"இரண்டாம் முறையாக மோடியின் அதீத வெற்றிக்கு காரணமான மக்கள் ( ஒரு தலைமுறை ) விளைவை சுமந்தே ஆக வேண்டும் என்கிறார் , “
ஆஷீஷ் நந்தி இவர் அரசியலின் உளவியலை ஆராய்ந்து எழுதியவர் . கேரவன் இதழுக்கு அளித்த பேட்டி .
மேலும் அவர் “ நம்முடைய சமூகம் வேற்றுமை பல கொண்டது இது தான் அவர்களை ( ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ) பயமுறுத்துகிறது “ .
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒன்று வெளிப்படையாகத் தெரிகிறது
. இந்தியா பராக்கிரமம் வாய்ந்த நாடு ( MSCULINE
STATE ) என்பதை நோக்கி பெரும்பான்மையாகக் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் ” ,
( அதே கட்டுரை )
மேலும் இந்தியர்கள் தங்களின் நம்பிக்கையை தொலைக்காட்சி ஊடகத்தில் வைத்திருக்கிறார்கள் . ஒரு ஆரோக்கியமான விமர்சனப் பார்வையை இந்தியர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை அல்லது வளர்க்கவிடாமல் செய்துவிட்டனர்.
நீண்ட மேற்கோள் இக்கட்டுரைக்கு அவசியமாகிறது.
காஷ்மீர் மீது பாராளுமன்ற மிருகபலம் , தேசப்பற்றுக்கும் , தேசிய வெறிக்கும் வித்யாசமில்லாத
? கண்மூடித்தனமான மக்களின் விசுவாசத்தின் துணை கொண்டு காஷ்மீர் மக்களின் குரல்வளை நெறிக்கப்பட்ட அடுத்த விநாடி ஹிந்தி பேசாத தேசிய இனங்களின் மீது தாக்குதலை ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல்.
ஹிந்தியே இந்தியாவை ஒருங்கிணைக்கும்
“ சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம் ” ,
( உள்துறை அமைச்சர் அமீத்ஷா , தினமலர் , செப்டம்பர் 15 )
இதற்கான எதிர்வினை கருத்தியலாக பல்வேறு தேசிய இனங்களிடமிருந்து உரத்த குரலாக கேட்க ஆரம்பித்துவிட்டது. ( ஒரு சில பிழைப்பு வாத அரசியல் வாத குழுக்களைத் தவிர )
அமீத்ஷாவின் சொல்லாடலின் உளவியல் பற்றி மட்டுமே இக்கட்டுரை . உளவியல் பார்வை கருத்தியலின் விதையாகும் .
” கிந்தியே இந்தியாவை ஒருங்கிணைக்கும் ”
இந்தியா விடுதலை பெற்று அரை நூற்றாண்டாக ஒருங்கிணைக்கப்பட்டுத்தானே இருக்கிறது
. இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுக்கும் ஒரே அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றுதானே
! அனைத்து தேசிய இனத்திற்கும் ஒரு பாராளுமன்றம் தானே !! அனைத்து தேசிய இனங்களுக்கும் ஒரே சுப்ரீம் கோர்ட்டுதானே !
அதுபோல் ரிசர்வ் வஙகியும் ஒன்றுதானே !
இது உள்துரறை அமைச்சருக்கும் , மோடிக்கும் தெரியும் .
குஜராத்திலிருந்து இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பிரதமர் , உள்துறை அமைச்சரானது எப்படி
? இந்தியா ஒருங்கிணைக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவை ஆளும் அதிகாரம் உங்கள் கைக்கு வந்திருக்குமா ?
இப்படி பேருண்மைகள் இருக்க இந்தியாவை ஒருங்கிணைக்க என்று பேசுவது எதனால்
? அரசியல் அமைப்பு சட்டம் , பாராளுமன்றம் என அரசியல் ரீதியாக , சட்ட ரீதியாக இருப்பதை புறந்தள்ளிவிட்டு , கூட்டாச்சி அதிகாரங்களின் செயல்பாட்டை வலிந்து மறுப்பது , புறந்தள்ளுவது , அதன் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் மூர்க்க வெறிகொண்டு எதிர்த்தலின் வெளிப்பாடுதான் இது
. இந்த உணர்வு யாருக்கெல்லாம் வெளிப்படும்
? வக்ரமனம் இந்த குறிப்பிட்ட விசயத்தில் பேருண்மையாக வெளிப்படுகிறது.
வக்ரமனம் / காயடிப்பை
( CASTRATION ) மறுக்கும் சமூக வழக்கம் நீதி நெறிகளை மறுத்துத்தான் அது வெளிப்படும்.
வக்ரம் , சமூக அடிப்படையை கட்டளைகளை நல் ஒழுக்கங்களுக்கு மாறாகத்தான் வக்ரமனம் சிந்திக்கும் , செயல்படும் , இது கவனத்துக்குரியது என்றும் , யாராண்டால் நமக்கென்ன என்று இருந்தாலும் , இந்துத்துவாவே கோலோச்சும் வக்ரம் தன்னை சிலுவைப் போராளி என்றுகூட காட்சிப்படுத்தும்.
வக்ரத்தின் மனம் அரசாங்கத்திற்கு போதுமான அதிகாரம் இல்லை என்று அதுவாக யூகித்துக்கொள்ளும் வக்ரமனம் குறிப்பான வழிகளிலிலேயே ( ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ) தன்னை இருத்திக் கொண்டு சம வெளியை பார்க்கும் , செயல்படும் .
இனி சொல்லாடலின் மற்றொரு பரிமானத்தைப் பார்க்கலாம் .
” சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும் ” ,
மோடி விடிந்தும் விடியாததுமாய் ஒவ்வொரு நாடாக உலா வருகிறாரே
! அவரை குஜராத்தின் பிரதமர் மோடி என்றா உலகம் அடையாளப்படுத்துகிறது .
இந்தியப் பிரதமராகத்தான் அடையாளம் காண்கிறது உலகம் .
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடிக்குத்தான் ஆங்கிலம் நன்றாக பேசுவார் என்று பாராட்டுப் பத்திரம் வழங்கினாரே
. அமெரிக்க அதிபர் மோடிக்கு கொடுப்பது இந்திய அடையாளமா
? இல்லை குஜராத்தின் பிரதமர் என்றா ?
தெரியும் வக்ரத்திற்கு , வக்ரத்தின் கற்பனை பயணமே உலக அடையாளம் என்ற பேச்சு , தான் சார்ந்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.-க்கு என்பதை மறைத்து இந்திய அடையாளம் , உலக அடையாளம் என்று பிதற்றுகிறது .
வக்ரமனம் அதன் கட்டமைப்பு மிக பிரமாண்டமானது வக்ரத்தின் சித்த கட்டமைப்பின் வெளிப்பாடாகும்
. ஒரு போதும் சட்டம் , சமூகத்திற்கு கட்டுப்படாது , ஏற்றுக் கொள்ளாது , தன் சொந்த ஆசையை வெளிப்படுத்தாது மறைத்து , சமூகத்திற்காக , நாட்டிற்காக , கலாச்சாரத்திற்காக ( OTHER ) என்று கற்பனை பயணத்தை மேற்கொள்ளும் ,
இன்னும் 4 ஆண்டும் மக்கள் பாடு திண்டாட்டமே . வெந்ததை தின்று விதிவந்தால் சாவோம்.
க.செ.
No comments:
Post a Comment