எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு பெருகப் பெருக , பேச்சுரிமை , கருத்துரிமை பற்றிய
பிரதிவாதங்கள் சூடுபிடித்திருந்த நேரமது .
தி இந்து இலக்கிய விழாவில்
படைப்பாற்றல் சுதந்திரத்தின் எல்லைபற்றி என். ராம் ஒரு எல்லையை நினைவூட்டினார் .
அது , “ அரசியலமைப்புச் சட்ட
வரையறைக்கு உட்பட்டு படைப்பாற்றல் சுதந்திரம் , கருத்துரிமை யைக்
காத்துக்கொள்ள நாம் உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும் ” என்றார் .
-தி இந்து-18.1.2015
அதாவது , அரசு இயந்திர நலனுக்கு
எதிராக பேச்சு, எழுத்துச் சுதந்திரம்
இருந்து விடக் கூடாது என்கிறார் .
மற்றமை சாதியத்தின் உரிமைகளின் எல்லைகளை மீறக்கூடாது என்கின்றது
[அதுதானே பெருமாள் முருகனின் மீதான வழக்கு] . சமூக
கலாச்சாரத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் புதிதல்ல.
மஹாபாரதத்தில் ஆதிபருவத்திலேயே இப்பிரச்சினை தோன்றிவிட்டது .
மஹாபாரதத்தில் ஆதிபருவத்திலேயே இப்பிரச்சினை தோன்றிவிட்டது .
ஒவ்வொரு மனித உயிரியும் அவள் அல்லது அவனது உலகத்தில்தான்
வாழ்கிறது. உலகத்தின் பொருளை குறிப்பான
நேரத்தில் , பகுதியின் ( area ) அனுபவத்தையே அவன்/அவள் அனுபவமாகப்
புரிந்துகொள்கிறார்கள் .
இந்த சமூக உலகத்தில் நாம் 21-ம் நூற்றாண்டில் உருவாக்கும் vertical reality , பயங்கரவாதம் மாதிரி , அக்காலத்தில் குறியீட்டு
உலகத்தையும், தொன்மம் ( myth ) சாத்தான், கடவுள் , நரகங்களை இந்த மதஉலகம் படைத்தது . (Symbolic world is as
real). யதார்த்த உலகம் . இதில் அன்றாடம் மனிதர்கள்
சாப்பிட நெல்லும் , கோதுமையும் விளையும் .
தொன்மத்தில் ( myth ) அப்படி நடக்காது ; அது வேற . காலமெல்லாம் புதிராகவும் , புதிதாகவும் அது வெளிப்படும் .
இப்படிப்பட்ட ஒன்றுதான் மகாபாரதம் . இதன் துவக்கமான ஆதிபருவத்தில்தான் நமது இன்றைய பிரச்சனை உள்ளது.
பீஷ்மர் குலத்தின் மூத்தவர்; தந்தைக்காக தன் இளமை , மன்னர் பதவியை துறந்தார் . அதன் விளைவாக அவரின் தம்பி விசித்திர வீரியன்
மன்னராகி , இரண்டு மனைவிகளை அடைந்து மிக
விரைவிலேயே மாண்டும் போனார்.
பிரச்சினை
இப்போது விசுவரூபம் எடுத்து விட்டது. மன்னருக்கு வாரிசில்லை. ஆகையால், மற்றமையில் ( Other ) இல்லாமை ( lack ) உணர்வு [ ஆதியில்
முதல்முதலாக தாயைக் காணோம் என்றவுடன் குழந்தைக்கு ஒரு இழப்புணர்வு ஏற்படுமே , அது இப்போது
குடும்பத்தில் , மக்களிடையே , அரசில் ] வந்துவிட்டது. இல்லாமை ( lack ) என்பது
லெக்கானிய மன அலசல்படி பொருள் , பணம் இல்லாதது பற்றி இது குறிப்பிடாது . கணவன் இழப்பு என்பது பெண்களுக்கு துக்ககரமானது , வலி உள்ளது என்பதும் உண்மையே . அத்துடன் , அப்பெண்கள்
குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை இருந்தும் , வேறு வழிகளில் பெற்றுக்
கொள்ளக்கூடாது என்ற கலாச்சாரத் தடை / காயடிப்பு நடந்து விடுகிறது. கலாச்சார விதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கணவன் இல்லாததால்,
அது Symbolic
castration. அதாவது, கலாச்சாரக் காவலரால் / விதிகளால் காயடிக்கப்பட்டிருக்கிறாள்
என்று பொருள். அத்துடன் அவளின் மகப்பேறு ஆசையும் காயடிக்கப்பட்டு விடுகிறது . ஆசை என்பதே இல்லாமையின் ஆகுபெயர்தான். ... “That desire
is the metonymy of lack of being” (லெக்கான்) . இந்த அடிப்படையில் கோரிக்கை (demand)
சார்ந்தது. அக்கோரிக்கை ஆசைப்படு பொருளின் காரணமாக (object a) குழந்தை/ மகப்பேறாகும். இச்சூழலில் உயிரி இருக்கும் ;
நானுணர்வு(ego),அதன்
இயக்கம் இருக்குமா?.இருக்காது.
மகாராணி ஒரு வழி கண்டுபிடிக்கிறார் . பீஷ்மரைக்
கொண்டு இறந்த மன்னரின் மனைவிகளுக்கு விடிவுதேடி......
....“ பீஷ்மரிடம் , அரசன் இல்லாத ராஜ்யத்தில் குடிமக்கள் கவனிப்பாரற்றுப் பல துன்பங்களை
அடைகிறார்கள் . அரசன் இல்லாத ராஜ்யம் நிலைபெற்று இருக்காது . ஆகையால், குலவிருத்தியை உத்தேசித்து அம்பிகை , அம்பாலிகையிடம் நீ
புத்திர சந்ததியை உண்டாக்க வேண்டும் . மேலும் , உடனடியாக நீயே அரசனாகப் பட்டாபிஷேகம் செய்துகொண்டு ராஜ்யபாரத்தை ஏற்று இந்த
பாரத தேசத்தை ஆளவேண்டும் ” என்று சந்தனுவின் மனைவி சத்தியவதி கூறினாள் .
- மஹாபாரதம் பேசுகிறது. மொழி பெயர்ப்பு-சோ
கணவனை இழந்த மனைவிகள் தங்களின் இழப்பு ( கணவனை இழந்தது ) உணர்விலிருந்து
மீள்வதற்குள் , அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என்பது , மற்றமையில் ( சமூகத்தில் ) இல்லாமையாக ( lack ) ஆகிவிட்டது. மகாராணி , பட்டத்திற்கு
வாரிசு வேண்டும் என்பதற்காகவே வேறு ஆண்மகனை - இவர்களின் விருப்பம்
பற்றியெல்லாம் கவலைப்படாமல்-தேர்வு செய்கிறார். அது ஒரு வலி , பிரச்சினை. இதைக் கடப்பதற்கு குறியீட்டு அமைப்பில் / சமூக ரீதியாக / சட்டரீதியாக / விழுமிய ரீதியாக தீர்வு
இல்லை.
இப்படியிருக்க , மகாராணிக்கு மற்றொரு
குழப்பம். பீஷ்மர் மறுத்துவிடுகிறார் ; அவர் வாழ்நாள் எல்லாம்
பிரம்மச்சரியம் காப்பேன் என்று ஏற்கனவே சபதம் செய்தவர். அந்தச் சபதத்தை
மீறமாட்டேன் என்கிறார். அரச பதவியையும் மறுத்துவிடுகிறார்.
“ வம்ச விருத்திக்கு வழி இல்லாத பொழுது , க்ஷத்திரியப் பெண்கள் சிலர் , உயர்ந்த குணமுள்ள வேறு புருஷனிடம் மகப்பேறும் , குலத்தை விருத்தி செய்து கொள்வதும் இருந்து வந்திருக்கிறது
என்பதற்குச் சான்றாக ஒரு சில பழைய நிகழ்ச்சிகளை பீஷ்மர் விவரித்தார் ” ( அதே நூல்).
இல்லாமை ( lack ) என்பதைக் கடக்க பீஷ்மரே இப்படி ( தான் மறுத்துவிட்டு ) யோசனை வைத்தது மட்டுமல்லாமல் ஒரு வேண்டுகோளையும்
மகாராணியிடம் வைக்கிறார் ;
“ தாயே! பாரத வம்சம் விருத்தி அடைவதற்காகவும் , ‘ ராஜ்யம் தொடர்ந்து நிலைபெறுவதற்காகவும் ’ உயர்ந்த குணமுள்ள ஒரு உத்தம புருஷனை நாம் வேண்டிக் கேட்டுக்
கொண்டு அவன் மூலமாக அம்பிகை ,அம்பாலிகையிடமும் சந்ததிகளை
உருவாக்க வேண்டும்” என்கிறார் பீஷ்மர் ( அதே நூல் ).
மற்றொரு
அம்பை மகாராணியிடம் வீசுகிறார் பீஷ்மர்… “ என்னை மன்னிக்க வேண்டும் . நான் ஒரு விசயத்தைக் கேட்க விரும்புகின்றேன் . பெண்கள் எப்பொழுதும் தங்கள் குடும்பத்திலிலுள்ள
முக்கியமான ரகசியத்தை மறைத்து வைத்து விடுவார்கள் . பலவிதமான தந்திரங்களினால் புருஷர்களைத்
தங்கள் வசப்படுத்திக் கொள்கிற அவர்கள் குடும்ப ரகசியத்தை புருஷர்களிடமே மறைத்து
விடுகிறார்கள். ஆகையால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்கள் தான் தீர்வு சொல்ல
வேண்டும் ” என்கிறார் ( அதே நூல் ).
[ இந்த
விமர்சனத்தை எப்படிப் புரிந்து கொள்வது? ஆண்மையவாதமற்ற பெண்தன்மை இது பற்றிப்
பேசினால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.(விடியுமா) ]
பீஷ்மர் சொன்னதை மகாராணி சத்யவதி உண்மையே என்கிறார். “ஆபத்துக் காலத்திலும் கூட
உண்மைகளை மறைப்பது நல்லதல்ல… இப்போது ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். மீன் வயிற்றில்
பிறந்த என்னை செம்படவ அரசன் எடுத்து வளர்த்தான். யமுனை நதியில் பராசர மஹரிஷிக்காக
நான் ஓடம் செலுத்தியபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நேரத்தின் புனிதத்தன்மை
கருதி அவர் என்னுடன் கலந்தார் . அதன் மூலம் வியாசன்
எனக்கு மகனாகப் பிறந்தார். ( மகாபாரதம் எழுதிய வியாசரின் அம்மாதான் இப்போது கதை
சொல்லிக் கொண்டிருக்கிறார் ) . பராசர மஹரிஷியின்
அருளினால் நான் மீண்டும் கன்னிகையானேன். ( கர்ணனின் தாய் குந்தியும் மீண்டும் கன்னியாகி விட்டார். ஏசு பிறப்பிற்குப் பின்
அவர் தாய் கன்னிமேரியானாள் ). என்னிடம் பிறந்த வியாசன் ‘ மிகவும் அவசியமான காலத்தில் நீங்கள் என்னை நினைத்தால் நான்
வருவேன் ’ என்று சொல்லி தகப்பனாருடன் சென்றுவிட்டான். பீஷ்மா! நீ சம்மதித்தால் வியாசனை மனதால் நினைத்து இங்கு
வரவழைக்கிறேன் . அம்பிகை , அம்பாலிகளுக்கு சந்ததிகளை
உருவாக்குமாறு அவனைக் கேட்டுக் கொள்கிறேன் ” என்றார். பீஷ்மர் சம்மதமும்
கிடைத்துவிட்டது. (அதே நூல்)
அரசி சத்யவதி தன்
மனத்தில் மகன் வியாசரை நினைக்க அவரும் அன்னையின் முன் பிரசன்னமாகி தாயின்
கோரிக்கையை கேட்டுவிட்டார். இனி வியாசர் இப்படி பேசுகிறார்; “ தாயே ! உங்கள் கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை . ‘ராஜ்யம் அழியாமல்
காப்பாற்றப்பட வேண்டும்’ என்ற உங்கள் நோக்கம் உயர்ந்ததே. ஆனால், என்னுடன்
கலப்பதற்கு இந்தப் பெண்கள் ஒரு நிபந்தனையை ஏற்க வேண்டும். இது சரீர சுகத்திற்காக செய்யப்படும் காரியம் அல்ல நான் குரூபியாகவும் ,
துர்நாற்றத்துடனுடம்தான் வருவேன். அதை சந்தோசமாக அவர்கள்
ஏற்க வேண்டும். அது அவர்களுக்கு நான் விதிக்கும் விரதம் என்றார் வியாசர் ” (அதே நூல்).
வியாசர் விதித்த விரதம் என்னவாயிற்று என்பது கதை. அங்கு செல்லவில்லை
இக்கட்டுரை .
அரச மகளின் காயடிப்பால் (castration ) ஏற்பட்ட இல்லாமை (lack ) என்ற
நிலையைக் கடக்க லெக்கானிடம் வழி ஏதுமில்லை. பௌத்தம் ( Buddhism ) நடைமுறை நோக்கம் கொண்டது . அது என்ன சொல்லுகிறது ?
அப்பெண்களின் நனவிலி இல்லாமையை ஈடுகட்ட ( லெக்கானால்
முடியவில்லை என்பதுதான் உண்மை ) அரசி சத்யவதி , பீஷ்மர் ,
வியாசர் கூட்டணியால் ஒரு தீர்வு கிடைத்துவிட்டது. அதாவது , அப்பெண்களின் குழந்தை
ஆசையும், மற்றமையின் இல்லாமையான அரச பதவிக்கு வாரிசும் கிடைத்து விட்டது.
அத்துடன்
‘ மலடி , மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாய் என்ற பெருமைதனை மனம் குளிர தந்தவனே ’ -கண்ணதாசன் (சினிமா
பாட்டு இது ). மற்றமையின் மீதான பயத்தை , அத்துடன் எந்தப் பெண்ணும்
விரும்பாத மலடி என்ற குறிப்பானை ( signifier ) சூட்டிவிடுவதிலிருந்தும் அந்த அரசிகள் தப்பித்துக்
கொண்டார்கள். இளவரசிகள் என்ற அந்தஸ்தும், வாரிசுக்கு குழந்தை வேண்டும் என்ற
நிலையும் பெற ஒப்பீட்டளவில் அவர்களின் பண்பான முன்னோர்களால் ஒரு திட்டிவாசல் கதவு
திறந்துவிட்டதால் அப்பெண்கள் ஜீவிதத்திற்குள் வந்து உயிர்மூச்சு விட ஆரம்பித்து விட்டனர்.
மேற்கூறிய காயடிப்பு கலாச்சாரத் ( symbolic ) தடைகளையும், முட்டுச்சந்தையும்,
முற்காலத்திலேயே கடக்க வழிகாட்டியிருக்கிறார்கள்.
அரசி சத்யவதியே வரலாற்றிற்கு முன்பும் இதே உதாரணங்கள்
இருந்திருப்பதை ஏற்கனவே சுட்டிக் காட்டினார் .
பௌத்தம் , சம்ஸ்காரம் (Samscara) ) என்பதை ‘ துன்பச் சக்கரம் ’ (the wheel of
suffering ) என்கிறது.
பெண்களுக்கு, இல்லாமையின் வேர் அடிப்படையானது ; உள்ளார்ந்த பாதுகாப்பற்றதிலிருந்து அது புறப்படுகிறது என்று பௌத்தம்
கூறுகிறது.
(… “ For Buddhism ,
the struggle with lack is rooted in fundamental ontological insecurity ”...)
தன் சொந்த இல்லாமையிலிருந்து ( lack ) நானுணர்வு கூட
( ego ) தப்பிக்க
முடியாது. ஏனெனில் நானுணர்வு , கண்ணாடி பருவத்தின் ( mirror stage ) இல்லாமை
ஆகும்.
சாதித் திமிரும் , மேலாண்மைக்
கலாச்சாரமும் இல்லாமை உணர்வுக்கு மருந்தாகி விடாது . இந்திய அரசியல்
சட்டத்தின் பேச்சுரிமையும் , எழுத்துரிமையும் கூடத்
தான்.
தனிமனிதர்களின் நியாயமான ஆசையும் , தனி உரிமையும் கூட ( வீட்டில் விரும்பியபடி வாழ்வது ) கேள்விக்குட்பட்டதுதான்.
அது போல மற்றமையின் குறியீட்டு விதிகளும் தனிமனித இல்லாமை உணர்வை ( மலடி, மலடி என்று ) காலில் போட்டு
மிதிக்கும்போது ,
தொன்மத்தின் ( வியாசரின் ) வழிகாட்டுதல்தான் இல்லாமை உணர்வுக்கான தீர்வாகக்( நெறியாக ) காட்டப்படுகிறது .
க.செ
© The author
© The author