24-10-13 காலையில் ‘ கைபேசி ’ கூப்பிட்டது. கூப்பிட்டது
என் நண்பர் “ என்ன சார் இவ்வளவு காலைல ”.
பதில், “ இந்த ராகுல் காந்திக்கு
என்னாச்சு? என்னென்னவோ பேசறார். தி இந்து பாருங்கள், உளவியலா அவருக்கு என்னவோ
ஆயிப்போச்சு பாருங்க ” சரி.
அப்புறம் பேசலாமென்று முடித்துவிட்டேன்.
பின்னர்
ராகுலின் மேற்படி பேச்சைத் தேடினேன்.
24-10-13
தி இந்து நாளிதழில்,
ராஜஸ்தான்
மாநிலம் சுரு பகுதியில் சீக்கியர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் ராகுல் காந்தி
புதன்கிழமை பேசியது,
“மத வெறியைப் பரப்பி வரும் பாஜகவின் வெறுப்பு கக்கும்
அரசியல் பேச்சுகளால் நாட்டின் ஒற்றுமைக்கே பாதிப்பு ஏற்படுகிறது. எனது தந்தை ராஜீவ் காந்தி, எனது பாட்டி இந்திரா
காந்தி ஆகியோர் கொல்லப்பட்டது போல நானும் கொலை செய்யப்பட்டு விடுவேனோ என்கிற பயம்
வருகிறது.
[ உத்தரப்பிரதேசத்தில் வகுப்பு கலவரம் மூண்ட
முஸாபர்நகர் மாவட்டத்துக்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற அண்மையில்
நான் சென்றேன். இந்துக்களையும்
முஸ்லீம்களையும் சந்தித்தேன். ]
அவர்கள்
விவரித்த வார்த்தைகளில் எனது குடும்பக் கதையைத்தான் பார்க்க முடிகிறது. பாஜகவினரின் அரசியலை வெறுக்கிறேன்...... ”
24-10-13
தினமணி நாளிதழில்
தி
இந்துவில் வெளியான செய்தியும், தினமணியில் வெளியான செய்தியும் ஒன்றுதான். இது தேர்தல் பிரச்சாரக் காலம். காங்கிரசுக்கு முற்றிலும் எதிரியாக நின்று
அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் மோடி இந்தியாவின் Mass media-க்களுக்கு
கிட்டத்தட்ட தினமும் காத்திரமான தீனிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
காங்கிரசின்
உட்கட்சி பூசல்கள் போதாது என்று ராகுலின் இப்படிப்பட்ட பேச்சு ஒரு மாதிரியாக
தெரிகிறது.
ஏன்
இப்படிப் பேசுகிறார்.?
இது castration fear* ?
அப்படியென்றால் பாஜக-வைக் கண்டு அவ்வளவு பயப்படுகிறாரா
என்று கேட்கத்தோன்றுகிறது.
*“the displacement of the signifier
determines the subjects in their acts, in their destiny, in their refusals, in their
blindness, in their end and in their fate, lead willingly or not, everything
that might me considered the stuff of psychology, kit and caboodle, will follow
the path of the signifier.(Lacan)”
இப்படிக்
கூறியது தன்னைத் தியாக பரம்பரையில் இருந்து வந்தவன் என்று சொல்வதற்காகவா ?அப்படி இருந்தால்
அவருடைய ஜனனத்தின் முதல் நபர்களான ஜவஹர்லால் நேரு, அவர் தந்தை மோதிலால் நேரு
இவர்கள் விடுபட்டது ஏன் ?
விடுபட்ட
அவரின் முன்னோர்களுக்கும், அவர் வெளிப்படுத்தின முன்னோர்களுக்கும் இடையில் ஒரு
சின்ன வித்தியாசமிருக்கிறது. அவர்
வெளிப்படுத்திய இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி இருவரும் கொல்லப்பட்டார்கள். ஆக, இங்கு தன்னை மோதிலால் நேரு பரம்பரை என்ற
அடையாளத்தைவிட கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது
ஏன் ?
ராகுல்காந்தி
அரசியலைப் பின்னோக்கி நகர்த்துகிறார் ( regression ). அதாவது, இப்போது நடப்பது “ வெறுப்பு
அரசியல்
“ என்று சித்தரிக்க
முயற்சிக்கிறார். எப்படி?
இந்திரா
காந்தி கொல்லப்பட்டார். எதனால்? (இந்திய
ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்து பிந்தரன்வாலே-யைச் சுட்டுக் கொன்றது)
அதற்குப் பழிவாங்கலாக இந்திராகாந்தி
கொல்லப்பட்டார்.
அதாவது, சீக்கியர் வெறுப்பாகப்
பார்க்கப்பட்டது.
ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார். எதனால்?
இந்திய அமைதிப்படை (IPKF) யாழ்ப்பாணத்தில் ஈடுபட்ட செயல்களால்.
அதாவது LTTE -ன் வெறுப்பினால் ராஜிவ் கொல்லப்பட்டு அதன்
வழக்கும் முடிவு பெற்றுவிட்டது.
இப்படியான கடந்த கால வெறுப்பு அரசியல் தன்னுடைய
தந்தை, பாட்டியைக் கொன்றிருக்கிறது.
“ மத வெறியைப்
பரப்பி வரும் பாஜக.வின் வெறுப்பு ” (ராகுல்)
வெறுப்பு அரசியல்
தன்னையும்
கொல்லும்
என்ற
அரசியல்
காயடிப்பு அச்சத்தை ( Castration Fear–ஐ) வோட்டளிப்பவர்கள் முன்னிலையில்
முன்வைக்கிறார். தானும் கொல்லப்படலாம்
என்பதின் மூலம் வெறுப்பு அரசியலின் பலிகடாக்கள், தியாகப் பரம்பரை என்று தன்னைக்
குறியீட்டாக்கம் பண்ணுகிறார் (symbolize);
அடையாளப்படுத்துகிறார். இப்போது குறியீட்டாக்கம் பற்றி ( symbolization ) மன அலசல் கூறுவதைப் பார்க்கலாம் :
” குறியீட்டாக்கம் ( symbolization ) என்பது நடைமுறை வழக்கு (convention ) அல்லது ஒத்த தன்மையின் ( similarity ) அடிப்படையில் ஒரு thing -ஐ ( விசயம்/பொருள்/நபர்......) மற்றொன்றிற்கானதாக முன்னிறுத்துகிற
(stand for), சுட்டிக்காட்டுகின்ற (refer to), குறிப்பிடுகின்ற ( signify ) அல்லது பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு செயல்பாடாகும். இதன்படி நினைவுப் பிம்பங்களை ( memory images ) தனியன்கள், பொதுப் பண்புகளைக் கொண்ட மக்கள்
அல்லது பொருட்களின் தொகுதி ( species ) மேலும் things (பொருட்கள்) அல்லது நிகழ்வுகளின்
பொதுவான குணங்களுக்கானதாக முன்னிறுத்த முடியும் (stand for) வெளிப்படையான வித்தியாசத்தை அறிந்து
கொண்டுள்ள போதிலும் வெளிப்படையான ஒத்த தன்மையை பயன்படுத்திக் கொண்டும் ( exploiting ) அதனைப் பிரதிநிதியாக ஆக்கிக் கொள்வதின்
மூலமும் இது நடைபெறுகிறது” - Charless
Hanly ( -int.J.Psy. Anal. 2011)
ராகுல்காந்தி தன்னை ஒப்புநோக்குகிற கொல்லப்பட்டவர்களுக்கும்,
அவருக்கும் வெளிப்படையான வித்தியாசம் உள்ளது.
இந்திராகாந்தி பதவியில் இருக்கும்பொழுது தன் காப்பாளர்களாலேயே
கொல்லப்பட்டார்.
ராஜீவ் பதவியில் இல்லாதபோது கொல்லப்பட்டார்.
ராகுல் .......? எதிர்காலம்
இனிமேல்தான் தெரியும்.
யதார்த்தம் இப்படியிருக்க ராகுல் ஏன் “ வெறுப்பு அரசியல் ” என்ற குறிப்பானையும், இந்திராகாந்தி,
ராஜீவ்காந்தி போன்ற Paternal அதிகாரத்தை ஏன் பொதுவெளியில் ( Other ) மிதக்க விடுகிறார்?
ஆசையின் அரசியல்
ஏனெனில் அவரின் சுசான்ஸ் ( jouissance ) பறிக்கப்பட்டுவிட்டது. BJP, குறிப்பாக மோடியின் சரவெடி அரசியல் அவரின் திருப்தியை, மகிழ்ச்சியை (jouissance) பறித்து விட்டிருக்கிறது.
"இம்மாதிரி (affect) பாதிக்கப்பட்டு மகிழ்வு
கேள்விக்குறியாகும் பொழுது fantasy அதாவது
symptom of fantasy
வெளிப்படும் ”
-லெக்கான்.
அப்படிக் கற்பனையில் வெடித்துக் கிளம்பியதுதான் ” வெறுப்பு
அரசியல் ” என்ற குறிப்பான். எதிர்க்கட்சிகளின் சரவெடிப் பேச்சு, திட்டம்,
தீர்மானம், அரசியல் பொருளாதாரம் போன்றவைகளை அடிப்படையாய்க் கொண்டிராமல், மதம்,
கலாச்சாரம், வாழ்ந்த தலைவர்களில் யார் ” தீரர் ” என்ற
மாதிரியான தடாலடிப்பேச்சு ராகுலைத் துன்புறுத்திவிட்டது போலும். அந்தத் துன்புறுத்தலை, அவரின் சுயமோகம்
வெளியில், மொழியில் சொல்லமுடியாதது ( real )
ஆயிற்று. ஆகவே இந்த fantasy
வருகிறது. இந்தச் சூழலில் fantasy ( புனைவு ) வருவது என்பது நோய்க்
குறியீடாக ( symptom ) ( சொல்ல முடியாத மன வெறுப்பினால் ) மனஅலசல்
பார்க்கும். அப்படித்தான் ராகுல் கதையும்
உள்ளது.
ராகுலின் நனவிலி ஆசையை கேள்விக் குறியாக்கும் (காயடிப்பு) தடாலடி அரசியலை அவர் கேள்விக்குட்படுத்தாமல், அதை அரசியல் சொல்லாடலாக மாற்றாமல் பின்னோக்கிய தந்தை அதிகாரத்துடன் ( Name of – the - Father ) தன்னை அடையாளப்படுத்தி fantasy - imaginary -யிலேயே அவர் தன்னைக் கொன்றுவிட்டார்?
ராகுலின் பின்னோக்கிய (Regression) பயணத்தில் மற்றொரு புண்ணியமும் அவருக்குண்டு.
அது அவரின் பின்னோக்கு வெறுப்பு அரசியலின் பலிகடாக்களான இந்திரா,
ராஜீவின் கொலைகள் தியாகமாக, பெரியவீட்டு இழவாக இந்திய சமூக மனத்தின் நனவிலியாக
உள்ளது.
இந்தப் “ பரம்பரா “ நன்றி, விசுவாசம் போன்றதற்கு ஊற்றுக்கண்ணாகிறது.
இதை மாஸ்டர் சொல்லாடல் ( Master discourse ) என்பார்
லெக்கான். அதாவது,
”கடந்த காலத்திய அனுபவங்களை நினைவூட்டுகிற விதத்தில் ( retrospectively) குறிப்பான்களை மற்றமையுடன்(Other) இணைக்கின்ற
செயல்பாட்டில் மாஸ்டர் குறிப்பான்கள் (Master signifiers)
முக்கியத்துவமுடையதாக உள்ளன. உதாரணத்திற்கு இன்றைய ஐக்கிய நாடுகளில் (United states) ” சுதந்திரம் ” போன்ற
வார்த்தைகளும் அல்லது முன்னாள் சோவியத் நாடுகளில் ”புரட்சி” என்ற குறிப்பான்கள் மாஸ்டர் குறிப்பான்கள்
ஆகும். இவைகள் ஒரு கலாச்சாரத்தில் உள்ள குறிப்பான்களின் வகைமாதிரிகளாகும். இவற்றின் அர்த்தங்களை மக்கள்
அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர் (Take
it for granted ).
ஏனெனில் சமூக விதிகளின் ஆற்றலை இக்குறிப்பான்கள் தமக்குள் கொண்டுள்ளதால்
மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர்”
-மேத்யூ
சார்ப் ( Understanding
psychoanalysis, )
இந்தியாவிலும் நேரு பரம்பரை என்பது Master Discourse(மாஸ்டர் சொல்லாடல்)
ஆகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது.
அதை அழிக்குமுகமாகத்தான் “ பட்டேலின் ” திடீரென்று உயர்த்தப்பட்ட ” இரும்பு ” மனிதருக்கு உலோகத்தினால் சிலை, நேருவைவிட
வீரமானவர் (காஷ்மீர் இணைந்ததற்கு) பட்டேல் என்ற சொல்லாடலை பொதுவெளிக்கு அனுப்பும்
அத்வானி; நேரு பரம்பரையின் (மாஸ்டர் சொல்லாடலின்)
மக்களின் செல்வாக்குக்கு முடிவுகட்டும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
முடிவாக ராகுலின் ” வெறுப்பு அரசியல் கொலை ” என்பது ஒரு
Fantasy ( புனைவு ).
அதிகார ஆசைக்குத் தடை/சிக்கல் வரும் என்ற எண்ணம் பதட்டத்தைத்
தோற்றுவித்துவிட்டது.
மற்றபடி ராகுல் எப்போதும் போல்தான்
இருக்கிறார்.
இந்த Anxiety-ல் (பதட்டத்தில்) சிக்காமல்
இருந்திருக்க வேண்டுமானால், முதலில் அவர் யதார்த்தத்திற்கு முகம் கொடுக்கும்
தைரியம் வேண்டும். எதிர்க் கட்சிகளின்
மிரட்டல் அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.
தானே ( ராகுலே ) மாஸ்டர் சொல்லாடலின் விளைபொருள்தான் என்பதை
உணர்ந்து, தன் சொந்த அரசியல் காய்களை நகர்த்தி
வந்திருக்க வேண்டும்.
இனியும் நேரு பரம்பரா என்பது ஒரு Sinthome
(
கேள்விக்கிடமில்லாமல், விளக்கத்திற்கு
வெளியே இருந்துவிட முடியாது )
ஆகமுடியாது. அதாவது,
“ The Sinthome thus designates a signifying
formulation beyond analysis, a kernel of enjoyment immune to the efficacy of
symbolic ” . -
லெக்கான்
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கத்தானே
செய்யும். ராகுல் தன் அரசியல் தகுதியை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். எதிர்க்கட்சிகளை காத்திரமாக எதிர்கொள்ள
முயற்சிக்க வேண்டும். சுய முயற்சி, சுய பயிற்சி விடுதலைப்
பாதையைக் காட்டும். பதட்டத்திலிருந்தும்
நிரந்தர விடுதலை கிடைக்கும்.
Sinthome - ஐ லெக்கான் வேறுமாதிரி கூடச் சொல்லுகிறார்.
Sinthome = Symptom + Fantasme. -
Project Muse. ( Vol. 36.
2/7/2010. )
ராகுலின் சிந்தோம் என்பது ,
” மகிழ்வைக் குறிப்பான விதத்தில் கட்டமைத்துக்
கொடுத்து ஒருவரை உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது ” என்றாகிறது.
அப்படியானால் ராகுலை Sinthome -ல் வைத்திருப்பது எது ?
Master Signifier, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியின் “உயிர்த்தியாகம்” (கொலை
செய்யப்பட்டது).
(அதன் நீடிப்பாக ராகுல் தன்னை
அடையாளப்படுத்துவது நோய்க்குறியாகும்).
- க.செ.
மற்றமை 5வது இதழுக்காக.
Master signifier. Master discourse. UN's freedom, 'war against terrorism', in Indian context 'nationalism' (with Pak in the background). Rajiv, Indira's 'sacrifice'. How they become Sinthomes are beautifully explained. All these terms are good learning for me.
ReplyDeleteNow Modi 'the strong leader' is being created as a new master signifier through media. The only destabilizing argument against this 'strong leader' is the 'gujarath riots' symbolization. Are there any other arguments possible against 'strong leader' ?. Thanks sir.