24 Sept 2018

“ ஒழுக்கமாக இருக்கச் சொன்னால்”.....

( தொடர்ச்சி . . . )

மோடியின் ஒழுக்க அரசியலின் பரிமாங்களின் வகைகளைப் பார்த்து வருகிறோம்.
      மோடி ஏற்கும் தனிமனித ஒழுக்கத்தின் முன் மாதிரியான திரு.வெங்கையா நாயுடு மிகச் சமீபத்தில் உதிர்த்த சொல்லாடல்,
‘‘ இந்தி மொழி இல்லாமல் வளர்ச்சி சாத்யமில்லை ”.
                                                                        -இந்து தமிழ் .செப் 16, 2018.
      இது ‘‘இந்தி தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் உப ஜனாதிபதி மொழிந்தது.
      இந்தியா பல மொழிகள், பல தேசிய இனங்களின் கூட்டுத் தொகையாகும். இதுவரை இந்தியா அடைந்த வளர்ச்சி இந்தியினாலா?
      ஏன் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கிறார் இவர்?. அவருடைய வளர்ச்சிக்கு (அடுத்த ஜனாதிபதிக்காகஇந்தி தேவைப்படலாமே தவிர இதர தேசிய இனங்களுக்கல்லநல்ல வேளை அவர் போட்டது ஓலை வெடி. ஓசை பெரிதாக ஒலிக்கவில்லை.
உப ஜனாதிபதி இந்திய ஒருமைப்பாட்டை வரவேற்று மகிழ்பவராகத் தெரியவில்லை.
     ஒற்றுமைக்கான சொல்லாடலை உடையவராக, உரையாடுபவராகத் தெரியவில்லை.
      மோடி அவர்களே! சமூக அரசியலின் ஒழுக்கம் என்பது இதுதானாஇதுவா நீங்கள் வரவேற்று வணங்கும் ஒழுக்கம்,?
இதனை ஏகத்துவ அரசியலுக்கான ஒழுக்க அரசியலாக தாங்கள் உணரவில்லையா? . . . . 
      உங்கள் அரசாங்கத்தின், .ஜா.. கட்சியின் உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.எல்., எம்.பி., களுக்கு வானளாவிய ஜனநாயக உரிமை கொடுத்திருக்கிறீர்கள் போல, பல சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
 வாய்க்கு வந்தபடி நீதிமன்றங்களையும் காவல் துறையையும் ஏசித் திரியும் H..ராஜா., சாயம் போன சினிமா காமெடி நடிகன்,..... ராகுல் ஒரு பைத்தியம், சாக்கடை புழு . . . .  மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபேயின் திமிர் பேச்சு ( வணக்கம் இந்தியா 03.09.2018) etc.
      இது ஒழுக்கத்தின் எந்த ரகம்? மோடி அவர்களே.
      எடுபிடியாதரகரா? (Comprador
      தமிழகத்தில் பணிபுரியும் அரசாங்கம் எடுபிடி அரசாங்கமாஅல்லது தரகு அரசாங்கமாதெரியாமல்தான் கேட்கப்படுகிறது.
      உலகளாவிய முதலாளியத்தின் அடுத்த கட்டம் ஆரம்பமாகிவிட்டது இல்லையா… . . . ?
      சூப்பர் வல்லரசுகளிடையே வர்த்தக போர் பதட்டத்தைத்தான் இங்கு குறிப்பிடப்படுகிறது.
      அமேசான், பிளிப்கார்ட்,  இந்திய மக்களை சுரண்டியது போதாது என்று அலிபாபா;.... இவைகளுக்கும் இந்திய சந்தையில் (on line) புகுந்து விளையாடவிட்டிருப்பதை இந்திய வளர்ச்சிக்கு , பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டதாக சொல்லலாமா?
      உங்கள் இடக்கை அம்பானியை அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் ஒரு ஆன்லைன் பல்பொருள் அங்காடியை திறக்கச் சொல்லிப் பாருங்கள் அப்போது தெரியும் தெள்ளத்தெளிவாக இந்திய அரசு எடுபிடியா? அல்லது தரகர் வேலையா? என்பது.
      தரகர் என்பது அன்னிய வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய மேலாளர் ,
அன்னிய மூலதனத்துடனும் பன்னாட்டு மூலதனத்துடனும் நெருக்கமான உறவு கொண்டு இருப்பவர்கள்,
அன்னிய பொருளாதார நலனுக்கு சேவை செய்பவர்கள் .  . .
      இவர்கள்தான் தரகர் என்பதாகும்,
      இக்கட்டுரையை முடிப்பதற்குள் ரபேல் போர் விமான பிரச்சனை,....   இன்னும் எத்தனையோ!!
 ஆனாலும், உங்களின் ஒழுக்க அரசியல் ஆரோக்கியமானதாக, மக்கள் நலனுக்கானதாகத் தெரியவில்லை.
 மாறாக, உங்கள் பா...வின் நவ இந்தியாவின் மேலாண்மைக்கானதாகவேபடுகிறது.
                                                            க.செ

      

No comments:

Post a Comment