16 Dec 2014

FAITH AND BELIEF -- அக்னியின் வேடம்

ன்றை வாசித்தவுடன் நம்பிக்கொள்கிறோம். ஏனென்றால் அது பத்திரிக்கையில் வந்தது என்பதற்காக.
ஒன்றைக்கேட்டவுடன் நம்பிக்கொள்கிறோம்(அடுத்தவர் பற்றி). ஏனென்றால் நம் தாய் தந்தை கூறியதால்.
பேய் கூறியதாக இருந்தால் என்ன செய்வது? நம்பலாம்....நம்பிக்கையின்றி (Faith  இன்றி). இப்போது நம்பிக்கை என்பது விசயம் சார்ந்தது அல்ல.மாறாக,உறவு சார்ந்ததாக உள்ளது.
சூர்ப்பனகை கூறியதை,தங்கை கூறியதால், லங்கேஸ்வரன் அப்படியே நம்பினான்.விளைவு?
உண்மை வேறு.அது வெளியே.
இது பற்றி,இதில் உள்ளுறைந்திருக்கும் வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள ஒரு தொன்மத்திற்குச் செல்லலாம்.
தெரிந்த பாரதம் ,   தெரியாத பாத்திரம்-2                                                 
 -இந்திராசெளந்தர்ராஜன்.-தொடரில் இருந்து,
      
…."அக்னிக்கு தன் சொரூபம் மங்கிவிட்ட கவலை.ஏனெனில் 12 வருடம் அதன்மேல் விழுந்த நெய்யும் அவிசையும் அவன் குணத்தை இழந்துவிட வைத்துவிட்டது (அந்தச் சிவப்பு).அதைபோக்க பிரம்மனிடம் யோசனை கேட்டான்.
       ..."கிருஷ்ணார்ஜுனர்களும் காண்டவ வனத்துக்குஅருகில் ஒன்றாக இருந்த தருணத்தில்தான் அக்னியும் பிரம்மாவின் ஆலோசனைப்படி அவர்களின் உதவியை நாடி வந்தான்.
       ஒரு க்ஷத்திரியனிடம் பிராமணன் ஒருவன் வந்து யாசகம் கேட்கும்போது அவன் கேட்கும் யாசகத்தை எப்பாடுபட்டாவது கொடுக்கவே பார்ப்பான். அல்லாத பட்சத்தில் பிராமணனுக்கு இல்லை என்று சொன்ன தோஷத்தோடு, உதவி செய்தால் கிடைக்கும் புண்ணியுமும் கிடைக்கமால் போகும்.
       இதனாலேயே யாசகம் பெற்றுவிடத் துடிப்பவர்கள், பிராமண வேடத்தில் செல்வதை ஒரு தந்திரமாகக் கருதினர். இங்கே, அக்னியும் அப்படியே வந்து தான் காண்டவ வனத்தை எரிக்கும்போது நீராலும், காற்றாலும் தான் பரவுவது தடைபடக்கூடாது என்று வேண்டிக் கொண்டான் .                                               
       இப்போது அக்னி காண்டவ வனத்தையே எரித்து சாம்பலாக்கினான். அதற்கு உதவியாக கிருஷ்ணனும் அர்ச்சுனனும் இருந்தார்கள்."
                                           -தினமலர், ஆன்மீக மலர் டிச.9.2014.
                கதையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு நமது விசயத்திற்கு வருவோம்.           
     காண்டவ வனத்தை எரிக்க கிருஷ்ணனும், அர்ச்சுனனும் ஏன் ஒத்துழைத்தார்கள்? அவர்கள் பிராமணன் தங்களிடம் யாசகம் கேட்டதால் ஒத்துழைத்தார்கள்’(   கேட்டது பிராமண வேடத்தில் வந்த அக்னி ).
       இது பற்றி நாவலாசிரியரின் வரலாற்றின் கூற்று,  
      "ஒரு க்ஷத்திரியனிடம் பிராமணன் ஒருவன் வந்து யாசகம் கேட்கும்போது அவன் கேட்கும் யாசகத்தை எப்பாடுபட்டாவது கொடுக்கவே பார்ப்பான். அல்லாத பட்சத்தில் பிராணனுக்கு இல்லை என்று சொன்ன தோஷத்தோடு, உதவி செய்தால் கிடைக்கும் புண்ணியமும் கிடைக்காமல் போகும் ".
       இப்போது க்ஷத்திரியனுக்கு, அர்ச்சுனனுக்கு மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்பதுபோல் (1) கொடுக்காவிட்டால் தோஷம்; (2)கிடைக்க வேண்டிய புண்ணியம் கிடைக்காமல் போகும். கேட்பவனுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. கேட்பவனிடம் இருக்கிறதா இல்லையா என்கிற அக்கறையும் இல்லை.
       மனஅலசல் கேட்பதை, வாசிப்பதை Interpellate செய் ( அதாவது, கேள்வி கேட்டு, விளக்கம் கோரி, தெளிவுபடுத்திக் கொண்டு ஏற்பதும் ஏற்காததற்கும் வந்து சேர் ) என்கிறது.
       இங்கு யாசகம் கேட்பது என்பது, சாதாரணமாக உதவிசெய் என்பதுதான்.அது புனிதமாக்கப்பட்டு [ கருத்தியலாக Ideologically )  ] தவிர்க்க முடியாதது, தவிர்க்கக் கூடாதது என்ற அந்தஸ்தைப் பெற்று விடுகிறது, அந்தஸ்தைப் பெற வைத்து விட்டார்கள். அதை எப்பாடுபட்டாவது கொடுத்தாக வேண்டும். அதனால் என்ன விளைவு வந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ( வாமன அவதாரம், மாபலி; பார்க்க, கேட்க, வாசிக்க ).
       இனி தோஷம் என்பதைப் பார்ப்போம். கொடுக்காவிட்டால் தோஷம். அதாவது, உன்னை தோஷம் பற்றிக் கொண்டு ( சனி என்று வைத்துக் கொள்ளலாம் ) எல்லாவிதத் துன்பத்தையும், மனக் கஷ்டத்தையும் கொடுப்பான் என்ற அச்சுறுத்தல். இதுவும் கருத்தியலாகக் கட்டப்பட்ட ஒன்றே ideologically constituted  ). [ சிறுவயதில் தாய் தந்தையர் சொல்லும் நீதிக் கதைகளை ஒருவன்/ஒருவள் அப்படியே அதை அகவயப்படுத்தும்போது அது பேரகனாக super ego ) ஆகிவிடுகிறது. பின்னர் அது காலம் முழுவதும், சமயம் கிடைக்கும்பொழுது ஆட்சி புரியத்தான் செய்யும் ].
அதேமாதிரிமனிதன் என்பவன் க்ஷத்திரியன் பிராமணன் என்ற கருத்தியலால் (ideology), கட்டப்பட்ட தன்னிலைகளாக (subject ) இயங்கும்போது உதவி என்பது யாசகமாகவும், கொடுக்காதது தோஷமாகவும்; வரவேண்டிய புண்ணியம் வராமல் போய்விடும் என்று மனம் அச்சுறும், அவதியுறும். இது முரணியக்கம்.
   வெறும் நம்பிக்கை சார்ந்த வாசிப்பும், ஏற்பும் இன்றைய சமூகத்தில், குடும்பத்தில் ( தாய் தந்தை,மகன்,மகள் ) , தன்னிலைகளுக்கிடையில் ( inter subject ); கட்சி, தொண்டன்; பத்திரிக்கை, வாசகன் எல்லாவற்றிலும் மொட்டையான, மொன்னையான நம்பிக்கையை ஏற்படுத்தி மோசமான உறவுகளுக்கு, முடிவுகளுக்கு வித்திடுகிறது.
       சுருக்கமாக, BELIEF, FAITH  என்பது பற்றி மனஅலசல் கூறுவதைச் சொல்லி கட்டுரையை முடிக்கலாம்.
       கட்டுரை ஆரம்பத்திலேயே சற்று எளிமையாக அன்றாட வாழ்வாகக் கூறப்பட்டுள்ளது.
       நம்பிக்கை ( Belief ) என்பது ஒன்றை எளிமையாக நம்புவதாகும்.
ஆனால், திட நம்பிக்கை ( Faith ) என்பது ஒன்றை உறுதியாக நம்புவது. திட நம்பிக் கையில் ஒன்றை நம்புபவருக்கும், நம்பப்படுவதற்கும் இடையில் ஒரு குறியீட்டு உடன்பாடும்(  Symbolic pact ) நம்பப்படுவதுடன் பிணைத்துக் கொள்ளும் உறவும் (  Binding engagement ) இருக்கும்.
நம்பிக்கையில் இந்த இரண்டு பரிமாணங்களும் இருக்காது.   
                                                       -Zizek. -On Belief  
பி.கு                                                                         
       [ ரத்த உறவு ( சாதி ) சார்ந்த நம்பிக்கையும் மா தலைவர் சார்ந்த உறவும், சாஸ்திரம் சார்ந்த உறவும் அப்பாவிகள்innocent  ) அல்ல  ].                                        

No comments:

Post a Comment