3 Jun 2015

“ நமோ கோஷ்டியின் கத்தி ”

1948 –ல் காந்தியின் கொலைக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் மரண தண்டனைக்குள்ளான “ கோட்சே ” யின் பேச்சுரிமைக்காக கி.பி 2010- க்குப்பின் அதை அரசியலாக்கிய நமோ கோஷ்டியினர் (group) ; படேல் உரிமைக்காக நேருவை ஓரங்கட்ட முயற்சித்த நமோ கோஷ்டியினர் இப்போது IIT சென்னை மாணவர்களின் – பேச்சுரிமையை - ஜனநாயக உரிமைக்குத் தடைவிதித்துள்ளனர். விசித்திரம்.

மாணவர் அமைப்புகளுக்கு தடைக்கான காரணமாக பொதுவாகச் சொல்லப்படுவது நமோ கோஷ்டியின் அரசாங்கத்தின் மீது மாணவர்களின் விமர்சனம்தான்.

( மீண்டும் மேலிருந்து ஒரு முறை வாசிக்கவும் )

நமோவின் கலாச்சாரம் Symbolic System – மாக இருக்கிறது. அதன் அர்த்தம் மொழியில் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

”….. Culture is how you react to it in polite way ; To be very vulgar ……” ( Slavoj Zizek, மனஅலசல் ஆய்வாளர், கலாச்சார விமர்சகர், etc.)

நமோ கோஷ்டியின் ஜனநாயகச் செயல் அடிமாட்டிற்கு கேரளா செல்லும் மாடுகள் மாதிரி உள்ளது.

IIT என்பது கல்வித்துறையின் தலையாயதாகவும் Phallic (அதிகார மையமாகவும்) ஆகவும் உள்ள ஒரு வலைப்பின்னல்.

ஏற்கனவே சென்ற ஆண்டுகளில் தெலுங்கானா போராட்டத்தை முன்னின்று நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழகம், E F L U பல்கலைக்கழகம் போன்றவற்றில் மாணவர்களின் சுதந்திரம், ஜனநாயகத்தை மறைமுகமாக கொன்று, முன்னணி ஜனநாயக மாணவர்களை castrate ( உரிமைகளைப் பறித்தது ) செய்து, ஹைதராபாத்தை விட்டு ஓடி அகதிகளாய் வாழ்பவர்களின் கதை இன்னும் அச்சேறாமல் இருக்கிறது. இப்போக்கு சென்னை IIT க்கு ஆரம்பித்துவிட்டது.

இது, பின் நவீனத்துவத்தில் மனு சாஸ்திர அக்ரஹாரத்தை ( IIT ) அரசியல்சட்டரீதியான அக்ரஹாரமாக்கும் ஒருவகை முயற்சி எனலாம்.

இப்போது IIT மாணவர்களும், சில கட்சிகளும் அடையாளப் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர் . ஒருவேளை கல்லூரி, பள்ளியில் இடம்பிடிக்கும் போட்டா போட்டிக்கான நேரம் என்பதால் அது தமிழ்நாடு மாணவர்களுக்கான பிரச்சனையாக மாறவில்லையோ?

தமிழகத்தின் ஆளும்கட்சி “ நமோ ” கோஷ்டியினரை எதிர்த்து - தற்சமயத்திற்கு - நிற்காது.புரிந்து கொள்ள முடிகிறது. ( இதையொட்டி மனஉளைச்சல் எல்லாம் தமிழ் மனத்திற்கு இருக்கா, என்ன? )

இந்தவகை பயங்கரவாதம் ஆழப்பட்டு வருகிறது. உச்சியில் தொங்கும் கத்தியாக கருத்தமைவை, கலாச்சாரத்தை கட்டமைக்கின்றனர்.

‘ பசுவதை கூடாது ’ - கலாச்சாரச்சட்டம் இது ; வேறு ஒருவகை கலாச்சாரப் பழக்கத்தை தொங்கும் கத்தியால் அச்சுறுத்துவது.

பிரதமர் யூதரானால் “ I don’t eat pork ” - அது ஒரு குறியீட்டு அமைப்பு ( Symbolic order ) ஆகிவிடும்.

( ஆனால் சாதியம் மட்டும் அப்படியே இருக்கிறது ).

மாணவர்கள் அமைப்பு என்பது குறியீடு அல்ல.அது ஒரு குறிப்பான் . பலசாதியாக , மதமாக , மொழியாக , நுழையும் தன்னிலைகள் மாணவர்களுக்கான ஜனநாயக அமைப்பில் ஒன்றுதிரளும்போது பல்வேறு தன்னிலை ஆக்கங்களுக்கு இடையில் ஒரு கொடுக்கல் வாங்கல் உறவும் , ஒரு வகை நிலப்பிரத்துவ பிற்போக்கிற்கு கேள்விக் குறியுமாகிறது. குறுங்குழுவாதத்தில் மிதந்த தன்னிலைகளுக்கு உலகளாவியமும் அறிமுகமாகிறது ; அன்பும் கூட விரிய (எல்லை கடந்து ) வாய்ப்புள்ளது.

பயங்கரவாதம் பகுதிபகுதியாக கதவைத் தட்ட ஆரம்பிக்கிறது.

அரட்டிக்கு அடங்கவேண்டுமா என்ன?.

“ கலாச்சாரம் ஒரு நம்பிக்கை தான். அது எதார்த்தம் அல்ல ” ( Reality-content ; Belief- always thought ) – zizek


       நினைவூட்டவேண்டிய கவிதை


ஜெர்மனியில்
நாசிக்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைத் தாக்கினர்.
நான் கம்யூனிஸ்ட் இல்லையென்பதால்
மௌனமாக இருந்தேன்.
பிறகு
அவர்கள் யூதர்களைக் குறி வைத்தனர்.
நான் யூதனில்லையென்பதால் அப்பொழுதும்
குரல் எழுப்பவில்லை.
பின்
தொழிற்சங்கவாதிகளைத் தாக்குகையிலும்
எனது பதில் மௌனமே : ஏனெனில்
நான்தான் தொழிற்சங்கவாதியில்லையே !
அப்புறம்
கத்தோலிக்கர்களைத் தாக்கினார்கள்
நான் புராட்டஸ்டண்ட் என்பதால்
அமைதியாகவே இருந்தேன்.
பிறகு
அவர்கள் என்னைத் தாக்க வந்தனர்
அந்த சமயத்தில் எனக்காக  குரல் எழுப்ப
                                                                 எவரும் இல்லை

நன்றி : மார்டின் நிமால்லர் (1892-1984)

( புறப்பாடு இதழ்-31. 91-92 ல் வெளிவந்தது )

~க.செ


19 May 2015

The phallus - நீதி அதிகாரியின் பார்வையில் முதல்மந்திரி என்ற அதிகாரம்

(முதல்நாள் தொடர்ச்சி)
ஒரு மாநிலத்தின் முதல்மந்திரி என்றால் என்ன? வழக்கமான கருத்தியல் அடிப்படையில் எல்லோருக்கும் தெரியும். மன அலசல்படி அதைத் தெரியவேண்டும் என்றால் THE MEANING OF THE PHALLUS  என்ற கேள்வி வேண்டும்.
       இதில் இரண்டுவகை அதிகாரம் (  Phallus  )  உள்ளது  (  oedipus) ஆனால் நமக்கு இங்கு தேவையானவற்றை மட்டும் எடுக்கிறோம்.

“ அதிகாரமானது (the phallus) அதிகாரக் குறிப்பானாக (phallic signifier) குறியீட்டுச் செயல்பாட்டுடன் (symbolic function) விதிப்படி பிணைக்கப்பட்ட, முன்னுரிமை பெற்ற/ தனிச் சிறப்புடைய குறிப்பானாகும் (privileged signifier ). எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு செயல்படும்போது Phallus (அதிகாரம்) குறியீட்டுக்கட்டமைப்பின் நங்கூரமாக ( anchoring point ) செயல்படுகிறது “ லக்கான்
 (இந்த அதிகாரத்திற்குள் ஒரு மாநிலம் அடங்கும் ).  
எளிமையாகச் சொன்னால், அது ஒரு மொத்த அமைப்பின் பிரதான இயக்கு விசை    ( main switch ) எனலாம். இது ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு முற்றிலும் பொருந்துமல்லவா?
       இங்கு ஜெயலலிதா  அல்லது  கலைஞர் என்ற நபர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக மாநில முதல்வர் என்பது Logos  / தளம்; அதைத்தான் குறிப்பிடப்படுகிறது.
       இந்தத் தளத்தை பிரதிநிதித்துவம் பண்ணுபவர், முதல் மந்திரி ( Chief Minister ) அவ்வளவே..
       இப்போது மற்றொரு அதிகாரத்தை அறியலாம். ஒரு வருமானவரித்துறை அதிகாரி ( income tax officer ) என்பதும் ஒரு phallic power தான். ஆனால் அது மிகக் குறிப்பான செயல்பாடுகளுக்கான அதிகாரத்தை உடையது. இவரின் அதிகாரம் மாநிலத்தில் செல்லாத நாணயம். இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட துறையுடன் , குறிப்பிட்ட வேலையுடன் சம்பந்தப்பட்டது அவ்வளவே.
       முதலில் கூறிய phallic power  மொத்த மாநிலத்தின் “ நங்கூரம் ”’. ஆனால் 2-வதாக கூறிய Phallic அந்தஸ்து ஒரு துறையில், ஒரு பதவி  சம்பந்தப்பட்டது.
       இப்போது கோட்பாட்டுப் பிரச்சினையிலிருந்து நடைமுறைக்கு வருவோம்.
இந்த இரண்டு அதிகாரங்களும், அதாவது முதல்மந்திரி என்ற அதிகாரமும் ( மக்களின் முதன்மைப் பிரதிநிதி ) வருமானவரித் துறையின் அதிகாரியின் அதிகாரமும் ஒன்றா?

இந்த இரண்டு அதிகாரங்களின் அதிகார வீச்சும் ஒன்றா? அதிகாரத்தின் செல்வாக்கும் ஒன்றா?

இரண்டு அதிகாரத்திற்கான சம்பளம், படி, வசதிகள் அனைத்தும் ஒன்றா?
         ஒன்றல்ல என்று பொதுவாக  எல்லோரும் சொல்லிவிடுவார்கள். இரண்டுக்குமுள்ள உறவு என்ன? அரசு ஊழியம் என்பதுதான்.முதல் மந்திரி -5 வருடம். அரசின் கடைநிலை ஊழியர் (peon ) கூட 60 வயதுவரை நிரந்தரம். ஓய்வூதியம் உண்டு.
       இப்போது எழும் கேள்வி என்னவென்றால், ஊழல் புரிந்த வழக்கு வந்தால். முதலமைச்சரையும் வருமானவரி அதிகாரியையும் நீதிபதி பார்க்கும்கோணம் ஒன்றாகத்தான் இருக்குமா? வேறாகவா? அப்படி கோணம் ஒன்றாக இருந்தால் அது நீதியா? ஜனநாயகமா? அனைத்து அதிகாரமும், செல்வாக்கையும் Vs   ஒரு துறையின் அதிகாரத்தையும் சமச்சீராக்கம் செய்வது எந்ததெந்த வகையில் நியாயம்?
       ஜெயலலிதா வழக்கில் விடுதலை கிடைத்தற்கு முழுக்காரணம்  Krishnanand vs The State Of Madhya Pradesh on 17 December, 1976 வழக்காகும்.  மேற்கூறிய வழக்கில் குற்றவாளிக்கு கிடைத்த தீர்ப்பை மாதிரியாகக் கொண்டு இங்கே ஜெயலலலிதா வழக்கில், சொத்துக்குவிப்பு வழக்கில் கணக்குக் காட்டமுடியாத வகையில் 10%  சொத்து கூடுதலாக இருக்கலாம் என்றும், ( அதற்கும் குறைவாக சொத்து உள்ளதால் அவர் நிரபராதி ) தீர்ப்பு வழங்கி விடுதலை பண்ணியிருக்கிறார் நீதி அதிகாரி.
       இதையும் ஒரு கற்றுத் தேர்ந்த ஒருவர் இது The Judgement  Personam ?  அல்லது The Judgement in Rem - ஆ எனக் கேள்வி எழுப்புகிறார். (என்று வைத்துக் கொள்வோம்). அதாவது அந்தத் தீர்ப்பு அந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமா? அல்லது அனைத்து வழக்கிற்குமா? என்ற  நியாயமான கேள்வி வருகிறது. இதற்கு எல்லாம் யார் பதில் சொல்வது....??
       நீங்கள் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்  நடத்துவது உங்கள் சுதந்திரம்....ஆனால் ஒரு முதலமைச்சரின் ( C M ) ஊழல் வழக்கு என்பது மக்கள் பிரதிநிதியை / பிரதிநிதித்துவத்தை கேள்விக்குட்படுத்துவதால் அந்த அதிகாரம் அப்பழுக்கற்ற நெறியாக இருப்பதுதான் ஆரோக்கியம்.
       இன்னும் வரணும்....
க.செ
                    
Painting: Sacred India Tarot  - Bheeshma instructs Yudhishtara in the art of government

15 May 2015

முகமூடி முகமாயுள்ளது


அத்வைதம்,த்வைதம், இவைகள் எல்லாம் இணைந்து ; இவர்களுடன் மோடியும், அருண்ஜேட்லியும் சேர்ந்து விசுவாச அரசியலின் கலாச்சாரமயத்தை ( culturalization of politics )  “ முழுமையாக்கி ”,அரக்கர்களை வென்று, நீதியை நிலைநாட்டிவிட்டனர்.அப்படித்தானே !.
      விசுவாச ஊடகங்களின் ( media ) ( பத்திரிக்கைகள் உட்பட) பதட்டம் ஓய்ந்து, எரிந்த கட்சி / எரியாத கட்சிக்கு விவாதமேடையில் குரலாட / கூச்சலாட வருமானத்தைப் பார்த்துக்கொண்டு வாழ்த்திக் கொண்டுள்ளனர்…….RESURRECTON (புத்துயிர்ப்பாம்)


மிச்சம்பேர் மனச்சாட்சியிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். விசுவாசிகளைத் தவிர பிறர் டி.வி.யில் தீவிரமாகவும் , காத்திரமாகவும் நீதிபதிகளைப்பற்றி புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
      மன அலசல் ஆய்வாளர் ( Slavoj Zizek ) கூறியபடி ‘ சகிப்புத்தன்மை ’ உச்சத்திற்குச் சென்றுவிட்டது. இதை, இந்த “ அரசியல் கலாச்சாரமயத்தை ” கட்சிகளின் ,தலைவர்களின் உபயம் எனலாமா? சாதி அடையாளம், மத அடையாளம், மொழி அடையாளத்துடன் இந்த    ‘விசுவாசி ’ ( Faith) அடையாளமும் சேர்ந்துவிட்டது.
      இது பச்சை குத்துதல்,தோளில் துண்டுபோடல்,கரைவேட்டியில் ஆரம்பித்து,மண்சோறு தின்பது,ஆயிரம் கண்ணுடையாளுக்காக அனைத்தையும் ஏற்று, ஆட்சிக் கட்டிலுக்கு ’கான்’ களுக்குப் பதில் மோடிகளும் ஜேட்லிகளும் சிவப்புக் கம்பளமும் ஆசீர்வாதமும் வழங்கியாயிற்று.
      “ ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை ” உண்மைதான்.
      இளந்தலைமுறையினருக்கு வரலாற்று உணர்வு பெருகுவதற்காக இது கொடுக்கப்படுகிறதா?
      ஜெயலலிதா மீது 1996 ஜூன் 14-ல் ( இப்போதைய ) பா.ஜா.கா-வின் பெருந்தலைவர் சுப்பிரமணியசாமி வழக்குத் தொடர்ந்தார்.
      1997-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 18 ஆயிரம் ஆவணங்கள், 88 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆனது. பிறகு 2000-2014 வரை இழுத்தடிப்பு. 2014-ல் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது.                               
      மனப்பதட்டம் , பித்து ஆரம்பித்துவிட்டது.தமிழகக் கோவில்களில் இராக்கால பூஜை வரை விடுதலை வேண்டி அர்ச்சனை. தீச்சட்டிகள், முளைப்பாரி, அப்புறம் மண்சோறு உண்ணல்; அரசு நிலைகுலைந்து ஸ்தம்பித்து ( stalemate ) நின்றது.
      அதாவது, சட்டப்படி ஜெயலலிதா முதல்வர் இல்லை;ஆனால் முதல்வர் பன்னீர் வேஷ்டி கட்டி வீதிக்கு வருவார், செயல்படவும் மாட்டார், விளையாடவும் மாட்டார். பின்னர் மேல்முறையீடு. 2015 மே 11-ல் நிர்வாகம் ஜெயலலிதா நிரபராதி என்று விடுதலை செய்தது.
எல்லோருக்கும் லட்டு .... மொட்டையடிப்பும் தொடங்கி விட்டது.
      ஒரு 19 ஆண்டுகள் ஒரு ஊழல் வழக்கை விசாரித்து  தீர்ப்பு சொல்ல எடுத்துள்ளது இந்த நிர்வாகம்.
      இதற்கிடையில் எத்தனை நீதி அதிகாரிகள் வந்து போயினர், அரசு வழக்குரைஞர்கள் எத்தனை பேர்?
       இவர்களுக்கான மொத்த செலவு எத்தனை லட்சம் அல்லது கோடிகள்? யார்வீட்டுப் பணம்?
      குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டபின் சட்ட அமைச்சர் வந்து அந்த வீட்டில் கைநனைத்துச் சென்றால் என்ன பொருள்? இ.பி.கோ.-வில் அதற்கு இடமில்லை, ஆனால் ‘நெறி’  (Ethics) வேண்டாமா?
      தத்துவர் J.K சொன்னமாதிரி ‘ பார்ப்பவர் பார்க்கப்படுகிறார் ’ என்பதில் சட்ட அமைச்சர், வழக்கு விசாரணை நிறுவனம் (court) , ஆளும்கட்சிகளின் ஊக வணிகம் (கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்) பார்க்கப்படுகிறார்கள்.
      இந்த தில்லைஅம்பலத்து கூத்தை விட வழக்கு விசாரணை நிர்வாகம், அதன் கூத்தும் அம்பலக் கூத்தனைவிட அபிநயம் அருமையாய் இருந்தது.
      இது வரலாறு. இனியாகும் மனிதர்கள் இந்த வரலாற்றை எப்படி, எதை அகவயப்படுத்துவர் ( introjection ) , எதையெல்லாம் வெளித்தள்ளுவார்கள் ( projection ) உளவியலாக?
      சகிப்புத்தன்மைக்கு ( சாதியை குணம் , மணம் குறையாமல் காப்பவர்கள் ஆயிற்றே?) அளவேயில்லையா?
      ‘ நெறி ’ க்கு (ethics) எதிரியாய் / முரணாய் இருப்பது இந்த பாராளுமன்ற ஜனநாயகமே.
      இமயத்தின் குமுறல் சென்னை வீதி வரை கேட்டது கனவிலா தூக்கத்திலா? அநீதிக்கு ஆதரவான விசுவாசமும், அரசியல் கலாச்சாரமயமாக்கலும் அதிகார மையங்களுக்கே நலம் பயக்கும். விசுவாசத்தின் மூப்பு மக்களுக்கு ஜனநாயகத்திற்கு வழிகாட்டாமல் அதிகாரத்துவ பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே வழி வகுக்கும். ( மிசா நினைவிருக்கட்டும் ) .
      [ அரசர்கள், நீதிஅரசர்களின் தன்விருப்பு அதிகாரத்தை (discrete power) இனியும் கேள்விக்குட்படுத்தி பொதுஜன கருத்தை விவாதித்து முடிவெடுக்காமல் இருக்கும்வரை ‘விபத்துகளுக்கு’ பஞ்சம் இருக்காது ].
( முதல் காட்சி முற்றுப்பெற்றது )
      பி.கு : இனி சொத்து ( லஞ்சம் வாங்குபவர்கள் ) குவிப்பவர்களுக்கு உட்சநீதிமன்ற வழிகாட்டல் – உச்சபட்ச எல்லை 20 % - மிக உபயோகமாக இருக்கும் என மனதில் அகவயப்படுத்தாமல் இருந்தால்......சரி.
க.செ

9 Apr 2015

எது கௌரவக் கொலை ?

அண்மையில் பெரும்பாலான வடமாநிலங்களிலும், பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண் தாழ்த்தப்பட்ட சாதி ஆணை திருமணம் பண்ணிவிட்டால் ‘ லட்சுமணன் ’ கோட்டை மீறிய பெண்ணை எப்படியும் கண்டு பிடித்து பெண்ணின் தகப்பனாரோ, உறவினரோ அப்பெண்ணைக் கொன்றுவிடுவதற்கு பத்திரிக்கைகள் கொடுத்துள்ள பெயர்தான் ‘ கௌரவக் கொலை ‘ ( honour killing ).
          கௌரவம் என்பது ஒரு நம்பிக்கை சார்ந்ததுதானே; விழுமியம்தானே. கௌரவம் என்பது ஏதோ Real  மாதிரியும் / எதார்த்தம் மாதிரியும், அதைப் பறிகொடுத்தவர்-பெண் தந்தை-இழந்ததை மீட்பதற்காக தன் மகளைக் கொன்று / தீ வைத்து கௌரவம் மீட்டெடுக்கப்படுவது மாதிரியான சித்தரிப்புத்தானே.
          கௌரவம் அடிப்படையில் ‘ மனம் ’ சார்ந்ததுதானே.

          வக்கிர சுயமோக காயத்தால் ஏற்பட்ட பாதிப்பால்( affect ) ஆதார இச்சையின்( Id ) உந்தலால், மற்றமையின் ( Other ) அதாவது சமூகக் கலாச்சாரம் இப்படி நடப்பதை-கொலை செய்வதை-விரும்புவதாக கற்பனை செய்து கொண்டு ( fantasize ), கொடூரத்திற்கு அந்தத்தன்னிலை ஆட்பட்டு, மகளை அழித்தொழிக்கிறது. இதில் எங்கே கௌரவம் இருக்கிறது? சாதியே ஒரு புனைவுக் கலாச்சாரத்தால் / தந்தை அதிகாரத்தால் / மொழியால் கட்டப்பட்டு, ஊட்டிவளர்க்கப்பட்டு, ஒரு பெயரும், அவன் / அவளுக்கு சாதி அடையாளமும் பிதுரார்ஜித சொத்தாக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. கௌரவம்  என்பது   மனம் ; நம்பிக்கை. அவ்வளவே.         
          ஆனால் , தமிழகத்தில் ‘ கௌரவ ’ கொலைகளே இல்லையென்று தமிழக முதல்வர் அறிவித்துவிட்டார். ( ஏற்கனவே தமிழகத்தின் கௌரவமே கொலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியாதவராக இருப்பவர் நிஜக் கொலைகளையும் மறுத்துவிட்டார் ).
          சாதாரணமாக, தன் மகளைக் கொல்வது என்பது சட்டப் பிரச்சினை, கொலைக் குற்றம், கோர்ட், தூக்கு, ஆயுள் தண்டனை, போதும், போதும்.
          ஆனால், தாழ்த்தப்பட்ட சாதி ஆணை மணந்ததற்காக பெண் கொலை செய்யப்படுவது என்பது முற்றிலும் வேறானது. முதலில், கொன்றது மகளை மட்டுமல்ல; மனித நாகரீகத்தையும் சேர்த்துத்தான் அது நடக்கிறது.
          இந்தக் கொலை மூலம் யாருடைய கௌரவம் காக்கப்படுகிறது?
          மனிதன் பிறக்கும்போது எந்த அடையாளத்துடன் பிறக்கிறான்? அடையாளம் என்பதுவே ஒரு கண்ணாடிப் பிம்பம்தானே ( illusion ) ; கானல் நீர்தானே?
          லக்கானின் மொழியில் சொன்னால், “ மனிதர்கள் ( human beings) உள்ளார்ந்த அல்லது
‘ உண்மையான ’ அடையாளம் எதையும் கொண்டிருக்கவில்லை ” (do not have an inherent or true identity ).                            
          லக்கானைப் பொருத்தவரை, “ மனித தன்னிலையாக்கமானது ( human subjectivity ) தனிமுதலான ( original ) அடிப்படையான ( radical ) அடையாளம் இல்லாமை ( lack of identity ) என்பதைக் கொண்டு விளக்கப்படுகிறது. நாம் யார் என்பதை நமக்கு நாமே புரிந்து கொள்வதற்கும் உள்வாங்குவதற்கும் முயற்சிக்கிறோம்.”
           ‘ இப்படியாக இருக்க விருப்பம் ’ ( want to-be ) என்கிற மனிதர்களைப் பற்றி லக்கான் குறிப்பிடுகிறார்.
          “ அடையாளப்படுத்திக் கொள்ளல் ( identification ) என்பது குறிப்பான அகவுணர்வு முழுமையை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும் ( identification is a means of acquiring a greater subjective completion ).
          ஆனால், ஒரு அடையாளத்தைப் பெறுவதற்கு ஒருவர் மற்றொருவரை நாடவேண்டியது அவசியமாகிறது. ஆக, மற்றொரு நபருடன் உறவு கொள்ளும்போது மட்டுமே ஒருவரால் தனது அடையாளத்தைக் கோர முடியும்.” (லக்கான் 1979 )
          மீண்டும் இதை ஒருமுறை படித்துக் கொள்ளவும்.ஒரு கொலைக்கான தூண்டல், சக ஜாதிக்காரர்களின் அங்கீகாரத்திற்காக மகளைக் கொன்றுவிட்டு தன்மீது படிந்த  ‘ ஈனத்தை ’ கழுவிவிட்டதான illusion, delusion -ல் எஞ்சிய வாழ்வை மார்தட்டித்திரியலாம்
          மற்றொன்றும் கவனிக்கவேண்டிய ஒன்று.
           பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையிலான (BC,SC) ஒப்பந்தத்தை மாப்பிள்ளைப் பையன், மகள் மீறிவிட்டதாக எஜமானத்துவம் அடிமைகள் மீது (மகள், தாழ்த்தப்பட்டவர்கள்) பாய எத்தனமும் ; சாதி ( master signifier ) அடுத்த தேர்தலுக்கான அமைப்பு வேலையாகவும் இதைக் கருதக்கூடும்.
          கொலைகளைத் தடுக்க கூடுதல் சட்டம் கேட்பது ஒருபுறம் சரி.
          மறுபுறம், இதை சட்டஒழுங்குப் பிரச்சனையாக குறுக்கக் கூடாது ( இது பொருளாதாரவாதம் ).
          ஏனெனில், இது போன்ற திருமணங்கள்  புதிய  விடியலுக்கான ஒரு  குறியீடாகக் கூட  
( symptom )   இருக்கலாம். யார் கண்டது. விழித்துப் பார்ப்பதற்கு, உற்றுக் கேட்பதற்கான நேரம் இது.
          வீட்டில் கலாச்சார விதிகள் மீறப்படும்பொழுது ,
          மாற்றத்திற்கான முயற்சி அல்லது வேறு ஒரு அமைப்பு முறையில் ( frame ) குடும்பக் கட்டமைப்பிற்கு தயாராவது, சாவுக்கும் தயாராய் இருப்பது ஒரு  குறியீடு  ( symptom ) இல்லையா?
          இதை ‘ நவசக்தி ’க்கான குறி ( sign ) என்று ஏன் நினைக்கக்கூடாது? .
          பெண்களுக்கு, தங்கள் தேவையை ( demand ) தாங்களாகவே தீர்மானிக்கும்     Symbolic Phallus ( குறியீட்டு அதிகாரம் ) வேண்டும்.
          பெண்களுக்கு மகிழ்வு [ jouissance ] சுதந்திரம் வேண்டும். காமசுகம் அல்ல.
          நாம் ஒரு புதிய துவக்கத்திற்காக காத்திருப்பதும் ; சாதியத்தை, தந்தை அதிகாரத்தை மீறும்பொழுது உடனடியாக ஒரு காத்திருக்கும் வீடு, தைரியம் சொல்லி, உடனடி உதவிகள் அளிக்க புதுயுக நண்பர்கள் முன்னணி வேண்டும்.
          இந்த புதிய பறவைகளுக்கு ஒரு புதிய உலகு-தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொண்டு, சமூக உறவு கொள்ள-அமைப்பும், அது பற்றிய கனவுடன் புறப்படும் அவர்களை ’குலவை’ போட ஆள் இல்லாவிட்டாலும், ஒரு ‘ big hallo ’ சொல்ல, வாழ்த்த, புன்முறுவலுடன் காத்திருக்கும் ஒரு நவயுகத்திற்கான முன்னணி தமிழகம் முழுவதும் அமைப்பதற்கான, விவாதிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
          வாருங்கள்.விவாதிப்போம்.
          [ குறிப்பு : இநத கௌரவக் கொலை என்ற வார்த்தைக்குப் பதிலாக சித்தத்தையும் வெளிப்படுத்துவதுமாதிரி ஒரு புதிய வார்த்தையை கண்டுபிடிக்கலாமே ] 
க.செ
7-4-15