5 Feb 2020

கீர்த்தி சரீரியின் சுயமோக வெறி



கீர்த்திசரீரி ( புகழுடம்பு ) யார் என்பதில் / அடையாளம் காண்பதில் எந்த சிக்கழும் இல்லையே ! 

ஆம். இந்திய / பாரதத்தின் வரலாறு ரீதியிலான குல்லாய் / தலைப்பா அனைத்தையும் அறிமுகப்படுத்தியவர்களின் முன்னணியில் இருப்பவர் பிரதமர் மோடி. 

      இவரின் சுயமோக வெறியால் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் ஜனவரி 3ம் வாரத்தில் ஒரு கொள்கை மாற்றம் உண்டாக்கினார்

(1) சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டியதில்லை.  (2) பொது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவெடுக்கப்பட்டது .

      ஹைட்ரோ கார்பனுக்கு தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்பும் ; விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற பயத்தில் உள்ளனர்

இந்தச் சூழல் மோடியை தோல்வியடையச் செய்யும் முயற்சி என்பது அவரின் குறுத்தெலும்பில் பயம் தோன்றிவிட்டிருக்கும் .  விளைவு சுயமோக வெறி .   அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலால் கட்டுக்கடங்காத கோபம் / சுயமோக  வெறி பல வடிவங்களில்  விளைவு பழியெடுப்பு .

      ஒரு சுயமோகியை பொருத்தளவில் அவமானப்படுத்தியதாக உணரப்படும் நபர்கள் மீது வெறி செலுத்தப்படுகிறது ” , மோடி செயலுக்குப் பொருந்தும் . ( ஆய்வு அமெரிக்காவின்  மன அலசல் ஆய்வு வித்தகரான ஹோகட் ஆகும் ) .   இது நமது கீர்த்தி சரீரிக்கு பொருந்துகிறது .  தோல்வியை வெற்றியாக்கும் வெறி மேற்கூறிய 2 அயிட்டங்களில் கொள்கையில் மாற்றம் ; அதுவும் உடனடியாக செய்து முடித்திருக்கிறார் .  இவரின் இந்த நடத்தை அவருள் மறைந்து கிடக்கின்ற அவரின் நோக்கம் எத்திசையில் என்பதை காட்டுகிறது .  மக்கள் கருத்து அவருக்கு தூசிக்கு சமமாயிற்று .  சுற்றுச்சூழல் அமைச்சகம் அவரின் ஆட்சிக்கு உட்பட்டதுதான் , அதையும் லட்சியம் பண்ணாமல் அந்த அதிகாரத்தின் பல்லை பிடுங்கியாயிற்று .

      மோடி பாசிசத்தின் ஆணி வேராக இருக்கிறார் , அத்தோடு அவர் ஒரு சுயமோக வெறியர் (Narcissistic rage ) சுயமோக மனக்காயத்திற்கான எதிர்வினை இது எனலாம் .
பாராளுமன்ற ஜனநாயகத்தைவிட பன்னாட்டு , இந்நாட்டு மூலதன ஆட்சிக்கான சேவகனாகவும் உள்ளார் .  அத்தோடு சுயமோகத்திற்கு எதிரான எல்லா சட்ட திட்டங்களை முடக்கி போடும் மூர்க்கம் முழு மூச்சாக செயல்படுகிறது .
நாட்டுபற்று / தேசப்பற்று என்னும் பேரில் தேசிய வாதத்தை / தேசிய வெறியை முன்னிறுத்துகிறார் மோடி .  உதாரணமாக சமீபத்திய சுவிட்சர்லாந்தில் சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்றது , அதில் உலகின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ் அவர்கள் இந்தியாவை பற்றிய விமர்சனத்தில் இந்தியாவில் இப்படி ஒரு நிலை உருவாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை .  அங்கு தேசியவாதம் என்ற பெயரில் அரசு மிக தீவிரமாக ஆட்சியை நடத்திவருகிறது .  இந்தியா மிக மோசமான காலத்தில்   யாரும் எதிர்பார்க்காத ஒரு நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருக்கிறது . ( அவர் பேச்சின் சுருக்கம் ) .  இவர் ஹங்கேரியர் . ஹிட்லரின் நாசி வெறி தாக்குதலின் போது தப்பித்து அமெரிக்காவில் குடியேறியவர் .  ( வணக்கம் இந்தியா 25.01.2020 ) .

நாட்டு பற்று / நாட்டுப் பித்து வேறு வேறு .

பாசிஸ்ட்களின் உன்னதப் பேச்சு , பூடகமாகவே இருக்கிறது .   ஜனவரி 4வது வாரத்தில் தேசிய மாணவர்படை பேரணியில் மோடி பேசியது ……..  இந்தியாவில் ஒரு இளம் மக்கள் தொகை உள்ளது .  நாங்கள் அதைப்பற்றி பெருமிதம் கொள்கிறோம் .  ஆனால் நாட்டின் சிந்தனையும் இளமையாக இருக்க வேண்டும் என்றார் .  மேலும் கடந்த காலம் , எதிர்காலம் பற்றி பூடகமாக பேசுகிறார் , போர் வெறியை தூண்டுகிறார் , அத்தோடு முஸ்லீம்  இனவாதம்  / மதவாதம் பேசுகிறார் , போர் வெறியை இப்படி பேசுகிறார் .  அண்டை நாட்டை தோற்கடிக்க 10 அல்லது 12 நாட்களுக்கு மேல் தேவையில்லை என்கிறார்

காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பது போர் தயாரிப்புபடி முன்வைத்தே மோடியின் விமர்சனம் வருகிறது .  30 வருடங்களுக்கு மேலாக அடுத்த தலைமுறை . போர் விமானம்கூட ஐஏஎப்ல் சேர்க்கப்படவில்லை .  ஆனால் . . . . . இன்று அடுத்த தலைமுறைக்கான போர் விமானமாக ரஃபேல் உள்ளது . . .  . . . .

      மேலும் பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள் .  நாம் உதவ வேண்டாமா ?  என்கிறார் .

      தமிழக மீனர்களும் , யாழ் தமிழர்களும் , சிங்கள ராணுவத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்களே ?  அவர்களுக்கு உதவ வேண்டாமா ?  கேட்டால் ( மூச்சுவிடுவதில்லை ? ) 

      இந்த இனச் சிந்தனை என்பது என்னது ?  பாசிசத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியம்  இந்த இளைஞர் சிந்தனைக்கு , ஆள் சேர்ப்பது கல்லூரி மாணவர்கள் / விளையாட்டு வீரர்கள்   ..பி. முதல்வர் ஒலிம்பிக்கில் தங்கமெடல் வாங்குபவருக்கு லட்சக்கணக்கில் வெகுமதி .  விளையாட்டை விருத்தி பண்ணுகிறேன் என்னும் பெயரில் பி.ஜே.பி.ஆட்சியை , கட்சியை முன்னிலைப்படுத்துகிறார்கள் .

      மோடி என்சிசி மாணவர்களிடையே பேசும் பொழுது வரலாற்று அநீதியை சரிசெய்யவே குடியுரிமை திருத்த சட்டம் வந்தது என்கிறார் ,  அநீதி என்று விட்டு காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை சுட்டிகாட்டுவதோடு , பாகிஸ்தானோடு போரிட 10 அல்லது 12 நாட்கள் போதும் என்கிறார்

எல்லாரிடமும் போர்வெறியை தூண்டுவது , இந்திய ராணுவத்தை நவீனமாக்கல் , இராணுவ மயமாதலை மக்கள் மனதில் கருத்துருவாக்கம் பண்ணுகிறார் . அத்தோடு பாகிஸ்தானை சீண்டுவதும் நடக்கிறது .

      அண்டை அயலானை நேசி என்று ஆன்மீகம் சொன்னால் மோடி அண்டை அயலான் எனக்கு தூசி என்கிறார்

அதாவது , அகண்ட பாரதத்திற்காக அணு ஆயுதப் போருக்குகூட தயாராய் இருக்கிறது போல் தோன்றுகிறது .

      போன கட்டுரையில் சொன்னது போல் சூப்பர் ஈகோ இவர்களை கட்டிவைக்கிறது.  நவீனப் பாசிசம் பெரிய வம்பை இழுக்கத் தயாராகிறதை உணர வேண்டும் .  போர் வெறிக் கூச்சலை பகடி பண்ண வேண்டும் .
      உடனடித் தேவை பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி  .  இந்த ஐக்கிய முன்ன்ணி பாராளுமன்றத்திற்கானதைவிட மிக முக்கியமானதாக உணர வேண்டும்
      ஊடகங்கள் கருத்தியலாக அவர்களின் கவர்ச்சி வீக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும் .

                                                            .செ.

No comments:

Post a Comment