6 Apr 2016

யார் தலையை ? யார் வாங்குவது ??


“  பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம்
                                                  – யோகா குரு ராம்தேவ்.      

                                                                                  - தி இந்து , ஏப்ரல் 6 , 2016


தலித்துக்களுக்கு கோயிலில் அனுமதி மறுப்பு

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹொலெநர்சிப்பூர் , சிகாரனகள்ளி  கிராமம், பசவேஸ்வரா கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைய ஆதிக்கச்சக்திகள் கடும் எதிர்ப்பு  .                                     தி இந்து , ஏப்ரல் 6, 2016                                          
                       
பாரதமாதாவின் சாதி இந்துக்கள் தலித்துகளை பாரதமாதாவின் பிள்ளைகளாய் ஏற்க மாட்டார்களாம்.
தலித்துகளாய் மட்டும் தான் அவர்களை , தீண்டாமை / EVIL -   ஆக மட்டும்தான்  பார்ப்பார்களாம்.
நீங்களோ யோக குரு . இப்போது பாரதமாதாவின் புதல்வர்களை இழித்து / ஒதுக்கி நாசகாரமான வெறுப்பை உமிழ்ந்து , மனிதாபிமானமற்ற முறையில் பாரத புதல்வர்களை ஒதுக்குகிறார்களே ! ;
ஒதுக்கப்பட்ட, விலக்கப்பட்ட பாரதமாதாவின் புதல்வர்களை தலித் என்று சொல்லி வன்கொடுமை புரியும் அந்த வல்லாண்மை சாதியினரை ; பாரதமாதாவின் புதல்வர்களாயினும் அவர்களை என்ன செய்வீர்கள் ? என்ன தண்டனை ?
பாரதமாதா தம் புதல்வர்களிடையே சமத்துவமற்ற நெறி கடைபிடிக்கும் தாயா ?
அப்படியானால்..... ? தலித்துக்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் பாரதமாதாவிற்கு ஜே சொல்லமாட்டார்களே ? ( பின் யார் தலையை வாங்குவது? ).
நீங்கள் வெட்டப்போவது யார் தலையை ?
      நெறியற்று நடந்தால் ...................?.
க.செ
6-4-2016

1 comment:

  1. மாய புகழ்7 April 2016 at 20:44

    Very good stand and counter question

    ReplyDelete