தீவிர தேசியவாதத்தின் புயல்
“ இந்தியர் பராக்கிரமம் வாய்ந்த நாடு ( MASCULINE STATE ) என்பதை நோக்கி பெரும்பான்மையாக மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டனர்.
அவர்களுக்கு தேசப்பற்றுக்கும் இந்து தேசிய வாதத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. நடந்த தேர்தல் முடிவுக்குப்பின், சமூக அரசியல் உளவியலாளரான அஷிஷ்நந்தி “ கேரவன் “ இதழுக்கு அளித்த பேட்டியின் தலைப்பு , பி.ஜே.பி யின் வெற்றியை ஒரு தலைமுறை தாங்கிக் கொள்ள வேண்டும் .
தேர்தல் வெற்றிக்குப்பின் காஷ்மீர் சிறப்பு அதிகாரப் பிரச்சினை , அயோத்தியில் ராமர்கோவில் கட்ட நிச்சயமாக்கிக் கொண்டது போன்றவைகளின் வெற்றி ஓசை . இதற்கு முன் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றினர்.
(12.12.2019) இந்த டிசம்பரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , வங்காள தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மதப்பிரச்சினை காரணமாக , இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடிஉரிமை பெறமுடியும் . கிறிஸ்துவர் , இந்து, சீக்கியர் , ஜைனர் , பார்சி மற்றும் புத்தமதத்தினர் இங்கு குடியுரிமை பெறமுடியும் . ஆனால் இந்த மசோதா இஸ்லாமியருக்கும் , யாழ்ப்பான தமிழருக்கும் பொருந்தாது .
இதை எதிர்த்து பல கட்சிகளும் , சமூக இயக்கங்களும் அடையாளப் போராட்டங்கள் நடத்துகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் . . . “ குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறிய இந்த நாள் இந்திய வரலாற்றில் மைல்கல்லாக அமைந்துள்ளது ” . பிரதமர் நரேந்திர மோடி.
சோனியாகாந்தி “ இந்த மசோதாவானது ஒரு குழப்பமான , சிதைந்த மற்றும் பிளவுபட்ட இந்தியாவை உருவாக்குகிறது . இந்த மசோதா அமலுக்கு வரும் போது மதம்தான் தேசத்தை நிர்ணயிக்கும் ” என்கிறார் . இந்து தமிழ் 12.12.2019.
எதிர்கட்சிகளின் போராட்டம் அமீத்ஷாவுக்கு ஒரு தமாஷாக இருக்கும். ஏனெனில் அவரோ அல்லது மோடியோ எதிர்கட்சிகள் சாம்பலை அனைத்துக் கொண்டுள்ளதைப் பார்த்து சிரிப்பு. இனி வரக்கூடிய தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா வேரோடு தனிநபரின் நான் உணர்வை, அத்தனை செயல்களையும் கண்காணிக்கும் உரிமையை அரசாங்கம் அரசுக்கு வழங்கப் போகிறது . ஜாக்கிரதை !
பி.ஜே.பி-யின் மோடி – அமித்ஷா போன்றவர்கள் தலைவர்கள்தான் , ஆனாலும் இவர்களையும் ஆட்டிவைக்கும் சக்தியும் இவர்கள் தலைவணங்கும் அதிகாரம் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரம் , தத்துவம் ஆகியவற்றை விலாவாரியாக பேசுவதைவிட இப்படிச் சொல்லிவிடலாம் , “ பாசிசம் ” , “ நாசிசம் ” . இவைகள் பி.ஜே.பி , “ மோடி ” , “ அமித்ஷா ”வின் “ மனத்தின் இருப்பு ”. இந்த மேற்கூறிய சொற்களால் அகவயப் பட்டிருப்பதால் (internationalization
of parental authority ) சுருக்கமாகச் சொன்னால் தந்தை அதிகாரம் ( உண்மைத் தந்தை அல்ல ) - உளவியலாகச் சொன்னால் சூப்பர் ஈகோ ( super ego ) பேரகன் – ஒரு தன்னிலையை ( subject ) நெறிப்படி ( ethically ) நடக்குமாறு உந்துகின்ற முகமைக்கு மூன்று குறிப்பிடத்தக்க வாரத்தைகளை லெக்கான் பயன்படுத்துகிறார் . அவர் 4வது வார்த்தையாக law of desire-ஐ சேர்க்கிறார் . சூப்பர் ஈகோ / பேரகன் என்பது ஒரு முகமை ( agency ) .
பேரகன் ( super
ego என்பது real ) வார்த்தைகளால் விளக்க முடியாதது ஆகும் . அது மனநிறைவடையாத முகமையாகும் . சாத்தியமற்ற கோரிக்கையைக் கூட செய் என்று ஆணையிடும் , திணரடிக்கும் , தோல்வியுற்றால் ஏளனம் செய்யும் . இந்த முகமைக்கு ஒழுக்க நெறிப்படியான இனச்சான்று கிடையாது . அடிப்படையான கோரிக்கைகளை எப்படியாவது செய்து முடி என்பதுதான் அதன் ஆணை. இங்கு பேரகன் என்பது நெறிக்கு எதிரான முகமையாகும் . (உ-ம் செய் அல்லது செத்துமடி ) . இங்கு இந்த பேரகன் பகுத்தறிவற்ற மிதமிஞ்சிய , கொடூரமான , மனப்பதட்டத்தை தூண்டும் . பேரகன் / சூப்பர் ஈகோ நம்மை அலைக்களிக்கும்
. சூப்பர் ஈகோவின் அழுத்தத்தால் நாம் அனுபவிக்கின்ற குற்ற உணர்வானது மாயை அல்ல. அது உண்மையான ஒன்றாகும் .
( நீண்ட விளக்கம் தேவை கருதியே ) பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பெரிய யுத்த தந்திரத்தை வலையை ( net work ) வைத்துப் பிடிக்க எத்தனத்தில் செயல்படுகிறார்கள் .
அவர்களின் செயல் ஒவ்வொன்றும் - காஷ்மீர் , அயோத்தி , குடியுரிமை போன்றவை தனித்தனியான பிரச்சினை என்றாலும் , மேலெலுந்தவாரு பாசிசம் என்று கூறிக்கொண்டாலும் அவர்களின் உடம்பில்
உள்ள தூசி கூட போகாது.
பிரச்சினையின் மூலம் எது என்று தேடி
, ஆராய்ந்து , ஒட்டு மொத்தத்தில் , இருக்கக்கூடிய ( வலையில் ) / பிரச்சினை என்பதற்கான போராட்டமாக எதிர்கொள்ள
வேண்டும். தேர்தல் யுக்தியாக
கருதினால் , எதிர்காலம் சூன்யம்தான். உதாரணத்திற்கு சிறுபான்மையின் நிலை. பாகிஸ்தானில் 1947ல் 23% / 2011-ல் 3.7 சதவீதம் , வங்கதேசம்
1947ல் 22% / 2011ல் 7 சதவீதம்
, இநதியா 1947-ல் 9.8% / 2011ல் 14.23 சதவீதம்.
ஏன் மேலே கண்ட நாடுகளில் 3
மட்டும் ( இலங்கை கூட இல்லை ) கணக்கெடுப்பிற்குள்ளாகிறது ?
அமித்ஷா “ சிறுபான்மையினருக்கு
அங்கு என்ன நேர்ந்தது ? அவர்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர் அல்லது அந்நாடுகளிலிருந்து
வெளியேற வேண்டும் அளவுக்கு ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த இந்துக்கள் , சீக்கியர்கள் , சமணர்கள் , கிறிஸ்தவர்கள்
, பார்சீக்கள் , புத்தமதத்தினர் என்ன தவறு செய்தனர்
என்று நான் கேட்க விரும்புகிறேன் ?
“ இந்த விரும்பும் மனம் தான் சூப்பர் ஈகோவின் தூண்டல். செய் , செய்
என்று சாத்திரமாக அழுத்தம் கொடுக்கும். பாவம் மோடியும்
, அமித்ஷாவும் சூப்பர் ஈகோவின் அடிமைகள் அவர்கள். பிரதமர்தான் , உள்துறை அமைச்சர்தான். சூப்பர் ஈகோவின் பிடி அசுரப்பிடி . அவர்களின் சூப்பர்
ஈகோவிற்கு குறிப்பிட்ட பாகிஸ்தான் , வங்காளதேசம் , ஆப்கான் மூன்றும் சூப்பர் ஈகோப்படி அவை முன் பகுதிகள். முழுமையான பகுதி. அகண்ட பாரத்தின் பகுதிகள். ஆம் அகண்ட பாரதம் , ஒரே நாடு , சான்ஷ்கிரிட் , ஹிந்தி
மொழி எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில் ,
தேசத்தின் முக்கிய ரோடு முதல் பள்ளி சிலபஸ் வரை மையம்தான்.
இஸ்லாமியரும் , தமிழர் , யாழ்தமிழர்
எல்லோரும் எடப்பாடிகளே.
இனி சட்டசபை என்ன செய்யும் .
மக்கிய குப்பை , மக்காத குப்பை.
தமிழ்கூறும் நல்லுக வாசிகளுக்கு கிடைக்கப்போவது இவைகள்தான் .
இறுதியாக இஸ்லாமியர்களுக்கும் , தமிழர்களுக்கும்
, யூதர்களின் நிலைதான் .
பின் குறிப்பு 2002ல் குஜராத் கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
. மோடி , அமித்ஷா ஜோடி அங்கு முதல்வர் , உள்துறை மந்திரி.
அந்த கலவரத்தில் இவர்களுக்கோ , அரசுக்கோ சம்பந்தமில்லை
என்று ஓங்கி நீதி குரல் கொடுத்துவிட்டது .
இன்னும் ஒன்று. சூப்பர் ஈகோ -
பேரகனின் செல்வாக்கின் காத்திரம் மிக மிக அதிகம் . அதீத தேசியத்திற்கு வழி ஏற்படுத்தும்
உ-ம். 5 , அல்லது 6 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி விஞ்ஞானிகள் மாநாட்டில் உரையாற்றினார்
.
அப்போது அவர் கூறியது “ இந்தியாவின் ஆதி
விஞ்ஞானம் மிக நவீன , இன்றைய விஞ்ஞானத்தையும் விஞ்சியிருந்ததை
நினைவூட்டினார் . இதை
the Gardiam பத்திரிக்கை
. ‘Indian Priminister claims genetic science existed in ancient times ‘. என்றது 28 அக்டோபர் 2014.
பிளாஸ்டிக் அறுவை
சிகிச்சை ஆதிகாலத்தில் இந்தியாவில்
நடந்திருக்கிறது. அதற்கு
உதாரணம் விநாயகர் . விநாயகருக்கு
யானைத் தலையும் , மனித உடலும் என்று புராணம் கூறுகிறது
.
அதைத்தான் இந்திய
மரபு விஞ்ஞானத்திற்கு புள்ளி விபரமாக்குகிறார் மோடி . ( அத்துடன் கருப்பையில்லாமல்
பிறந்த கர்ணன் மற்றொரு உதாரணம் ) .
ஆக, சூப்பர் ஈகோவின்
மனம் புராணத்தை எல்லாம் நிஜம் என்று ஏற்க வைக்கும் . நம்பவைக்கும் , பிரச்சாரம் பண்ண கட்டளை இடும் . கட்டளைக்கு பணியாவிட்டால்
, அத்தன்னிலையை கோழை என்று ஏசும் , இதனால்தான்
அதீத தேசீயவாதம் நிகழ்கிறது .
க.செ.
No comments:
Post a Comment