15 Feb 2018

ஆண்டாள் அரசியல்

2018 , ஜனவரியில் கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பற்றிக் கூறிய
 ஒரு விமர்சனத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மற்றும் பாஜக கட்சியின் தலைவரும் காத்திரமாக எதிர்த்தனர்.
ஊடகங்களும் அதை நன்றாக விற்பனைப் பொருளாக்கி, தமிழரின் மிகு உணர்ச்சிக்கு வித்திட்டனர்.
வைரமுத்து மன்னிப்புக் கேட்கணும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்.
பின்பு கொஞ்சநாள் சூடு ஆறியவுடன் மீண்டும் ஜீயர், வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்புக் கேட்கணும் “ என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார் (ஒரு நாள்).பின்பு அங்கு இருட்டுக் கட்டிக் கொண்டது. ஜீயர் உண்ணாவிரதத்தை உடன் முடித்துக் கொண்டுவிட்டார்.
ஜீயர் வைணவர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேசன் பொறுப்பாளர் ( in charge ). வைரமுத்துவை ஸ்டேசனில் வைத்து விசாரணை நடத்தணும் என்று மதக் காவலர் கவலைப்பட்டார் போலத் தெரிகிறது.
குற்றம் நடந்தது ராஜபாளையத்தில். ஆனால், அது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்டேசனுக்கு பாத்தியப்பட்டது என்ற இந்த மதப்போலீஸின் எண்ணப்போக்கிற்கு சாட்சி உண்டு.
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் என்ற பெரியாரின் தொகுப்பு நூல் தொகுதி, பக்கம் 74-ல் ஜீயர் ஏன் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து மன்னிப்புக் கேட்கணும் என்றார் ?; மன்னிப்புக் கேட்டால் வைரமுத்து குறைந்தா போவார் என்ற வாய்ச்சொல் வேறு .இதன் காரணத்தை அறியவே பின்னோக்கி காலச்சக்கரத்தை நகட்டினோம்.
பெரியார் பார்ப்பன அயோக்கியத்தனம் என்ற தலைப்பிட்ட கட்டுரையில்,
  .... பொது ஜனங்களை ஏமாற்றி வாழலாம் என்கிற கவலையில் இருக்கின்றார்களே யொழிய வேறு ஏதாவது மானம், அவமானம், சுரணை, இழிவு என்பதைப் பற்றி கொஞ்சமாவது உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கின்றார்களா ?
.....“ உதாரணமாக, பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க ஸ்ரீமதி முத்துலக்ஷ்மி அம்மாளவர்கள் எடுத்துகொண்ட முயற்சிக்கு விரோதமாக ஒரு‘ பிரபல தேசியவாதி என்கிற பெயர் பெற்ற ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னது என்ன என்பதை சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள். அவர் என்ன சொன்னார்.பெண்களை கடவுள் பேராலும் மதத்தின் பேரால் பொட்டுக் கட்டி விபச்சாரத்திற்கு விடுகிற வழக்கம் தப்பு என்பதாக இன்று நாம் ஒரு முடிவு செய்து விடுவோமானால் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் வரதராஜுலு நாயுடுவும் நாளைக்கு கோவிலில் சுவாமிக்கு (தரகர்கள்) அர்ச்சகர்கள் வேண்டியதில்லை என்று சொல்வார்கள். அதையும் கேட்க வேண்டியதாய் ஏற்பட்டுவிடும். ஆதலால் கண்டிப்பாய் மதத்தில் பிரவேசிக்க (அதாவது ,எவ்வித சீர்சிருத்தமும் செய்ய) இடம் கொடுக்கக்கூடாது ”.
பிராமண மேலாதிக்க மனப்பாங்கு (attitude) என்னவென்று இப்போது
புரிந்துகொள்ள இது ஒரு உதாரணம்
இது வைணவ மேலாதிக்க அரசியல் கருத்தாகும்.
க.செ

7 Feb 2018

சமூகம் தனக்குத் தானே குற்றமிழைத்துக் கொள்கிறது.

2018 பிப்ரவரி முதல் வாரத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டார்.
குத்தியது 11வது வகுப்பு மாணவன்.
இந்த போக்கைத்தான் மனஅலசல் ஆய்வு சமூகம் தன்னைத்தானே குத்தி துன்புறுத்தி இன்பம் காண்கிறது என்கிறது.
[மாணவ, மாணவிகளை படிக்கவும், மார்க் வாங்குவதற்குமான பிரதிகளாக மட்டுமே பார்க்கின்றனர்வீட்டில் அவர்களுக்கு என்ன சூழலோஎவ்வளவு கொடுந் துன்பத்தை அனுபவிக்கின்றார்களோஇவற்றையெல்லாம் ஆசிரியர் பெருந்தகைகள் அறிவதுமில்லை, அறிய முயற்சிப்பதுமில்லை.]
சமூகத்தின் அங்கங்களாக உள்ள நாம் ஒருவரை ஒருவர் துன்புறுத்தி இன்புறுவது (masochism) குறித்து மன அலசல் ஆய்வு செய்கிறது. பிராய்டின் சாவு உந்தல் கோட்பாட்டைக் கடந்து (concept of death instinct ) செல்கிறது மனஅலசல்.
மனிதர்களாகிய நாம் ஒரு குழுவை அல்லது தனியன்களாகிய இதரர்களை (else ) துன்புறுத்துகிறோம் என்ற அர்த்தத்தில் சமூகம் தனக்குத்தானே குற்றமிழைத்துக் கொள்கிறது என்று உருவகமாக சொல்கிறார் ஆய்வாளர் Henri Parens .இவர் வன்மம் (aggression ) பற்றிய ஆய்வை மேற்கொள்பவர்.
       பிறரைத் துன்புறுத்தி இன்புறுதல் (sadism ) , தன்னைத்தானே துன்புறத்தி இன்புறுதல்(masochism )ஆகிய இரண்டுக்குமான அடிப்படைக் காரணம் எது என்று தேடுகிறார்.
       பிரதானமாக, தங்கள் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட கொடும் துன்ப உணர்வுகளால் உந்தப்பட்டே மனிதர்கள் பிற மனிதர்கள் மீது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற கருத்தை ஆய்வாளர் முன் வைக்கிறார்.
       இந்த நடவடிக்கையானது, குழந்தை / சிறுவர்களின் நடத்தைகளில் காணக் கூடியதாகவும், ஊகிக்கக்கூடியதாகவும் உள்ளவற்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை கொடுக்கிறது (2018ல் தலைமையாசிரியர்; சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு மரித்தார்).
       கொடுந்துன்ப உணர்வே முக்கிய காரணி என்கிறார் ஆய்வாளர்அதாவது,
crimes by humans against humans are driven by experienced – derived experience of excessive unpleasureஎன்கிறார்.
       அரசும், மக்களும் குற்றவாளிகளை - சிறுவர்களைமைனர் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுவதோடு தன் பொறுப்பை முடித்துக்கொள்கிறது.
       இச்செயலில் ஈடுபட்டதற்கான காரணம் சித்த எதார்த்தமாக ( psychic real ) எண்ணப் பதிவேட்டில் பதிவானது அப்படியே இருக்கிறது
மனிதர்களிடம் நிலவுகிற, தவிர்க்கப்படக் கூடிய கொடும் துன்ப உணர்வுகளை (avoidable experiences of excessive unpleasure )அடையாளங்கண்டு, வன்ம மனப்போக்கை நீக்க வேண்டும்/சமனப்படுத்த வேண்டும்கொடும் மன துன்பத்திலிருந்து விடுதலைக்- கானதை  மன அலசலால் கட்டமுடியும்பள்ளிகளும் கல்வி தொழிற்சாலைகளும் இதை எதார்த்தமாக்கிட வேண்டும்.
பிறருடனான உறவில் (இஷ்டத்திற்கு) அடிமைப்படுத்துவது ,துன்புறுத்துதல், சித்திரவதை போன்ற நடவடிக்கைகள் தனியன்மீது ஏற்படுத்துகின்ற பாதிப்புகளையும் , அதனைத் தொடர்ந்து வரக்கூடிய அனைத்து விளைவுகளையும் உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே புரிந்துகொள்வதற்கு ஆய்வாளர் உதவுவார்.அவர்கள் எதிகொள்ள வேண்டிய சவால்களை விவரிக்க முடியும். அவர்களை அவர்களே புரியும்படி செய்யமுடியும்.
       சாதி சமூகமான நம் சமூகத்தில் தனியன்களை தனியன்களாக பார்ப்பதில்லைதனியன்களை அவன் சாதி அடையாளத்துடன் காண்பதே ஒருவனை மனத்தளவில் காயப்படுத்துவதான்.(இதுவே ஆண் மைய வாதத்திற்கு வழிகாட்டுகிறது . அத்தோடு காதல் திருமணங்களுக்கு எமனாகவும் சாதியம் இருக்கிறது ) .
       அதாவது தனியனை தனியனாக அங்கீகரிக்கப்பதில்லை
ஜீலியா கிறிஸ்துவா சொன்னது , நமக்குள் உள்ள நனவிலியானது பிறரை இதரராக (else ) ,அன்னியராக, புதிரானவராக(uncanny), விளக்கமுடியாத, சொல்ல முடியாதவராகவே (real ) பார்க்கிறதுஅதாவது, புதிரானவராகவும் (uncanny) நமக்கு நாமே அன்னியர்களாகவும் , பிளவு பட்டவர்களாகவும் உள்ளோம். 
       உறவின் நெறிகள் பற்றி விளக்க பள்ளி , வீடுகளிலும் , வழிகாட்டிகள் இல்லை.
       சாதியை அதிகாரமாக பார்க்கப்படுவதே கிரிமினல் குற்றம்தான்.
       உறவு முறை மனித தன்னிலையின் மையமாகும்.

க.செ