3 Aug 2016

கபாலி

இப்போது பட விமர்சனம் இல்லை. 
                கபாலி படம் வரி விலக்குப் பெற்றது.  ஏனென்றால் , தமிழக அரசின் 2006-ன் முடிவின்படி தமிழில் படப்பெயரைச் சூட்டுபவர்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.  இது தமிழக அரசின் அதிகார முடிவு.

       தமிழக அரசின் முதல் மந்திரியாக ஒரு மலையாளியும் , கன்னடிகாவும்
 ( முடிந்தால் தெலுங்கும் வரலாம் ) வரலாமாம். ஆனால் , சினிமாவின் படப் பெயர் மட்டும் தமிழில் வேண்டுமா ?

       ஆயிரக்கணக்கில் , மெட்ரிகுலேசன் பள்ளிகளைத் திறந்து , CBSE etc., இனி தமிழ் மெல்லச் சாகும் ( சுஜாதா சொல்லில் ) என்பதற்கிணங்க அரசியல் செயல்பாடுள்ளது .  இனியாகும் எந்தத் தமிழரும் பிறப்பால் தமிழராகவும் , மொழியால் ஆங்கிலமாகவும் இருப்பர் . ( முதலில் எழுத்து மறையும் , பின்புதான் பேச்சு மொழி ) .  இன்றைய போக்கு பின்னைய நவீனத்துவ  உலகளாவியத்தில் , நுகர்விய முதலாளியத்தில் , அரசியல் பொருளாதாரம் விதித்த விதி இது .

       ஆக , சினிமாப் படத்திற்கு தமிழ்ப் பெயர் சூட்டி விட்டு , சினிமா டிக்கெட் 2000க்கு விற்றாலும் , நகராட்சி , மாநகராட்சி , பஞ்சாயத்துகளுக்கு கால் காசு வரி கூடக் கட்ட வேண்டியதில்லை.  தீப்பெட்டிக்குக் கூட வரி உண்டாம் .  ஆனால் , தமிழில் பெயர் வைத்து கோடிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு வரி ஏதுமில்லை வாழ்க !  செம்மொழித் தொண்டு / செம்மொழி சினிமாத் தொண்டு .

       இப்படிப்பட்ட அரசியல் பொருளாதாரச் சூழலில் , ஜூலை 27 , தி இந்து மையப் பக்கத்தில் ;
       “  லெனின் மரணத்திற்கு யார் பொறுப்பு ? ”  என்ற கட்டுரை வெளியாகி உள்ளது .  இங்கு அது ஆய்வுப் பொருளாகிறது . 

       2010-ல் இஞ்ஜினியரிங் மாணவரான லெனின் பாரத ஸ்டேட் வங்கியில் ரூபாய் 1,90,000 படிப்பு முடிக்க கடன் வாங்கினார்.

       படிப்பை 2014-ல் முடித்தார் .  இவ்வருடம் மே 6-ம் தேதி ரிலையன்ஸ் அனுப்பிய கடிதத்தில்  ” 15-ந் தேதிக்குள் 2,48,623 ரூபாய் கட்ட வேண்டும் .  அதற்குப் பிறகு வரும் நாட்களுக்கு வட்டியும் , மற்ற செலவுகளையும் சேர்த்துக் கட்டிவிட வேண்டும் ” என்று இருந்திருக்கிறது.

       மழைக்காலத்து மரக்காளான் மாதிரி ஊருக்கு இரண்டு இஞ்ஜினியரியங் கல்லூரி இருக்கிறது . ஆண்டுக்கு லட்சக் கணக்கில் இஞ்ஜினியர்கள் .  தொழில் வளர்ச்சியோ அதள பாதாளத்தில் . வேலையில்லா இஞ்ஜினியரிங் பட்டதாரி ஆனார் லெனின் .

       இப்போது கடன்காரன் ரிலையன்ஸ் ரூபத்தில் .  தந்தையோ கொத்தனார் . லட்சங்களுக்கு எங்கு போவது .  “ ஈட்டிக்காரன் ” தினமும் தொலைபேசியில் மிரட்டல்.  மகனிடம் மிரட்டல் பற்றி சொல்லிவிட்டார் .

       “  திரும்பத் திரும்ப போன் மேல் போன் போட்டு மிரட்ர தொனியில் தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க .  என்னால நெருக்கடியைத் தாங்க முடியல ”  ( தி இந்து ) .  பையனிடம் சொல்லி விட்டார் .

       இன்ஜினியரிங் பட்டதாரி லெனின் தன்னைத்தானே அழித்துக் கொள்ளத் தூண்டப்பட்டு தற்கொலை செய்து கொண்டார் . 
       இது Event ( நிகழ்வு ) .

       தி இந்துவின் இக்கட்டுரைத் தலைப்பே மிகச்சரியான கேள்வியை எழுப்பியுள்ளது 
“ லெனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? ”  என்று .  அத்துடன் ரிலையன்ஸின் நடவடிக்கை -யையும் விமர்சித்துள்ளது . பாரத ஸ்டேட் வங்கி , ரிசர்வ் வங்கிகளின் பொறுப்பையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது ( ஜீலை 27 , 2016 ) .

       ஆனாலும் இது போதாது .

       இந்தியாவில் மானை வேட்டையாடியவன் , குடித்துவிட்டு கார் ஓட்டி , வீடில்லாதவர்கள் வீதியில் தூங்குபவர்களை கார் ஏற்றி கொன்றவன் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான்.  [ சத்யம் ( Trust ) நீதிமன்றங்களின் காலடியில்] .

       கோடிகளில் கடன் வாங்கி கடனைத் திருப்பிக் கட்டாமல் வங்கிக்காரனை விரலைச் சூப்பச் செய்யும் தொழில் அதிபர்கள் . ( மல்லையா நினைவு வந்தால் கட்டுரையாளர் பொறுப்பல்ல ) .

       கோடிகள் லஞ்ச வழக்கு கோர்ட்டில் பல பத்து ஆண்டுகள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது .  இவர்கள் அதிகாரம் படைத்த பணக்காரர்கள் .  எல்லாமே வளைந்து கொடுக்கும் .  பொதுப் புத்தியும் இலவசத்தின் காலில் விழுந்து , ரோட்டில் சோறு தின்று நியாயப்படுத்தும் .

       இப்படியெல்லாம் சமூக வெளி காட்சியளிக்கும் போது லெனின் மட்டும் தற்கொலை செய்து கொண்டார் ? ஏன் ?

       இது பற்றி Alain Badiou  என்ற பிரான்ஸ் நாட்டு தத்துவவாதியும் , மன அலசல் ஆய்வாளரும் “  Theory of the Subject “   பற்றிக் கூறும் பொழுது , 

                [  When courage is combined with the Super ego , the result is what a Deleuzian would call reactive type of political movements  ] .   These are movements where militants  sacrifice themselves for higher authority such as god , the nation , or a dogmatically defined cause .
               

       இதைச் சுருக்கமாகத் தமிழாக்கம் செய்தால் இதன் சாரம்   “  ஒரு தன்னிலை துணிவுடன்  Super ego - வுடன் ஒன்றிணைந்தால் ( Super ego என்பது விழுமியம் ) அந்தத் தீவிரன் தன்னை அழித்துக் கொள்ளத் தயங்கமாட்டான் ”  என்பதாகும் . இத்தன்னிலை ஒரு வித மாயத்தோற்றத்திற்கு ( delusion ) உட்படுகிறது -  [ கேவலம் , மானம் போய்விட்டது , அம்மா , அப்பாவின் பேரை நாசம் செய்து விட்டோம் போன்ற பொய்த் தோற்றத்தின் ஆளுமைக்கு உட்பட்டு விட்டது அத் தன்னிலை ] . இந்தச் சமூக அமைப்பின் அவலங்களுக்கும் ஈட்டித் தனத்திற்கும் அடி பணிகிறோம் என்று எண்ணவில்லை .

       அதாவது , இதற்கு மாறாக , அந்தத் தன்னிலை துணிச்சலுடன் ( courage ) , நீதி ( justice ) வேண்டும் என்பதுடன் இணைந்திருந்தால் கதை கந்தலாகி இருக்கும் .

       ஏனென்றால் , நீதி வேண்டும் , சத்யம் வேண்டும் என்ற எண்ணம் நிலவும் சட்ட திட்ட திட்டங்களுடன் ஒத்துப் போகாது ; எதிர்த்து நிற்கும் .  இதுவும் அலன் பெய்டுதான்.

       உயர்நீதி மன்றமோ , உச்ச நீதிமன்றமோ சூமோட்டோ ( suo  moto ) வழக்காக இதை ஒருக்கால் ஏற்றால் . . . ? ( சட்டம் அனுமதித்தால் )  உண்மையை  (Trust ) நீதி எப்படித் தேடும் என்பது வெகுஜன மக்களுக்குத் தெரியவரலாம் .

       வங்கிகளும் , அரசும் , எத்தனை விதமான கடன்களை அரசியலுக்காக ரத்து செய்திருக்கிறது. 

       கேளிக்கை வரி விலக்கு ஆண்டுக்கு எத்தனை கோடி.

       இந்தக் கல்விக் கடனை ரத்து செய்திருந்தால் என்னவாம் ; அல்லது வட்டியை நீக்கி விட்டு தவணைகளைக் கூட்டியிருக்கலாம்.

       குறைந்தபட்சம் கல்விக் கடன் வாங்கிய வேலையில்லா பட்டதாரிகளை அனுதாபத்துடன் அணுகலாமே .

       கடன் வசூலுக்கு கங்காணி ரிலையன்ஸிற்கு தள்ளுபடி 55%  என்பது அநியாயமில்லையா ? . இது அவர்களை ஈட்டிக்காரனாய் ஆக்குமே !  அரசியல் விழிப்பு பொதுப் புத்திக்கு இதை வேறு , வேறு பரிமாணங்களில் உணர வைக்க வேண்டும் . 

                                                                     க.செ  

26 Jul 2016

இதழ் – 8 அவள் மனுஷி.....அங்காடிப்பொருள் அல்ல

            
            ஜூலை மாதத் தொடக்கத்தில் ஒரு காலைப் பொழுதில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் , ஒரு பெண்ணை B.E படித்த வாலிபன் , கசாப்புக்கடைக்காரனாகி வெட்டி, சிதைத்து , கூறுபோட்டு விட்டான்.

      முதலில் இதை கொலை வழக்காக ஊடகங்கள்  பரைப்பு செய்தன.
      பின்பு சாதி அரசியலை , அவர் சொன்னார் , இவர் சொன்னார் என பரப்புரை செய்தன.
      பின்பு குற்றவாளி பிடிபட்டார், தற்கொலைக்கு முயன்றார் என்று பரப்பியது.
      பின்பு ஒரு வக்கீலின் வக்காலத்து “ நான் அவனில்லை ” என்று.
                அடுத்த நாள் அந்த வக்கீல் வாபஸ். வேறொரு வக்கீல் வந்து போலீஸ் மேல் புகார்.  பின் இத்யாதி, பெங்களூர், வேறு தொடர்பு , என்று வதந்தி பரப்புதலும் நடந்தது  (எந்த நிரூபணமும் காட்டவில்லை).
                [  EVENTS எல்லாமே எழுச்சிப்படுத்தத்தான் ; எல்லாமே காட்சிப்பொருளே ; விற்பனைக்கானதுதான் ]
      கொலை நடந்த பின் “ ஒரு தலைக் காதல் ” என்றது T.V கலாச்சாரம்.
      ஒருவன் தனக்கு பிடித்த பிம்பத்தை ( நபரை ) தானே காதலித்துக் கொண்டு ,அந்த நபர் ( பிம்பம் ) காதலிக்கவில்லை என்றால் அது ஒரு தலைக்காதலா ? தன் விருப்பத்தை தானே காதலிப்பது – விருப்பப்பட்ட நபர் மறுத்தால் காதல் தோல்வி என்று கொலை செய்வது.
      கொலைகாரனைப் போலவே ,அந்தப் பெண்ணிற்கும் உணர்ச்சி உண்டுதானே ! சுயமரியாதை உண்டு, சுய கனவுகள் , வாழ்வின் மீது லட்சியம் உண்டு என்பதை சாதிய கலாச்சாரம்தான் உணரவில்லை என்றால், முதலாளிய ,ஜனநாயக, பிந்தய கலாச்சாரமும் உணரவில்லை.
      சுயமோக வெறிக்கு மறுப்பு ( negation ) வந்தவுடன், மிருகஉணர்ச்சிக்கு அடிமையாகி, வலுத்தாக்குதலுக்கு வீச்சறுவாலைத் தூக்குகிறது. இது காதல் நோயினால் மட்டுமல்ல; இது தன் சுயமோகம் அங்கிகரிக்கப்படாததால் ஏற்பட்ட  
( affect ) / மனக்காயம் ( trauma ).

      இந்த மனக்காயமானது சுய மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.  இம் மனக்காயத்தை (affect) எப்படியாவது சரி செய்வதற்கான மார்க்கங்களில் ஒன்றாக  Evil –ஆக (கொடியதாக) மாறி , காரியமாற்றி தன் சுயமோகத்தை திருப்தி செய்வதாகும்.
இந்த மாதிரி நபர்களுக்கு அவர்களின விருப்பப் பொருள் ( object love  ) தன் நிபந்தனைக்குட்பட்டதாகவே எப்பவும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடித்தளமாக கொண்டே காதலை , உறவைப் பார்ப்பது.
                தன் காதலுக்குரிய அந்த ஆசைப்படு பொருள் (object love) ஒரு தன்னிலை (subject ) ; உன் காதலை ஏற்கவோ / மறுக்கவோ அதற்கு முழுச் சுதந்திரமுண்டு. அந்த சுதந்திரத்தின் மீது நீ உரிமை கோர முடியாது , அடிமைப்படுத்த முடியாது.  உனக்காக , உன் வீச்சறுவாலுக்காக உன்னை ஏற்றால் அவள் சுயமரியாதை கேள்விக்குள்ளாகும்.  அந்தத் தன்னிலை தன்னை இழந்து விடும்.

      ஆக , காதலை இனியும் தனிமனிதப் பிரச்சினையாகப் பார்காமல் உயர்நிலைப் பள்ளியிலிருந்தே மனம் , வசியம் , சுயவசியம் , காதல் போன்றவற்றிற்கு கலந்தாய்வும் (counselling ) வேண்டும்.  அதில் sexuality   பற்றிய அறிவும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் .
      இறுதியாக , மற்றொன்று . கொலை செய்யப்பட்ட  நேரமும், கொலைக்களமும் இரவல்ல.  கொலை ரகசியமாகவும் நடக்கவில்லை.  மாறாக , நூற்றுக்கணக்கில் ஆணும்  பெண்ணும் குழுமியிருந்த இடத்தில், நேரத்தில் கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

      உறை பனியில் (தங்கள் உயிர் பயத்தில் ) உறைந்து கொடூரத்திற்கு மவுன சாட்சியாக மட்டுமே இருந்திருக்கிறனர்!

      ஏய் !  ஏய் !!  விட்டுடா !! என்றாவது மொத்தமாக சப்தம் எழுப்பியிருந்தாலும், அது ஒரு எதிர்ப்பாகவும் , மிருகத்திற்கு ஒரு அவசரத்தை கட்டாயப்படுத்தியிருக்கக் கூடும்.

      பொதுப்புத்தியை , கொடூரன் உணர்ந்திருக்கின்றான்.  இதே மாதிரி திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் கடைவீதியில் ஒரு ஆட்டோ   ஓட்டுனர் குடும்பத்தில் தகராறு ; பேச்சு முற்றி தள்ளுமுள்ளு. வந்தனர் சீருடைக்காவலர். லத்திக்கம்மால் மாட்டை அடிப்பது போல் அடித்து , ஓட, ஓட, கத்த, கத்த, அங்கேயும் உறைபனி. கடைவீதி / அங்காடி அமைதியாக கவனித்துக் கொண்டிருந்து .  சீருடை லத்திக்கம்பு சிலம்பு விளையாட்டை , பரப்புரை செய்தது  T.V.  உள்ளுர் ஆட்டோ சங்கம் மட்டும் ஒரு வேலை நிறுத்தம் .  தமிழ் அரசியல் கட்சிகளின் கணக்கில் இது வரவு வைக்கப்படவில்லை.

                                                                   க.செ.

                                                                                                                                                                          

19 Jun 2016

மற்றமை - 7

                    2015 முதல் 2016 வரையில் வெளிவந்த  கட்டுரைகளின்
                                                                தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது  மற்றமை-7                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 விலை ரூ. 125 /
க.செ

11 May 2016

" ஜெ " : காண்பதற்கரிய பரப்பிரம்மம்

       கணக்கிடமுடியாத காலத்தைக் கடந்த ஒன்றல்ல இது .
       இது , அதுவாகப் பாவித்து Virtual Reality – யாக தொலைதூரத்துப் பிம்பமாகத் தெரியும்.
       அரூபமான தொப்புள்கொடி உறவு கொண்டாடும்.
       ஒரு பழங்கதை நிஜமாகிறது :
      இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் உயர்ந்த மலை உச்சியில் நின்றுகொண்டு ஒரு மனிதன் “ Hai ! Hitler “ என்று ஓங்கி சமவெளியை நோக்கிக் கத்தினானாம் . யார் என்று பார்த்தால் , அது ஹிட்லர் தானாம் . அவன் மனதில் ஹிட்லர் என்பது மா வல்லமை
( omnipotent ); எங்கும் நிறைந்தது ( omnipresence) . [ நம்மூர் , மூன்று உலகையும் தன் காலடியால் அளந்த வாமனன் மாதிரி ] .இது ஹிட்லரின் அகப்புறம்.
       பிந்தைய நவீன காலக் கட்டத்தில் , மூலதனத்தின் சட்டசபைப் பிரதிநிதிகளை 110 விதியின் ( rule ) பேரில் கற்சிலைகளாக்கிவிட்டு , கையாலாகாத ஜடங்களாக்கி தன் விருப்பத்தை நட்த்திக் கொள்ளலாம்.
       விதி 110 என்பது  ( ஹிட்லருக்காக ) பாசிஸ்டாக இயங்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளே வசதி செய்திருக்கிறது போலும்.
         Evil   கண்ணுக்கு நெறி தெரியாது . நெறியை , நல்லதை அழிக்கத்தான் செய்யும் .
       பரப்பிரம்மத்தை மக்கள் காணொலிக் காட்சியில்தான் தரிசிக்கமுடியும்.
       [ நூற்றுக் கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதும் காட்சியளிக்க மனமிரங்கவில்லை ]
       சக மந்திரிகள் , M.L.A  -க்கள் எல்லாம் மூலவிக்கிரகத்திற்கு முன் துவாரபாலகர்களாக மட்டுமே நிலைகொண்டிருக்க முடியும் .
       கொந்தளிப்பு வசப்பட்ட நேரமானால்.......தொப்புள்கொடி உறவு பிறந்துவிடும் .
                    

“ உங்களால் நான் .
உங்களுக்காக நான் ”.


                                       சென்னையில் வெள்ளம் ( வாட்ஸ் அப் )
                     “  உங்கள் அன்புச் சகோதரி  ஜெயலலிதா பேசுகிறேன்.
                     உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்.
                     எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது.
                     எனக்கு சுயநலம் அறவே கிடையாது.
                     எனக்கு எல்லாமே நீங்கள்தான்.
                     என்  இல்லமும் உள்ளமும் தமிழ்நாடுதான் “. –www.youtube.com /water
                தமிழக முதல்வரின் பேச்சில் குறிப்பான்கள் காணாமல் போயிருக்கிறது.
       உதாரணமாக  , அதிகாரம் எப்படி ஒடுக்குகிறது என்ற குறிப்பான் இல்லை .
       அந்த ஒடுக்குதலின் துவக்கப் புள்ளியை சிம்பாலிக்காக ( symbolic ) உணரமுடியும்.
       நழுவி விட்ட குறிப்பான் ஆதிஒடுக்குதலை ( primarily repressed ) குறிப்பிடுகிறது .
       “ ஒடுக்குதல் தொப்புள்கொடி உறவை முன்னிலைப்படுத்துவதால் ஒடுக்குதலின் குறிப்பான்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை “.
       இது Ernest Jones –ன்  Theory of Symbolism .( இது Symbolic Register  -ல் இருந்து வேறுபட்டது )
       இதை எளிமையாக்கினால் ஜெ. இரட்டை விரலை ‘  V ’  வடிவில் காட்டினால் இரட்டை இலை ; அவர் கட்சிச் சின்னமான இரட்டை இலைச் சின்னம் நினைவுக்கு வரும் .
       கறுப்புச்சட்டை அணிந்த மனிதர்கள் கூட்டம் கண்ணில் பட்டால் அங்கே தி.க.வினர் குழுமியுள்ளனர் என்று மனம் அறிந்துகொள்கிறது. இது சிம்பாலிக் ( Symbolic ).
              அதாவது ,  ‘  V  ‘ - யும் , கறுப்புச் சட்டையும் பதிலிகள் ( substitution ) . நாகரீகம்  கூட முடிவற்ற பதிலிகளின் தொடராக இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும் என்கிறார் ஜோன்ஸ். இது ஒரு நீண்ட கோட்பாடு .
       முதல்வர் ஜெயலலிதாவின் மேலே கூறிய கூற்று ஒரு குறியீடு . அது தொடக்ககாலக் கூறை ( primary element ) பிரதிநிதித்துவம் செய்கிறது.
       ஏனெனில், குறிப்பீடானது ( அன்புச் சகோதரி ) தொடக்க காலக் கூறுடன் தொடர்புடைய ஒன்றைக் கொண்டுள்ளது ; ஒன்றை ஒன்று பதிலீடு செய்து கொள்கிற சொற்களுக்கு இடையில் உள்ள நெருக்கமான உறவுக்கு அழுத்தம் கொடுக்கிறார். செய்திகளுக்கும் விசயங்களுக்கும் இடையிலான முரண்பட்ட தன்மைகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை .
       மக்களுக்கும் தமிழக முதல்வருக்குமான முரண்பட்ட உறவு எப்படி மாற்றம் ( பதிலி ) ஆகிறது பாருங்கள் .
       மக்கள் = உங்கள் ஆகிறது ; முதல்வர் = சகோதரி ஆகிறது.
       மக்களுக்கு வரும் துன்பங்கள் = உங்களுக்கு வரும் துன்பமாகிறது ( intimacy ) .
                     “ எனக்கு எல்லாமே நீங்கள்தான் ” .
                     முதல் மந்திரி = எனக்காகிறது.
                     4 1/2 கோடி மக்கள் = நீங்கள்தான் ( உறவு ) ஆகிறது.
       “ என் இல்லமும் உள்ளமும் தமிழ்நாடுதான் ” . ( கொடநாடு , சிறுதாவூர் , போயஸ் கார்டன் தவிர . அப்படித்தானே ?)
       மக்களின் அரசியல் , பொருளாதாரம் , சாதியப் பிரச்சினைகள் அனைத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஜெ. சொல்வதாக மக்கள் உணரவேண்டும் என்கிற ஜெ.யின் நனவிலி ஆசையின் வெளிப்பாடு அது.
       இம்மாதியான தாய் , சகோதரி குறியீட்டு முழக்கங்கள் பலவுண்டு . சமயத்திற்கு தகுந்த பயன் உண்டு அவைகளுக்கு.
       இறுதியாக , இதிலிருந்து , மிக முக்கியமான , அடிப்படையான, குடிமகன் / குடிமகள் என்பது ஜெ.-யின் குறியீடுகளால் நனவிலி உணர்விலிருந்து மறக்கடிக்கப்படுகிறது.
       ரத்த உறவு முன்னிறுத்தப்படுகிறது.
       இந்தக் குறிப்பீடு மற்றொரு EVIL  -ஐ செய்ய வித்திடுகிறது.
       மக்களை (  ரத்த உறவின் பேரில்)  சமூக விலக்கம் செய்கிறது.
       சமூக விலக்கம் என்றால் என்ன? – A Bionian Approach by Ana Archangelo
       “ சமூக விலக்கம் என்பது சமூகக் குழுக்கள் ( communities ) , நிறுவனங்கள் , இவர்கள் வாழ்கிற வாழுமிடங்கள் போன்ற பிரதானமான சமூக அமைப்புகளில் , பொருளாதார மூலாதாரங்களில் தனியன்களும் , குழுக்களும் எந்தளவிற்கு பங்கேற்க அனுமதிக்கப்  படுகின்றனர் என்பதுடன் தொடர்புடையதாகும் . சமூகப் பங்கேற்பிலிருந்து விலக்குதல் அல்லது ஓரங்கட்டப்படுவது ( marginalization ) என்பது தனியன்கள் , உரிமைகளைக் கொண்டுள்ளனரா? இல்லையா? என்ற பிரச்சினையோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல . அது , தனியன்கள் , தம்மை உரிமைகளைக் கொண்டுள்ள தன்னிலைகளாகத் தம்மளவில் உணர்ந்து கொள்வதற்கான சிம்பாலிக் சாத்தியப்பாட்டை ( symbolic possibility ) கொண்டுள்ளனரா ? இல்லையா? என்பதையும் சார்ந்ததாகும்.’
       மேலும் அக்கருத்து கூறுவது ;
       “  ‘ இந்த உலகில் ’  ( நாம் யார் என்பதை ) நமக்கு நாமே கண்டுகொள்வதற்கு ; ‘ இந்த உலகில் உள்ள ஒரு இடத்தை நம்மளவில் உடைமையாக்கிக் கொண்டுள்ளோம் ‘ என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும் என்று கோருகிறது . இந்த இடமானது இவ்வுலகில் உள்ள சாத்தியமான பல்வேறு இடங்களுள் ஒன்றாகும் ; தனிமனிதர்களுக்கிடையிலும் , பொருளாதார ரீதியாகவும் உள்ள உறவுகளின் வலைப்பின்னலில் உள்ள ஒரு இடமாகும் ; சமூகத்தில் , வாழும் இடத்தில், அதிகாரத்தில் , ஒற்றுமையில் ( solidarity ) அல்லது இவற்றின் ஏதோவொரு சேர்க்கையில் உள்ள இடமாகும் . கட்டமைக்கின்ற , கண்டுகொள்ளுகிற செயல்பாட்டில் இரண்டு வழிகள் பிரதானமாகக் குறுக்கிடுகிறது. அவை (1). தன்னிலையின் தேவைகளை நிறைவு செய்கின்ற ஒன்று. (2). தன்னிலைக்கு ஒரு சமூகம் எவற்றை வழங்கவேண்டும் என்று ஒருங்கிணைக்கின்ற , திட்டமிடுகின்ற ஒன்றாகும்.
       ஜெ-யின் ரத்த உறவு  ( 1 ) . மக்களுக்கான அவசியப்பட்ட நேரத்தில் அவர்களின் தேவையை நிறைவு செய்யவில்லை. ( 2 ). தன்னிலைக்கு சமூகம் எவற்றை வழங்கவேண்டும் என்று ஒருங்கிணைப்பதிலும் , திட்டமிடுவதிலும்.... மக்கள் ஒதுக்கப்பட்டுவிட்டனர்.
       மக்களின் நனவிலியில் உள்ள ரத்த உறவை மீட்டுறவு செய்வதற்காகவே...
                       “  எனக்கு எல்லாமே நீஙகள்தான்.
                       எனக்கென்று குடும்பம் எதுவுமில்லை.
                       நீங்கள்தான் என் குடும்பம்....”
                               
உடன்பிறவா சகோதரி  ?
                      
       இந்த நனவிலி அரசியலை முறியடிக்கும்போதுதான் [ அதாவது , இரண்டு கூறாக்கப்பட்ட உடலை தலைமாற்றாக போட்டபின்தான் ஜராசந்தன் செத்து ஒழிந்தான். கிருஷ்ண பரமாத்மாவே அப்புறம்தான் பெருமூச்சு விட்டார் ] , அதாவது , நனவிலிதான் அரசியலாக உள்ளது.
மொழியாக்கம் : பிட்சுமணி
                                                  
நண்பர்களுக்கு ,
                இனிவரும் நாட்கள் மற்றமையில் ஓய்வுநாட்கள் எனக்கொள்ளலாம்.
                கடந்த ஒருவருட காலத்தில் தொடர்ச்சியாக 48  ஆய்வுக்கட்டுரைகள் . இவைகளை மற்றமை 7 – வது ஆய்விதழாக கொண்டுவரலாம் என எண்ணுகிறோம் . இதழாகக் கையில் இருப்பது இன்னும் வசதிதானே.
       அவசியமென்றால் இடையில் ஒரு சில கட்டுரைகள் வரலாம்.
       இன்னும் ,விமர்சனங்களும் Opinion – களும் மற்றமையைச் செழுமையாக்கும் .
அன்புடன்
க.செ
     11-5-2016