8 Oct 2014

Abject - கழிவு,உதிரம், சளி,மலம் etc.,



செப்டம்பர் மாதக் கடைசி வாரம் தமிழகத்துக்குத்தான் லொம்பலாக இருந்தது என்றால் பீகாரில் அது வேறு பரிமாணம் எடுத்துள்ளது. அதுவும் ஒரு அக்ரஹாரப் பிரச்சினைதான். ஆனால் இதற்கு சுப்பிரமணியசாமி இதில் தலைகாட்டமாட்டார்.
                பீகார் முதல்வர் கடவுள் தேசவுடைமை அகிவிட்டதாகக் கருதி; கோவிலுக்குச் சென்று அவர் திரும்பியவுடன், கோவிலை அசுத்தம் ஆகிவிட்டதாகக் கருதி-பெண்களின் மாதவிடாய், சளி, மலம்,etc  போன்ற கழிவுகள் (abject - ஜூலியா கிறிஸ்தவா)- அசுத்தமாக நினைத்துப்  பரிசுத்தம் பண்ணியிருக்கின்றனர் (?).  ஏனெனில் பீகாரின் முதல், முதல்மந்திரி, தாழ்த்தப்பட்டவர் என்பதால்.
                இது இந்திய சமூக அவமானமாகப் பாவிக்கப்படவில்லை. இந்நாடே சாதி சமூகம் மட்டுமல்ல; மொழிவாரி மாகாணம்கூட. பீகாரிக்கு நடந்தால், தழிழருக்கு, மலையாளத்தானுக்கு,தெலுங்கனுக்கென்ன ? .அதனால்தான் ஓபாமா கூட பிரதமரை ஹிந்தியில் நல்வரவு கூறாமல் குஜராத்தியில் நல்வரவு கூறியதாகக் தகவல்.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா.
                இவ்வளவு மோசமான அடி, அதுவும் ஒரு மாநில முதல் மந்திரிக்கே எனும்போதும், அதற்கான  காத்திரமான எதிர்வினை ஆற்ற புரட்சிகரத் தன்னிலை (revolutionary subject ) தலித்திலும்,அதன் சாதியத்தை ஒழிக்கக் கோஷமிடும் ஆதரவு சக்திகளின் சாத்யமற்ற தன்மையும் (potentiality ) கேள்விக்குறியாகிறதே?உண்மையா?.
க.செ

No comments:

Post a Comment