சமூக ஒழுங்கிலும் (social order) பதட்டம் (tension) இருந்துகொண்டே இருக்கும். அதாவது, ஒரு திட்டத்திற்கான ( programme) முயற்சி அது " என்பார் லெக்கான்.
தமிழகத்தில் மரபு சார்ந்த அதிகாரம் எது? என்னவகையான சமூக உறவு அதை அகற்றிவிட்டு அந்த இடத்தைக் கவர்ந்தது? நிச்சயமாக கரடுமுரடான பொருள்முதல்வாதம் மேலாண்மைக்கு வந்தது. சமூக ஒழுங்கில் முரட்டுவாதமும் , வயிறு , சோறு , அதிகாரம் போன்றவைகள் முன்னணிக்கு வந்தன. ஆரோக்கியமான கலாச்சாரத்திற்குப் பதில், அடிதடி கலாச்சார அரசியலை மேலாண்மைப்படுத்தியது. சுயவசீகரிப்பு , பகட்டு , திகட்டாத கொக்கரிப்பு . சுயமோகவெறியைப் பொதுவெளியாக்கிவிட்டது அது. வீதியெங்கும் சினிமா கட்டவுட்டில் துவங்கி , ப்ளக்ஸ்போர்டுக் கலாச்சாரத்தில் கழுத்தளவு மூழ்கியிருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகு.
ஆடித் தள்ளுபடியில் மானத்தை இழந்துவிட்டு நுகர்ந்து , நுகர்ந்து, சாராய நெடிமட்டுமே வாசனையாகி , அண்டை அயலாரின் ஆயிரக்கணக்கான பிணவாடை கூட வீசவில்லை. இறந்த உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்பதும் பெரியவீட்டு இழவுக்குப் பிறகு மறந்தும் போச்சு.
இந்நிலையில் விதவிதமான தலைப்பாகை போட்டியில் [ ராகுல் vs மோடி ] வெற்றி கொண்ட மதர்ப்பில் அரசின் தேசியக் கொடியை நடைமுறையில் இரண்டாம்பட்சமாக்கி , காவியை அடையாளமாக்க முன்னிறுத்தும் வேலை தொடங்கிவிட்டது.
விசயங்களுக்கும் ( things) , வரலாற்றிற்கும் விளக்கம் ( interpretation) கொடுப்பதேன்?
விளக்கம் நனவிலி. ஒடுக்கப்பட்டது மீண்டும் வருகிறது.
தமிழகத்தின் உழைக்கும் வர்க்கமாக (மதி மயங்கி) தமிழ்ப் பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
1. தமிழ்ப் பிராமணர்கள் அதிகாரத்திலிருந்து மெல்ல மெல்ல விரட்டி அடிக்கப்படுகின்றனர்......
இதுபோல் பட்டியல் நீளுகிறது. ஆதரவும் , எதிர்ப்பும் மத்தியதர வர்க்க ,மேல்சாதி VS வெள்ளாளர் சாதி தலைமையில் , அடிதடி சாதிகள் etc ; கரடுமுரடுகள் (crude materialists ) வழக்கம்போல்.
பிரதமரே விநாயகனுக்கான யானைத் தலையானது அன்றைய ப்ளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை முறையால் வந்தது என்ற கூற்று, சமஸ்கிருதத்தை ஆட்சிக் கட்டிலில் வைக்கும் முயற்சிகள்.
-ஆதாரம் : The Guardian.28 October 2014
பொருளாதாரத்தில் இந்தியாவை உலகளாவிய, பன்னாட்டு மூலதனத்தின் விளையாட்டு மைதானம் ஆக்குவது ( இப்போது மட்டும் இந்தியாவா? மற்றதெல்லாம் இந்து ). கூடங்குள அணுக்கழிவைக் கொட்டிட, கொட்ட; உலை அதிகரிப்பு ( இதுவும் வேதகால மரபுதானோ ! )
நவீன மோஸ்தரில் ஒன்றான தொழில் நுட்பக் கல்லூரிகள் மூடுவிழாவுக்குப் பூஜை போட ஆரம்பித்துவிட்டனர். லட்சங்களில் இஞ்சினியர்கள் வேலையில்லாப் பட்டதாரிகள்.
தமிழக ‘விளிம்பு’ (marginal ) மக்களான பிராமண கலகக் குரலுக்கு எதிராக (திராவிடம் சாராத) ஒரு பிராமணக் குரல்.
ஆனந்த விகடன் (31-12-14). “ கேள்வி : சமீபமா, தமிழ்நாட்டுல பிராமணனா இருப்பது சாபம்கிற மாதிரியான விவாதங்கள் நடக்குதே.... அப்படியா என்ன? ”
பதில் : ” நிச்சயமா இல்லை ! இப்பவும் பிரபல தொழில் நிறுவனங்கள் யார்கிட்ட இருக்கு? அதன் உயர் பதவிகளில் யார் இருக்காங்கனு பாருங்க. பொருளாதார ரீதியா பல பிராமணக் குடும்பங்கள் சராசரி வசதியைக் காட்டிலும் உயர்ந்த இடத்தில் இருக்காங்க. அவங்க குடும்பத்திலே..
‘ படிக்கிற கலாச்சாரம்னு ’ ஒன்னு இயல்பிலேயே இருக்கு. சமூகத்தைப் பத்தின புரிதலும், வாய்ப்பினைத் தேடிப் பயணிக்கும் திறமையும் நிறையவே இருக்கு ”.....
-கர்நாடக சங்கீத பாடகர் டி.எம். கிருஷ்ணா
இவர்களுக்கு என்ன வேண்டும்?
வேத காலத்திலிருந்து ஆரம்பித்து முகலாயர் துவக்கம் வரை அனுபவித்து வந்த மகிழ்வு ( jouissance ) காயடிப்புக்குள்ளானது ( castration ). 1947-க்குப் பின் வட இந்தியா போல் இல்லாமல் தமிழகம் வேளாள சாதித் தலைமைக்குச் சென்று விட்டது. அத்தோடு அரசு பதவிகளில் ஒதுக்கீடு என்ற காயடிப்புத் தொடர்வதால் பிற இடங்களுக்கு அவர்கள் பார்வை சென்றிருக்கிறது.
இன்று தேடுவது இழந்துபோன வேலையை அல்ல. ஆசைப்படுவது (desire ) Phallic jouissance - க்காக. அதாவது, இழந்த சமூக / அரசியல் / அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அதிகார வேட்கைக்கான ( Phallic jouissance ) உந்தல்தான் (drive ) அவர்கள் கோரிக்கை (demand ) .
இதுமட்டுமல்ல, ஏற்கனவே கூறியபடி மதமாற்றம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன, வரும். மேற்கூறிய கோரிக்கைகள் புதியது அல்ல. அவைகள் ( கோட்சே சிலை வைப்பு உட்பட ) ஏற்கனவே எழுப்பப்பட்டு, காயடிப்புச் சிக்கலில் சிக்குண்டு தேர்தலுக்காக கைகழுவி விட்டுவிட்டு ; இன்று ஆட்சிக் கட்டிலில் மேலாண்மை அதிகாரத்தில் B J P இருக்கிறது. காயடிப்பு அச்சத்தில் கைவிடப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் தருணம் என்பதால் தூண்டுதல் (drive) காத்திரமாய் இருக்கிறது.
எழுப்பப்பட்ட கோரிக்கையெல்லாம் ( demands ) சமூகம் சார்ந்ததல்ல / மக்கள் சார்ந்ததல்ல / பொருளாதாரம் சார்ந்ததல்ல. மாறாக, இந்தப் பெருங்கதையாடல் மகிழ்வுக்கானது / அதிகாரத்திற்கானது. அதாவது இது Phallic jouissance. (வேதகாலம்... முருங்கை மரம் ஏறுகிறது).
க.செ.
4-1-15
© the author

No comments:
Post a Comment