வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல என்னை மன அலசல்
அனுமதிக்கவில்லை . மாறாக , தீபாவளி என்றவுடன் என்ன ? , என்ன ? என
கட்டுடைத்துப் பார் என்ற அழுத்தம் நெஞ்சை ஆக்கிரமித்தது .
முதலில் தீபாவளி என்ற பண்டிகையை /
யுகாந்திர பண்டிகையை சுருக்கமாக அறிய ,
………………………….
“
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அசுரன் ஒருவன், பாதாள லோகத்தில் ஒளிந்து
கொண்டான். அதை மீட்க , வராக அவதாரமெடுத்து , பூமிக்குள் சென்றார் பெருமாள் .
அப்போது , பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் , அவளுக்கு , ‘ பவுமன் ‘ என்ற மகன் பிறந்தான் .
பவுமன் என்றால் , பூமியின் பிள்ளை ; அவன் கெட்ட குணங்களைக் கொண்டவனாக
இருந்தான் . இதனால் , ‘நரகாசுரன் ‘ என்று அழைக்கப்பட்டான்.
‘அசுர குணம் கொண்ட மனிதன் ‘ என்று இதற்குப் பொருள்.
நரகாசுரன் வசித்த நகரம் , தற்போது அசாம் என்று அழைக்கப்படும்
காமரூபம் பகுதியில் இருந்த , ப்ராக் ஜ்யோதிஷபுரம். ஜோதிஷபுரம் என்றால் பிரகாசமான
பட்டணம் என்று பொருள் .‘ ப்ராக் ’ என்றால்
கிழக்கு அல்லது முன்பக்கம் ; இந்நகரமே , தற்போது , கவுகாத்தி எனப்படுகிறது .
தேவர்கள் மற்றும் பூலோக மக்களை கொடுமை செய்தான் நரகாசுரன் . பெரிய இடத்துப் பிள்ளை என்பதால்,
அவனை யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை .
வேறு வழியின்றி நரகாசுரனின் தந்தையான பெருமாளிடம் புகார்
செய்தார் பிரம்மா.
நரகாசுரனோ , தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு
வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். இதையடுத்து , இன்னொரு பிறவியில் ,
சத்தியபாமாவாகப் பிறந்து , கிருஷ்ணரை திருமணம் செய்தாள் பூமாதேவி .
அவளை அழைத்துக் கொண்டு , நரகாசுரனுடன் போருக்குச் சென்ற
கிருஷ்ணர் , ஒரு கட்டத்தில் , நரகாசுரனால் தாக்கப்பட்டு, மூர்ச்சையடைபவர் போல்
நடித்தார் . பதறிப்போன சத்தியபாமா , தன் கணவரைக் காப்பாற்ற தன் மகன் மீது அம்பு
தொடுத்தாள் ; நரகாசுரன் இறந்தான் .
அதன்பின்பே , முற்பிறவி நினைவு வர , பெற்ற பிள்ளையையே
கொன்றுவிட்டோமே என்று, அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. அதேநேரம் அவனது
மரணத்திற்காக , உலகமே தீபமேற்றிக் கொண்டாடுவதைப் பார்த்தாள். அதனால் , பெருமாளிடம்
, தன் மகன் இறந்த நாளை , தீபாவளி என்றும் , அவன் தேய்பிறை சதுர்த்தசி திதியில்
இறந்ததால் , நரக சதுர்த்தசி என்றும் பெயரிட்டு கொண்டாட அனுமதி கேட்டாள் .
அதன்படி , தீபாவளி கொண்டாடப்படுகிறது .” .....
-தி.செல்லப்பா . தினமலர்
வாரமலர் அக்டோபர் 23 , 2016
|
படித்தவுடன்
திகைப்புத்தான் முதலில் வருகிறது . ஒரு தாய் தன் மகன் என்று அறியாமல் (கணவனுக்குத் தெரிந்தும் ) ; ( மாயக்
கிருஷ்ணனுக்குத் தெரியும் ) , மனைவியிடம் சொல்லாமல் , தான் போரில் காயமடைந்து
விட்டதாக நடித்து , மனைவியை உசுப்பேற்றி விடுகிறான் .
தாய் ( சத்தியபாமா ) கோபத்தில் மகனைக் கொன்று
விடுகிறாள் . கொன்றபின் , கடந்தகால நினைவு வந்து தான் கொன்றது தன் மகனை என்று
அறிந்து பூமித்தாய் புலம்புகிறாள் .
தீபாவளி என்றால்
நரகாசுரன் அழிந்த நாள் . ஆகையால் தீப ஒளி நாடெங்கும் .
முதலில் இது ஒரு
வைணவக் கதை . அது அனைவருக்குமானதாக கட்டப்பட்டுவிட்டது
நரகாசுரன் யார் ? தந்தை
கிருஷ்ணன் ; தாய் பூமாதேவி .
அதாவது , தெய்வீகத்
தம்பதியருக்கு பிறந்த மகன் அசுரன் ஆகிவிட்டான். அதனால் பெற்றோரே தங்கள் மகனைக்
கொன்றுவிட்டனர். இதெல்லாம் தீபாவளியில் வெளிப்படாது . பிரதானமாக , நரகாசுரன்
கொல்லப்பட்ட நாள் என்பதைத் தீபத் திருநாளாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று
முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறது ( projection
) வரலாறு .
நரகாசுரன் செய்த
குற்றமென்ன ? அரக்கன் , பிரதானமாக தேவர்களை துன்புறுத்தினானாம் .
தேவர்களின் ஆட்சி அதிகாரத்தை நிலைகுலைய
செய்துவிட்டான் போலிருக்கிறது .
விஷ்ணுவின் சர்வாதிகார ( Totalitarian
)
அதிகாரம் இந்த அதிகார மீறலை ஏற்காது.
நரகாசுரன்
எல்லை மீறிவிட்டான். ஆகவே அவனுக்கு ஈடிபல் அதிகாரம் விதித்தது மரணம் ;
தேவர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் .
ஆனால்
, தேவர்கள் அகலிகை போன்ற பெண்ணைக் கூட விட்டுவைத்ததில்லை . அசுரர்களும் தேவர்களும்
உழைத்து , கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை கபடத்தனமாக , மோகினி ஆட்டத்தால்
அசுரர்கள் பெறமுடியாமல் செய்தது நெறியா ( Ethics
) ?
இத்துடன் அசுரன் இறந்த நாளை தீபாவளி என்று கொண்டாட தம்பதிகள் நம்மைப்
பணித்ததேன்?
மகனைக் கொன்ற
குற்றவுணர்வால் ( Guilty ) அசுரனின் நினைவை தீப நாளாக்கி விட்டார்களோ
என்னவோ . அல்லது , வரலாற்றில் இடைச்செருகல் ஏதும் நடந்ததோ ?
ஒரு வைணவ கதையாடலை பிற சமயத்தினரும் கொண்டாட எப்படி ஏற்கவைக்கப்பட்டனர்? .
ஒரு வைணவ கதையாடலை பிற சமயத்தினரும் கொண்டாட எப்படி ஏற்கவைக்கப்பட்டனர்? .
தீபாவளி என்பது – அர்த்தமல்ல , குறிப்பீடு ( Signified ) அல்ல
. அது “ குறிப்பான் “ (Signifier ) . ஒரு
சமூகக் கட்டமைப்பின் வலைப் பின்னல்
அது .
அது பகுதியை முழுமையாய்க் காட்டும் நனவிலி . அது
மாஸ்டர் குறிப்பான் ( Master
signifier ) (மேட்ஸ்ப்ளாங்கோ).
அது
வைணவம் என்ற பகுதியில் பிறந்து இந்துக்களின் பல பிரிவினரையும் ஒன்றாக்கி தீப ஒளி
ஏற்றுகிறது .
பிறப்பிலேயே தீண்டாமையை உமிழும்
சமூகத்தில் தீபாவளி அனைவருக்குமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது .
வரலாற்றில் , ஆதியில்
பாதிக்கப்பட்டவர்களைக் கூட முரண்பாட்டை உணரவிடாமல் தீபத் திருநாள் மயக்கிவிட்டது .
சமூக அந்தஸ்தை பிறவியிலேயே
இழந்தவர்கள் கூட இந்தத் தீபாவளியை ஏற்பதின் மூலம் சம அந்தஸ்து பெற்றுவிட்டதாக /
பெற்றுவிடலாம் என்ற மாயையை உண்டாக்கியிருக்கிறது தீபாவளி
தீபாவளி வர்க்கப்
பிரிவினையையும் உடைத்திருக்கிறது ( தற்காலிகமாகத்தான் ) .
( ஆட்டுக்கறி , கோழிக்கறி , மாட்டுக்கறி ) இது ருசி பேதத்தால் அல்ல
.
சென்னையிலிருந்து
பத்து லட்சம் பேர் சொந்த ஊருக்கு பேருந்தில் பயணம் செய்ய உளவியலாக கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது
. ரயிலில் பயணப்பட்டவர்கள் கணக்கில் வரவில்லை .
9 TO 5 வகையினரும் , அரசு ஊழிய
உடம்புகளும் , மென்பொருள் ( soft ware ) ஊழியர்களும் சம்பளம் , கிம்பளத்தை
பட்டுகளாக , நகைகளாக , பகட்டுடைகளாக மாற்றம் செய்துவிட்டது தீபாவளி.
தீபாவளி , எப்படியோ எதிமறைகளை , முரண்களை மயக்கி ஏகத்துவத்தை
நிலைநாட்டி விட்டிருக்கிறது .
இப்படிப்பட்ட
ஒரு கருத்தமைவை ( Ideology ) உள்ளடக்கியது தீபாவளி .
இறுதியாக
, தீபாவளி என்பது ஒரு பெண்ணிய பார்வை ( Female
Gaze
) உணர்வு
கொண்டது (லெக்கான்).
ஆடை அணிகலன் , பகட்டு
என ஒவ்வொருவரும் பிறரின் / மற்றவர்களின் ஆசைப்படு பொருளாக ( Object ) இருப்பதையே இக்கொண்டாட்டம் மையமாகக் கொண்டது
எனலாம் .
தீபாவளிக் கொண்டாட்டத்தின் பெரிய வெற்றி என்று எதைச்
சொல்வது என்றால் முரணியக்கத்தில் ( சாதி / வர்க்கம் ) உள்ளவர்களை
ஏகத்துவமாக்கிவிட்டதுதான் பெரிய வெற்றி எனலாம் . மீண்டும் பகுதியும் முழுமையும்
ஒன்றல்ல என்பது மறக்கடிக்கப்பட்டுவிட்டது .
க.செ