவே இருந்தேன்.
பிறகு
அவர்கள் என்னைத் தாக்க வந்தனர்
அந்த சமயத்தில் எனக்காக  குரல் எழுப்ப
                                                                 எவரும் இல்லை

நன்றி : மார்டின் நிமால்லர் (1892-1984)

( புறப்பாடு இதழ்-31. 91-92 ல் வெளிவந்தது )

~க.செ


19 May 2015

The phallus - நீதி அதிகாரியின் பார்வையில் முதல்மந்திரி என்ற அதிகாரம்

(முதல்நாள் தொடர்ச்சி)
ஒரு மாநிலத்தின் முதல்மந்திரி என்றால் என்ன? வழக்கமான கருத்தியல் அடிப்படையில் எல்லோருக்கும் தெரியும். மன அலசல்படி அதைத் தெரியவேண்டும் என்றால் THE MEANING OF THE PHALLUS  என்ற கேள்வி வேண்டும்.
       இதில் இரண்டுவகை அதிகாரம் (  Phallus  )  உள்ளது  (  oedipus) ஆனால் நமக்கு இங்கு தேவையானவற்றை மட்டும் எடுக்கிறோம்.

“ அதிகாரமானது (the phallus) அதிகாரக் குறிப்பானாக (phallic signifier) குறியீட்டுச் செயல்பாட்டுடன் (symbolic function) விதிப்படி பிணைக்கப்பட்ட, முன்னுரிமை பெற்ற/ தனிச் சிறப்புடைய குறிப்பானாகும் (privileged signifier ). எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு செயல்படும்போது Phallus (அதிகாரம்) குறியீட்டுக்கட்டமைப்பின் நங்கூரமாக ( anchoring point ) செயல்படுகிறது “ லக்கான்
 (இந்த அதிகாரத்திற்குள் ஒரு மாநிலம் அடங்கும் ).  
எளிமையாகச் சொன்னால், அது ஒரு மொத்த அமைப்பின் பிரதான இயக்கு விசை    main switch ) எனலாம். இது ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு முற்றிலும் பொருந்துமல்லவா?
       இங்கு ஜெயலலிதா  அல்லது  கலைஞர் என்ற நபர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக மாநில முதல்வர் என்பது Logos  / தளம்; அதைத்தான் குறிப்பிடப்படுகிறது.
       இந்தத் தளத்தை பிரதிநிதித்துவம் பண்ணுபவர், முதல் மந்திரி ( Chief Minister ) அவ்வளவே..
       இப்போது மற்றொரு அதிகாரத்தை அறியலாம். ஒரு வருமானவரித்துறை அதிகாரி ( income tax officer ) என்பதும் ஒரு phallic power தான். ஆனால் அது மிகக் குறிப்பான செயல்பாடுகளுக்கான அதிகாரத்தை உடையது. இவரின் அதிகாரம் மாநிலத்தில் செல்லாத நாணயம். இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட துறையுடன் , குறிப்பிட்ட வேலையுடன் சம்பந்தப்பட்டது அவ்வளவே.
       முதலில் கூறிய phallic power  மொத்த மாநிலத்தின் “ நங்கூரம் ’. ஆனால் 2-வதாக கூறிய Phallic அந்தஸ்து ஒரு துறையில், ஒரு பதவி  சம்பந்தப்பட்டது.
       இப்போது கோட்பாட்டுப் பிரச்சினையிலிருந்து நடைமுறைக்கு வருவோம்.
இந்த இரண்டு அதிகாரங்களும், அதாவது முதல்மந்திரி என்ற அதிகாரமும் ( மக்களின் முதன்மைப் பிரதிநிதி ) வருமானவரித் துறையின் அதிகாரியின் அதிகாரமும் ஒன்றா?

இந்த இரண்டு அதிகாரங்களின் அதிகார வீச்சும் ஒன்றா? அதிகாரத்தின் செல்வாக்கும் ஒன்றா?

இரண்டு அதிகாரத்திற்கான சம்பளம், படி, வசதிகள் அனைத்தும் ஒன்றா?
         ஒன்றல்ல என்று பொதுவாக  எல்லோரும் சொல்லிவிடுவார்கள். இரண்டுக்குமுள்ள உறவு என்ன? அரசு ஊழியம் என்பதுதான்.முதல் மந்திரி -5 வருடம். அரசின் கடைநிலை ஊழியர் (peon ) கூட 60 வயதுவரை நிரந்தரம். ஓய்வூதியம் உண்டு.
       இப்போது எழும் கேள்வி என்னவென்றால், ஊழல் புரிந்த வழக்கு வந்தால். முதலமைச்சரையும் வருமானவரி அதிகாரியையும் நீதிபதி பார்க்கும்கோணம் ஒன்றாகத்தான் இருக்குமா? வேறாகவா? அப்படி கோணம் ஒன்றாக இருந்தால் அது நீதியா? ஜனநாயகமா? அனைத்து அதிகாரமும், செல்வாக்கையும் Vs   ஒரு துறையின் அதிகாரத்தையும் சமச்சீராக்கம் செய்வது எந்ததெந்த வகையில் நியாயம்?
       ஜெயலலிதா வழக்கில் விடுதலை கிடைத்தற்கு முழுக்காரணம்  Krishnanand vs The State Of Madhya Pradesh on 17 December, 1976 வழக்காகும்.  மேற்கூறிய வழக்கில் குற்றவாளிக்கு கிடைத்த தீர்ப்பை மாதிரியாகக் கொண்டு இங்கே ஜெயலலலிதா வழக்கில், சொத்துக்குவிப்பு வழக்கில் கணக்குக் காட்டமுடியாத வகையில் 10%  சொத்து கூடுதலாக இருக்கலாம் என்றும், ( அதற்கும் குறைவாக சொத்து உள்ளதால் அவர் நிரபராதி ) தீர்ப்பு வழங்கி விடுதலை பண்ணியிருக்கிறார் நீதி அதிகாரி.
       இதையும் ஒரு கற்றுத் தேர்ந்த ஒருவர் இது The Judgement  Personam ?  அல்லது The Judgement in Rem - ஆ எனக் கேள்வி எழுப்புகிறார். (என்று வைத்துக் கொள்வோம்). அதாவது அந்தத் தீர்ப்பு அந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமா? அல்லது அனைத்து வழக்கிற்குமா? என்ற  நியாயமான கேள்வி வருகிறது. இதற்கு எல்லாம் யார் பதில் சொல்வது....??
       நீங்கள் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்  நடத்துவது உங்கள் சுதந்திரம்....ஆனால் ஒரு முதலமைச்சரின் C M ) ஊழல் வழக்கு என்பது மக்கள் பிரதிநிதியை / பிரதிநிதித்துவத்தை கேள்விக்குட்படுத்துவதால் அந்த அதிகாரம் அப்பழுக்கற்ற நெறியாக இருப்பதுதான் ஆரோக்கியம்.
       இன்னும் வரணும்....
க.செ
                    
Painting: Sacred India Tarot  - Bheeshma instructs Yudhishtara in the art of government