20 May 2019

பிரதமரும் பிரக்யாசிங் தாக்குரும்

கோட்சே ஒரு தேசபக்தர் “ .சொன்னவர் பிரக்யா சிங் தாக்குர் என்ற சாத்வி.  போபால் பாராளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர். இவர் “ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து ; அவரது பெயர் கோட்சே “ என்ற கூற்றுக்கு மறுப்பாக “ கோட்சே ஒரு தேபக்தர் “ என்றார்.
இவரின் கூற்றை தயவு தாட்சண்யமின்றி மறுக்கிறார் ஒரு பாஜகக்காரர்.             அவர் பிரதமர் மோடி.
மகாத்மா காந்தி அல்லது நாதுராம் கோட்சே பற்றி பலவித கருத்துக்கள் உலவுகின்றன . ஆனால், பிரக்யா சிங் தெரிவித்துள்ள கருத்தானது மிகவும் மோசமான ஒன்று. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர், அது குறித்து நூறுமுறை சிந்திக்க வேண்டும்.       
தனது கருத்துக்காக பிரக்யா மன்னிப்பு கோரியுள்ளார். எனினும்,  மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் எனக்கூறிய அவரை, என்னால் மனதார மன்னிக்க முடியாது”       என்றார் மோடி. -   இந்து தமிழ் மே 18 ,2019     
பிரதமர் மோடியின் இந்தக்கூற்று உண்மையானதுதானா? என்று சந்தேகப்பட  வேண்டியுள்ளது.
சமீபத்திய முகநூல் மற்றும் யூட்யுப் பக்கங்களில் கோட்சேவின் அஸ்தி கரைக்கப்படாமல் (அவரது வேண்டுகோள்படி) பூனாவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இருப்பதாக செய்திகள் பரவியுள்ளது ( www.youtube.co/watch? )


கோட்சேவின் வேண்டுகோள் “ சிந்து நதி என்று பாரதத்துடன் இணைகிறதோ அன்றுதான் என் அஸ்தி கரைக்கப்படவேண்டும் “ என்பதுதான் விஷேசம்.
மோடி என்ற டீ பையன் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர உறுப்பினன் என்ற அந்தஸ்தில் இருந்து பொதுவாழ்வை துவக்கியவர்.அன்றே ஆர்.எஸ்.எஸ்-ல் கோட்சே அஸ்தி பற்றியும், அவரின் வேண்டுகோள் பற்றியும் கேள்வி கிளப்பியிருப்பார் தானே ( ஒரு சந்தேகமாகக்கூட அது இருக்கலாமே )
மோடியின் வரலாற்றில் இது இடம் பெற்றிருக்குமா ? அப்படி ஒருக்கால் இல்லாவிட்டால் ,இப்போதைய மேற்கண்ட கருத்தாடலை எப்படி ஏற்பது?
அதாவது, ஆர்.எஸ்.எஸ்.காரராக இருந்து கோட்சேவை ஏற்பது.
பிரதமாரக இருப்பதால் ( தேர்தல் நேரம் ) கோட்சே தேசபக்தர் என்ற கூற்றை மறுப்பது அவசியமாக உள்ளது.
தேசத்தந்தை என்று கூறப்பட்டவரை சுட்ட கோட்சேயை தேசபக்தர் என்று பிரதமர் கூறினால் என்னவெல்லாம் நடக்கும். மனக்கொந்தளிப்புக்கு உள்ளாக மாட்டார்களா கட்சிகளும் மக்களும்.
ஆகையால்,கோட்சேவின் தேசபக்த வேசத்தை மோடி கலைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. சாத்வி / சந்நியாசினியை மறுத்தாலும் மற்றொருபுறம் அவரை பிரதமர் தற்காக்கின்றார் என்பதே உண்மை.
சந்நியாசினி ஆர்.எஸ்.எஸ்-க்கு புறம்பான கருத்து எதையும் சொல்லவில்லை.
ஆனால் உண்மைக்குப் புறம்பானதை மறுக்கும் வக்கிரம் ( perversion  ), வக்கிர சிந்தனையின் வெளிப்பாடுதான் அது. மகாத்மா என்று அழைக்கப்பட்ட ஒரு முதியவரை ஈவு இரக்கமின்றி கொன்றவனை தேசபக்தன் என்றால்…… எப்படிப் போகிறது வக்கிரம்.
சந்தனக்கடத்தல் வீரப்பன் சந்தன மரங்களை ஆயிரக்கணக்கில் தருசாக்கியதோடு பல காவலர்களுக்கு எமனாகவும் இருந்தவர். அவரின் சொந்த ஊரில் தியாகி வீரப்பன் என்று ஆளுயர சிலை வைப்பதுதான் வீரத்தை மதிப்பதாகும் என்று கூறினால் எப்படியிருக்கும்..
ஏன் வக்கிரம் என்று சொல்லப்பட்டது? ஆண் / பெண்-க்கு உடலியல் உறுப்பு அடையாளங்கள் வேறு வேறு. பெண் என்பவர் பெண்தான்; அவளுக்கு ஆண் உறுப்பு இருக்காது என்கிற உண்மை தெரியும். ஆனால் உண்மையை ஒத்துக்கொள்ள மனம்வராது வக்கிரத்திற்கு. ஆகவே, மனிதர்கள் எல்லோருக்கும் ஆண் உறுப்பு உண்டு என்ற ஆசையும் /வீம்பும் புடைத்து யதார்த்தத்திற்கு வருவதுதான் வக்கிரம்.
தேசமே விரல் நீட்டி கோட்சேயை கொலைகாரன் என்றபோது ரகசியமாக பரவசப்பட்ட ஜனசங்கத்தின் வாரிசுதான் இந்த சன்னியாசினி.
கோட்சே தேசபக்தர் என்பது அவரின் கண்டுபிடிப்பல்ல.அவரின் சமூக, அரசியல் கட்டமைப்பில் உன்னதம் / லட்சியம் ( ideal ) அது. அதுதான் புனிதரின் அஸ்தி காத்திருக்கிறது இன்றுவரை. இந்த இடத்திற்கு சன்னியாசினியின் வரலாற்றை பின்னனிக்கு கொண்டுசெல்வதின் மூலம் அம்மையாரைக் காப்பாற்றுகிறார் ஆர்.எஸ்.எஸ் மோடி.
தன் கட்சிக்காரரால் , சன்னியாசினியால், பாராளுமன்ற வேட்பாளரால் புனிதர் கோட்சே என்று அழைக்கப்பட்டது பிரதமர் மோடிக்கு மனப்பதட்டத்தை  (anxiety) கொடுத்துவிட்டது; மேலும்,  காயடிப்பு அச்சம் ( castration fear ) தன் தலைமீது தொங்கும் கத்தியாக ( கற்பனையாக ) ஆடிக்கொண்டிருப்பதை அவரால்  உணர முடியும். அஸ்திவாரமே ( பிரதமர் என்பதுவே ) ஆடிப்போகிற காயடிப்பு பயமாகும் அது. அதாவது, இதை மன அலசலில் Bedrock of castration என்பார் Fink . பலவகை குல்லாய் அணிவதில் கில்லாடியான மோடி, இப்போது காந்தி பக்தர் குல்லாயுடன் உலாவருகிறார்.
க.செ

1 comment:

  1. காந்தியைப் பற்றி "பலவித கருத்துக்கள்" நிலவுவதாய் மோடி கூறுவது, காந்தியை இந்தியாவின் தேசப்பிதாவாக மட்டும் பார்க்கவில்லை, நாட்டை கெடுத்தவர் என்றும் எதிர்மறையாக பார்க்கப்படுகின்றார் என கூறுவதாகும். தன்னுடைய கருத்து எது என வெளிப்படையாக அவரால் கூற முடியாது. காந்தியைப் பற்றிய உலகக் கண்ணோட்டம் மிகவும் உயர்வாகவும், மதிப்புள்ளதாகவும் இன்றும் உள்ளது. காந்தியின் மதிப்பைக் குறைத்தால், தன்னுடைய மதிப்பும், தன்னுடைய கட்சியின் மதிப்பும் குறைந்துவிடும் என்று மோடிக்கு நன்றாகவே தெரியும்.


    "சிந்து" எனும் நதியின் பெயரைக் கொண்டு "இன்டஸ்" என திரிந்து, பின், "ஹிந்து" எனும் சொல் உருவானது. எனவே, "ஹிந்து" என்றால், சிந்து நதிக்கரையில் வாழ்பவர் என பொருள். இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்தும் இந்துமதம் என கற்பிதம் செய்யப்படுகின்றது. புத்தம், சமணம், சைவம், வைணவம் போன்றவை எல்லாம், இந்துமதம் அல்ல. தத்துவ அடிப்படையில், புத்தம், சமணம் மற்றும் சைவம், வைணவம் எதிரெதிர் நிலையில் உள்ளவை. உன்மையில், சாரத்தில், "இந்துமதம்" எனும் போர்வையில், " பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியவருக்கான உரிமைகள் மற்றும் கடமைகளை கட்டாயமாக்கும் வருணாசிரம தருமம்" மட்டுமே உள்ளது. இவ்வருணாசிரம தருமம் இல்லையெனில், தீண்டாமை இல்லையெனில், மதமாற்றங்கள் நிகழாது, சாதிச்சண்டைகள் நிகழாது, சாதியே நிலைக்காது

    ReplyDelete