“ ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையானது நாட்டில்
நிலவுகிற லஞ்ச ஊழல் , கறுப்புப் பணத்தை ஒழிக்கும் “ .
இது மோடியின் குரல் .
சென்ற வாரம் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை
சின்னத்திற்காக பணப் பரிவர்த்தனை செய்தது கோடிகளில் . இப்பரிவர்த்தனை ரொக்கத்திலா
அல்லது ரொக்கமில்லா பணத்திலா (electronic
transactions )?
இவர்களின் அதிகாரம் வானளாவி இருக்கிறதா ?
இல்லையா? அவர்களுக்கு எது வசதியோ அதுதான் பரிவர்த்தனையாகும்.
சேகர் ரெட்டி கோடிகளில் புதிய 2000 நோட்டுகள்
வங்கியிலிருந்து பெற்றது பரிவர்த்தனைக்கா அல்லது பதுக்கவா ?
க.செ
|
27 Apr 2017
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை ..!!
19 Apr 2017
முஸ்லீம் சகோதரிகள் மீது பிரதமரின் கருணை..!?
[ “ MUSLIM SISTERS SHOULD GET JUSTICE
” …. ]
இககட்டுரையை எழுதத் தூண்டியவர் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி
ஆதித்யநாத்.
விதுரர் கூறியது :
”
குற்றம்
நடைபெறும்போது , அதைப் பார்த்துக்கொண்டு , அமைதியாக இருப்பவர்களும் அந்தக்
குற்றத்தைப் புரிந்ததற்குச் சமமே . அதைப்போன்ற நிகழ்வுதான் இதுவும்
என்பார் விதுரர் “.
- தி இந்து.18-4-2017
இவர் நெஞ்சைத் தொட்டது யார் ?
பதிலை
நரேந்திர மோடி ,பிரதமர் சொல்கிறார் :
“ MUSLIM
SISTERS SHOULD GET JUSTICE ”
“ not
questioning the validity of triple talaq….but want to end exploitation ”
-The Hindu 17-4-2017
அதாவது , “
இஸ்லாமியர்களின்
முத்தலாக் முறைக்கு முடிவு கட்டுவது அவசியம் ” என்கிறார்.
மோடியின் முஸ்லீம்
சகோதரிகள் ‘அதிர்ஷ்டசாலிகள்’ என்று கூடச் சொல்லலாம் . ஏனெனில் , இந்து என்று
சொல்லிக்கொண்டு , ஊரிலிருந்து தள்ளிவைக்கப்பட்டு வாழும் தலித் சகோதரர்களுக்கு
இன்னும் இந்த வாய்ப்பை யோகியும்
கொடுக்கவில்லை ; நரேந்திர மோடியும் கொடுக்கவில்லை.
ஏன் , இவர்களின்
“ஆதி“ மனு நீதியும்
தலித்துகளுக்கு நீதி வழங்கவில்லையே ? அதனால்தான் முஸ்லீம் சகோதரிகள் அதிர்ஷ்டசாலிகள்
என்று கூறத் தோன்றியது.
யோகி , மோடியின்
கரிசனம் எங்கிருந்து வருகிறது ?
வள்ளலார் கூறினாரே “
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் “ என்று , அப்படிப்பட்ட அன்பா இது ?
பா.ஜ.க ; ஆர்.எஸ்.எஸ்
போன்ற அமைப்பிற்கு தொடக்கத்திலிருந்தே முஸ்லீம் மதத்தின் மீது தீராக் கோபம் /
வெறி. இந்த நோய்க்குறி அப்பட்டமாக வெளிப்பட்டது பாபர் மஸ்ஜித் இடிப்பில் ;
குஜராத் கலவரத்தில் முஸ்லீம் உடல்கள் சிதைக்கப்பட்டன ; தீ வைப்பும்தான்.
இப்படிப்பட்ட மனம்
உண்மையில் முஸ்லீம் பெண்களுக்காக நிற்குமா ?
தன் வீட்டில்
தலித்துகளை புழக்கடையில் வாழ விட்டுவிட்டவர்கள் இவர்கள் . இவர்களிடமிருந்தா “ நீதி “ கிடைக்கும் .
‘ முத்தலாக்’-ன் கொடுமையை முதலில்
சொல்லாடலாக நாடு முழுவதும் பரப்புரை செய்வதன் மூலம் முஸ்லீம் மனத்தை அவமானத்திற்கு
உள்ளாக்குகிறார்கள் ( humiliation ). அவமானத்தில்
கூனிக் குறுகி குனியவைக்க நினைக்கிறார்கள் .
முஸ்லீம்களை ,
மாட்டுக்கறி , முத்தலாக் போன்றவற்றை ஊதிப் பெருக்குவதின் மூலம் இவர்களை
ஆட்டிப்படைக்கும் ஊன்றிய கருத்து வெறியால் ( Obsession ) இவர்கள்
இயக்கப்படுகிறார்கள்.
மன அலசல் படி இதனை Obsessional
Neurosis எனலாம் . இதன் மூலம் அடையும் மனப்
பதட்டத்தால் , இஸ்லாத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க இந்தப்
பிரச்சினையை பயன்படுத்துகின்றனர் எனலாம் .
முத்தலாக்கில் அக்கறை காட்டும் விதுர நீதி ; கவுரவக்
கொலைகள் நாடு முழுவதும் பரவிக் கொண்டேதானே இருக்கிறது . இதற்கு விதுர நீதி , யோகி
ஆதித்யநாத் நீதி மவுனம் காக்கிறதே ! மாட்டைக் காப்பது சரி ; அத்துடன் கவுரவக்
கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்படும் திருமணமான பெண்களைக் காப்பாற்ற விதுர
நீதி செல்லாதா ? கொலைக் களத்தின் பலி ஆடுகள் உங்கள் இந்து சகோதரிகள்தானே !?
மன அலசலில் இருக்கும்
FANTASY பற்றிய கருத்து இங்கு
முக்கியமாகிவிடுகிறது.
ஏனெனில் , பா.ஜ.க .
எப்போதுமே இந்து மதம் பற்றிய புனைவுருவை ( fantasy ) தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் குணாம்சம்
கொண்டது.
“ விநாயகனுக்கு யானைத் தலை “. இதுபற்றி மோடி கூறுகையில்
,பாரதத்தில் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை முறை இருந்திருக்கிறது
என்று சொன்னவர் . இவர்களின்
புனைவிற்கு அளவே இல்லை.
புனைவு பற்றி மன
அலசல் கூறுவது ;
புனைவு இயல்நிலை
கடந்தது , பேரின்பமளிக்கக் கூடியது , இணக்கமானது ( beatific , blissful , harmonious ) என்ற ஒரு கருத்தும் உண்டு.
ஆனால் , இந்த நாணயத்திற்கு மற்றொரு பக்கமும் உண்டு . அதன்
பிரதான வடிவம் காழ்ப்பு / பொறாமையாகும் ( jealous )
.
“ நீங்கள் காழ்ப்பு / பொறாமையால் ( jealous ) பீடிக்கப்
பட்டிருக்கும்போது , மற்றவர்கள் என்னை எப்படி ( மோசமாக ) நடத்துகிறார்கள் ;
மற்றவர்கள் எப்படியெல்லாம் சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது குறித்தே கவனம்
செலுத்திக் கொண்டிருப்பீர்கள்” என்கிறார் சிசாக்.
சர்வாதிகார , ஒரு
கட்சி ஆட்சிமுறைக் கருத்தியல்கள் ( totalitarian ideologies
) ; ஒரு கட்சி
ஆதிக்கமுடைய , எதிர்க் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே
ஆட்சிக்குழுவிற்கு உரியதாக உள்ள கருத்துகள் , கருத்தியல் நடத்தைகளுக்கு , அவர்கள்
சார்ந்த அனைத்துப் புனவுருக்களும் ( மதம் உட்பட) தெய்வீகமானது , பேரின்பம்
அளிக்கக் கூடியது ; மற்ற புனைவுரு கீழ்த்தரமானது என்ற இரு கருத்துகளும் உண்டு .
அதுவும் மற்றொன்று அனைத்தும் கீழ்த்தரமானது என்ற கருத்தும் உண்டு .
இதன்படி பா.ஜ.க-வினர்
இஸ்லாமியரை , இஸ்லாமியத்தை , அவர்களுக்கே உரிய கலாச்சாரத்தைக்
கொச்சைப்படுத்துவதும் , சிறுமைப்படுத்துவதும் இவர்களின் சர்வாதிகார
கருத்தியலிலிருந்தே ( totalitarian ideologies ) வருகிறது .
இதிலிருந்தே அவர்களுடைய அரசியல் கருத்துகளும் , கருணைப் பார்வையும் கூட உருவாகிறது
.
முத்தலாக் பற்றி
வேறுபட்ட , ஆணாதிக்க கருத்துக்கு மாறுபட்ட பார்வையும் எண்ணப்போக்கும் உண்டு.
உதாரணத்திற்கு , All India Muslim personal law board warned on Sunday ,
“ ….
Whoever gives triple talaq without valid Shariyat reasons will be boycotted by
the society …so that such cases does not arise
in future ” – The Hindu
17-4-2017
[ ஷரியத் சட்ட
விதிகளுக்கு மாறுபட்டு முத்தலாக்கைப் பிரயோகிக்கும் எவராக இருப்பினும் , அவர்கள்
முஸ்லீம் சமூகத்தால் விலக்கிவைக்கப்படுவார்கள் என்று அகில இந்திய முஸ்லீம் தனிமனித உரிமை சட்ட வாரியம் எச்சரிக்கிறது . ....இதன் மூலம் இவ்வகையான சம்பவங்கள்
எதிர்காலத்தில் எழாது என்கிறது ]
முத்தலாக்கை ஆணாதிக்க வாதம் ஏதோவொரு வகையில் நீடிக்க
வைக்கத்தான் முயற்சிக்கும். பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்க்கின்ற போக்கு
இருக்கும் வரையிலும் , பெண்களை ஒரு தன்னிலையாக ( subject ) , ஒரு உயிரியாக ( being ) பார்ப்பதற்கு இடம் கொடுக்காது ஆண் ஆணவம்.
சர்வாதிகாரமும் , ஒரு
கட்சி ஆட்சி முறைமையும் ( totalitarianism ) ஆணாதிக்க மையவாதத்தின்
பிடியில் இருப்பதுதான் . ஆகவே , முஸ்லீம் சகோதரிகளின் விடுதலைக்கான ஆட்டமல்ல
இவர்களின் ஆட்டம் . பொது சிவில் சட்டம் என்னும் அடக்குமுறைக்கான ஒரு தப்படி
எடுத்து வைக்கிறார்கள் என்று வேண்டுமானால்
இதைப் புரிந்து கொள்ளலாம் .
க.செ
Ref
: Interrogating The Real – Slavoj Zizek
9 Apr 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்......?
இம்மக்களின் ஆசைக்கான காரணப் பொருளான (
object
petit a )
‘ ஜெ ’.யின் கருத்தியல் மாயையின் பங்கு என்னவாக இருக்கும்.
மாயாவாதத்திலிருந்து
விடுபடுமா அல்லது......?
( இக்கட்டுரை தேர்தல் வெற்றி யாருக்கு என்பதை
நோக்கமாகக் கொண்டதல்ல) .
மரியாதைக்குரிய ஸ்ரீ நரேந்திர மோடி , இந்தியப் பிரதமரின் National e- governance plan
படி ( மக்கள்
அனைவரையும் டிஜிட்டல் அதிகாரம் பெற்றவர்களாக மாற்றுவது ) செயல்பாட்டிற்கு நிர்வாகத்துறை
முடுக்கி விடப்பட்டிருக்கிறது .
ஆனால் ,
ஸ்ரீ நரேந்திர மோடியின் ப்ரிய மக்களோ , “ கிரிமினல் குற்றவாளி “ என்று உச்ச
நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட கிரிமினலை ;
அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி
அதிமுக அம்மா கட்சி
அதிமுக ஜெயா தீபா
பேரவை
என்று இப்படி கிரிமினல்
பெயரில் குழுக்கள் தோன்றுவானேன் ?
எல்லாம் மக்களின் பேராதரவை ( ஓட்டு ) பெறத்தான் என்பது புரிகிறது.
இதில் அண்ணா , எம்ஜிஆர் இடம் பெறுவானேன் ?
நாங்கள் புதியவர்கள் அல்ல ; பூர்வீகர்கள் ; அதாவது அண்ணாவின் வழித்
தோன்றல்கள் . ஆகவே , எம்ஜிஆர் , ஜெ. உட்பட எங்கள் தலைவர்கள்.
ஆக , இன்றைய அதிமுக என்பது ஜெ. காலத்தில் இருந்தது அல்ல ; மாறாக , இது
அண்ணா , எம்ஜிஆர் , ஜெ.வின் வழித் தோன்றல்களின் அதிமுக.
சட்டப்படி அதிமுக என்ற சொல்லை , இரட்டை
இலையை யாரும் பயன்படுத்தக் கூடாது . இது சட்டம்.
எல்லாம் மக்களின் மாயத்தைப் பொருத்தது . மக்களோ , மன அலசல் படி REAL –ஆக இருக்கிறார்கள் .
ஜெ.வைப்
பொருத்து , அவர்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு ; இதுதான் அது என்று
சொல்ல முடியாத அளவிற்கு ; கற்பனைக்கு அப்பாற்பட்டதாக ; மெய்யற்றதாக ; ஆனால் ,
மக்களால் உள்ளார்ந்து உணரமட்டும் முடிந்ததாக இருக்கிறது .
ஒருவாறாக,
தத்துவார்த்தமாக சொல்ல வேண்டுமானால் MYSTICISM
மாதிரி உள்ளது . இதனால்தான் லக்கானின்
வகைமாதியான REAL
எனப்பட்டது.
இதற்கு
வழமையான அர்த்தம் கிடையாது ; அது வார்த்தைகளுக்கு ( மொழிக்கு ) அப்பாற்பட்டது ;
அதனளவில் அதனை உணர முடியும் ; அவ்வளவே.
மக்களின் இந்த மாயா ஜாலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதற்குப்
பதிலாக ,
பால்குடம் எடுத்து , தீச்சட்டி , காவடி,
கரகாட்டத்துடன் சாமி கும்பிட்டு, ஜெ.வைக் காப்பாற்ற மண்சோறெல்லாம் உண்டனர்.
இப்போது ஜெ. மறைந்துவிட்டார். மக்களின் REAL –ன் நிலைப்பாடு தொடருமா ? தொடருமானால் எந்த
வழியில் ?
ஜெ.வின் மகா வாக்கியமான ,
“ நான் அனாதை , எனக்கு நீங்கள்தான் உறவு ; உங்களுக்கு நான் “
அந்த மாய உறவிலிருந்து மக்கள் விடுபட்டுவிட்டார்களா என்ன?
இந்த விளையாட்டில் டிஜிட்டல் ஸ்ரீ மோடியின் ஆட்டம் வெளிப்படையாக இல்லை
; மாய விளையாட்டாகத்தான் உள்ளது .
மக்களை REAL
நிலைப்பாட்டிலிருந்து எப்படி விடுவிப்பார் மோடி ? அல்லது , அது ஒருபுறம் எதற்கும்
இருக்கட்டும் ; புறவயமான டிஜிட்டலுக்கு மக்கள் மாறினால் போதும் என்பாரா ?
மீண்டும் மாயாவாத சொற்றொடரையும் அதன் அரூப விளையாட்டையும்
பார்க்கலாம்.
“ நான் ஒரு அனாதை ; எனக்கு உறவினர் யாரும்
கிடையாது “
( மேற்கூறிய வார்த்தை குறிப்பீடல்ல ; குறிப்பான்
. பல பொருள்கள் அதனுள் மறைந்திருக்கிறது ).
எனெக்கென்று யாரும் கிடையாது ( உறவினர்
) ; நீங்கள்தான் என் உறவினர் ; நீங்கள் எனக்கும் ; நான் உங்களுக்கும் உறவு
என்று மக்களின் அகவய நிலைப்பாட்டுடன் ஜெ. தன் கருத்தியலை தொடர்புபடுத்துகிறார் எனலாம்.
இன்றைய அரை நிலப்பிரபுத்துவ ( சாதியம் )
கலாச்சாரத்தின்படி கள்ளச் சாராயம் காய்ச்சுபவர் அவர்தம் சாதியுடன் நெருக்கமாக
இருந்தால் , அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டால் , அதை எதிர்த்து ஊரே ( சாதி
) திரளும் என்பது எதார்த்தம்.
கிராமத்தில் பெரிய சாதிக்காரர்
கிராமத்துத் தண்ணீரை நகர்புறத்திற்காக
தண்ணீர் லாரிகளுக்கு விற்றால் யாரும் கேட்கத் துணியமாட்டார்கள். உள்ளூர் தண்ணீர்
நிலத்தில் கொட்டப்பட்டால் அது மீண்டும் கிணற்று நீராக , ஊற்று நீராக வாய்ப்புள்ளது.
ஆனால் , கிராமத்துடன் சம்பந்தப்படாமல், முற்றிலும் கிராமத்தை விட்டு , தண்ணீர்
பண்டப்பொருளாக வெளியேறினால் காலக்கிரமத்தில் ஊற்று வற்றிவிடும் . ஆழ்குழாய்
தண்ணீரும் விதி விலக்கின்றி நீர் வற்றிவிடும். இது அந்தச் சாதியினருக்கும்
தெரியும். தெரிந்தாலும் தண்ணீர் விற்பதை எதிர்க்க மாட்டார்கள் ; தட்டிக்
கேட்கமாட்டார்கள்.
தண்ணீர்
விற்கப்பட்டாலும் சாதி , மாமன் , மச்சான் உறவு வேறு ; உறவு கெட்டுவிடும்; சாதிக் கட்டுமானம் உடைந்துவிடும் ( என்பது அவர்களின் உளவியல் ). ஆகையால் உறவு
என்றால் உறவுதான் . நீ எது செய்தாலும் உறவுதான் . நீ ஜெயிலுக்குப் போனால் நாங்கள்
பால் குடம் எடுத்து , ரோட்டில் உட்கார்ந்து மண்சோறு சாப்பிட்டு உன் விடுதலைக்காக
போராட்டம் நடத்துவோம்.
மக்களின் இந்தத் தாராளவாத எண்ணப்போக்கே ;
“ எனக்கு நீங்கள் ,
உங்களுக்கு நான்” என்ற கருத்தியல் ,
மக்களிடையே பற்றுறுதியைக் கட்டுகிறது . இந்த உறவு , பற்றுறுதிதான் 100-க்கணக்கான
கோடிகளின் மோசடியை கேள்வி கேட்காமல் ; தண்டனை வழங்கியதை குற்றம் என்று
ஆர்ப்பாட்டம் செய்தது .
ஏன் ஜெ.வுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள்
தேவைப்பட்டது ? யாருக்காக ? என்ற கேள்வி மக்களுக்கு எழவேண்டும் . ஆனால் எழவில்லை.
கேள்விகள் எழாது ; எழுந்தாலும் அது
மலட்டுத் தனத்திற்கே இட்டுச் செல்லும். எதிர்க் கட்சிகள் சொல்லுகிற மாதிரி பணம்
கொடுத்து ஓட்டு வாங்கினார் ஜெ. என்பது ஓரளவு உண்மையாக இருக்கக்கூடும் .
ஆனால் , ஜெ.
, இரட்டை இலை , எம்ஜிஆர் போன்றவைகள் மாயாவாதம் ; கருத்தியல் ( Ideology ) .
இந்த மாயையால் கட்டுண்டவர்கள்
இதிலிருந்து விடுபடுவது சிரமம் ; ‘ டாஸ்மார்க் ‘ சரக்கை விட இது காத்திரமானது .
கருத்தியல் மாயை பற்றி SLAVOJ ZIZEK ( சிசாக்
) கூறுவது கவனிக்கத்தக்கது .
“ கருத்தியல் (
ideology )
என்பது கருவியாகச் செயல்படுகிற ஒரு கருவியாகும் ( instrumental reason ) ;
கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் ( attitude ) ; சமூக மேலாண்மையில் (social
domination )
அது ஒரு செயல்பாடு மட்டுமல்ல ; கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகவே ( very
foundation )
உள்ளது “ (
சிசாக் ) .
இந்த மாயக்கட்டில் உள்ளவர்களுக்கு ‘ கிரிமினல் ‘ என்பது பிரச்சினையாக
இருக்காது . அந்த மாய உறவு பல்வேறு கனவுகளுக்கு , வண்ணக் கனவுகளுக்கு ஆதாரமாய்
இருப்பதால் பகுத்தறிவோ / சுய கவுரவமோ ( ego ) வேலை செய்யாது .
இப்படி மாயாவாதத்தால் கட்டுண்டதால் ஜெ. மக்களின் petit a –வாக மாறிவிடுகிறார். அதாவது,
மக்களின்
ஆசைக்கான காரணப் பொருளாக , அவர்களின் மனத்தில் , நனவிலியில் நங்கூரமாகிவிடுகிறார் .
அதாவது , இந்த
உறவைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால், குழந்தைக்கு தாயின் மார்பு மீது
எவ்வளவு தூரம் பிணைப்பு ( attachment
) இருக்குமோ அந்த அளவிற்கு இருக்கும் .
தாயின்
மார்பானது குழந்தையின் உடைமை உரிமையிலிருந்து விடுபட்ட கண்ணியை பிரதிநிதித்துவம்
செய்கிறது.
இக்குழந்தையின்
இந்த ஆசைப்படு பொருளானது இதரர் / பிறரைச் ( other
) சார்ந்தது . இது குழந்தையின் கற்பனையான பகுதி ஆசைப்படு பொருளாகும் ( imaginary part object ).. அதாவது , குழந்தை , உடலிலிருந்து மார்பு பிரிந்த
ஒன்றாக கற்பனை பண்ணிக்கொள்கிறது என்கிறார் கெலின் ( Klenian ).
மக்கள் இந்த ஆசைக்கான பொருளிடமிருந்து
அவர்களுடைய கற்பனைக்கு தோன்றியபடியெல்லாம் உறவும் , ஆதாயம் பெறும் ஆசையும்
அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது.
லக்கான் , petit a
-ன் ( ஆசைப்படு பொருளின் ) இயக்கத்தைப் பற்றிக் கூறும்போது , அது காமப்
படங்களைப் பார்த்து பாலின்பம் பெறுவதற்கான தூண்டல் ( Scopophilic drive ) என்கிறார். மக்கள் ஆசையின்
இயக்கத்தின் கைதியாகிவிடுகின்றனர். அந்தளவிற்கு காத்திரமானது petit
a
-ன் தாக்கம். இதை ஜெ. ஜெயிலுக்குப் போனபோது மக்களின் செயல்பாடு வீதிக்கு வந்த முறை
தெட்டத்தெளிவாக விளக்கிவிடுகிறது.
இதிலிருந்து ஒன்றுக்கு வரலாம். இந்த
மாயாவாதத்திலிருந்து விடுபடாதவரை எதார்த்தத்தை பார்ப்பதற்கும்
புரிந்துகொள்வதற்கும் ஆற்றல் பிறக்காது.
இப்போது
ஜெ. இல்லை . இந்த ஆசைப்படு பொருளானது அவரின் கட்சியான , கட்சிக் குழுக்களின் ஏதோ
ஒன்றிற்கு சாதகமாகுமா அல்லது ஜெ.யை இழந்து விட்டதால் ஆசைப்படு பொருளிலிருந்து
விடுதலை பெற்றுவிட்டனரா என்று ஆர்கே நகர் தேர்தல் முடிவு நமக்கு புலப்படுத்தக்
கூடும்.
இது லெக்கானிய மன அலசல் ஆய்வு
முறையாகும். ஓட்டளிப்பில் யார் ஜெயிப்பது , தோற்பது என்பதிலெல்லாம் அது அக்கறை
கொள்ளாது.
மக்களின் ஆசைக்கான காரணப்பொருளாக ( object petit a ) ஜெ. இருப்பதா ,இருக்கக் கூடாதா என்பது தனிமனிதனின் விருப்பம்.
ஆனால் , ஜெ. என்கிற ஆசைக்கான காரணப்
பொருளில் கோடிக்கணக்கான சொத்து மதிப்பு உண்டு ; அத்தோடு அதிகாரம் வேற. பின் எப்படி
மக்களும் ஜெ.யும் உறவினர்களாக முடியும்.
மக்கள்
அளித்த அதிகாரத் தளம் ( Phallus
) ( முதன் மந்திரி ) துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது
என்பதை உணரவேண்டும்.
ஜெ.யின்
உறவில் மட்டுமல்ல ; எந்த உறவிலும் முரணியக்கம் உண்டு ; இயற்கைக்கும் கூட ( சுனாமி
) .முரணியக்கத்தை புரியும்போதே எதார்த்தம் புலப்படும்.
க.செ
உதவியவர்கள் : Slavoj
Zizek
Subscribe to:
Posts (Atom)