27 Jun 2019

மகா வாக்கியம் (ஏதோ சூது உள்ளதுதானே )

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்ன செய்கிறோம் என்று அறியாமலே மோடிக்கு வாக்கை அள்ளித் தெளித்துவிட்டனர் மக்கள்.
       சுயமோகப் பரவசத்தில் பிரதமர் மோடி வடக்கிலிருந்து தெற்காக அவருக்கு முக்கியமாகப்பட்ட கோவில் அனைத்திலும் நேரடியாக வந்து அர்சனை பண்ணி கடவுள்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
       மந்திரி சபை கூட்டங்களை கட்டியும், கட்டாமலும் இருக்கயிலே அவர் சூட்சுமமாக ஒரு திட்டத்திற்கான முன்னிலையாக ஒரு கருத்தை (கருத்தியலை) வைத்தார்.
       அது “ஒரே தேசம் , ஒரே தேர்தல் “ என்று ஜூன் 19ம் தேதி ஒரு அப்பிரானியாக ஒரு கருத்தை வெளியிட்டார்.  மக்களவை , மாநிலங்களின் சட்டப் பேரவைகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்தார்.

       கூட்டம் நடந்தது உருப்படியாக எந்த முடிவும் வெளியிடப்படவில்லை.
       நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்லவில்லை.  மாறாக முதலில் ஒரே தேசம் ; என்ற கருத்தை முதலில் வைக்கிறார்.
       “ இந்தியா “ என்பது இப்போது ஒரே தேசமாகத்தானே இருக்கிறது.  அப்படி இருப்பதை ஏன் இப்படிச் சொல்ல வேண்டும் !
       இதில் ஏதோ சூது உள்ளதுதானே .  ஒரே தேசம் என்ற முழக்கம் நேரடி அர்த்தத்தை தாண்டி வேறு சில கருத்துக்களும் அதில் உறைந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
       ஒரே தேசம் என்பது மகா வாக்கியம் என்று உணர்ந்தால், உள் உறைந்துள்ளது புரியவரும்.  அதாவது அது ஒரு கருத்தியிலாக (IDEOLOGY) யாக முன் மொழியப்படுகிறது.
       கருத்தியல் பற்றி சிசாக்கின் கருத்து “ கருத்தியல் (IDEOLOGY) என்பது கருவியாகச் செயல்படுகிற ஒரு அறிவாகும் ; கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் (attitude ) சமூக மேலாண்மையில் அது ஒரு செயல்பாடு மட்டுமல்ல ; கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகவே உள்ளது ; “
       இந்த கருத்தியலின் உள்ளடக்கமானது தனிச்சிறப்பான அர்த்த விளக்க முறைகள் மூலமாக அகவய நிலைப்பாட்டுடன் தொடர்புபடுத்தும் பொழுது, இது நம் அக்கரைக்குரிய விசயமாகிறது.
       இது இன்று பூடகமாக ஒரே தேசம் என்பது நாளை எப்படி நீட்டிக்க முடியும் ?  மக்களின் மேல் இதை கட்டமைக்க மோடி இலவசம் தவிர்த்து இந்த கருத்தியலின் பல வண்ணங்களே மக்களை மயக்கிவிடும் ஆபத்துள்ளது.  நீட்டிக்க அதில் இடமுள்ளதா ?  என்றால் ஆம் என்பதே பதில் .
       எப்படி என்றால் ஒரே தேசம் என்பது அடுத்து ஒரே மொழி என்றாகலாம் , அடுத்து ஒரே மதம் என்றாகலாம் .   அடுத்து மொழிவாரி மாகானங்கள் இனியாகும் காலத்தில் மாகான அந்தஸ்த்தை இழந்து ஒரே நாடு என்ற பதாகையின் கீழ் உள்ள மாநகராட்சி அந்தஸ்திற்கு மாற்றம் பெறலாம் .  இவைகள் உடனடியாக அஜன்டாவாக வரும் என்று சொல்லவில்லை .  அதிகாரம் , சுரண்டள் , சமூக மேலாண்மையில் ஆதிக்கம் செய்யும் போது ஒவ்வொன்றாக நடைபெற சாத்யமுள்ளது தானே !
       இந்த கருத்தியலை நியாயப்படுத்துகின்ற தர்க்கம் தான் முதல் அரசியல் பணியாகும் .
       மோடியின் கருத்தியலை அரசியலின் அடிப்படை உரிமைக்கெதிரா இருக்கிறதா இல்லையா என்ற சட்ட ரீதியில் சிந்தித்தாள் கருத்தியலானது கருவியாக செயல்படுவது என்றாகிவிடும் .
       கருத்தியலை எதிர்த்து விழிப்பாக மக்களை இருக்குமாறு செய்வதே மகா வாக்கியத்திற்கு எதிரான அரசியலாகும் .
                                                                     க . செ

9 Jun 2019

நீட் தேர்வு – தற்கொலைகளுக்கான கொள்கலனா?


      நீட் தேர்வு இந்தாண்டும் தற்கொலைகளுக்கு காரணமாகியிருக்கிறது.
       இந்த தற்கொலைகள் நீட் தேர்வின் விளைவு என்பதால் அரசியலாயிற்று.
கட்சிகளின் துயர விசாரிப்பு நடந்தேறுகிறது.
       நீட் தேர்வு மட்டுமே இத்தற்கொலைக்கு காரணம் என்று சொல்ல முடியுமா என்ன?
       நீ உச்சானி கொம்பைப்  பிடிக்க வேண்டுமானால் நீட் தேர்வு உன் லட்சியமாக வேண்டும்           என்று பதின்மவயது மாணவ, மாணவியருக்கு உசுப்பேத்துவது யார்?  சமூக அமைப்புதானே!
       பெற்றோர், கலாச்சாரம், ஊடகங்கள், விளம்பரங்கள், இத்தியாதிகள்தானே !
நீட் தேர்வு நடைபெறுவதும், தற்கொலையும் ,உடனடியாக அரசியல் கட்சிகளால்                   கண்டனங்களும்  நடந்தேறுகின்றன.
       ஊடகங்கள்  நீட் தேர்வு பற்றி வாத, பிரதிவாதங்களை அந்த வாரம் முழுவதும் நடத்துவதோடு சரி.
       கல்வியை வேலை / சமூக அந்தஸ்தாக மட்டும் முன்னிறுத்தப்படுவதால் இந்த துயரங்கள் வழமையாகிவிட்டன.
       இம்மாதிரியான தற்கொலைக்கு காரணமாக தேர்வுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது சமூகப் பொறுப்பைத்  தட்டிக்கழிப்பதாகுமே.
       நீட் போன்ற தேர்வுகளை பெற்றோரின் கனவாக / தம்பிள்ளைகளின் எதிர்காலமாக பாவிப்பது என்பது மாணவர்களை கொம்பு சீவிவிடுவதற்கு ஒப்பாகும்.
       இம்மாதிரியான தோல்வியால் துவண்ட மாணவர்களின் தற்கொலை பற்றி, தமிழக ஆனமீகவாதியின் ஒரு கூற்றை அறியலாம்.
       ” ஒருவர் ஒரு தோய்ந்த ஆண்மீக வாதியிடம் இப்படி ஒரு கேள்வியை முன்னிறுத்துகிறார்.
கேள்வி :  சிலர் ஏன் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்?
பதில்:    உடலோடிருப்பது சகிக்க முடியாத துன்பமாய்த் தோன்றுங்கால், அதை ஒழிக்க விருப்பம் உண்டாகிறது,  ஆனால் துன்பத்தை தருவது மனமே.  விவேகிகள் அதனையே ஒழிக்க முயல்வர்”  -ரமணர்.
  உடல் ஒழிப்பு விருப்பம் தவறு / தேவையற்றது என்கிறார் தானே?  துன்பத்தை தரும் மனமே ஒழிக்கப்பட வேண்டியது என்கிறார்.
       இந்த மனமே /  எண்ணமே நிலவும் மேலாண்மை அதிகாரத்துவத்தால், பெற்றோரால், கல்விக் கூடங்களால் சொல்லாடல்களாக /  விழுமியங்களாகி சுயமோகத்தை இந்த புள்ளியில் நிப்பாட்டியிருக்கின்றனர், அது துன்புட்டிருக்கிறது.  இதைத்தான் எதிர்க்க வேண்டும் / இந்த மனத்தைத்தான் ஒழிக்க வேண்டும். அதுவே விவேகிகள் வழி என்கிறது ஆன்மீகம்.
       மன அலசல் உளவியலோ,  ” தேர்வில் தோல்வி என்றவுடன் தன்னைத்தானே அதிபுத்திசாலி என்ற எண்ணம், கவர்ச்சி நொடித்துப் போகிறது.  தன்னின் மறைவான உண்மையான சுயம் ( hidden true self  ) வெளிப்பட்டுவிட்டது என உணரும் போது மனக்காயம் உருவாகிறது” என்கிறது.
       ” மேலும், அவர்களின் முக்கியத்துவம் இப்போது கேள்விக்குள்ளாகிறது.  சட்டென்று அது மனக்காயமாகி, மன உளைச்சலுக்கான காரணமாகிறது.  மேலும் தோல்வியைச் சந்தித்ததில் உருவான அவமானமாக கருதுவதின் விளைவு அது.  இப்போது சுயமோகியின் சுயகௌரவம் / சுயமதிப்புக்கான அச்சுறுத்தலால் விளைந்த கட்டுக்கடங்காத மனவலி, தன் மீதான கோபம். இவைகள் சுய அழிப்புக்கு வித்தாகிறது எனலாம்” (கோஹட்)
       தற்கொலைகள் நீட் தேர்வில் மட்டுமே நடப்பதில்லை அல்லவா?
       ஆகவே, முதலில் பெற்றோர்கள் தங்களைத் தாங்களே தாம் யார் என்று அறிந்துகொண்டு, தம் பிள்ளைகளின் மன வளர்ச்சியை முதன்மைப்படுத்தி வளர்ப்பதை மறந்து, புற வளர்ச்சி, புற மகிழ்ச்சி விழுமியங்களை பிள்ளைகளின் அடையாளமாக மற்றுவதை நிறுத்த வேண்டும்.  அவர்களின் லட்சிய அகன் மீது கவனம் செலுத்த வேண்டும்.
       பாராளுமன்ற அரசியலில் பொழுது போக்குவதைவிட, பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாம்.
       தற்கொலை தனிமனிதப் பிரச்சினை அல்ல, மாறாக, சமூக அரசியல் பிரச்சினையாகும்.
       ஊடகங்கள் பதின்மவயதினரின் மனத்தை கிரிக்கெட்டாக எண்ணி விளையாடிக் கொண்டிருக்கின்றன.  அரசியல் வாதிகள் இனியாகும் வாக்குச் சீட்டுகளாக இவர்களை கணக்கிடுகிறார்கள்.  காப்பாற்றும் விழிப்பு / சுய விழிப்பு மட்டுமே தேவை.

1
                                                                            க.செ


.   



27 May 2019

விழித்துக்கொள்வோம் !!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சுயமோகப்பித்தால் வலிமையான ஐக்கிய முன்னணியைக் கட்டமுடியாததால், மக்கள் அகவய நிலைப்பாட்டுடன் வாக்களித்து தாமரையை உயர்த்திப்பிடித்து விட்டனர் (குறிப்பாக வட இந்தியாவில் ).பழைய பாட்டு ( முழக்கம் ) ஒன்று நினைவுக்கு வருகிறது..” வடக்கு வாழ்கிறது “….
பிரதமர் மோடியின் தற்போதைய மனநிலையை ப்ராய்டின் மொழியில் சொன்னால்  ”Oceanic Feeling ” –ல் மோடி இருக்கிறார் எனலாம்.
       ” ஓசியானிக் ஃபீலிங் என்பது எல்லையற்ற சுயமோகத்தை மீண்டும் கொண்டுவருவது போன்ற……ஏதோவொன்றைத் தேடுகின்ற எண்ணமாகும் / உணர்வாகும்”                                                                                       -கென்பெர்க்.(Kernberg)
       இந்த ஓசியானிக் ஃபீலிங் நிலையை முனைவர் கென்பெர்க் சுயமோகப் பரவசம்             ( Narcissistic Elation ) என்று மொழிந்தார்..
இந்த மனநிலையின் ஒரு பக்கம் சம்பந்தப்பட்ட நபருக்கு தேவைகள் அல்லது ஆசைகள் இல்லாத பரிபூரணமான சமநிலை மாறாத் தன்மையைக் குறிப்பிடுகிறது. மற்றொருபுறம்….          ” தன்னைத்தானே உயர்வாக , மாபெரும் ஆளுமையாக எண்ணிக்கொள்ளும் மனநிலையும் உண்டு” என்கிறார் லக்கான்.
………” இந்த தன்னை மறந்த நிலையானது ,மிகவும் பொய்யான கோரிக்கைகளை ( the most  false of demands ) உருவாக்குகிறது “ ( அதே கட்டுரை )
இப்படி தன்னிலை இருக்க , 24-5-2019 காலையில் மோடியின் கூற்றாக , தொலைக்காட்சியில் எழுத்தாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிறு துண்டுச் செய்தி:  “ புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் வாக்களித்துள்ளனர் “ –மோடி என்கிறது. இதை ஒரு வார்த்தையாக எண்ணினால் – புதிய இந்தியாவை - ,முட்டாள் பட்டத்தை முழுமையாக, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஏனெனில், புதிய இந்தியா என்ற சொற்கள் ஒரு கருத்து—கருத்தியல்- ( Ideology ). இது ஒரு கருவியாக இனிச் செயல்படும். இந்தக் கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகும்.
தேர்தல் காலக் கட்டத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகத் தெரியவில்லை.
மிகப் பெரிய வெற்றிப் பரவசத்தில், புதிய மந்திரிசபைக்கான பிரதம மந்திரி பதவி ஏற்காமலேயே “ புதிய இந்தியா “ என்ற கருத்தாடல் சமூக அரசியல் தளத்தில் பரப்புரையாக வெளிவந்து விட்டது .
இந்த “ புதிய “ இந்தியா ஒருபக்கம் இருக்கட்டும் .” பழைய ” இந்தியா என்னவாயிற்று? பிரான்சின் ரஃபேல் போர் விமானப் பிரச்சினையில் தார்மீக நெறிகளுக்கு உட்பட்டவர்கள் யார்?யார்?.
பழைய இந்தியாவின் வங்கிகளில் கடன் என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடித்தவர்களின் நிலை என்னவாயிற்று?
எண்ணெய்க் கிணறுக்காக நெல் வயல்களை பாலையாக்கும் விவசாயிகள் / மக்கள் விரோதத் திட்டம் என்னவாயிற்று? 
தூத்துக்குடி ஸ்டெர்லைட்  துப்பாக்கிச் சூடும், அந்த ஆலையை நிரந்திரமாக மூடுவதும் என்னவாயிற்று ?
மோட்டார் கார் தொழிலுக்கு அனுசரனையாக எட்டுவழிச் சாலை, நான்குவழிச் சாலை எனும் பெயரில் நஞ்சை நிலங்களை பாலையாக்கும் திட்டங்கள் என்னவாயிற்று?
ஓசியானிக் பிரதமர் மோடிக்கு இனியாகும் இந்தியத் திட்டத்தில் நண்பர்கள் மக்களா….அம்பானிகளா ?  
புதிய பிரதமரிடம் ஒரு வேண்டுகோள் ; புதிய இந்தியத் திட்டத்தை முதலில் வல்லுநர்கள் கையில் கொடுப்பதற்கு முன் மக்கள் மன்றத்தில் வைத்து கருத்துக் கேட்கும் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற மக்கள் குரல் சும்மா அதிரவைக்குமாறு செயல்பட்டால்தான் , அப்போதுதான் “ நவ இந்தியாவின் “ அங்கலட்சனத்தை அறிந்து / புரிந்து கொள்ளமுடியும்.
க.செ                                                          
  

20 May 2019

பிரதமரும் பிரக்யாசிங் தாக்குரும்

” கோட்சே ஒரு தேசபக்தர் “ .சொன்னவர் பிரக்யா சிங் தாக்குர் என்ற சாத்வி.  போபால் பாராளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர். இவர் “ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து ; அவரது பெயர் கோட்சே “ என்ற கூற்றுக்கு மறுப்பாக “ கோட்சே ஒரு தேபக்தர் “ என்றார்.
இவரின் கூற்றை தயவு தாட்சண்யமின்றி மறுக்கிறார் ஒரு பாஜகக்காரர்.             அவர் பிரதமர் மோடி.
” மகாத்மா காந்தி அல்லது நாதுராம் கோட்சே பற்றி பலவித கருத்துக்கள் உலவுகின்றன . ஆனால், பிரக்யா சிங் தெரிவித்துள்ள கருத்தானது மிகவும் மோசமான ஒன்று. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர், அது குறித்து நூறுமுறை சிந்திக்க வேண்டும்.       
தனது கருத்துக்காக பிரக்யா மன்னிப்பு கோரியுள்ளார். எனினும்,  மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் எனக்கூறிய அவரை, என்னால் மனதார மன்னிக்க முடியாது”       என்றார் மோடி. -   இந்து தமிழ் மே 18 ,2019     
பிரதமர் மோடியின் இந்தக்கூற்று உண்மையானதுதானா? என்று சந்தேகப்பட  வேண்டியுள்ளது.
சமீபத்திய முகநூல் மற்றும் யூட்யுப் பக்கங்களில் கோட்சேவின் அஸ்தி கரைக்கப்படாமல் (அவரது வேண்டுகோள்படி) பூனாவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இருப்பதாக செய்திகள் பரவியுள்ளது ( www.youtube.co/watch? )


கோட்சேவின் வேண்டுகோள் “ சிந்து நதி என்று பாரதத்துடன் இணைகிறதோ அன்றுதான் என் அஸ்தி கரைக்கப்படவேண்டும் “ என்பதுதான் விஷேசம்.
மோடி என்ற டீ பையன் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர உறுப்பினன் என்ற அந்தஸ்தில் இருந்து பொதுவாழ்வை துவக்கியவர்.அன்றே ஆர்.எஸ்.எஸ்-ல் கோட்சே அஸ்தி பற்றியும், அவரின் வேண்டுகோள் பற்றியும் கேள்வி கிளப்பியிருப்பார் தானே ( ஒரு சந்தேகமாகக்கூட அது இருக்கலாமே )
மோடியின் வரலாற்றில் இது இடம் பெற்றிருக்குமா ? அப்படி ஒருக்கால் இல்லாவிட்டால் ,இப்போதைய மேற்கண்ட கருத்தாடலை எப்படி ஏற்பது?
அதாவது, ஆர்.எஸ்.எஸ்.காரராக இருந்து கோட்சேவை ஏற்பது.
பிரதமாரக இருப்பதால் ( தேர்தல் நேரம் ) கோட்சே தேசபக்தர் என்ற கூற்றை மறுப்பது அவசியமாக உள்ளது.
தேசத்தந்தை என்று கூறப்பட்டவரை சுட்ட கோட்சேயை தேசபக்தர் என்று பிரதமர் கூறினால் என்னவெல்லாம் நடக்கும். மனக்கொந்தளிப்புக்கு உள்ளாக மாட்டார்களா கட்சிகளும் மக்களும்.
ஆகையால்,கோட்சேவின் தேசபக்த வேசத்தை மோடி கலைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. சாத்வி / சந்நியாசினியை மறுத்தாலும் மற்றொருபுறம் அவரை பிரதமர் தற்காக்கின்றார் என்பதே உண்மை.
சந்நியாசினி ஆர்.எஸ்.எஸ்-க்கு புறம்பான கருத்து எதையும் சொல்லவில்லை.
ஆனால் உண்மைக்குப் புறம்பானதை மறுக்கும் வக்கிரம் ( perversion  ), வக்கிர சிந்தனையின் வெளிப்பாடுதான் அது. மகாத்மா என்று அழைக்கப்பட்ட ஒரு முதியவரை ஈவு இரக்கமின்றி கொன்றவனை தேசபக்தன் என்றால்…… எப்படிப் போகிறது வக்கிரம்.
சந்தனக்கடத்தல் வீரப்பன் சந்தன மரங்களை ஆயிரக்கணக்கில் தருசாக்கியதோடு பல காவலர்களுக்கு எமனாகவும் இருந்தவர். அவரின் சொந்த ஊரில் தியாகி வீரப்பன் என்று ஆளுயர சிலை வைப்பதுதான் வீரத்தை மதிப்பதாகும் என்று கூறினால் எப்படியிருக்கும்..
ஏன் வக்கிரம் என்று சொல்லப்பட்டது? ஆண் / பெண்-க்கு உடலியல் உறுப்பு அடையாளங்கள் வேறு வேறு. பெண் என்பவர் பெண்தான்; அவளுக்கு ஆண் உறுப்பு இருக்காது என்கிற உண்மை தெரியும். ஆனால் உண்மையை ஒத்துக்கொள்ள மனம்வராது வக்கிரத்திற்கு. ஆகவே, மனிதர்கள் எல்லோருக்கும் ஆண் உறுப்பு உண்டு என்ற ஆசையும் /வீம்பும் புடைத்து யதார்த்தத்திற்கு வருவதுதான் வக்கிரம்.
தேசமே விரல் நீட்டி கோட்சேயை கொலைகாரன் என்றபோது ரகசியமாக பரவசப்பட்ட ஜனசங்கத்தின் வாரிசுதான் இந்த சன்னியாசினி.
கோட்சே தேசபக்தர் என்பது அவரின் கண்டுபிடிப்பல்ல.அவரின் சமூக, அரசியல் கட்டமைப்பில் உன்னதம் / லட்சியம் ( ideal ) அது. அதுதான் புனிதரின் அஸ்தி காத்திருக்கிறது இன்றுவரை. இந்த இடத்திற்கு சன்னியாசினியின் வரலாற்றை பின்னனிக்கு கொண்டுசெல்வதின் மூலம் அம்மையாரைக் காப்பாற்றுகிறார் ஆர்.எஸ்.எஸ் மோடி.
தன் கட்சிக்காரரால் , சன்னியாசினியால், பாராளுமன்ற வேட்பாளரால் புனிதர் கோட்சே என்று அழைக்கப்பட்டது பிரதமர் மோடிக்கு மனப்பதட்டத்தை  (anxiety) கொடுத்துவிட்டது; மேலும்,  காயடிப்பு அச்சம் ( castration fear ) தன் தலைமீது தொங்கும் கத்தியாக ( கற்பனையாக ) ஆடிக்கொண்டிருப்பதை அவரால்  உணர முடியும். அஸ்திவாரமே ( பிரதமர் என்பதுவே ) ஆடிப்போகிற காயடிப்பு பயமாகும் அது. அதாவது, இதை மன அலசலில் Bedrock of castration என்பார் Fink . பலவகை குல்லாய் அணிவதில் கில்லாடியான மோடி, இப்போது காந்தி பக்தர் குல்லாயுடன் உலாவருகிறார்.
க.செ