19 Jan 2014

நித்ய உபவாசியும் நித்ய பிரம்மச்சாரியும்


நீங்கள் வாசிக்கப் போகும் தொன்மம் அனேகமாக எல்லோரும் வாசித்த / கேட்ட கதையாகத்தான் இருக்கும்.  இக்கதை மற்றமையின் சிறப்பாசிரியரால் கட்டுடைப்புக்காக அனுப்பப்பட்டது. 
 இனி கதை.......        

நித்ய பிரம்மச்சாரி.....!
ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள்.  மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது.  அன்று ரோகிணி நட்சத்திர தினம்.  பிருந்தாவனம் கோலாகலமாக இருந்தது.  கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவுப் பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகரைக்குச் செல்ல முயன்றனர்.
யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படிச் சந்திப்போம் என குழப்பமானார்கள்.
யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார்.  அவர்களிடம் கோபியர்கள் சென்று ரிஷிகளின் ரிஷியே!  இன்று கிருஷ்ணனின் அவதார தினம்.  அவனைச் சந்திக்க வேண்டும்.  ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றைக் கடக்க முடியுமா எனத் தெரியவில்லை.  நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும் என்றார்கள்.
கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்குக் கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்என்றார் வியாச மஹரிஷி.
கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார்.  கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனைப் பிறந்த நாள் அன்றே சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.
அனைத்துக் கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி.  பிறகு கூறினார், கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள்.  யமுனை வழிவிடும், நீங்கள் கூற வேண்டியது இது தான்,  வியாசர் நித்ய உபவாசி.
கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.  உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன்.  இவரோ அனைத்து கூடையையும் காலி செய்துவிட்டார்.  மேலும் நித்ய உபவாசி என்கிறார் என்றும், உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா எனச் சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்,
யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.
யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.
மறுகரைக்குச் சென்று கிருஷ்ணனைச் சந்தித்தனர்.  கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.

எங்களைக் காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூறச் சொன்னார்.  யமுனை வழிவிட்டது.  நாங்கள் மீண்டும் அதே விஷயத்தைக் கூறி யமுனையைக் கடக்கலாம் என நினைக்கிறோம்.  நீ அருள் தர வேண்டும் எனக் கிருஷ்ணனிடம் கேட்டனர்.
மாயப் புன்னகையுடன் கிருஷ்ணன், பக்தியில்l சிறந்த கோபிகைகளே யமுனையைக் கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள்.  கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரிஎன்றார்.  கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரிகூறினார்கள்.  யமுனை வழிவிட்டது.
புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.
மஹரிஷியே இது என்ன முரண்பாடு நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள்.  சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே?  இது என்ன மாய வேலையா?
கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாகக் கருதுகிறேன் இறைவனே என் உணவை உண்கிறார்.  அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.
கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளைச் செய்கிறான்.  அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை.  ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான்.  அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”.
ஆய்விற்கான ஆய்வுப் பொருளாக முதலில், யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படிச் சந்திப்போம் எனக் குழப்பமானார்கள் கோபியர்.
இப்போது கோபியரின் ஆசை காயடிக்கப்பட்டுவிட்டது  யமுனையின் திடீர் வெள்ளத்தால்.  விளைவு கோபியர்களின் மனச்சோர்வு (frustration )  இதன் விளைவு குழப்பம், பயம்; பின்பு ஆசை அதாவது ( desire of object seeking ) கிருஷ்ணனைப் பார்க்கும் ஆசையால் வியாசமுனிவரிடம் சரணடைகிறார்கள்.
மேலும், கிருஷ்ணனுக்கான உணவை முனிவரிடம் படைத்துவிடுகிறார்கள்.  இத்தோடு தாங்கள் கொடுத்த உணவை தங்கள் முன்னேயே உண்டுவிட்டு வியாசர் நித்ய உபவாசி என்று யமுனையிடம் சொல்லுங்கள் என்கிறார்.  இது உண்மையல்ல என்பது தெரியும் அவர்களுக்கு.
தங்களின் ஆசைப் பொருளான கிருஷ்ணனை அடையும் ஆசையால் அந்த உண்மையற்ற கூற்றையும் கூறத்தயங்கவில்லை கோபியர்.
யமுனை கோபியருக்கு வழிவிட்டது.  ( மேற்கத்திய வேதாகமத்தில் மோசேவுக்கு கடல் வழி விட்டிருக்கிறது.)
ராசலீலை முடிவடைந்து கோபியர் திரும்பிச் செல்ல யமுனைக்கான விதைச் சொல்லாக மாயக் கண்ணன் கூறியது கிருஷ்ணன் நித்ய பிரமச்சாரிஎன்பது தான்.
கோபியர்களுக்கு யமுனைக்கரையில் நின்று கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி என்று கூறியவுடன் அச்சொல்லின் ஒலியானது யமுனையின் நீரோட்டத்தை நிறுத்திவிட்டது.  யமுனை சில நிமிடங்கள் இயக்கமற்று நின்றுவிட்டது.  கோபியர்கள் தாங்கள் வசிக்கும் கரைப்பக்கம் சென்றுவிட்டனர்.
அக்கரையில் இருந்த மகரிஷியிடம் நித்ய உபவாசி”, நித்ய பிரம்மச்சாரிக்கு என்ற உண்மையற்ற கூற்றுக்களை கேள்விக்குள்ளாக்கினர்.
மகரிஷி விளக்கம் அளித்துவிட்டார்.  அதாவது நித்தம் உணவருந்துகிறார் அது (Need ).  ஆனால் அதில் ருசி அறியும் செயலும், நோக்கமும் இல்லை.  (ருசியும் பசியும் கடந்து விட்டார்,  சுவாசமே உணவுதான் போலும்)  அத்துடன் உண்ணும் உணவை மனத்தில் கண்ணனுக்கு அர்ப்பணிப்பு செய்து விடுவதால் எந்த மகிழ்வும் அடைவதில்லை.  ஆதலால் உணவு உண்பது கிருஷ்ணன் ஆகிறது எனலாம்.
ருசி அறியாமலும், உண்ணும் உணவு கண்ணனுக்கே என உண்பதால், சாப்பிட்ட பொருளிலிருந்து அவர் உடல் எந்த ஆதாயத்தையும் (நிறைவு, மகிழ்வு) பெறவில்லை;  ஆகவே நான் நித்ய உபவாசி என்கிறார் அதை என வாசிக்கலாம்.
இனி நித்ய பிரம்மச்சாரி என்ற குறிப்பான் ஒரு வியப்பை அளிக்கிறது.  கிருஷ்ணனுடன் பங்கேற்பவர்களாக ராசலீலைகளைஆடியவர்களிடமே இறைவன் தான் நித்ய பிரம்மசாரிஎன்கிறான்.
என்ன கூறுகிறான் கண்ணன்?  நமது நனவிலி உடனடியாக இதை மறுக்கும், எதிர்க்கும்.  ஏனென்றால் நம்மின் புலனறிவு தட்டையான தளத்தில் இயங்கியவற்றின் அனுபவத் தொகுப்பில் இருந்தே அனைத்தையும் உண்மை / பொய் என எதிர்மறையாக (நல்லது  /கெட்டது) அறிகிறது.  அனுபவ அறிவையே தூக்கிப் பிடிக்கிறது.
ரிஷியின் கூற்றும், கண்ணனின் கூற்றும் கணினியின் Vertical Space-ல்   [ கிடைவெளி (நெட்) ] தெரியும் 3 D  படமாக இருக்கிறது.  ஆகவே தட்டையான அனுபவத்தை அளவு கோலா அதைக் கொள்ளமுடியாது.
அதாவது கிருஷ்ணன் பெண்களுடன் ஆட்டமாடுவதும், பாட்டுப்பாடுவதும் உண்மை.  ஆனால் அச்செயல்கள் அவனின் பால் தேவை [ (act ),   erotic ]  பால் இன்பத்திலிருந்து (sexuality ) நடைபெறவில்லை.  மாறாக பக்தியில் சிறந்த கோபிகளேஎனக் கூறும் குறிப்பான்; அவர்களை sex object ஆகப் பார்க்கவில்லை கிருஷ்ணன்; ஆடியதும் பாடியதும் உடலசைவின் நோக்கம் பாலியல் இன்பமற்று இருப்பதையே மகரிஷி ஞானநிலைஎன்கிறார் என்று தோன்றுகிறது.
கூடுதலாக அவர்கள் இருவரும் எந்த இன்பமும் அடையவில்லையா என்று மனத்தில் கேள்வி எழுந்தால்?  ஆம்.  உண்மைதான்.  ஆனால் mechanism -த்தின் செல்வாக்கால் கிடைக்கும் இன்பத்திற்கானதில்லை.  அது.
மாறாக, அது காமம் கடந்த, கடமை செய்யும் செயலில் கிடைக்கும் திருப்தி, சுசான்ஸ் (jouissance  ) ஒரு வேளை இருக்கலாம்.  கோபியரிடம்  தன்னை (subjectivity-யை) வெளிப்படுத்துவது கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி என்பது.
அதாவது கோபியரே உங்களுடன் இணைந்து விளையாடியது என் உடலல்ல, அது பெற்ற இன்பமும் உடலின்பமல்ல.  ஏனென்றால் நான் நித்ய பிரம்மசாரி.  அதாவது உடலின்பம் கடந்த உடலுடன்தான் நீங்கள் ஆடினீர்கள்.  அதுவும் பக்தியில் சிறந்த என் கோபியர்களுடன் நான் ஆடினேன் எனலாம்.
மீராவை என்ன சொல்லி அழைப்பது?  பக்தியில் அது ஒரு மனநிலை, சித்தநிலை; அவளை நவீன கோபி எனலாம்.  எல்லா உந்தல்கள், மமஹாரத்தையும், அகங்காரத்தையும் கடந்த (transcend  ) நிலை எனலாம்.  (மனம் நிறைய கேலி கிண்டல் பண்ணும் பண்ணட்டும்).
                                                                     க.செ

No comments:

Post a Comment