நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில் என்ன செய்கிறோம் என்று அறியாமலே மோடிக்கு வாக்கை அள்ளித்
தெளித்துவிட்டனர் மக்கள்.
சுயமோகப் பரவசத்தில் பிரதமர் மோடி
வடக்கிலிருந்து தெற்காக அவருக்கு முக்கியமாகப்பட்ட கோவில் அனைத்திலும் நேரடியாக
வந்து அர்சனை பண்ணி கடவுள்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மந்திரி சபை கூட்டங்களை கட்டியும், கட்டாமலும்
இருக்கயிலே அவர் சூட்சுமமாக ஒரு திட்டத்திற்கான முன்னிலையாக ஒரு கருத்தை
(கருத்தியலை) வைத்தார்.
அது “ஒரே தேசம் , ஒரே தேர்தல் “ என்று ஜூன்
19ம் தேதி ஒரு அப்பிரானியாக ஒரு கருத்தை வெளியிட்டார். மக்களவை , மாநிலங்களின் சட்டப் பேரவைகள் ஆகியவற்றுக்கு
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சித்
தலைவர்களின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்தார்.
கூட்டம் நடந்தது உருப்படியாக எந்த முடிவும்
வெளியிடப்படவில்லை.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்
என்று சொல்லவில்லை. மாறாக முதலில் ஒரே
தேசம் ; என்ற கருத்தை முதலில் வைக்கிறார்.
“ இந்தியா “ என்பது இப்போது ஒரே
தேசமாகத்தானே இருக்கிறது. அப்படி இருப்பதை
ஏன் இப்படிச் சொல்ல வேண்டும் !
இதில் ஏதோ சூது உள்ளதுதானே . ஒரே தேசம் என்ற முழக்கம் நேரடி அர்த்தத்தை தாண்டி
வேறு சில கருத்துக்களும் அதில் உறைந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
ஒரே தேசம் என்பது மகா வாக்கியம் என்று
உணர்ந்தால், உள் உறைந்துள்ளது புரியவரும்.
அதாவது அது ஒரு கருத்தியிலாக (IDEOLOGY) யாக முன் மொழியப்படுகிறது.
கருத்தியல் பற்றி சிசாக்கின் கருத்து “
கருத்தியல் (IDEOLOGY) என்பது கருவியாகச் செயல்படுகிற ஒரு
அறிவாகும் ; கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் (attitude ) சமூக மேலாண்மையில் அது ஒரு
செயல்பாடு மட்டுமல்ல ; கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகவே
உள்ளது ; “
இந்த கருத்தியலின் உள்ளடக்கமானது
தனிச்சிறப்பான அர்த்த விளக்க முறைகள் மூலமாக அகவய நிலைப்பாட்டுடன்
தொடர்புபடுத்தும் பொழுது, இது நம் அக்கரைக்குரிய விசயமாகிறது.
இது இன்று பூடகமாக ஒரே தேசம் என்பது நாளை
எப்படி நீட்டிக்க முடியும் ? மக்களின்
மேல் இதை கட்டமைக்க மோடி இலவசம் தவிர்த்து இந்த கருத்தியலின் பல வண்ணங்களே மக்களை
மயக்கிவிடும் ஆபத்துள்ளது. நீட்டிக்க
அதில் இடமுள்ளதா ? என்றால் ஆம் என்பதே
பதில் .
எப்படி என்றால் ஒரே தேசம் என்பது அடுத்து
ஒரே மொழி என்றாகலாம் , அடுத்து ஒரே மதம் என்றாகலாம் . அடுத்து மொழிவாரி மாகானங்கள் இனியாகும்
காலத்தில் மாகான அந்தஸ்த்தை இழந்து ஒரே நாடு என்ற பதாகையின் கீழ் உள்ள மாநகராட்சி
அந்தஸ்திற்கு மாற்றம் பெறலாம் . இவைகள்
உடனடியாக அஜன்டாவாக வரும் என்று சொல்லவில்லை .
அதிகாரம் , சுரண்டள் , சமூக மேலாண்மையில் ஆதிக்கம் செய்யும் போது
ஒவ்வொன்றாக நடைபெற சாத்யமுள்ளது தானே !
இந்த கருத்தியலை நியாயப்படுத்துகின்ற
தர்க்கம் தான் முதல் அரசியல் பணியாகும் .
மோடியின் கருத்தியலை அரசியலின் அடிப்படை
உரிமைக்கெதிரா இருக்கிறதா இல்லையா என்ற சட்ட ரீதியில் சிந்தித்தாள் கருத்தியலானது
கருவியாக செயல்படுவது என்றாகிவிடும் .
கருத்தியலை எதிர்த்து விழிப்பாக மக்களை
இருக்குமாறு செய்வதே மகா வாக்கியத்திற்கு எதிரான அரசியலாகும் .
க
. செ
No comments:
Post a Comment