15 Jan 2015

பேனாவும் : AK 47-ம்

அந்தத் தொடர்பனிக்காலத்தில்,
11-1-2015-ல் கோடிப்பேர் பாரிஸ் நகரைக் குலுக்கி விட்டனர்.
50 நாட்டு அரசுத் தலைவர்களும் அடங்குவர் அந்த மக்கள் வெள்ளத்தில் ( பாரிஸ் புரட்சிக்குப் பின் ! ).
பாலஸ்தீனத்தின் பிரதிநிதியும், இஸ்ரேல் பிரமரும்கூட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
      இத்துணைக்கும் காரணம் பயங்கரவாதிகள் ( terrorists ) பேச்சுச் சுதந்திரத்தை, பேனாவை குறைத்து மதிப்பிட்டதால் அவர்களுக்கெதிரான எதிர்வினையை  மா மக்கள்திரள் காட்டிவிட்டது. [ இம்மாதிரியான போர்த்தந்திரம்,செயல் பயனுள்ளதா? சிந்திக்க வேண்டும்]
      லெக்கான் ஒரு முறை பயங்கரவாதத் தன்மையை THE BIRDS என்ற சினிமாக் காட்சியை ஒப்பிட்டுப் பேசினார்.
......" The Birds, Alfred Hitchcock created horror by showing us what birds could do, but thankfully don’t do: they could viciously attack anyone and everyone without provocation. We humans have same capacity for aggression as animals "      -The Psychology of Terrorism
      ஆனால், பாரிஸில் பயங்கரவாதம் ஒரு குறிப்பான பத்திரிக்கைக்கெதிராக ஆரம்பமாயிற்று.  அதனைத் தொடர்ந்து வழக்கம்போல்.
      பாரிஸில் ? பயங்கரவாதம்  ஏன் ? என்றால் மனஅலசல் காரணத்தை (cause ) அறிய முயற்சிக்கும்.
      கோழியா ? முட்டையா ? எது முதலில் என்றால் அது தொடர்கதையாய்ப் போய்விடும்.
      ஆனால், செயல்நோக்கம் ( Motivation ) என்பது கசப்புணர்வும், வெறுப்பும்தான் (hatred ) அடிக்கட்டுமானம்.
      இஸ்லாமியரில் உள்ள பயங்கரவாதமும் சரி, இந்து பயங்கரவாதமும் சரி, அல்லது எல்லா மதத் தீவிரவாதமும் சரி, இவைகளிலெல்லாம் மனித சுயமோக பயங்கரவாதத்தின் நஞ்சு ஓட்டம் இவர்களின் [ பார்வையில் (view) ] அடிநாதமாக உள்ளது.  இதில் இலங்கையின் பௌத்தம் கூட பேரினவாதிகளிடமிருந்து தன்னை மீட்டுக் கொள்ளமுடியவில்லை.
      மதத் தீவிரவாதம் மனிதர்களின் சுயமோகத்திற்குத்  தீனியாக உள்ளது. அதுபோல் மனிதர்களின் சுயமோகம் மதத்திற்கு புனிதம், பூரணத்துவம், முழுமையானது, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்ற அந்தஸ்தைக் கொடுக்கிறது.
"நம்மைச் சுற்றி உள்ள சமூக உலகம் தொடர்ச்சியான (constant ) கோரிக்கைகளை (demands ) வைக்கிறது நம்மீது ; அதாவது தனியன் மீது". இது லெக்கான்.
அந்தத் தனியன் இஸ்லாமியனாக இருந்தால் ' அல்லா மிகப் பெரியவன்', 'விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன்'  என்பான்.
அந்தத் தனியன் ருஷ்டியாக இருந்தால் எழுத்துரிமை என் பேச்சுரிமை என்பான்.
தமிழ் நாவலாசிரியர் பெருமாள் முருகனும் அப்படித்தான்.
அந்தத் தனியன் கருஞ்சட்டையாய் இருந்தால்,
பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பார்.
அந்தத் தனியன் வைணவனாக இருந்தால்,
ராமன், ஸ்ரீராமபிரானாகப்படுவார்.
      இப்போது ஒரு அடி முன் சென்று பார்ப்போமானால், ருஷ்டியும் , பெருமாள் முருகனும் அவர்களின் சுதந்திரத்திற்குட்பட்டு கதை எழுதினார்கள். அதற்குப் பரிசாக ருஷ்டிக்கு மரண தண்டனை கிடைத்தது. நல்லவேளை பெருமாள்முருகனுக்கு கிடைத்ததோ ஊர்கடத்தல். அதாவது, அர்த்தநாரீஸ்வரர்பார்வையில் (' திருச்செங்கோடு புரட்சிவாதிகள்' ) முருகன் படக்கூடாது என்பதுதான்.
      ருஷ்டி நோக்கத்துடன் / உள்நோக்கத்துடன் அந்த நூலை எழுதினாரா ? என்பது எனக்குத் தெரியாது. அதே மாதிரி ப்ரெஞ்ச் 'CHARLIE HEBDO' பத்திரிக்கைக் கார்ட்டூன் முஸ்லீம்களை சீண்டியதா (provoke) ? சிறுமைப் படுத்தியதா  (humiliate ) ? தெரியாது.
      ஆனாலும் இவர்களுக்கு ' ISLAMOPHOBIA' இருக்க வாய்ப்பு உண்டு.ஏனெனில் சிலுவைப் போர் வரலாறு உண்டு, அதைப்பற்றிய கருத்தாடலும்உண்டு.
      இந்த விமர்சனங்களுக்கு ஒடிந்துவிழும் அளவிற்கா இஸ்லாம் இருக்கிறது(தன்மையில்). இருக்காது.அது, தொடர்ந்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் சிலுவைப் போரை எதிர்கொண்டு ஜீவிதத்தில் இருக்கிறது. அப்படியானால் ஏன் பேனாவை  உடைக்க ஆரம்பித்தனர் என்றால், அது, அதைக் கருவியாகப் பயன்படுத்தும் சுயமோக வெறியர்கள்,இஸ்லாம் புனிதம் என்ற தனித் தலைமைக்கு மறைமுகக் கோரிக்கை (demand ) வைப்பவர்கள், தங்கள் குலப் பெண்களின் உரிமையைக் கூட விட்டுவைக்காத ஆண்மைய சுயமோக பேரழிவுக்காரர்கள் ( narcissistic catastrophist ) .
      இவ்வளவு  பேரழிவும் இவர்களை ஒன்றும் செய்யாது ( ஹிரோசிமா / நாகசாகி போல ). புனிதம் காப்பதும், அதற்காக சிறார்களை தற்கொலை வெடிகுண்டுகளாக [suicide bombs] நைஜீரியா ஆக்குவதும் இந்தத் தன்மையே.
      ஆனால் பெருமாள் முருகன் திருச்செங்கோட்டுக்காரர் தானே ? அவர்களில் ஒருவர் தானே ? அப்படியிருந்தும் இந்தக் ' கொடுங்கோன்மை' அவருக்கேன் [ மன்னிக்கவும், நாவல் படித்ததில்லை] .
      மகாபாரதக் கர்ண சகோதரர்கள் மட்டுமல்ல, துரோணச்சாரியார் கூட; இன்னும் மேற்கே போனால் இயேசு கூட கன்னி மேரியின் குழந்தை தானே? கர்ணனைப் போல. மேலே கூறியவை எல்லாம் கதையும் தாண்டிய MYTH ( தொன்மம் ). இது இப்படி நடக்கவேண்டும் என்ற வேண்டுதலைக் குறிக்காது.
      இல்லாமை, மற்றமையில் இல்லாமை (தீர்வு கூட) ஒருபுனைவை(Fantasy) உருவாக்கும் (evoke )  மனத்திலிருந்து  புறப்பட்டது புராணிகம். இதைப்  புரியலாம் / ரசிக்கலாம்/ வியக்கலாம். இதை எதார்த்தம் என்றோ / சரி தப்பு விளையாட்டிற்கு உட்பட்டது என்றோ கருதக்கூடாது. ஏனென்றால், அர்த்தநாரீஸ்வரர் கூட  ஒரு தொன்மம்தான். பொதுப்புத்தியில் கடவுள் என்பதும், காட்டு என்பதும் தமிழகத்தின் அரசியல் விளையாட்டு.
      பின் ஏன் இந்த அப்பாவிகளுக்கு அழித்தொழிப்பு, மரணதண்டனை, ஊர் விலக்கம் எல்லாம்?
      மனஅலசலில் இதற்கான முக்கிய காரணமாக வெறுப்பு (hatred ) என்கின்றார்  Rina Lazer . ( இது நனவிலி ). – International journal of psycho analysis, vol 84,2003
      அவர் தன் ஆய்வுக் கட்டுரையில் வெறுப்பை விளக்குகையில்,
" வெறுப்பு சித்தத்தில் போதாமையாக ( deficiency ), இடைவெளியாக, தானியத்தையும், பதரையும் பிரித்துப் பார்ப்பதற்கு இயலாத சித்த அமைப்பு என்றும், தனது சாரத்துடன் (own essence ) இணைத்துப் பார்க்க முடியாத ஒன்று" என்றும் வரையறுக்கிறார்.
பெருமாள் முருகன் கதையில் தமிழ் வாசகர்கள் பெரும்பான்மையோர் எதை தானியம் என்கின்றனர்; எதை பதர் என்கின்றனர் ? திருச்செங்கோட்டினர் எதை 'தானியம்' என்கின்றனர்?  எதை 'பதர்' என்கின்றனர்? அம்மக்களின் சுயத்தின் சாரம் எதுவாக காலம் காலமாக உள்ளது? அப்படி ஒரு வீரியம் தெய்வத்திற்கு, ' Thing ' -க்கு இருப்பதாக நம்பப்பட்டதா ,  இல்லையா?  [ அது நம்பிக்கை தான் ; எதார்த்தமல்ல ]. அந்த நம்பிக்கைதான் , Myth தான் ( தொன்மம் )  பெருமாள் முருகனின் கதைக் கரு . இன்றைய திருச்செங்கோடும் அல்ல, வெள்ளாளக் கவுண்டர்களும் அல்ல. யாரையும் புண்படுத்தும் நோக்கம் உள்ளதும் அல்ல.                                                                                         
       அல்ல, அந்தத் தொன்மம் (Myth ). அது இல்லாமையால் ( Lack ) எழுந்த புனைவு (fantasy ). அங்குதான் இலக்கியம் பிறக்கிறது.
மற்றொருபுறம்
[ எதனால் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கேட்கிறது மனம். எழுத்தும் , பேச்சும் வானளாவிய உரிமை பெற்றதல்ல. அயலானின் ( other ) மனத்தை பேச்சோ, எழுத்தோ, புண்படுத்துமேயானால் அது உளவியல் வன்முறை. ஞாபகம் இருக்கட்டும். வெறுப்புக்கு, கோபத்திற்கு, தாக்குதலுக்கான வித்து அது ] .
க,செ,
© The author
                                                                                                                          

10 Jan 2015

வேதகாலம்... முருங்கை மரம் ஏறுகிறது

சமூக ஒழுங்கிலும் (social order)  பதட்டம் (tension)  இருந்துகொண்டே இருக்கும். அதாவது, ஒரு திட்டத்திற்கான ( programme) முயற்சி அது " என்பார் லெக்கான்.
தமிழகத்தில் மரபு சார்ந்த அதிகாரம் எது? என்னவகையான சமூக உறவு அதை அகற்றிவிட்டு அந்த இடத்தைக் கவர்ந்தது? நிச்சயமாக கரடுமுரடான பொருள்முதல்வாதம் மேலாண்மைக்கு வந்தது. சமூக ஒழுங்கில் முரட்டுவாதமும் , வயிறு , சோறு , அதிகாரம் போன்றவைகள் முன்னணிக்கு வந்தன. ஆரோக்கியமான கலாச்சாரத்திற்குப் பதில், அடிதடி கலாச்சார அரசியலை மேலாண்மைப்படுத்தியது. சுயவசீகரிப்பு , பகட்டு , திகட்டாத கொக்கரிப்பு . சுயமோகவெறியைப் பொதுவெளியாக்கிவிட்டது அது.  வீதியெங்கும் சினிமா கட்டவுட்டில் துவங்கி , ப்ளக்ஸ்போர்டுக் கலாச்சாரத்தில் கழுத்தளவு மூழ்கியிருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகு.
ஆடித் தள்ளுபடியில் மானத்தை இழந்துவிட்டு நுகர்ந்து , நுகர்ந்து, சாராய நெடிமட்டுமே வாசனையாகி , அண்டை அயலாரின் ஆயிரக்கணக்கான பிணவாடை கூட வீசவில்லை. இறந்த உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்பதும் பெரியவீட்டு இழவுக்குப் பிறகு மறந்தும் போச்சு.
இந்நிலையில் விதவிதமான தலைப்பாகை போட்டியில் [ ராகுல் vs மோடி ] வெற்றி கொண்ட மதர்ப்பில் அரசின் தேசியக் கொடியை நடைமுறையில் இரண்டாம்பட்சமாக்கி , காவியை அடையாளமாக்க முன்னிறுத்தும் வேலை தொடங்கிவிட்டது.

விசயங்களுக்கும் ( things) , வரலாற்றிற்கும் விளக்கம் ( interpretation) கொடுப்பதேன்?
விளக்கம் நனவிலி. ஒடுக்கப்பட்டது மீண்டும் வருகிறது.

தமிழகத்தின் உழைக்கும் வர்க்கமாக (மதி மயங்கி) தமிழ்ப் பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

1.        தமிழ்ப் பிராமணர்கள் அதிகாரத்திலிருந்து மெல்ல மெல்ல விரட்டி அடிக்கப்படுகின்றனர்......
       இதுபோல் பட்டியல் நீளுகிறது. ஆதரவும் , எதிர்ப்பும் மத்தியதர வர்க்க ,மேல்சாதி VS  வெள்ளாளர் சாதி தலைமையில் , அடிதடி சாதிகள் etc ; கரடுமுரடுகள் (crude materialists ) வழக்கம்போல்.

பிரதமரே விநாயகனுக்கான யானைத் தலையானது அன்றைய ப்ளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை முறையால் வந்தது என்ற கூற்று, சமஸ்கிருதத்தை ஆட்சிக் கட்டிலில் வைக்கும் முயற்சிகள்.
-ஆதாரம் : The Guardian.28 October 2014

பொருளாதாரத்தில் இந்தியாவை உலகளாவிய, பன்னாட்டு மூலதனத்தின் விளையாட்டு மைதானம் ஆக்குவது ( இப்போது மட்டும் இந்தியாவா? மற்றதெல்லாம் இந்து ). கூடங்குள அணுக்கழிவைக் கொட்டிட, கொட்ட; உலை அதிகரிப்பு ( இதுவும் வேதகால மரபுதானோ ! )
நவீன மோஸ்தரில் ஒன்றான தொழில் நுட்பக் கல்லூரிகள் மூடுவிழாவுக்குப் பூஜை போட ஆரம்பித்துவிட்டனர். லட்சங்களில் இஞ்சினியர்கள் வேலையில்லாப் பட்டதாரிகள்.
தமிழக ‘விளிம்பு’  (marginal ) மக்களான பிராமண கலகக் குரலுக்கு எதிராக (திராவிடம் சாராத) ஒரு பிராமணக் குரல்.
ஆனந்த விகடன் (31-12-14). “ கேள்வி : சமீபமா, தமிழ்நாட்டுல பிராமணனா இருப்பது சாபம்கிற மாதிரியான விவாதங்கள் நடக்குதே.... அப்படியா என்ன? ”
       பதில் : ” நிச்சயமா இல்லை ! இப்பவும் பிரபல தொழில் நிறுவனங்கள் யார்கிட்ட இருக்கு? அதன் உயர் பதவிகளில் யார் இருக்காங்கனு பாருங்க. பொருளாதார ரீதியா பல பிராமணக் குடும்பங்கள் சராசரி வசதியைக் காட்டிலும் உயர்ந்த இடத்தில் இருக்காங்க. அவங்க குடும்பத்திலே..
 ‘ படிக்கிற கலாச்சாரம்னு ’ ஒன்னு இயல்பிலேயே இருக்கு. சமூகத்தைப் பத்தின புரிதலும், வாய்ப்பினைத் தேடிப் பயணிக்கும் திறமையும் நிறையவே இருக்கு ”.....   
                  -கர்நாடக சங்கீத பாடகர் டி.எம். கிருஷ்ணா

இவர்களுக்கு என்ன வேண்டும்? 
வேத காலத்திலிருந்து ஆரம்பித்து முகலாயர் துவக்கம் வரை அனுபவித்து வந்த மகிழ்வு ( jouissance  ) காயடிப்புக்குள்ளானது ( castration ). 1947-க்குப் பின் வட இந்தியா போல் இல்லாமல் தமிழகம் வேளாள சாதித் தலைமைக்குச் சென்று விட்டது. அத்தோடு அரசு பதவிகளில் ஒதுக்கீடு என்ற காயடிப்புத் தொடர்வதால் பிற இடங்களுக்கு அவர்கள் பார்வை சென்றிருக்கிறது.

இன்று தேடுவது இழந்துபோன வேலையை அல்ல. ஆசைப்படுவது (desire ) Phallic jouissance - க்காக. அதாவது, இழந்த சமூக / அரசியல் / அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அதிகார வேட்கைக்கான ( Phallic jouissance ) உந்தல்தான் (drive ) அவர்கள் கோரிக்கை (demand ) .

இதுமட்டுமல்ல, ஏற்கனவே கூறியபடி மதமாற்றம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன, வரும். மேற்கூறிய கோரிக்கைகள் புதியது அல்ல. அவைகள் ( கோட்சே சிலை வைப்பு உட்பட ) ஏற்கனவே எழுப்பப்பட்டு, காயடிப்புச் சிக்கலில் சிக்குண்டு தேர்தலுக்காக கைகழுவி விட்டுவிட்டு ; இன்று ஆட்சிக் கட்டிலில் மேலாண்மை அதிகாரத்தில் B J P இருக்கிறது. காயடிப்பு அச்சத்தில் கைவிடப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் தருணம் என்பதால் தூண்டுதல் (drive) காத்திரமாய் இருக்கிறது.
எழுப்பப்பட்ட கோரிக்கையெல்லாம் ( demands ) சமூகம் சார்ந்ததல்ல  / மக்கள் சார்ந்ததல்ல / பொருளாதாரம் சார்ந்ததல்ல.                மாறாக, இந்தப் பெருங்கதையாடல் மகிழ்வுக்கானது / அதிகாரத்திற்கானது. அதாவது இது Phallic jouissance. (வேதகாலம்... முருங்கை மரம் ஏறுகிறது).
                                                                               
                                                                                                                                             க.செ.
                                                                                                                                              4-1-15
© the author


24 Dec 2014

இவர்களா... உங்கள்... பலிகடாக்கள் ?

"பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படும்"
                          -பிரதமர் நவாஸ் ஷெரீப்- BBC  தமிழ்-17-12-2014 
           அதாவது, அவரின் நனவிலி தீவிரவாதத்திற்கு இதுவரை ஆதரவளித்து வந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறது.

           இந்த ஒப்புதலை வெளிக் கொணர்ந்தவர்கள் நீங்களும், உங்களால் (பாகிஸ்தான் தாலிபன்கள்) கொல்லப்பட்ட சிறார்களும்தான். ……………ஒப்புக் கொள்கிறோம்.
       நீங்கள் நிகழ்கால வரலாற்றை ( symbolic order ) எழுதியுள்ளீர்கள்.
       நீங்கள் எழுதியதை இப்படி வாசிக்கலாமா ?
       (1) மெஷின்கன் சப்தத்தை மந்திரஒலியாய் மாற்றி உங்கள் மனத்துயரைப் போக்கிக் கொண்டீர்கள். ……………………………………………ஒப்புக்கொள்கிறோம்.
       (2) பள்ளி மாணவர்கள் 132 பேரையும், பணிசெய்பவர்கள் 9 ஊழியர்களையும் கொன்று ஒழித்தீர்கள். ………………………………………………………… ஒப்புக்கொள்கிறோம்
       (3) சில மணிநேரம் பீதியில் (terror) உலகை உறையச் செய்தீர்கள்.......................................................................................     ஒப்புக் கொள்கிறோம்.
       (4) ஊடகங்களுக்கு ( media) நேர்அலைக்கு காட்சிப் பொருள் கொடுத்தீர்கள். ............................................................................ஒப்புக் கொள்கிறோம்.
       இப்படிச் சிறார்களைக் கொன்றதற்குக் காரணம் ,
       ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக இம்மாதிரி ஒரு தாக்குதலை நடத்தும் நிலைக்குத் தாங்கள் (ஆப்கன் தாலிபன்கள்) தள்ளப்பட்டதாக வரலாற்றில் பதிவு செய்கிறீர்கள் ”.-BBC  தமிழ்
       அதாவது, சிறார் கொலைக்கான காரணங்களைப் பதிவு செய்கிறீர்கள்அப்படித்தானே!
       இதை எப்படி ஒப்புக் கொள்வது ? பழிக்குப்பழி . அங்கு பயங்கரவாதத்தைப் பதிவு செய்தவர்கள் பாகிஸ்தானின் இராணுவம், அத்துடன் பாகிஸ்தான் அரசும், உண்மைதான். அது பெரிய அளவில் செய்தி ஆக்கப்படவில்லை  என்பதும் உண்மைதான்.  அரசு பயங்கரவாதத்தை ஊடகங்கள் எப்போதும் மலையத்தனை இருந்தால் கடுகத்தனை ஆக்குவதும் வழமைதான்.
       ஆனால், தொந்தளிப்பு வசப்பட்ட உங்கள் அறிவு இராணுவத்துக்குப் பதில், சிறார்களை அழித்தொழிப்புச் செய்து குறியீடாக்கியிருக்கிறீர்கள் (symbolic order) ..................…………………………………………………ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லையா?
       உங்களின் சமகால குறியீட்டு பதிவானது (symbolic order) உங்கள் மக்களுக்கு ஏதாவது சௌகரியத்தைக் கொடுக்குமா ? அல்லது அசௌகரியத்திற்கு வித்தை விதைத்திருக்கிறீர்களா ?
       இதற்கான பதிலை அரசு பயங்கரவாதம் இப்படிக் கூறியிருக்கிறது.
இன்று இக்குழந்தைகள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி வாங்குவோம் .      
 -  நவாஸ் ஷெரீப் -BBC  தமிழ்.
       இது அரசின் குறியீட்டு ஒழுங்கு. எந்த ஒளிவுமறைவும் இன்றி பழிக்குப் பழி
 ’ இரத்தத்திற்கு இரத்தம்’. எந்த நூற்றாண்டுச் சொல்லாடல் இது. இன்று இது நவீனச் சொல்லாடலாகிறது.  இதற்கு நீங்களும் ஒரு காரணம் தானே..................................................................................ஒப்புக் கொள்கிறீர்களா ? இல்லையா ?
       பயங்கரவாதத்திற்கு எதிராக  பயங்கரவாதம் தான் பதிலா? இது எந்தவகை ஜனநாயகமோ ?
இனியும்.....
       அரசு பயங்கரவாதத்திற்கும், குழுக்களின் பயங்கரவாதத்திற்கும்; மக்கள் அளிக்கும் ஒப்புதல், சம்மதம், பணஉதவி, அறிவு உதவி போன்றவைகள் ஒருபோதும் சொர்க்கவாசலுக்கான பாதையாக இருக்கப் போவதில்லை . மாறாக, தீவிரவாதத்திற்கு எரிசக்தி வழங்குவதாகும்.
       ஒருக்கால் , குழுக்களுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டிக்கு ( phallic power ) சிறார் அழித்தொழிப்புஉதவியிருக்கலாம் ; அல்லது உங்களது சுயநலநோய்க்கான மனச்சாந்திக்கு  ஒத்தடம் கொடுத்துக் கொண்டதாய் இருக்கலாம்.
       இந்தச் சிறார் அழித்தொழிப்பு உங்களை, பிற குழுக்களும் , அனுதாபிகளும் உங்களை எப்படிப் பார்க்க வேண்டும், பார்க்கப்படவேண்டும் என்ற லட்சிய வேட்கை ( ideal ego ) உந்தலால், உங்கள் பிம்பத்தை மீட்டுருவாக்கும் செயலாகக் கூட இது இருந்திருப்பதற்கான வாய்ப்பாகவும் உள்ளது. ..............................................................................ஒப்புக் கொள்கிறீர்களா ? இல்லையா ?
       நிச்சயம் உங்கள்  மக்களுக்கான நல்வாழ்வுக்கு இந்த அழித்தொழிப்பு ( பயங்கரவாதச் செயல்) உதவி செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்....................................................................................................ஒப்புக் கொள்கிறீர்களா ? இல்லையா ?.