நரேந்திரமோடி:
..... "குஜராத் அரசு சார்பில் நர்மதா நதிக்கரையில் உள்ள தீவுப்பகுதியான
பஹ்ரவுச்சில் இரும்பு மனிதர் படேலுக்கு ரூ 2500 கோடியில் சிலைஅமைக்கப்படுகிறது. சுமார் 600 அடி உயரத்தில் எழுப்பப்படவுள்ள இந்தச் சிலை
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைவிட இரண்டு மடங்கு பெரியது.....
... "படேல் மதச்சார்பற்றவர்தான்.ஆனால்,சோமநாதர்
கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச் சார்பின்மை குறுக்கிடவில்லை. அவர் கடைப்பிடித்த
மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை, ஒன்றிணைத்து வலுப்படுத்தியது",என்றார். -தி இந்து நவம் 1 -2013
2014-ல்
நடக்கவிருக்கும் தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், B.J.P- யின் அரசியல்
சொல்லாடல்களில் உள்ள திரைமறைவுப் பிரதேசங்கள் தெரிந்தால் அவர்களின் 21ம் நூற்றாண்டின்
அரசியல் சொல்லாடல்களின் வர்ணங்கள் புலப்படும்.
இனி, படேலை B.J.P ஏன் கண்டுபிடிக்கின்றனர் என்ற கேள்விக்கான பதிலைஅறியும் முன்; B.J.P- யின் மூத்த
தலைவரும் B.J.P- யின்
அடிக்கட்டுமானத்தின் முக்கியமானவருமான எல்.கே.அத்வானியின்
படேல் பற்றிய நிலைப்பாட்டை அவரின் வலைத்தளத்தில் வெளியிட்டாராம்.
அது இங்கே
ஆய்வுப்பொருளாக ஏற்கப்படுகிறது,
[ இது மறைவுப் பிரதேசம் (unconscious); பிரக்ஞையுடன் செயல்படும்போது மொழி எப்படியெல்லாம் பிறக்கிறது. Justification, Re-interpretation-ஆக வெளிப்படுகின்றன. இது B.J.P- க்கு
மட்டுமல்ல; எல்லோருக்கும் - தமிழகத்து அரசியல்வெளி உட்பட.-பொருந்தும்; மற்றபடி
எந்தக் கட்சிக்கானதாகவும் இருக்கப்போவதில்லை].
படேலை வகுப்புவாதி என்றார் நேரு: அத்வானி தகவல்.
.......தனது
வலைப்பூவில் அத்வானி கூறியுள்ளதாவது: "நாடு சுதந்திரமடைந்தபோது ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆட்சி செய்த நிஜாம்
இந்தியாவுடன் இணைய மறுத்து வந்தார்.
அப்போது அவரது ஆதரவாகச் செயல்பட்ட தீவிரவாதப் படையினரான ரஸாக்கர்கள்
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு ராணுவத்தை
அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படேல் வலியுறுத்தினார்.இது தொடர்பாக
அமைச்சரவைக் கூட்டத்தில் நேருவுக்கும் படேலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த நேரு,படேலை
வகுப்புவாதம் செய்பவர் என விமர்சித்தார். அத்தோடு படேலின் யோசனையை ஏற்றுக் கொள்ள
நேரு மறுத்துவிட்டார்”.... -தி இந்து .நவம். 6- 2013
(ஆனால் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது- இணைத்தவர்
படேல். ம.ஆ.)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப நேரு
தயங்கினார்.
"பாகிஸ்தான் துருப்புகள் 1948-ம் ஆண்டு காஷ்மீரை நெருங்கியபோதிலும்
அங்கு ராணுவத்தை அனுப்ப அப்போதைய பிரதமர் நேரு தயங்கினார் என்று B.J.P- ன் மூத்த
தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் ‘சர்தார்’ வல்லபாய் படேலை முழுமையான வகுப்புவாதி என்று நேரு
விமர்சித்ததாக அத்வானி சமீபத்தில் தனது இணையதள வலைப்பூவில் தெரிவித்திருந்தார்.இது
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது......”
-தினமணி
நவ.8-2013
இன்றைய அரசியல்,காங்கிரஸ் தலைமையிலான
கூட்டணியினர் B.J.P -யை ’மதவாதிகள்’, ’மதவாதம்’ என்று சொல்லுகின்றனர்.குறிப்பாக
அத்வானி,மோடி போன்றவர்களுக்கான செல்லப்பெயர் அது.
பாபர் மஜீத் இடிக்கப்பட்டபின்பும், குஜராத்தின்
மோடி அரசாங்கத்தில் நடந்த குஜராத் மதக் கலவரத்திற்குப் பின்பும் 'மதவாதம்' என்ற சொல்லும், அதன் அரசியல்
நடைமுறையும் இப்பெயரால் இனம் காணப்படுகிறது.
படேல் பற்றிய அத்வானி, மோடியின் கருத்துக்கள் செய்தியல்ல.அது கூற்றல்ல. அவைகள் விளக்கமளித்தல்( interpretations) எனும் வகை சார்ந்தது.
படேல் பற்றிய அத்வானி, மோடியின் கருத்துக்கள் செய்தியல்ல.அது கூற்றல்ல. அவைகள் விளக்கமளித்தல்( interpretations) எனும் வகை சார்ந்தது.
இந்த மறுவாசிப்பு நனவிலி ரீதியில்
நடைபெறுவது. இதற்கான காரணம் மற்றமை தான்(Other).அதாவது
மக்களும்,மொழியும்,கூடவே ஊடகங்களும்.
காங்கிரஸ் எனும் அரசியல் சொல்லாடலானது நேரு பரம்பரையுடன்
கட்டப்பட்டுள்ள கருத்துருவம். அத்துடன் அது சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்ததாயும்,
தியாகப் பரம்பரையாயும் சொல்லாக்கம்,பொருளாக்கம்
பெற்று ஊடகங்களிலும் அரசியல்
பொது வெளியிலும் உலாவி வருகிறது,
நேரு பரம்பரையாகத்தான் ராகுல்காந்தி அறிமுகப்படுத்தப்படுகிறார். ராகுல்காந்தியும் தியாகப்பரம்பரை என்ற பதாகையை
("தானும் சுட்டுக் கொல்லப்படலாம்"- ராகுல்)
உயர்த்திப் பிடிக்கிறார்,அதாவது phallic -ஆகவும்,தங்களை மாஸ்டர் சொல்லாடலாகவும்
பாவித்துக் கொள்கின்றனர். இது நேற்றைய , இன்றைய மற்றமைச் சொல்லாடல். அதாவது வெகுஜனங்களின் ஆசைக்குரிய பொருளின் இடத்தில் காங்கிரஸ், ராகுல் உள்ளனர்.
அதுவாக B.J.P இல்லை-மற்றமையின்
ஆசைப்பொருளாக, அந்தஸ்தான பரம்பரா இடம்(phallic) என்று ஏதுமில்லை(lack).
இது B.J.P-க்கு உளவியலாக இடைவெளியை(gap), இல்லாமையைக் (lack) கொடுக்கிறது.
ஆகவே இந்த ’ இடை’வெளியை அடைக்க,
சமூகத்தில் நேரு என்ற ஓர்மையான இடத்தைப் பிளக்க மக்கள் மனத்தில் சுதந்திரத்துடன்
பிணைக்கப்பட்ட, ஆனால் காங்கிரஸால் புறக்கணிக்கப்படும்,மேலும் தங்களின் அகண்ட
பாரதம்,மதவிசுவாச அடையாளத் தேடலில் B.J.P -க்குக்
கிடைத்த அருமருந்துதான் படேல் என்ற மனிதர்.
இவரைப்பற்றி மோடியின் கருத்தை மீண்டும் ஒருமுறை
பார்க்கலாம்.
..."படேல் மதச்சார்பற்றவர்தான்.ஆனால் சோமநாதர்
கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச்சார்பின்மை குறுக்கிடவில்லை...” -மோடி. அதாவது, படேல் மதச் சார்புள்ளவராக
நடந்துகொண்டார் அல்லது அதற்கு ஆதரவாக
நடந்து கொண்டார். அதனால் மோடியின் பாசம் படேலின் பக்கம். அதாவது,அடையாளத்தேடலில் அடையாளம் கிடைத்துவிட்டது.
மற்றொன்று..."அவரின்
மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை,ஒன்றிணைத்து வலுப்படுத்தியது"....மோடி.
அதாவது, முஸ்லீம் ராஜ்யங்களான
ஹைதராபாத்,காஷ்மீர் இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. இன்றைய தேசிய
இனங்களின் சிறையாய் இந்தியா இருப்பதற்கு படேல் ஒரு காரணம்.அதாவது, B.J.P-யின் அகண்ட பாரதத்தின் கனவை ஓரளவாவது
செயலாக்கத்திற்கு வித்திட்டவர் படேல் என்ற மற்றொரு அடையாளமும் பட்டயமும் படேலுக்கு.
படேலின் எந்தத்தன்னிலையை
ஏற்றிருக்கிறார்கள் என்று கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இவர்களின்
அடையாளத்துடன் ஒத்துப்போகும்(simile) தன்னிலைத் தன்மையையே ஏற்றிருக்கிறார்கள்.படேலுடனான
ஐக்கியம் other-உடனான ஐக்கியம் அல்ல;ஒத்த தன்னிலைகளுக்கிடையிலான ஐக்கியமே.
இப்போது மோடியும், B.J.P-யும்
படேலின் வாரிசு.அதை நிலைநாட்ட,மக்கள் மனத்தில் நேருவுடன் படேலையும் அக்கம் பக்கமாக நிறுத்த 600 அடி உயர சுதந்திரச்சிலை
உருவாகிறது.
தொழில்நுட்பரீதியில் படேலின் மீதான ஆசை எப்போது
எழுந்தது?(Desire can
only exist as unsatisfied-Lacan).
“அதிருப்தியில் ஆசை எழுகிறது ”.
மற்றமையில் தானும். B.J.P-யும் ஆசைப்பொருளாக இல்லாததால்;அதுவும் காங்கிரஸின் வீழ்ச்சி நேரம்
என எண்ணும் கணத்தில், தாங்கள்
மரபின் நீடிப்பு என மற்றமை ஏற்கவில்லையோ என்ற எண்ணமே ,அதனால் ஏற்பட்ட மனப்பதட்டமே (anxiety) படேல்.
ஆக, அத்வானி, மோடியின் ஆகுபெயர்தான் (metonymy) படேல் (displacement) என்றாகிறது.
கூடுதலாக படேல் ஒரு குஜராத்தியும் கூட. மேலும் B.J.P-யின் மரபுரீதியான அடையாளத் தேர்வு(identity) ஒரு குழந்தையின் கண்ணாடிப்பருவத்தைக்
காட்டுகிறது. கண்ணாடிப் பிம்பத்தை (3-ம் element) தானாக (அடையாளமாக) குழந்தை கருதுவது குழந்தைத்
தனத்தால். ஆனால் மோடி, அத்வானியின் 3ம் மூலாதாரத்தை - படேலிடம்-தேடுவது நனவிலி விருப்பமே.
Spatial-
realism மேற்கூறிய
அடையாளம் பற்றியதை மன அலசல் இப்படிக் கூறுகிறது :
“…
’where am I’. It has no idea of itself as
a whole. When it sees itself in
the mirror, however it does see itself as a whole, but it is only an image of
the whole. The other in the mirror is Imaginary. The child will now identify itself with the
image. This is called a dual kind of
relation. As will be argued later, this
is not yet a real relation, because therefore a third element is needed. This is also not only a stage in the
development of the child, but will be important for the rest of its life, notably
in relation to ‘the other who is the same’….”.
Zizek
Slavoj: 1991.
இவர்களுக்கு வெறும் அடையாளம் உள்ளது. தேவை எதுவென்றால் நேருவிற்கிணையான
அடையாளம் அது. லட்சியத் தன்னிலை (ideal subject ) வேண்டும்;அதுதான் படேல்; அது B.J.P தலைமைத் தன்னிலையைத் தவிர வேறு
ஒன்றுமில்லை,
மேற்கூறிய ஆய்வுக்கு மிக நெருக்கமாக
உள்ளது மோடியின் கூ,ற்று
"படேல் மதச்சார்பற்றவர்தான்,
ஆனால் சோமநாதர் கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச்சார்பின்மை
குறுக்கிடவில்லை, அவர் கடைப்பிடித்த
மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை, ஒன்றிணைத்து வலுப்படுத்தியது.”
அதாவது B.J.P-யின்
ஆசையான அகண்ட பாரதமும், இராமர் கோவில் புனரமைப்பு ஆசையுடன் படேலிடம் (குறிப்பிட்ட
விசயத்தில்) ஒத்த தன்மை காணப்படுவதால் லட்சிய அகனாக ஏற்கப்பட்டுள்ளார் எனத்
தெரிகிறது.
படேலின் சிறப்பான தன்மைக்கு சில
எடுத்துக்காட்டுகள்: லட்சத்தீவுக்கும்
படேலுக்கும் உறவு உள்ளது,
லட்சத்தீவுகள்
இத்தீவுகள் இந்திய நிலப்பரப்பிலிருந்து
பல மைல்கள் அப்பால் உள்ளவை. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த இத்தீவுகள் சென்னை ராஜதானியின்
ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, இந்தியா சுதந்திரம் அடைந்தது
பற்றி இங்கு வசித்துவந்த மக்களுக்கு 1947 ஆகஸ்ட் 15க்கு பிறகு சில நாட்கள் சென்ற
பிறகுதான் தெரியவந்தது. இந்தியா
சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய சுதந்திரச் சட்டம் 1947-ன்படி இத்தீவுகள் இந்திய
யூனியனுக்கு உட்பட்டதாக மாறியது. இங்கு
வசித்து வந்த மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் இத்தீவுகள் மீது
பாகிஸ்தானும் உரிமை கோருவதற்கான சாத்தியங்கள் இருந்தது. அதனால் இந்தியாவின் கடற்படை இத்தீவுகளுக்குச்
சென்று அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றி அவை இந்தியாவுடன் இணைந்துவிட்ட பகுதி
என்பதை உறுதி செய்தது. இதற்குச் சில
மணிநேரங்கள் கழித்து அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படை நிலைமையைப் புரிந்து கொண்டு
கராச்சிக்குத் திரும்பின.
நாடு பிரிவினையாகும்போது 1.5 கோடி
மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்,
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். இந்நிலையில் இந்து முஸ்லிம் கலவரம் வெடித்தது, அப்போது டெல்லி, பஞ்சாப் போலீஸ்
பிரிவினரின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. பஞ்சாப், டெல்லி போலீசாரே முஸ்லிம்கள்
மீது தாக்குதல் தொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைப்புரிந்த பட்டேல்
இப்பகுதிகளுக்குத் தென்னிந்திய ராணுவப் படைப்பிரிவை அனுப்பி அமைதியை நிலைநாட்டினார்.
சரியான நபரைத் தேர்வு செய்யுமாறு காந்தி மாகாணப் பிரதிநிதிகளைக்
கேட்டுக் கொண்டார். 16 மாகாணப் பிரதிநிதிகளில் 13பேர் படேலை முன்மொழிந்தனர், ஆனால் இந்தியாவின் முதல் பிரதமராக படேல் இருக்க
வேண்டாம் என்ற காந்தியின் வேண்டுகோளிற்கு படேல் மதிப்பளித்து ஏற்றுக் கொண்டார்.
16 மாகாணப் பிரதிநிதிகளில் 13 பேர் படேல் தலைவராக முன்மொழிந்தனர்.
காந்தி படேலை மறுத்துவிட்டார். அதைப் படேல் ஏற்றுக்கொண்டு நேருவுக்கு
வழிவிட்டிருக்கிறார் தலைமைக்குக் கட்டுப்பட்டு.
நவீன காலத்தில் அத்வானிக்கும் மோடிக்கும் தலைமைபற்றிய பிணக்கில்
என்னவிதமான போக்கை இவர்கள் கடைப்பிடித்தார்கள்? வரலாற்றைப் பார்க்கவும்.
படேலின் இருப்பைக்கூட நேருவின் குலப்பெருமை இல்லாமல் ஆக்கிவிட்டது.
இப்போது மோடி,அத்வானியின் ஆசையானது நேருவின் இருப்பை இல்லாமல் செய்ய
முயற்சிக்கிறது. இது நாணயத்தின் அடுத்த பக்கம் அவ்வளவே.
காந்தியின் பேரன் ராஜ்மோகன் கூறியது:
....”குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தனது
கொள்கைரீதியான வாரிசாக நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல்
அங்கீகரிக்க மறுத்திருப்பார்”....
"....2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல்
பார்த்திருந்தால், ராஜநீதியை மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர்மீது
அதிருப்தி அடைந்திருப்பார். குஜராத்தைச் சேர்ந்த படேல், கலவரத்தைத் தடுக்க மோடி
அரசு தவறிவிட்டது குறித்தும், துயரச் சம்பவத்தைக் கண்டும் மிகவும் வருந்தியிருப்பார்"…
..."ஒரு காங்கிரஸ்காரனாக இருப்பதில் படேல் மிகவும் பெருமை கொண்டிருந்தார்.1947-ம்
ஆண்டுவரை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பணிகளைப் பாராட்டிவந்த படேல் காந்தி படுகொலைக்குப்பின்
இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார்”...
- தி இந்து நவம்.5-2013
-க.செ
No comments:
Post a Comment