"பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படும்"
-பிரதமர் நவாஸ்
ஷெரீப்- BBC தமிழ்-17-12-2014
இந்த ஒப்புதலை வெளிக் கொணர்ந்தவர்கள்
நீங்களும், உங்களால் (பாகிஸ்தான் தாலிபன்கள்) கொல்லப்பட்ட சிறார்களும்தான். ……………ஒப்புக் கொள்கிறோம்.
நீங்கள் நிகழ்கால வரலாற்றை ( symbolic order ) எழுதியுள்ளீர்கள்.
நீங்கள் எழுதியதை இப்படி வாசிக்கலாமா ?
(1) மெஷின்கன் சப்தத்தை மந்திரஒலியாய்
மாற்றி உங்கள் மனத்துயரைப் போக்கிக் கொண்டீர்கள். ……………………………………………ஒப்புக்கொள்கிறோம்.
(2) பள்ளி மாணவர்கள் 132 பேரையும்,
பணிசெய்பவர்கள் 9 ஊழியர்களையும் கொன்று ஒழித்தீர்கள். ………………………………………………………… ஒப்புக்கொள்கிறோம்
(3)
சில மணிநேரம் பீதியில் (terror) உலகை உறையச்
செய்தீர்கள்....................................................................................... ஒப்புக் கொள்கிறோம்.
(4) ஊடகங்களுக்கு ( media) நேர்அலைக்கு காட்சிப் பொருள் கொடுத்தீர்கள். ............................................................................ஒப்புக்
கொள்கிறோம்.
இப்படிச் சிறார்களைக் கொன்றதற்குக்
காரணம் ,
” ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக
இம்மாதிரி ஒரு தாக்குதலை நடத்தும் நிலைக்குத் தாங்கள் (ஆப்கன் தாலிபன்கள்) தள்ளப்பட்டதாக
வரலாற்றில் பதிவு செய்கிறீர்கள் ”.-BBC தமிழ்
அதாவது, ’ சிறார் கொலைக்கான ’ காரணங்களைப் பதிவு
செய்கிறீர்கள்…அப்படித்தானே!
இதை
எப்படி ஒப்புக் கொள்வது ? ’ பழிக்குப்பழி ’. அங்கு பயங்கரவாதத்தைப் பதிவு செய்தவர்கள் பாகிஸ்தானின் இராணுவம், அத்துடன்
பாகிஸ்தான் அரசும், உண்மைதான். அது பெரிய அளவில் செய்தி ஆக்கப்படவில்லை என்பதும் உண்மைதான். அரசு பயங்கரவாதத்தை ஊடகங்கள் எப்போதும்
மலையத்தனை இருந்தால் கடுகத்தனை ஆக்குவதும் வழமைதான்.
ஆனால், தொந்தளிப்பு வசப்பட்ட உங்கள்
அறிவு இராணுவத்துக்குப் பதில், சிறார்களை அழித்தொழிப்புச் செய்து
குறியீடாக்கியிருக்கிறீர்கள் (symbolic order) ..................…………………………………………………ஒப்புக்கொள்கிறீர்களா?
இல்லையா?
உங்களின் சமகால குறியீட்டு பதிவானது (symbolic order) உங்கள் மக்களுக்கு ஏதாவது சௌகரியத்தைக்
கொடுக்குமா ? அல்லது அசௌகரியத்திற்கு வித்தை விதைத்திருக்கிறீர்களா ?
இதற்கான பதிலை அரசு பயங்கரவாதம் இப்படிக்
கூறியிருக்கிறது.
“ இன்று இக்குழந்தைகள் சிந்திய ஒவ்வொரு
துளி ரத்தத்திற்கும் பழி வாங்குவோம் ”.
- நவாஸ்
ஷெரீப் -BBC தமிழ்.
இது அரசின் குறியீட்டு ஒழுங்கு. எந்த ஒளிவுமறைவும் இன்றி ’பழிக்குப் பழி’
’ இரத்தத்திற்கு இரத்தம்’. எந்த நூற்றாண்டுச்
சொல்லாடல் இது. இன்று இது நவீனச் சொல்லாடலாகிறது.
இதற்கு நீங்களும் ஒரு காரணம் தானே..................................................................................ஒப்புக்
கொள்கிறீர்களா ? இல்லையா ?
பயங்கரவாதத்திற்கு
எதிராக பயங்கரவாதம் தான் பதிலா? இது எந்தவகை ஜனநாயகமோ ?
இனியும்.....
அரசு பயங்கரவாதத்திற்கும், குழுக்களின் பயங்கரவாதத்திற்கும்;
மக்கள் அளிக்கும் ஒப்புதல், சம்மதம், பணஉதவி, அறிவு உதவி போன்றவைகள் ஒருபோதும்
சொர்க்கவாசலுக்கான பாதையாக இருக்கப் போவதில்லை . மாறாக, தீவிரவாதத்திற்கு எரிசக்தி
வழங்குவதாகும்.
ஒருக்கால் , குழுக்களுக்குள்
இருக்கும் அதிகாரப் போட்டிக்கு ( phallic power ) ’சிறார் அழித்தொழிப்பு’ உதவியிருக்கலாம் ; அல்லது உங்களது
சுயநலநோய்க்கான மனச்சாந்திக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டதாய் இருக்கலாம்.
இந்தச் சிறார் அழித்தொழிப்பு உங்களை, பிற குழுக்களும் ,
அனுதாபிகளும் உங்களை எப்படிப் பார்க்க வேண்டும், பார்க்கப்படவேண்டும் என்ற லட்சிய
வேட்கை ( ideal ego )
உந்தலால், உங்கள் பிம்பத்தை மீட்டுருவாக்கும் செயலாகக் கூட
இது இருந்திருப்பதற்கான வாய்ப்பாகவும் உள்ளது.
..............................................................................ஒப்புக்
கொள்கிறீர்களா
? இல்லையா ?
நிச்சயம் உங்கள் மக்களுக்கான நல்வாழ்வுக்கு இந்த அழித்தொழிப்பு ( பயங்கரவாதச் செயல்) உதவி செய்யவில்லை என்பதை ஒப்புக்
கொள்ளத்தான் வேண்டும்....................................................................................................ஒப்புக்
கொள்கிறீர்களா ? இல்லையா ?.