16 Sept 2018

“ ஒழுக்கமா இருக்கச் சொன்னால்”. . .

நாட்டில் தற்போதுள்ள நிலைமை என்னவென்றால், ஒருவர் ஒழுக்கத்துடனும், பண்புடனும் இருக்கும்படி கூறினால் அதை ஜனநாயக விரோதமாக கருதுகின்றனர்,‘‘ பிரதமர் நரேந்திரமோடி வேதனை.
(தினத்தந்தி, தி ஹிண்டு, தினகரன், தினமனி, செப்டம்பா 3, 2018)
      மோடியின் வேதனை சற்று அக்கறைக்குரியதுதான்.
      ‘‘ஒழுக்கத்தை கடைப்பிடிக்கச் சொல்பவருக்கு சர்வாதிகாரி முத்திரை குத்துகிறார்கள் என்று சொல்லுகிறார்தி ஹிந்து.
      சரி ‘‘ஒழுக்கம்என்ற சொல் புதிதல்ல. அதுவும் மதங்களின் நாட்டில் புழங்கி, புழங்கும் வார்த்தைதான் அது.
      ஆனால் இங்கு மோடியின் இந்த கூற்றின் அங்க அடையாளம் என்னநோக்கமென்ன?
      இப்படியான கேள்விக்கு நேரடி பொருள் கொண்டால் அதன் நோக்கத்தை அறிவது சற்று சிரமம்; குத்துமதிப்பாக (opinion) இருந்தும் விடலாம்கொஞ்சம் நிகழ் காலத்தில் காலூன்றினால் புதிய வெளிச்சம் தெரியும்.
       Slavoj zizek -ன்படி பார்த்தால் இது ஒரு கருத்தியல் (ideology)
      இது ஒரு கருவியாக செயல்படுகிற ஒரு அறிவாகும் ; கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் ;
      கருத்தியல், செயல்பாடு மட்டுமல்ல,
      கருத்தியிலானது, மேலாண்மை உறவுக்கான அடித்தளமாக உள்ளது (Very foundation).
      கருத்தியல் எல்லாம் பொய்யாக இருக்க வேண்டியதில்லைமாறாக உண்மையானதாகவும் இருக்க முடியும்.
      கருத்தியலில் நிறுவப்பட்டுள்ள (asserted contents) உள்ளடக்கம் நம் அக்கறைக்குரியதல்ல
      மாறாக, அந்த உள்ளடக்கமானது தனிச்சிறப்பான அர்த்த விளக்க முறைகள் மூலமாக (ஒருவரின்) அகவய நிலைப்பாடாக (subjective  position) மாறுவதே நம் அக்கறைக்குரிய விசயமாகும்.
      கறாரான பொருளில்,கருத்தியல் (ideology) என்பது ஒரு கருத்தாகும் (notion).  அது உண்மையான பிரச்சினையை குறிப்பிடும் அதே வேளையில் மிக முக்கியமான பிரிக்கும் எல்லையை மறைத்துவிடுகிறது ” (blur a crucial line of separation) -  சிசாக், என்பதைத்தான் மேலே பார்த்தோம்.
      மோடியின் இந்தப் பேச்சு உதவி ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசியதாகும்.
      ஒழுக்கம் பற்றிய மேற்படி பேச்சுக்கு உதாரணமாக வெங்கையா நாயுடுவை எடுத்துக் கொண்டார்அவர் (உதவி ஜனாதிபதி) கையில் கடிகாரம்கூட கட்டுவதில்லைஆனாலும் நேரம் தவறாமல் கூட்டங்களில் கலந்து கொள்வார் etc.
      ஆக, மோடி ஒழுக்கம் என்று தனி மனித ஒழுக்கத்தையும் பொது மேடையில் விமர்சனத்தையும் (சர்வாதிகாரி என்கின்றனர்).முன்வைப்பதால், தேவை சமூக ஒழுக்கமும் தனிமனித ஒழுக்கமும் என்றாகிறது..
  சமூக ஒழுக்கம் என்னும் போதே அதில் அரசியலும் ஒரு அங்கம்தானே, இதை தவிர்க்க முடியாதல்லவா?
புதிய மேலாண்மைக்கான அடித்தளமா?
மோடி ஒழுக்கம் என்பதை விளக்கவில்லை. அதாவது அதற்குள் என்னவெல்லாம் அடங்கும் என்பதை.
      அது மக்கள் நலன், மேன்மைக்கானதாஅல்லது அரசு அதிகாரத்தின் மேலாண்மையை நிலைநாட்டவும், அதற்கு கட்டுப்பட்டு நடக்கவுமா
      (சமூகம் என்பதும் ஒரு கருத்தமைவுதான், சாதி மதம் உட்பட)
      ப்போது, சமூக / அரசியல் ஒழுக்கத்தின் பரிமானங்களைப் பார்க்கலாம்
      அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உலகப் போலீஸின் பெருமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்டவும் வர்த்தகப் போரை துவக்கியுள்ளது, நிச்சயம் உங்களுக்கும் இது தெரியும்இது சமூக, அரசியல் ஒழுக்கமாஇல்லையா?
      உங்கள் ஆட்சியின், அதிகாரத்தின் பரப்பிற்குள் வருவோம்.
      இன்று காலையில் தமிழர்கள் எல்லோரும் (BJP, Dr.தமிழிசை, குரூமூர்த்தி தவிர) யார் முகத்தில் விழித்தார்களோ தெரியவில்லை.
      காலை செய்தி பேப்பரில் அதுவும் தினமணி பேப்பரின் 8 காலத்தலைப்பு ஒரு அதிர்ச்சியை கொடுத்தது.
      தலைப்பு இதுதான் : ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
தினமணி (மதுரை) 4 செப்டம்பர், 2018.
      செய்திக்குள் ‘‘அந்நிய செலவாணிவரலாற்றில் ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டது இதுவே முதல்முறை.  இப்படி கூற தினமணி ஒரு ரவுடிப் பத்திரிக்கை அல்லஎல்லோரும் ஒத்துக் கொள்வர்.
      இப்படி இருக்க.
      இந்திய அரசின் தற்போதைய நிதி அமைச்சர் (அருண்ஜெட்லி) சென்ற மாதம் அவ்வப்போது, பொருளாதாரப் புள்ளி விபரங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். இந்தியப் பொருளாதாரம் நிமிந்திருச்சு என்றார். (வேறு சிலரும்)
      தினமணி (என்ன திமிர்!?)  சொல்லுகிறது.  ஆசிய நாடுகளின் கரன்சிகளில் ரூபாய் மதிப்பு மட்டும் தான் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது”.
      இந்திய அரசின் அந்த நிதி மந்திரியின் அந்த கூற்றுகள் என்ன நோக்கத்தில் சொல்லப்பட்டது?
 மக்களை திசை திருப்ப, மக்களை ஏமாற்ற, எதிர்கட்சியின் வாயை அடைக்க அப்படித்தானே?
 ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக ரூபாய் 71 /=.  இதன் அளவு பாமரனுக்குத் தெரியாதுநீங்கள் தான் அதைக் கூறி பாமரர்களை தெளிவு படுத்த வேண்டும்.
      எல்லாம் சரி, வளர்ச்சியில் தான் இந்தியா செல்கிறது என்று நம்பவைக்கும் இந்திய அரசின் முயற்சிதானே? இது.
      இது ஒழுக்கமானதா? அதிகார மேலாண்மைக்கானதா?
தினமணி கொடுத்த அதிர்ச்சியால் கைநழுவி அது விழுந்துவிட்டது.
      சரி மற்றொரு பேப்பரைப் பார்க்கலாம் என்றால் இந்துதமிழ் நாளிதழ். [ஆங்கிலத்தில் The Hindu ]
      இந்துதமிழ் நாளிதழின் புகழ் அதன் நடுப்பக்கக் கட்டுரைகள் என்று பலர் சொல்ல கேள்விஅதனால் பார்வை மையத்திற்கு (பக்கம் 6) சென்றது.
      அதன் விளைவு ... . .ஆரோக்கியமாய் இல்லை.
      தலையங்கத்தில தோல்வியை ஒப்புக்கொள்வதே மீட்சிக்கான வழி .
      இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கட் விளையாட்டில் தோல்விகண்ட வீரர்களுக்கு ஆலோசனையாய் இருக்கும் என்று மனம் கூறியதுபடித்தால் அடிமடியில் உதைவிழும் சமாச்சாரமாக உள்ளது.
.............      ஒரு நள்ளிரவு கொரில்லா தாக்குதலால் இந்திய அரசு மக்கள் அனைவர் மீதும் தாக்குதலை தொடுத்து அலறவிட்டது. வீதியில் அலையவிட்டது. (இன்னும் தொடர்கிறது).
      2016 நவம்பர் நள்ளிரவிலிருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
      சுருக்கமாகச் சொன்னால் . . . . இவ்வளவுக்குப் பிறகும் இந்த நடவடிக்கை (பண மதிப்பு செல்லாது) தோல்வி என்று மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்கிறது தமிழ் இந்து நாளிதழ்.
      இத்துடன் நில்லாமல் மற்றொரு குற்றச்சாட்டையும் இந்த நாளிதழ் சுமத்துகிறது.
      .. . . . ‘‘ பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கை வெளிவரவிடாமல் மத்திய அரசு தடுப்பதும் மக்களிடையே சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. (மத்திய அரசிற்கு இது நல்ல நேரம்இந்து நாளிதழிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் இதற்காக எப்..ஆர் போட்டிருப்பார்கள். )
      நிதியமைச்சரின் இந்த தொட்டுப்பிடி விளையாட்டு, மத்திய அரசின் நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை வரவிடாமல் தடுக்கும் போக்கு பற்றி,
 இப்போது சொல்லுங்கள்;
இப்போக்கு ஒழுக்கமானதாஅதிகார மேலாண்மைக்கானதா
      இந்த கேள்விகள் ஒழுக்கமாயிருந்தால் நியாயமாயிருந்தால் பதில் சொல்லுங்கள் மோடி.
      பொருளாதார தரவுகளும் விவாதங்களும் வாசகர்களுக்கு ஒரு வேளை அலுப்பூட்டி இருக்கலாம்.
      ஆகவே ஒரு சிரிப்போடு கூடிய ஒரு வேதனையை பார்ப்போம்.
      இனி . . ..  குரங்கு தொல்லையை சமாளிக்க ஒரு யோசனையோசனை கூறுவது ‘‘ யோகி , அதாவது .பி முதல்வர் யோகி ஆதித்தியநாத்.
      இதை எங்கே, எதற்காக இந்த யுக்தி என்று பார்த்தால் சிரிப்பு பாதி வேதனை பாதி என்றாகிறது.
      இதுவா யோகியின் சமநிலை?
      உத்திரப்பிரதேசத்தின் பிருந்தாவன் பகுதி மக்கள், அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் யோகியிடம் மதுராவில் குரங்குகள் தொல்லை அதிகரித்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்
      முதல்வர் யோகி உடனடித் தீர்வு ஒன்றை சொல்லியிருக்கிறார்.
‘‘ பங்ரங்பலியை (ஹனுமான்) அன்றாடம் வணங்கி அவர் மீதான மந்திரத்தை ஓதுங்கள்உங்களுக்கு குரங்குகள் என்றுமே தொல்லை தராதுஎன தெரிவித்தார்.
- 3.9.18 வணக்கம் இந்தியா.
      ஒரு முதல்மந்திரியின் வசிய முறைத் தீர்வை (மந்திரத்தை )  இன்றைய காலக்கட்டத்தில்  ஒரு அரசாங்க தீர்வின் யுக்தியாக எடுக்க முடியுமா?
( மேற்கு தொடர்ச்சி மலையில் மனித ஆக்கிரமிப்பு மீது யானைகளின் படையெடுப்பை தடுக்க இங்குள்ளவர்கள் யோகியிடம் யோசனை கேட்கப் போகிறார்கள்).
      ‘‘ குரங்கு என்ற ஒரு ஒலி யோகியின் நனவிலியை எழுப்பி அனுமானாக காட்சியளித்துவிட்டது.
      தீர்வை, முதல்வரிடமிருந்து ,  யோகி  பறித்துக்கொண்டார் என்று இப்போது புரிகிறது.
      இந்த வசியக்கட்டு நிஜ குரங்கிடமிருந்து மக்களை எப்படிக் காப்பாற்றும்அரசாங்கத் தீர்வு ஏதுமில்லையா
இந்த நிலை (மக்களின் துயரம்) ஒழுங்கா?
 இல்லை அரசு மத மேலாண்மைக்கா?

பட்டிமன்றம்
தமிழ் கூறும் நல்லுலகத்தில் பட்டிமன்றம் என்ற ஒன்று வெகு ஜனங்களிடையிலேயும், டி.வி. சாளரத்திலும் உபயோகமாகும் ஒரு வல்லிய சாதனமாகும்;  அரசு ஊழிய உடம்புகளுக்கு மனமகிழ் மன்றம் இது.
அவர்களிடம் கீழ்க்கண்ட தலைப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன?
தலைப்பு : ஒழுக்கம் பேசும் சர்வாதிகாரம் Vs ராகுல் ஒரு பைத்தியம், சாக்கடை புழு.
இதில் எது உக்கிரமானது,எது மக்களுக்கு தீங்கு பயப்பது?. . .  என்பதாகும்.
                                                      க.செ.
‘‘ ஒழுக்கத்தில் , அகந்தை ஒளிந்திருக்கிறது , வேண்டியது தன் ஒழுங்கு , தெரிவு இல்லாத நடுநிலை. ]
                                                                                                            (தொடரும்)




[ குறிப்பு : இது சர்தார் வல்லபாயின் சிலை. இது சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் குஜராத்தின் சர்தார் சரோரவர் அணைக்கு அருகில் நிறுவப்பட உள்ளது. இதன் உயரம் சுமார்  600 அடியாகும்]
படங்கள் உதவி: https://www.google.co.in/search?q=yogi+adityanath+pictures&rlz= நன்றி.:





No comments:

Post a Comment