ஆதாரப்பூர்வமான ஒரு விசயத்தைப்பற்றி, அதைப் பத்திரிக்கைகள் செய்தியாக்கும்போது ஒரு விளையாட்டு, அதைவிடச் ‘சூதான‘ விளையாட்டு நடைபெறுகிறது . உதாரணத்திற்கு ,
பிப்.15-2015, HINDU-வில்
“GODHRA COURT FREES 70
IN POST-GODHRA RIOTS CASE ” - என்று
தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
தமிழில், இந்து....
குழந்தைகள் உட்பட
14 பேர் பலியான கலவரச் சம்பவம்
(கொட்டைஎழுத்தில்) கோத்ரா வழக்கில்70 பேரும்
விடுதலை
என்று செய்தி
வெளியிட்டிருக்கிறது .
ஏன் இந்த
மனப்பாங்கு மாறுகிறது ? உண்மையில், கோத்ரா வழக்கு
என்பது குஜராத் கலவரத்திற்கு தீப்பொறியாய் இருந்தது . அதாவது , 2002, பிப்ரவரி 27-ந்தேதி குஜராத் மாநிலம்.,
கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்த சபர்மதி ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 59
கரசேவகர்கள் உயிரிழந்தனர். தீ வைத்ததாகச்
சொல்லப்பட்டவர்கள் முஸ்ஸீம்கள். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும்
கிட்டத்தட்ட ஒருவார காலம் படுகொலைகள் நடந்தன. அதில் ஒன்று பனஸ்கந்தா மாவட்டம்,சேஷன்
கிராமத்தில் பெண்கள் உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கைத்தான் ‘ கோத்ரா வழக்கு ‘ என்று தலைப்பிடுகிறது தமிழ் இந்து.
‘கோத்ரா’ என்றவுடன் சபர்மதி ரயில் எரிப்புத்தான் இந்துக்களுக்கும், முஸ்ஸீம்களுக்கும் வரும் ; நினைவு கூறமுடியும். ஆனால் , குஜாராத் கலவரம் என்றால், இந்துக்களின் முஸ்லீம்கள் மீதான கொலைவெறித் தாண்டவம் நினைவுக்கு வரும் . தமிழ் இந்து உடனடியாக பரபரப்பைத் (sensation ) தூண்ட வேண்டும் என்பதற்காக ‘ கோத்ரா ‘ என்ற குறிப்பானைப் பயன்படுத்தியிருக்கிறது.
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழ் வாசகத் தன்னிலைகளை பிண்டங்களாக்கி அரசியல்
நடத்தப் போகிறதோ ? தெரியவில்லை.
இனி , இந்தவழக்கு பற்றி . குற்றச்சாட்டுக்களில்
முதன்மையான குற்றச்சாட்டு இன்றைய பிரதமர் மோடியின்மீது எழுந்தது ; அவர் அன்று குஜராத்தின்
முதலமைச்சர் . அவருடைய அரசுதான் இந்த 70 பேர் மீதும் வழக்குத் தொடர்ந்தது.
தீர்ப்பளித்த நீதிபதி, “ குற்றம்
சாட்டப்பட்டுள்ள 70பேர் மீதான குற்றங்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால்
70பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர் “ என்று
குறிப்பிட்டுள்ளார்.
அரசு வழக்கறிஞர்
சொன்னதாக தமிழ் இந்துவின் வாக்குமூலம் ,
“ வழக்கில் நேரடி
சாட்சிகள் மௌனமாகிவிட்டனர். வாய்மொழி சாட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை “ என்கிறது.
ஆனால், ஆங்கில
நாளிதழில், ’ Eye Witnesses
Turned Hostile ‘ என்று உள்ளது.
ஆங்கில இதழ் வாசகப்படி நேரடி சாட்சிகள் அதிகாரத்தால், RSS, கலாச்சார இந்துப்
போலிசாரால் பயமுறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஏதோ விலை கொடுத்திருக்க
வேண்டும் அவர்களுக்கு.
அதனால்தான் அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல
வேண்டியவர்கள் அரசுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிட்டனர். இந்த
மனப்போக்கிற்குத்தான் ‘ இந்து தர்மம் ’ என்று பெயரா?
இது பற்றி நாடு தழுவிய எந்தக் கேள்வியும் வந்ததாகத் தெரியவில்லை. குஜராத்
மாநில நீதிமன்றம் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. அந்தக்
கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் , கோத்ரா ரயில் எரிப்பில் இறந்த 59
கரசேவகர்களின் குடும்பங்களுக்கும் , குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் மனக்காயம் , மனத்துயரம் , இழப்பு , ஏக்கம் இவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு ? என்ன தீர்வு கண்டிருக்கிறது குஜராத் அரசு
அல்லது நீதிமன்றம்?
பலியாடுகள் பலியெடுத்தவர்களை மன்னித்துவிட்டனரா ? மறந்துவிட்டனரா?
“ சீழ்பிடித்த
சுயமோகம் தன்னை , தன்னைச்
சார்ந்தவைகளை புனிதமானதாகவும் , பிறரை , பிறர் சார்ந்தவைகளை தீயவையாகவுமதான் (evil ) பார்க்கும் “.
“ எல்லா மதத்தினருக்கும்
சமஉரிமை ” மோடி.
இந்தச் சொல்லாடல், சேஷன் கிராமத்தில் 14 பேர் கொல்லப்பட்டதற்கு தண்டனை யாருக்கும் கிடையாது என்பது ,
மகிழ்ச்சிக்குரியது அல்ல. அத்துடன் நேரடிச் சாட்சிகள் ( eye witnesses) வழக்கின் எதிரிகள் பக்கம் சேர்ந்திருக்கிறார்கள். அந்த
கிராம மக்களுக்கு மட்டுமல்ல, 14 பேரின் சாவுக்கான மனக்காயம், இழப்புணர்வு,
கையறுநிலை அடைந்த மனங்களுக்கு
நேரடி சாட்சிகளின் பிறழ்வு ஒரு நோய்க் குறிப்பானாகி விடுகிறது.
இனி, இந்துக்கள் மீது ‘ நியாய உணர்வற்றவர்கள் ’ , ‘ நம்பிக்கைகளுக்குத் தகுதியற்றவர்கள் ‘ என்ற உணர்வு மேலெழும்பும் தானே?. இப்போது ‘ எல்லா மத
நம்பிக்கைகளும் இங்கு சமமாகப் பாவிக்கப்படும் ’ என்ற கூற்று
நகைக்கத்தக்கதாகவே உணரப்படும் , இல்லையா?
சமூகக் குழுக்களுக்கிடையிலான நல்லுணர்வை எப்படியும்
பாதுகாக்க வேண்டும் என்ற ‘ அக்கறை ’ , ‘ நெறி ’, அரசுக்கு , மதவாத இந்து மக்கள் குழுக்களுக்கு வேண்டாமா?
க.செ.
©the author
No comments:
Post a Comment