தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகம் (Chosen Medium)

இணையவெளியில்(internet space) ஒரு குறிப்பிட்ட channel -ஐ தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தேர்வு செய்கின்றனர். இங்கு பல்வேறு வகையான தனித்தும் இணைத்தும் உபயோகப்படுத்தக்கூடிய வழிகள் உள்ளன. ஒவ்வொரு வழியும் ‘தனக்கே’ உரித்தான அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. ‘குறுந்தகவல்களை’ உபயோகப்படுத்துபவர்கள் மொழியின் semantics–ஐ தேர்ந்தெடுப்பவர்களாகவும், ஒருவேளை எழுத்து மொழியின் ஊடாக வரும் linear-ஆன, கட்டுப்பாடான, பகுத்தாராயக் கூடிய மற்றும் சிந்திக்கும் திறனுடைய பரிமாணங்களைக் கொண்ட ‘சுயத்தை’ விரும்பக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
இவர்கள், Cognitive psychology-ல் விவரிக்கப்படும் பிம்பங்கள்/உருவகங்களை உருவாக்குவதன் மூலமாக வெளிப்படும் அடையாளப்படுத்துதல், காட்சியாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த அறிதல்/சிந்தித்தலின் மூலம் ஏற்படும் மகிழ்ச்சியைப் பெறும் மனக்காட்சியாளர்கள் (Visualizers)எனப்படுகிறார்கள். இதற்கு எதிரிணையாக Verbalizers உள்ளனர்.
இன்னும் சிலவகைப்பட்டவர்கள் ஒரே சமயத்தில் நிகழும் பரிமாறல்களை (Chat) அதனால் ஏற்படும் இயல்பான,
தன்னிச்சையான, கட்டுப்பாடற்ற மற்றும் சாதுர்யமான சுவையான பேச்சுக்களையும் மற்றும் அந்தக் கணத்தில் ஏற்படும் ‘சுயத்தை’ விரும்புபவர்களாகவும் உள்ளனர்.

மேலும் சிலர் அசைபோடுவதற்குரிய, தன்னுள் வாங்குவதற்குரிய, அளவான வகையில் வெளிப்படுத்தக்கூடிய, உடனடியாக பரிமாறத் தேவையில்லாத மின்னஞ்சல் (e-mail) மற்றும் வலைத்தள விவாதமேடைகளை (internet forums) தேர்ந்தெடுக்கின்றனர். சிலவகை, Personality-கள் தங்களை அதிகமாக வெளிப்படுத்தவும், குறைவாகப் பெற்றுக்கொள்ளவும் Webcam மற்றும் வலைத்தளங்களையும் உருவாக்குகின்றனர்; தன்னை அதிகமாக வெளிப்படுத்தாமல் மறைவாக இணையதள உலாவலை விரும்பும் சிலரும் உள்ளனர். மேலும் பலர் மிக அதிகமாக உடனடிப் பரிமாறல்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களை, சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

~Translated from an Applied psychoanalytic journal~
No comments:
Post a Comment