11 Feb 2012

ஐ.ஐ.டி யின் காப்புரிமைகளும்.. தற்கொலைகளும்.



இப்போது ! 
..டி-யின் துறைத்தலைவர், Dr. M. கோவர்தன்.
நீங்கள் ஏன் ..டி சென்னை குறித்து எப்போதும் எதிர்மறையான செய்திகளையே வெளியிடுகிறீர்கள். இப்பல்கலைக் கழகத்தில் அதிகமான patent-கள் (காப்புரிமை பெற்ற மாதிரிகள்) உள்ளன. அதுபற்றி செய்தி எதுவும் வெளியிடுவதில்லையே ஏன்?
5000 மாணவர்களில் 3 பேர் இறந்து விட்டால் அதுபற்றி செய்தி வெளியிட விரும்புகிறீர்களே. ஏன்?
புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ”
இந்த மனப்பதட்டம் (anxiety) சுயமோகம், நோய்க்கூறு வகைப்பட்ட சுயமோக அதிர்வுக்குக் காரணம், சென்னை ..டி-யில் M.Tech மாணவர் நிதின்குமார் ரெட்டி தற்கொலை பற்றி (தற்கொலை செய்து கொண்ட நாள் 4-5-2011) செய்திகளை வெளியிட்டதுதான். அந்த ஊடகங்களை நோக்கித்தான் பல்கலைக் கழக துறைத்தலைவர் மேற்கூறிய மொழிதலைச் செய்தார்.

அதிக காப்புரிமையும் 3 பேர் தற்கொலையும் என்பது... புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. கணக்குத் தெரியாத இந்தத் தன்னிலைக்குக் கூட விளங்க வைத்து விட்டீர்கள். பேராசியரே நன்றி.
ஆனால், உயிர்கள் புள்ளிகளாக, நிகழ்தகவு அடிப்படையில் மாற்றியிருக்கிறீர்களே! எண்களும் உயிர்களும் சமச்சீரற்றதே.

இந்த உங்கள் சமச்சீராக்கம் மனஅலசல் ஆய்வில் ஒரு மனிதனுள் எப்போது நடைபெறும் என்றால் சுயமோகம் (narcissism) தலைவிரிக்கும் கணத்தில் நடைபெறுகிறது நனவிலியாக  (unconscious). 
" The system unconscious selectively treats the converse of any relation as identical to it. It treats logically asymmetrical relations as if they were symmetrical"
…" The process of selectively ignoring certain asymmetrical or difference relations is called symmetrization.” - 'Matte Blanco'.
..." symmetrization suggests a move into greater simplicity. It can thus thought of as a slippage or regression into crudity which can then suggest an evasive or avoidant activity…"
-Unconscious logic, Eric Eayner.
3 உயிர்களை, புள்ளிகளாக மாற்றியதின் மூலம் ஒரு மறுத்தல் (negation) எவ்வளவு எளிதாக நிகழ்கலையாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலையின் ஆளுமை பற்றி அரங்கக் கூட்டம் போட்டு இந்தியாவெங்கும் பேசக் கூடியதுதான் இது.

சுயகொலைக்கு முன் அந்த மாணவர் பட்ட அவஸ்தை, வலி எத்தகையது?  பின் அவரின் உறவினரின் இழப்பு

..டி-ன் காப்புரிமையில் (patent right), இந்த (சுயமோக) சமச்சீரற்றதை, சமச்சீராக்கும் வித்தையை (Technic) சீக்கிரம் காப்புரிமை பெற்று  ..டி-ன் காப்புரிமை புள்ளிக் கணக்கில் ஒன்றைக் கூட்டுங்கள்.

இப்போது, மற்றொரு சமச் சீராக்கத்தை (symmetrization) யும் பார்க்கலாம்.
அது,  அந்த  மூன்று உயிர்கள் பற்றிய ஊடகங்களின் அக்கறை வெளிப்பாட்டை; அதிக காப்புரிமைகளை விட அந்த உயிர்கள் ( மதிப்புக் கூட்டப்படாததால் ) அற்பம் என்று ஊடகங்களால் சொல்லாமல் சொல்லப்பட்டுவிட்டது.

அதிக காப்புரிமைகளின் அடியில் ஒளிந்திருப்பது உங்களின்  Imaginary.  சர்வவல்லமை / ஆண்டவர், (omnipotent narcissism).  அதுதான் உயிர் பற்றிப் பேசும்போது காப்புரிமையைப் பேசி உவகை கொள்கிறது உங்கள் சுயமோகம்.

சமச்சீராக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள Clinical finding  ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. (சற்று மனச்சிதைவுக்கு உள்ளான ஒரு நோயாளியின் கூற்று):
"சிறையில் உள்ள ஜன்னல்களுக்கு கம்பிகள் உள்ளன. எனது அறையில் உள்ள ஜன்னல்களிலும் கம்பி உள்ளது, எனது பைஜாமாவில் கோடுகள் (Stripes) உள்ளன..... சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக நான் என் பைஜாமாவைக் கிழித்தெறியப் போகின்றேன்".

1 comment:

  1. //சிறையில் உள்ள ஜன்னல்களுக்கு கம்பிகள் உள்ளன. எனது அறையில் உள்ள ஜன்னல்களிலும் கம்பி உள்ளது, எனது பைஜாமாவில் கோடுகள் (Stripes) உள்ளன..... சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக நான் என் பைஜாமாவைக் கிழித்தெறியப் போகின்றேன்".

    தொடரும் //
    ஆவலுடன் காத்திருக்கிறேன்
    நன்றி

    ReplyDelete