15 Feb 2012

வேட்டையாடு ! விளையாடு! ! (உமாமகேஸ்வரி மிஸ்ஸின் மரணம்)

                                                        அன்றொரு நாள் !


“ ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக! ”
- தைத்திரீய உபநிஷதம்.

13.2.2012. இன்று அந்தப் பள்ளி திறக்கும் நாள்.
இன்று ‘உமாமகேஸ்வரி மிஸ்’ மட்டும் பள்ளிக்கு வரமாட்டார்.

இன்று, மேலே கூறிய உபநிஷத கால இறைவணக்கம் கூறா விட்டாலும் நவீனகால இறைவணக்கம் பாடியிருப்பார். ஆனால், அது (இறைவணக்கம்) மாணவர்களுடனான ஒருவருக்கொருவருடனான (Inter Personal) உறவை முன்னிலைப்படுத்தாது.
                                   
அதுதான்,உமாமகேஸ்வரி மிஸ்சைக் கொன்று விட்டது.
அப்படி என்ன செய்து விட்டார் ' உமாமகேஸ்வரி மிஸ்' ? பெரும்பாலோர் செய்யும் தவறுதான் அது.

இன்றுள்ள தனியன்களும் நிறுவனங்களும் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சுதந்திர வணிகமயமாதல் போன்றவற்றின் கட்டமைப்புகள்; அத்தோடு வணிகமயமான கல்வியானது விரிவுபடுத்தப்பட்ட மறு உற்பத்திக்கான (Extended reproduction) மூலப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

ஆகையால், கல்விக்கூடம் என்பது நுகர்வுப் பொருளான கல்வியை உற்பத்திபண்ணும் தொழிலகம். இப்போது கல்வி! ‘Object!’
[கல்வி எதற்காக பெற்றோர்களால் வாங்கப்படுகிறது? அவர்களின் Fantasy (புனைவுரு) ஆன அதீத சம்பளம், வசதி, மகிழ்விற்கானதாக உள்ள உயர்கல்விக்கான எதிர்காலம், இதை அடையவே கல்வி ].

இப்போது ஆசிரியர் என்பதை உருவகமாக வாசித்தால் கூடுதலாக சில கிடைக்கும். நுகர்வுப் பொருளான இந்தக் கல்வி உயர்கல்விக்கான அடிப்படை. இதைச் சிறப்பாக நுகர்ந்துவிட்டால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பா உன் காலடியில் என்கிறது மற்றமை(Other). அதாவது, கலாச்சாரம் ஆணையிடுகிறது. தாய்/தந்தைமார்கள் (ஈடிபல்) அந்த வாசனைக்கு அடிமையாகி அவற்றை அடையும் இன்பப் பெருக்கத்திற்கு (Jouissance) உந்தப்படுகிறார்கள். இந்த வகைக் கல்விகள் சமூக அந்தஸ்தில் மேலதிகாரம் (Phallus) செலுத்துகிறது. இந்த நிறுவனங்களின் கவனம் கல்விக் கூடமல்ல. காசை அச்சடித்துக் கொண்டிருக்கிறார்கள் (Mint). ஆரம்பக் கல்வி முதல், மேலே, உச்சிவரை இதுதான். இதில் ஆசிரியர்கள் என்பது நுகர்வுப் பொருளான கல்வியை (Syllabus) கைமாற்றுபவர்கள். அவ்வளவே.


அவன் மாணவன்/மாணவி அல்ல. நுகர்வோன் / நுகர்வோர். அவ்வளவே. இந்த அடிப்படையில் மாணவன்/மாணவி ஆகியோர் கட்டப்பட்டுள்ளனர்.

இந்த விநாடிகளில், Valentine’s day limited period offer! Enjoy BSNL full talk value..... இது BSNL- ல் sms.

BSNL என்பது அரசு நிறுவனம்; வணிக மயமாதல், தனியார் அமைப்புடன் போட்டி! விளைவு, அவர்களின் மேலாண்மையில் 10 வயது மகன்/மகளிலிருந்து, 70 வயது பாட்டி கையில் இருக்கும் கைபேசியில் காதலர் தினம் offer பதிவு செய்யப்பட்டு, வாசிக்கப்பட்டிருக்கும். Post Modern கலாச்சாரம். இதில் உமாமகேஸ்வரி மிஸ் தன்னை,ஆசிரியையாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டார். அவரிடம் நுகரவந்தவரை மாணவர் என்று தவறாகக் கணித்துவிட்டார். (எல்லோரையும் அப்படித்தான் கணிக்கிறார்கள்). அவர், ஆசிரியர், மாணவர் என்ற உறவில், ஒருவருக்கொருவருடனான உறவிலிருந்து செயல்பட்டார். செயல்படுகிறார்கள்.

நுகர்வோன், தன் நுகர்வுப் பொருளை கைமாற்றுவோரின் விரும்பாத நடவடிக்கையால் - மதிப்பெண்கள், வருகைப்பதிவு - தந்தையிடம் புகார். அதைவிட நுகர்வோனுக்கு நல்உபதேசம்.
இப்போது, நுகர்வோனின் இன்பப்பெருக்கு (Jouissance) காயடிக்கப் பட்டுவிட்டது (castrated ), rejection / denial.

ஆசிரியர்/ஆசிரியை அதிகாரத்தை (Phallus) உடையவர்களாக, மாணவனில், அவன் அகத்தில் கட்டப்பட்டிருந்தால்; கலாச்சாரத்தால், இவனைத் தங்களின் நீடிப்பாக மட்டுமே பார்க்கும் சுயமோகப் பெற்றோர்களால் இவனுக்கு மரியாதை, கீழ்படிவு வந்திருக்கும்.
[அரசு கூட, மாணவர்களைக் கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஒழுக்கப்படுத்தவும் (சமூகத்திற்காக) ஏற்கனவே இருந்த அதிகாரத்தைப் பறித்துவிட்டது ].

சுயமோகப் பெற்றோருக்கு இன்றைய காலப் பிள்ளைகள் Precious Child. அதாவது ஒரு பிள்ளை அல்லது இரு பிள்ளைகள். ஆகவே, வேட்டையாடு ! விளையாடு ! ஆனால் மதிப்பெண்கள் முக்கியம். சுயமோகப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கான Symbolic role-ஐக் (கலாச்சார, மொழி, முன்மாதிரியான பெற்றோரிய நடத்தை)கூடச்செய்யாமல் குழந்தைகளிடம் (கேட்டதெல்லாம் கிடைக்கும், தன்னைப் பற்றி மிகுமதிப்பீடு, அரியவன்/ள் என்ற உள்வாங்கலுக்கான வசதி செய்து கொடுப்பது) அவன்/அவள் தன்னை மாபெரியஆள் ( Grandeur self) என்ற எண்ணம் உருவாகக் காரணமாகி விடுகின்றனர்.

இங்கு பெற்றோருடன் மற்றொரு பெற்றோரின் முக்கியத்துவம் மிக முக்கியம். அதுதான் சின்னப்பெட்டி,TV என்ற தொலைக்காட்சி. இங்கிருந்துதான் தன் Ideal ego-ஐ (லட்சிய அகன்), தன்னை ஐஸ்வர்யாராயாக, விஜய்-யாக, மானாட மயிலாட, உங்களில் ஒரு பிரபுதேவா,நீயா நானா?-கோபியாகவும். இப்படிப் பலவாக, லட்சியப் புருஷி/ புருஷர்களுடன் லட்சிய அகனைக் கட்டிக் கொள்கிறார்கள்.

இதெல்லாம் திருமதிக்குத் தெரிந்திருக்கும். ஒருவேளை அவரின் ஒழுக்கம், கடமை, நேர்மை என்ற விழுமியங்களால் (Super ego) கட்டப்பட்டவராக இருந்திருக்கக்கூடும். குற்றம்/குறை கண்டவுடன் (பேரகனின்) Super ego-வின் உந்தலானது (drive) Ego -வின் தற்காப்பையும் மீறி செயல்பட்டு, அந்த அவனின் நல்லதற்காக, திருத்த எடுத்த முயற்சியை அவன் இன்பப் பெருக்கு (Jouissance) காயடிக்கப்பட்டதாக, (castrated) காயம்பட்டுவிடுகிறான் (affect). (வேறுமாதிரி அவன் மாணவனாக கட்டப்படவே இல்லை; காசு கொடுத்து வாங்கும் கல்வி, அவன் நுகர்வோனாகவே உருவாக்கப்பட்டவன்). விளைவு ! மோசம்.


“திவசக்குருக்”களான Mass Media –க்களுக்கு தீனி கிடைத்து, கொலை, குற்றவாளி, அப்பா, அம்மா மோசம் ; இத்தியாதி. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டு திவசம் முடிந்துவிட்டது. இனி அடுத்த திவசத்திற்குத்தான் எல்லோரும் பங்கேற்பர்.

உலகமயமாதல், கல்வி வணிகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம், தாராளமயமாக்கல், அனைத்தும் வழமைபோல். எல்லோரும், இலவசம், offer-க்காகக் காத்திருப்போம். எத்தனை வாய்தாக்கள்; எத்தனை கோடிகள்; கேட்பாரற்ற கொள்ளை; எல்லாம் ஈஸ்வரன் செயல்.

11 Feb 2012

ஐ.ஐ.டி யின் காப்புரிமைகளும்.. தற்கொலைகளும்.



இப்போது ! 
..டி-யின் துறைத்தலைவர், Dr. M. கோவர்தன்.
நீங்கள் ஏன் ..டி சென்னை குறித்து எப்போதும் எதிர்மறையான செய்திகளையே வெளியிடுகிறீர்கள். இப்பல்கலைக் கழகத்தில் அதிகமான patent-கள் (காப்புரிமை பெற்ற மாதிரிகள்) உள்ளன. அதுபற்றி செய்தி எதுவும் வெளியிடுவதில்லையே ஏன்?
5000 மாணவர்களில் 3 பேர் இறந்து விட்டால் அதுபற்றி செய்தி வெளியிட விரும்புகிறீர்களே. ஏன்?
புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ”
இந்த மனப்பதட்டம் (anxiety) சுயமோகம், நோய்க்கூறு வகைப்பட்ட சுயமோக அதிர்வுக்குக் காரணம், சென்னை ..டி-யில் M.Tech மாணவர் நிதின்குமார் ரெட்டி தற்கொலை பற்றி (தற்கொலை செய்து கொண்ட நாள் 4-5-2011) செய்திகளை வெளியிட்டதுதான். அந்த ஊடகங்களை நோக்கித்தான் பல்கலைக் கழக துறைத்தலைவர் மேற்கூறிய மொழிதலைச் செய்தார்.

அதிக காப்புரிமையும் 3 பேர் தற்கொலையும் என்பது... புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. கணக்குத் தெரியாத இந்தத் தன்னிலைக்குக் கூட விளங்க வைத்து விட்டீர்கள். பேராசியரே நன்றி.
ஆனால், உயிர்கள் புள்ளிகளாக, நிகழ்தகவு அடிப்படையில் மாற்றியிருக்கிறீர்களே! எண்களும் உயிர்களும் சமச்சீரற்றதே.

இந்த உங்கள் சமச்சீராக்கம் மனஅலசல் ஆய்வில் ஒரு மனிதனுள் எப்போது நடைபெறும் என்றால் சுயமோகம் (narcissism) தலைவிரிக்கும் கணத்தில் நடைபெறுகிறது நனவிலியாக  (unconscious). 
" The system unconscious selectively treats the converse of any relation as identical to it. It treats logically asymmetrical relations as if they were symmetrical"
…" The process of selectively ignoring certain asymmetrical or difference relations is called symmetrization.” - 'Matte Blanco'.
..." symmetrization suggests a move into greater simplicity. It can thus thought of as a slippage or regression into crudity which can then suggest an evasive or avoidant activity…"
-Unconscious logic, Eric Eayner.
3 உயிர்களை, புள்ளிகளாக மாற்றியதின் மூலம் ஒரு மறுத்தல் (negation) எவ்வளவு எளிதாக நிகழ்கலையாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலையின் ஆளுமை பற்றி அரங்கக் கூட்டம் போட்டு இந்தியாவெங்கும் பேசக் கூடியதுதான் இது.

சுயகொலைக்கு முன் அந்த மாணவர் பட்ட அவஸ்தை, வலி எத்தகையது?  பின் அவரின் உறவினரின் இழப்பு

..டி-ன் காப்புரிமையில் (patent right), இந்த (சுயமோக) சமச்சீரற்றதை, சமச்சீராக்கும் வித்தையை (Technic) சீக்கிரம் காப்புரிமை பெற்று  ..டி-ன் காப்புரிமை புள்ளிக் கணக்கில் ஒன்றைக் கூட்டுங்கள்.

இப்போது, மற்றொரு சமச் சீராக்கத்தை (symmetrization) யும் பார்க்கலாம்.
அது,  அந்த  மூன்று உயிர்கள் பற்றிய ஊடகங்களின் அக்கறை வெளிப்பாட்டை; அதிக காப்புரிமைகளை விட அந்த உயிர்கள் ( மதிப்புக் கூட்டப்படாததால் ) அற்பம் என்று ஊடகங்களால் சொல்லாமல் சொல்லப்பட்டுவிட்டது.

அதிக காப்புரிமைகளின் அடியில் ஒளிந்திருப்பது உங்களின்  Imaginary.  சர்வவல்லமை / ஆண்டவர், (omnipotent narcissism).  அதுதான் உயிர் பற்றிப் பேசும்போது காப்புரிமையைப் பேசி உவகை கொள்கிறது உங்கள் சுயமோகம்.

சமச்சீராக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள Clinical finding  ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. (சற்று மனச்சிதைவுக்கு உள்ளான ஒரு நோயாளியின் கூற்று):
"சிறையில் உள்ள ஜன்னல்களுக்கு கம்பிகள் உள்ளன. எனது அறையில் உள்ள ஜன்னல்களிலும் கம்பி உள்ளது, எனது பைஜாமாவில் கோடுகள் (Stripes) உள்ளன..... சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக நான் என் பைஜாமாவைக் கிழித்தெறியப் போகின்றேன்".

4 Feb 2012

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகம்...

                                                              தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகம் (Chosen Medium)

நாம் அணியும் உடைகள், உடல்மொழி, பொழுதுபோக்குகள்  மற்றும் career -ன் மூலம் நம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்துகிறோம். மேற்கூறியவைகளை நாம் யார் என்பதைத் தெரிவிப்பதற்கான ஊடகங்களாக எடுத்துக்கொள்ளலாம். ‘ஊடகந்தான் மொழி’ என்ற கூற்றை சற்று நீட்டித்து, ‘ஊடகந்தான் சுயம்’ என்று உரத்துக் கூற முடியும்.
           இணையவெளியில்(internet space) ஒரு குறிப்பிட்ட channel -ஐ தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தேர்வு செய்கின்றனர்.  இங்கு பல்வேறு வகையான தனித்தும் இணைத்தும் உபயோகப்படுத்தக்கூடிய வழிகள் உள்ளன. ஒவ்வொரு வழியும் ‘தனக்கே’ உரித்தான அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. ‘குறுந்தகவல்களை’ உபயோகப்படுத்துபவர்கள் மொழியின் semantics–ஐ தேர்ந்தெடுப்பவர்களாகவும், ஒருவேளை எழுத்து மொழியின் ஊடாக வரும் linear-ஆன, கட்டுப்பாடான, பகுத்தாராயக் கூடிய மற்றும் சிந்திக்கும் திறனுடைய பரிமாணங்களைக் கொண்ட ‘சுயத்தை’ விரும்பக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
இவர்கள், Cognitive psychology-ல் விவரிக்கப்படும் பிம்பங்கள்/உருவகங்களை உருவாக்குவதன் மூலமாக வெளிப்படும் அடையாளப்படுத்துதல், காட்சியாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த அறிதல்/சிந்தித்தலின் மூலம் ஏற்படும் மகிழ்ச்சியைப் பெறும் மனக்காட்சியாளர்கள் (Visualizers)எனப்படுகிறார்கள். இதற்கு எதிரிணையாக Verbalizers உள்ளனர்.  
இன்னும் சிலவகைப்பட்டவர்கள்  ஒரே சமயத்தில்  நிகழும் பரிமாறல்களை (Chat) அதனால் ஏற்படும் இயல்பான, தன்னிச்சையான, கட்டுப்பாடற்ற மற்றும் சாதுர்யமான சுவையான பேச்சுக்களையும் மற்றும் அந்தக் கணத்தில் ஏற்படும் ‘சுயத்தை’ விரும்புபவர்களாகவும் உள்ளனர்.  

மேலும் சிலர் அசைபோடுவதற்குரிய, தன்னுள் வாங்குவதற்குரிய, அளவான வகையில் வெளிப்படுத்தக்கூடிய, உடனடியாக பரிமாறத் தேவையில்லாத மின்னஞ்சல் (e-mail) மற்றும் வலைத்தள விவாதமேடைகளை (internet forums) தேர்ந்தெடுக்கின்றனர். சிலவகை, Personality-கள் தங்களை அதிகமாக வெளிப்படுத்தவும், குறைவாகப் பெற்றுக்கொள்ளவும் Webcam மற்றும் வலைத்தளங்களையும் உருவாக்குகின்றனர்; தன்னை அதிகமாக வெளிப்படுத்தாமல் மறைவாக இணையதள உலாவலை விரும்பும் சிலரும் உள்ளனர். மேலும் பலர் மிக அதிகமாக உடனடிப் பரிமாறல்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களை, சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் ஊடகம், எந்த அளவிற்கு (ஒரு தனியன்) தன்னுடைய ‘அடையாளத்தை’ ஒருமைப்படுத்துகிறார்/ வேறுபடுத்திக்கொள்கிறார் மற்றும் எந்த அளவிற்குத் தன்னுடைய உண்மையான/கற்பனையான சுயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார், வெளிப்படுத்துகிறார் என்பதுடன் உள்ளீடாகப் பிணைந்துள்ளது.

~Translated from an Applied psychoanalytic journal~