இப்போது பட விமர்சனம்
இல்லை.
கபாலி படம் வரி விலக்குப் பெற்றது.
ஏனென்றால் , தமிழக அரசின் 2006-ன் முடிவின்படி தமிழில் படப்பெயரைச்
சூட்டுபவர்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் அதிகார முடிவு.
தமிழக அரசின் முதல் மந்திரியாக
ஒரு மலையாளியும் , கன்னடிகாவும்
( முடிந்தால் தெலுங்கும் வரலாம் ) வரலாமாம். ஆனால்
, சினிமாவின் படப் பெயர் மட்டும் தமிழில் வேண்டுமா ?
ஆயிரக்கணக்கில் ,
மெட்ரிகுலேசன் பள்ளிகளைத் திறந்து , CBSE etc., இனி தமிழ் மெல்லச் சாகும் ( சுஜாதா சொல்லில் ) என்பதற்கிணங்க அரசியல்
செயல்பாடுள்ளது . இனியாகும் எந்தத்
தமிழரும் பிறப்பால் தமிழராகவும் , மொழியால் ஆங்கிலமாகவும் இருப்பர் . ( முதலில்
எழுத்து மறையும் , பின்புதான் பேச்சு மொழி ) . இன்றைய போக்கு பின்னைய நவீனத்துவ உலகளாவியத்தில் , நுகர்விய முதலாளியத்தில் ,
அரசியல் பொருளாதாரம் விதித்த விதி இது .
ஆக , சினிமாப்
படத்திற்கு தமிழ்ப் பெயர் சூட்டி விட்டு , சினிமா டிக்கெட் 2000க்கு விற்றாலும் ,
நகராட்சி , மாநகராட்சி , பஞ்சாயத்துகளுக்கு கால் காசு வரி கூடக் கட்ட வேண்டியதில்லை. தீப்பெட்டிக்குக் கூட வரி உண்டாம் . ஆனால் , தமிழில் பெயர் வைத்து கோடிகளில்
உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு வரி ஏதுமில்லை வாழ்க ! செம்மொழித் தொண்டு / செம்மொழி சினிமாத் தொண்டு
.
இப்படிப்பட்ட அரசியல்
பொருளாதாரச் சூழலில் , ஜூலை 27 , தி இந்து மையப் பக்கத்தில் ;
“
லெனின் மரணத்திற்கு யார் பொறுப்பு ? ” என்ற கட்டுரை வெளியாகி உள்ளது . இங்கு அது ஆய்வுப் பொருளாகிறது .
2010-ல் இஞ்ஜினியரிங் மாணவரான லெனின் பாரத
ஸ்டேட் வங்கியில் ரூபாய் 1,90,000 படிப்பு முடிக்க கடன் வாங்கினார்.
படிப்பை 2014-ல் முடித்தார் . இவ்வருடம் மே 6-ம் தேதி ரிலையன்ஸ் அனுப்பிய
கடிதத்தில் ”
15-ந் தேதிக்குள்
2,48,623 ரூபாய் கட்ட வேண்டும் . அதற்குப்
பிறகு வரும் நாட்களுக்கு வட்டியும் , மற்ற செலவுகளையும் சேர்த்துக் கட்டிவிட
வேண்டும் ” என்று இருந்திருக்கிறது.
மழைக்காலத்து மரக்காளான் மாதிரி ஊருக்கு
இரண்டு இஞ்ஜினியரியங் கல்லூரி இருக்கிறது . ஆண்டுக்கு லட்சக் கணக்கில்
இஞ்ஜினியர்கள் . தொழில் வளர்ச்சியோ அதள பாதாளத்தில்
. வேலையில்லா இஞ்ஜினியரிங் பட்டதாரி ஆனார் லெனின் .
இப்போது கடன்காரன் ரிலையன்ஸ் ரூபத்தில்
. தந்தையோ கொத்தனார் . லட்சங்களுக்கு
எங்கு போவது . “
ஈட்டிக்காரன்
” தினமும்
தொலைபேசியில் மிரட்டல். மகனிடம் மிரட்டல்
பற்றி சொல்லிவிட்டார் .
“ திரும்பத் திரும்ப போன் மேல் போன் போட்டு
மிரட்ர தொனியில் தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க . என்னால நெருக்கடியைத் தாங்க முடியல ”
( தி இந்து ) . பையனிடம்
சொல்லி விட்டார் .
இன்ஜினியரிங் பட்டதாரி லெனின்
தன்னைத்தானே அழித்துக் கொள்ளத் தூண்டப்பட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இது Event ( நிகழ்வு )
.
தி இந்துவின் இக்கட்டுரைத் தலைப்பே மிகச்சரியான
கேள்வியை எழுப்பியுள்ளது
“ லெனின்
மரணத்திற்கு யார் பொறுப்பு? ” என்று . அத்துடன் ரிலையன்ஸின் நடவடிக்கை -யையும்
விமர்சித்துள்ளது . பாரத ஸ்டேட் வங்கி , ரிசர்வ் வங்கிகளின்
பொறுப்பையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது ( ஜீலை 27 , 2016 ) .
ஆனாலும் இது போதாது .
இந்தியாவில் மானை வேட்டையாடியவன் ,
குடித்துவிட்டு கார் ஓட்டி , வீடில்லாதவர்கள் வீதியில் தூங்குபவர்களை கார் ஏற்றி
கொன்றவன் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். [ சத்யம் ( Trust )
நீதிமன்றங்களின் காலடியில்] .
கோடிகளில் கடன் வாங்கி கடனைத் திருப்பிக்
கட்டாமல் வங்கிக்காரனை விரலைச் சூப்பச் செய்யும் தொழில் அதிபர்கள் . ( மல்லையா
நினைவு வந்தால் கட்டுரையாளர் பொறுப்பல்ல ) .
கோடிகள் லஞ்ச வழக்கு கோர்ட்டில் பல பத்து
ஆண்டுகள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது .
இவர்கள் அதிகாரம் படைத்த பணக்காரர்கள் .
எல்லாமே வளைந்து கொடுக்கும் .
பொதுப் புத்தியும் இலவசத்தின் காலில் விழுந்து , ரோட்டில் சோறு தின்று
நியாயப்படுத்தும் .
இப்படியெல்லாம் சமூக வெளி காட்சியளிக்கும்
போது லெனின் மட்டும் தற்கொலை செய்து கொண்டார் ? ஏன் ?
இது பற்றி Alain Badiou என்ற
பிரான்ஸ் நாட்டு தத்துவவாதியும் , மன அலசல் ஆய்வாளரும் “
Theory of the
Subject “ பற்றிக் கூறும்
பொழுது ,
[ When
courage is combined with the Super ego , the result is what a Deleuzian would
call reactive type of political movements ] . These
are movements where militants sacrifice themselves for higher
authority such as god , the nation , or a dogmatically defined cause .
இதைச் சுருக்கமாகத் தமிழாக்கம் செய்தால் இதன் சாரம் “
ஒரு தன்னிலை துணிவுடன் Super ego -
வுடன் ஒன்றிணைந்தால் ( Super ego என்பது
விழுமியம் ) அந்தத் தீவிரன் தன்னை அழித்துக் கொள்ளத் தயங்கமாட்டான் ” என்பதாகும்
. இத்தன்னிலை ஒரு வித மாயத்தோற்றத்திற்கு ( delusion ) உட்படுகிறது - [ கேவலம் , மானம் போய்விட்டது , அம்மா , அப்பாவின்
பேரை நாசம் செய்து விட்டோம் போன்ற பொய்த் தோற்றத்தின் ஆளுமைக்கு உட்பட்டு விட்டது
அத் தன்னிலை ] . இந்தச் சமூக அமைப்பின் அவலங்களுக்கும் ஈட்டித்
தனத்திற்கும் அடி பணிகிறோம் என்று எண்ணவில்லை .
அதாவது , இதற்கு மாறாக , அந்தத் தன்னிலை
துணிச்சலுடன் (
courage ) , நீதி ( justice ) வேண்டும்
என்பதுடன் இணைந்திருந்தால் கதை கந்தலாகி இருக்கும் .
ஏனென்றால் , நீதி வேண்டும் , சத்யம்
வேண்டும் என்ற எண்ணம் நிலவும் சட்ட திட்ட திட்டங்களுடன் ஒத்துப் போகாது ; எதிர்த்து
நிற்கும் . இதுவும் அலன்
பெய்டுதான்.
உயர்நீதி மன்றமோ , உச்ச நீதிமன்றமோ சூமோட்டோ ( suo moto ) வழக்காக இதை
ஒருக்கால் ஏற்றால் . . . ? ( சட்டம்
அனுமதித்தால் ) உண்மையை (Trust
) நீதி எப்படித் தேடும் என்பது வெகுஜன
மக்களுக்குத் தெரியவரலாம் .
வங்கிகளும் , அரசும் , எத்தனை விதமான கடன்களை
அரசியலுக்காக ரத்து செய்திருக்கிறது.
கேளிக்கை வரி விலக்கு ஆண்டுக்கு எத்தனை
கோடி.
இந்தக் கல்விக் கடனை ரத்து செய்திருந்தால்
என்னவாம் ; அல்லது வட்டியை நீக்கி விட்டு தவணைகளைக் கூட்டியிருக்கலாம்.
குறைந்தபட்சம் கல்விக் கடன் வாங்கிய
வேலையில்லா பட்டதாரிகளை அனுதாபத்துடன் அணுகலாமே .
கடன் வசூலுக்கு கங்காணி ரிலையன்ஸிற்கு
தள்ளுபடி 55% என்பது அநியாயமில்லையா
? . இது அவர்களை ஈட்டிக்காரனாய் ஆக்குமே !
அரசியல் விழிப்பு பொதுப் புத்திக்கு இதை வேறு , வேறு பரிமாணங்களில் உணர
வைக்க வேண்டும் .
க.செ
No comments:
Post a Comment