அந்தத் தொடர்பனிக்காலத்தில்,
11-1-2015-ல் கோடிப்பேர் பாரிஸ் நகரைக் குலுக்கி விட்டனர்.
50 நாட்டு அரசுத் தலைவர்களும் அடங்குவர் அந்த மக்கள் வெள்ளத்தில் ( பாரிஸ்
புரட்சிக்குப் பின் ! ).
பாலஸ்தீனத்தின் பிரதிநிதியும், இஸ்ரேல் பிரமரும்கூட அந்தக் கூட்டத்தில் கலந்து
கொண்டனர்.
இத்துணைக்கும் காரணம்
பயங்கரவாதிகள் ( terrorists ) பேச்சுச் சுதந்திரத்தை, பேனாவை குறைத்து மதிப்பிட்டதால்
அவர்களுக்கெதிரான எதிர்வினையை
மா மக்கள்திரள் காட்டிவிட்டது. [ இம்மாதிரியான போர்த்தந்திரம்,செயல் பயனுள்ளதா? சிந்திக்க வேண்டும்]
லெக்கான் ஒரு முறை பயங்கரவாதத்
தன்மையை ” THE BIRDS ” என்ற சினிமாக் காட்சியை ஒப்பிட்டுப் பேசினார்.
......" The Birds, Alfred Hitchcock created horror by showing us
what birds could do, but thankfully don’t do: they could viciously attack
anyone and everyone without provocation. We humans have same capacity for
aggression as animals " -The Psychology of Terrorism
ஆனால்,
பாரிஸில் பயங்கரவாதம் ஒரு குறிப்பான பத்திரிக்கைக்கெதிராக ஆரம்பமாயிற்று. அதனைத் தொடர்ந்து வழக்கம்போல்.
கோழியா
? முட்டையா ? எது முதலில் என்றால்
அது தொடர்கதையாய்ப் போய்விடும்.
ஆனால், செயல்நோக்கம் ( Motivation ) என்பது கசப்புணர்வும், வெறுப்பும்தான் (hatred ) அடிக்கட்டுமானம்.
இஸ்லாமியரில் உள்ள பயங்கரவாதமும்
சரி, இந்து பயங்கரவாதமும் சரி, அல்லது எல்லா மதத் தீவிரவாதமும் சரி, இவைகளிலெல்லாம் மனித
சுயமோக பயங்கரவாதத்தின் நஞ்சு ஓட்டம் இவர்களின் [ பார்வையில் (view) ] அடிநாதமாக உள்ளது. இதில் இலங்கையின்
பௌத்தம் கூட பேரினவாதிகளிடமிருந்து தன்னை மீட்டுக் கொள்ளமுடியவில்லை.
மதத் தீவிரவாதம் மனிதர்களின்
சுயமோகத்திற்குத் தீனியாக உள்ளது. அதுபோல் மனிதர்களின் சுயமோகம்
மதத்திற்கு புனிதம், பூரணத்துவம், முழுமையானது, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது
என்ற அந்தஸ்தைக் கொடுக்கிறது.
"நம்மைச் சுற்றி உள்ள சமூக உலகம் தொடர்ச்சியான (constant ) கோரிக்கைகளை (demands ) வைக்கிறது
நம்மீது ; அதாவது தனியன் மீது". இது லெக்கான்.
அந்தத்
தனியன் இஸ்லாமியனாக இருந்தால் ' அல்லா மிகப் பெரியவன்', 'விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்டவன்' என்பான்.
அந்தத் தனியன்
ருஷ்டியாக இருந்தால் எழுத்துரிமை என் பேச்சுரிமை என்பான்.
தமிழ் நாவலாசிரியர்
பெருமாள் முருகனும் அப்படித்தான்.
அந்தத்
தனியன் கருஞ்சட்டையாய் இருந்தால்,
பெரியார்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பார்.
அந்தத்
தனியன் வைணவனாக இருந்தால்,
ராமன், ஸ்ரீராமபிரானாகப்படுவார்.
இப்போது ஒரு
அடி முன் சென்று பார்ப்போமானால், ருஷ்டியும் , பெருமாள் முருகனும் அவர்களின்
சுதந்திரத்திற்குட்பட்டு கதை எழுதினார்கள். அதற்குப் பரிசாக ருஷ்டிக்கு மரண தண்டனை
கிடைத்தது. நல்லவேளை பெருமாள்முருகனுக்கு கிடைத்ததோ ‘ஊர்கடத்தல்’. அதாவது, ‘அர்த்தநாரீஸ்வரர்’ பார்வையில் (' திருச்செங்கோடு
புரட்சிவாதிகள்' ) முருகன் படக்கூடாது
என்பதுதான்.
ருஷ்டி நோக்கத்துடன் / உள்நோக்கத்துடன் அந்த நூலை எழுதினாரா ? என்பது எனக்குத்
தெரியாது. அதே மாதிரி ப்ரெஞ்ச் 'CHARLIE HEBDO' பத்திரிக்கைக் கார்ட்டூன்
முஸ்லீம்களை சீண்டியதா (provoke) ? சிறுமைப் படுத்தியதா (humiliate ) ? தெரியாது.
ஆனாலும்
இவர்களுக்கு ' ISLAMOPHOBIA' இருக்க வாய்ப்பு
உண்டு.ஏனெனில் சிலுவைப் போர் வரலாறு உண்டு,
அதைப்பற்றிய கருத்தாடலும்உண்டு.
இந்த விமர்சனங்களுக்கு
ஒடிந்துவிழும் அளவிற்கா இஸ்லாம் இருக்கிறது(தன்மையில்). இருக்காது.அது, தொடர்ந்து
மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் சிலுவைப் போரை எதிர்கொண்டு ஜீவிதத்தில்
இருக்கிறது. அப்படியானால் ஏன் பேனாவை உடைக்க ஆரம்பித்தனர் என்றால், அது, அதைக் கருவியாகப்
பயன்படுத்தும் சுயமோக வெறியர்கள்,இஸ்லாம் புனிதம் என்ற தனித்
தலைமைக்கு மறைமுகக் கோரிக்கை (demand ) வைப்பவர்கள், தங்கள்
குலப் பெண்களின் உரிமையைக் கூட விட்டுவைக்காத ஆண்மைய
சுயமோக பேரழிவுக்காரர்கள் ( narcissistic catastrophist ) .
இவ்வளவு பேரழிவும் இவர்களை ஒன்றும் செய்யாது ( ஹிரோசிமா / நாகசாகி
போல ). புனிதம் காப்பதும், அதற்காக சிறார்களை தற்கொலை வெடிகுண்டுகளாக [suicide bombs] நைஜீரியா ஆக்குவதும் இந்தத் தன்மையே.
ஆனால் பெருமாள்
முருகன் திருச்செங்கோட்டுக்காரர் தானே ? அவர்களில் ஒருவர் தானே ? அப்படியிருந்தும்
இந்தக் ' கொடுங்கோன்மை'
அவருக்கேன் [ மன்னிக்கவும், நாவல் படித்ததில்லை] .
மகாபாரதக் கர்ண
சகோதரர்கள் மட்டுமல்ல, துரோணச்சாரியார் கூட; இன்னும் மேற்கே போனால் இயேசு கூட
கன்னி மேரியின் குழந்தை தானே? கர்ணனைப் போல. மேலே கூறியவை எல்லாம் கதையும் தாண்டிய MYTH ( தொன்மம் ). இது இப்படி
நடக்கவேண்டும் என்ற வேண்டுதலைக் குறிக்காது.
இல்லாமை, மற்றமையில்
இல்லாமை (தீர்வு கூட) ஒருபுனைவை(Fantasy) உருவாக்கும் (evoke ) மனத்திலிருந்து புறப்பட்டது புராணிகம். இதைப் புரியலாம் / ரசிக்கலாம்/ வியக்கலாம். இதை
எதார்த்தம் என்றோ / சரி தப்பு விளையாட்டிற்கு உட்பட்டது என்றோ கருதக்கூடாது. ஏனென்றால், அர்த்தநாரீஸ்வரர்
கூட ஒரு தொன்மம்தான். பொதுப்புத்தியில்
கடவுள் என்பதும், காட்டு என்பதும் தமிழகத்தின் அரசியல் விளையாட்டு.
பின் ஏன் இந்த
அப்பாவிகளுக்கு அழித்தொழிப்பு, மரணதண்டனை, ஊர் விலக்கம் எல்லாம்?
மனஅலசலில் இதற்கான முக்கிய
காரணமாக வெறுப்பு (hatred ) என்கின்றார் Rina Lazer . ( இது நனவிலி ). – International journal of psycho analysis, vol 84,2003
அவர் தன் ஆய்வுக் கட்டுரையில்
வெறுப்பை விளக்குகையில்,
" வெறுப்பு சித்தத்தில் போதாமையாக ( deficiency ), இடைவெளியாக,
தானியத்தையும், பதரையும் பிரித்துப் பார்ப்பதற்கு இயலாத சித்த அமைப்பு
என்றும், தனது சாரத்துடன் (own essence ) இணைத்துப் பார்க்க
முடியாத ஒன்று" என்றும் வரையறுக்கிறார்.
பெருமாள் முருகன் கதையில் தமிழ் வாசகர்கள் பெரும்பான்மையோர்
எதை ‘ தானியம் ’ என்கின்றனர்; எதை ‘ பதர் ’ என்கின்றனர் ? திருச்செங்கோட்டினர் எதை 'தானியம்' என்கின்றனர்? எதை 'பதர்' என்கின்றனர்? அம்மக்களின் சுயத்தின் சாரம் எதுவாக காலம் காலமாக உள்ளது?
அப்படி ஒரு வீரியம் தெய்வத்திற்கு, ' Thing ' -க்கு இருப்பதாக நம்பப்பட்டதா , இல்லையா? [ அது நம்பிக்கை தான் ;
எதார்த்தமல்ல ]. அந்த நம்பிக்கைதான் , Myth தான் ( தொன்மம் ) பெருமாள் முருகனின் கதைக் கரு . இன்றைய திருச்செங்கோடும்
அல்ல, வெள்ளாளக் கவுண்டர்களும் அல்ல. யாரையும் புண்படுத்தும் நோக்கம் உள்ளதும்
அல்ல.
அல்ல, அந்தத் தொன்மம் (Myth ). அது இல்லாமையால் ( Lack ) எழுந்த புனைவு (fantasy ). அங்குதான் இலக்கியம் பிறக்கிறது.
அல்ல, அந்தத் தொன்மம் (Myth ). அது இல்லாமையால் ( Lack ) எழுந்த புனைவு (fantasy ). அங்குதான் இலக்கியம் பிறக்கிறது.
மற்றொருபுறம்…
[ எதனால் தாழ்வு
மனப்பான்மைக்கு இடம் கேட்கிறது மனம். எழுத்தும் , பேச்சும் வானளாவிய உரிமை
பெற்றதல்ல. அயலானின் ( other ) மனத்தை பேச்சோ,
எழுத்தோ, புண்படுத்துமேயானால் அது உளவியல் வன்முறை. ஞாபகம் இருக்கட்டும்.
வெறுப்புக்கு, கோபத்திற்கு, தாக்குதலுக்கான வித்து அது ] .
க,செ,
© The author
No comments:
Post a Comment