15 May 2019

100 தோப்புக் கரணம் போடத்தயரா?


பாமரர்களாகிய நாம் பாவம். மூலதனக்காரர்களின் பாராளுமன்றத்திற்கான 2019 தேர்தலில் முன்னணிக் கட்சிக்காரர்களின் நடத்தை / பேச்சு டாஸ்மார்க் அந்தஸ்தைக்கூட ஆட்டம்கான வைத்துவிட்டது.
       கட்டுரையின் தலைப்பு தினமலர் மே 10, 2019- ன் கொடையாகும். இந்த உரையாடலின் பெரியதனக்காரர்கள் ( Owners)  பிரதமர் மோடியும், மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆவார்கள்.
       ” நிலக்கரிச் சுரங்க ஊழலில் தொடர்பிருப்பதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்" 
[ இவர்மேல் உள்ள இந்தியத் துணைக்கண்டம் அளவிற்கான ஊழல் குற்றச்சாட்டு சந்தி சிரிக்கிறது, முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.அதுவும் அம்பானிக்கு தரகு வேலையாம்- அதற்கான பதில்தான் தலைப்பு ]
       ” இந்தக்குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் 100 முறை தோ[ப்புக்கரணம் போட மோடி தயாரா? “ இது மம்தா பானர்ஜி.
       பெரியதனக்காரர்களின் பஞ்சாயத்து மக்களுக்கு முன்னுதாரணம்தானே. இப்படி இந்தியா முழுக்கக் கவிச்சி வீச எங்கு கற்றாரோ மோடி.
       மோடி உண்மையில் பாராளுமன்றத்தை மதிக்கிறாரா ? மதித்தாரா? எத்தனைநாள் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதித்தார் ? பூஜ்ஜியம்தானே . நிரூபர்களுடனான பேட்டி எதையும் இதுவரை கொடுத்ததில்லை மோடி.
       இவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “ பொறுப்பில்லாத பிரதமர் நரேந்திர மோடி” என்கிறார். மேலும், …… நாட்டிலேயே முதல்முறையாக உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் “ நாட்டில் ஜனநாயகம் மிகவும் இக்கட்டான சூழலை நோக்கிச் செல்கிறது  என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர் “( மே 10. 2019 தினமலர்  )
     இங்கு மோடி அனுதாபிகளும் ,மக்களும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சொன்னது எதிர்க்கட்சியினர் அல்ல; எரிந்த கச்சியினரும் அல்ல..மிகமிக உச்சாணிக் கொம்பில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்; அதுவும் நான்குபேர்.இதை காத்திரமான குற்றச்சாட்டாக பாவிக்கவேண்டாமா ? மூலதனப் பாராளுமன்றம் நிலநடுக்கத்தில் இருக்கிறது என்றுதானே இதற்குப் பொருள்.                           
 யார் இதுபற்றி அக்கறையோடு விவாதிக்கிறார்கள் பொதுவெளியில்?  ஊடகங்களின் கவனம் போதுமானதாக இருந்ததா ? இருக்கிறதா?
       பாராளுமன்றத் தேர்தல் இன்னும் முடியவில்லை. கடைசி நாளுக்காக காத்திருக்கிறது இந்தியா. அத்தோடு தேர்தல் முடிவுகள் வெளியாக வேண்டும் .அப்புறம் ஆட்சி அமைக்கும் பணி துவங்கும், இப்படிச் சூழல் இருக்கையில் மத்திய அரசு ஒரு பெரிய வெடியை வெடித்திருக்கிறது..
       அதாவது , தூத்துக்குடி புகழ் ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தாவுக்கு ஹைட்ரோகார்பன் ( திரவ வாயு ) எடுக்க புதுச்சேரி ,விழுப்புரம் மாவட்டத்தில் இடம் அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. ஓ.என்.ஜி.சி ( பொதுத்துறை ) ,அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஆசியோடு மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.
       அனுமதி வழங்கிய நேரம் முக்கியமானது. இந்தியாவின் கவனம் தேர்தல் முடிவு என்றிருக்கிற காலத்தில், சந்தடிசாக்கில் மூலதன அதிகாரத்தின் விஸ்தரிப்புக்கு இடம் கொடுத்திருக்கிறது.
       இந்த எண்ணெய் கிணறுக்கு மக்களிடையே ,பிரதான எதிர்கட்சிகளிடையே எதிர்ப்பு உள்ளது. காவிரி டெல்டாப் பிரதேசம் பாலைவனமாகிவிடும் என்ற அச்சம் நிலவிவரும் வேளையில் சப்தமில்லாமல் அனுமதி வழங்கி,விவசாயிகளுக்கு மூலதன அதிகாரமும் அரசாங்கமும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது..
       அதிகார மமதைக்கு “ சமூக அறிவுத்திறன் ( social intelligence ) எங்கே போயிற்று ? அதாவது, பிறர் உணர்வுகளை புரிந்துகொண்டு, தன்னை அவற்றுடன் அடையாளப் படுத்திக் கொண்டு / இனம் கண்டுகொண்டு ( empathy ) மனித உறவுகளில் புத்திசாலித்தனத்துடன் நடக்கும் திறன் எங்கே போயிற்று ?” ( .Emotional intelligence ;Thorndike )
       எண்ணெய் கிணறுகளுக்கு மத்திய அரசு அனுமதி என்றவுடன் , ஹைட்ரோ கார்பன் என்ற பெயர்ச் சொல்லை கேட்டவுடனே விவசாயிகளின் நனவிலியில் ( unconscious ) மனப்பாதிப்பை (affect) ஏற்படுத்தியிருக்குமே ! என்கிறது உளவியல். நனவிலி, மனவெழுச்சியை (emotion ) இதரராக (other) கட்டமைத்திருக்குமே !. அவர்களின் மனப்பாதிப்பு (affect) எதை எதையெல்லாம் எதிர்பார்க்கும் (anticipate); சந்தேகம், பயம், கெஞ்சல் (solicitting ) போன்ற மனப்பாதிப்பு  / மனப்பிராந்திக்கு ஆட்படுவார்களே ! கலாச்சார ரீதியில் எதை எதையெல்லாம் ஏற்பது / விடுவது என்ற ஆழ்மன விவகாரங்கள் துவங்கிவிடுமே !
       ஒருவேளை விவசாயம், விவசாயிகளின் வேதனை, துன்பம் , துயரம் போன்றவை மூலதனத்திற்கும், அரசாங்கத்திற்கும் பெரு மகிழ்ச்சியாக உள்ளதோ?.
       மக்களின் மனஉடல் ஆரோக்கியம் பற்றி மூலதன அதிகாரத்திற்கு அக்கறை இருக்காது. வாஸ்தவம். ஆனால், அரசாங்கம் , ஐஏஎஸ் போன்ற படிப்பாளிகள் , வல்லுனர்களிடம் மக்கள் மீது அக்கறை , பரிவு இருந்திருந்தால் ,முதலில் மக்களிடம் பேசி ,அவர்களின் எலும்பு மஜ்ஜையில் உள்ள பயம் , கூச்சம் ,சந்தேகங்களைப் போக்கி ,அவர்களுக்குப் புரியவைத்து ,மன ஆரோக்கியத்திற்கு அடிகோலியபின் அனுமதித்திருக்கலாமே.
       இறுதியாக ஒரு சந்தேகம் .” நான் சிறுவனாக இருந்தபோது டீக்கடையில் இருந்திருக்கிறேன் “ என்று சொன்னது உண்மைதானா ? அந்தப் பையனுக்கா இன்று மக்கள் மீதான நடவடிக்கையில் நெறி ( Ethics ) இல்லை; மக்கள்மீது தயை , பரிவு இல்லையே  அவரிடம் . எது உண்மை ?
ஓட்டுக்காக வித விதமாக குள்ளாய் அணிந்து, கூலைக் கும்பிடு போட்டு , ராப்பிச்சைக்காரனாக காட்சி அளிக்கத் தெரிந்த நுட்பம் , மக்களின் சேவையில் இல்லையே !  . மூலதனத்திற்கு சேவை செய்வதேன் ?அதிகாரம், பணம் இன்ன பிறவற்றிற்காகவா இவைகள் ?
க.செ

3 May 2019

நவீன அரசியல் கலாச்சாரம்


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் மையப்பொருளாக,முக்கிய அரசியல் ,பொருளாதாரப் பிரச்சினைகள் என்னென்னவாக இருந்தன? என்று ஞாபகத்தை திருகினால் , அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெளிவருகின்றன.
ஆனால் , தலைப்புச் செய்திகளாக அனுதினமும் இடம் பிடித்தது எது, எது என்றால்  , உணர்ச்சிகளை மையமாகக்கொண்டு குற்றச்சாட்டுகளும் ,பதிலுக்கு உணர்ச்சிமயமான குற்றச்சாட்டுகளே.
[ பொள்ளாச்சி பிரச்சினைக்கு எந்தக் கட்சியும் அரசியல் போராட்டம் தெருவில் நடத்தவில்லை.மாறாக, ஊடகங்களில் காட்சி அளிப்பதோடு சரி.அவர்களுக்கு அது குற்றப் பிரச்சினையாக மட்டுமே தெரிகிறது }
உதாரணமாக,ராகுலின் மோடிமீதான உணர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள். அதற்கான பதிலோ / விடையோ இல்லாமல், மோடி தன் உடல் மீதான சுய ஆராதனையோடு ராகுல் மீது வாரியிறைக்கும் உணர்ச்சிமயமான குற்றச்சாட்டுகள் கேள்விக்குப் பதிலாக தரப்பட்டது.
தமிழக அரசியலில் “ திரையில்” ஸ்டாலின் எடப்பாடி மீது விடாது நீள நீளமான – பொள்ளாச்சி பிரச்சினை உட்பட- உணர்ச்சிமயமான விமர்சனங்கள்;
பதிலாக, எட்டப்பர் ( எடப்பாடி ) ஸ்டாலின்மீது உணர்ச்சிகரமான , தனிமனிதர் மீதான பாய்ச்சல் பதிலாக வீசப்பட்டது.
சமூக அரசியல் பிரச்சினைகள் , மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லாமல்         ( 21-ம் நூற்றாண்டில் கூட) நகரங்களுக்கு எட்டுவழிப்பாதை ,ஆறுவழிப்பாதை , நான்கு வழிப்பாதை கேட்கிறது. வாக்குச்சீட்டு எந்திரங்கள் கழுதை மீதேற்றி ( சாலை வசதி இல்லாததால் ) ஊர்வலம் போவது காட்சியாகக் காட்டப்பட்டது.
குடிநீருக்காக காலிக்குடங்களோடு இந்தக் கொடூரமான வெயிலில் வீதி வீதியாக பெண்கள் அலைமோதுவதும் ; வியாபாரிகள் குடம் தண்ணீர் ரூபாய் 10 வரைகூட விற்று ஆதாயம் தேடும் அவலம் ( பெண்களுக்கான ஒதுக்கீடு எப்போது )
இது ஒவ்வொரு வெயில் காலத்திலும் திரும்பத் திரும்ப யதார்த்தமாகும் பிரச்சினை. என்ன செய்யப்போகிறார்கள் பருண்மையாக ; அதற்கான திட்டம் என்ன, எவ்வளவு காலத்தில்?
மோடி அரசின் சூப்பர் ஹைவேயால் ஆயிரக்கணக்கான மரங்களும் ,எண்ணற்ற செடிகொடிகளும் வாழ்விழந்தன ,கொல்லப்பட்டன ( கொள்ளை லாபம் ).இந்த இழப்புகளை எப்போது ,யாரால் சீரமைக்கப் போகிறார்கள்? திட்டமென்ன ,தீர்மானமென்ன?
முக்கியமாக ஒன்றைக் கவனிக்கவேண்டும் . சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகளையும் மிஞ்சி ,உணர்ச்சிமயமான தலைப்பில் வாதப் பிரதிவாதங்களை நடத்தி பிழைப்பை ஓட்டுகிறார்கள். சினிமாவின் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக அவைகள் நடந்தேறுகின்றன..
ஜனநாயகம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. இவர்கள் நடத்தும் லாவண்யக் கச்சேரியை அரசியல் என்று ஜனத்திரள் ஏற்று அல்லது ஏமாந்து வழிதெரியாமல் முழிக்கிறது ; மற்றொருபுறம் இலவசத்திற்காக காத்திருக்கிறது.
நடந்து முடிந்தது சமூக அரசியல் அல்ல.அது பொம்மலாட்ட பொழுதுபோக்கு.       அதன் அடிப்படை அதிகாரப்பசி . அவ்வளவே.
க.செ

20 Apr 2019

முதலாளித்துவ ஜனநாயகம்

   பிரதமர் மோடி தன் ஆட்சியைப் பற்றி சுய லாவண்யம் பாடியபடி இருக்கிறார்.
என் ஆட்சியில் குண்டே வெடிக்கவில்லை என்பார். ஆனால் 47 இராணுவ வீரர்கள் அநியாயமாக சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்டார்களே.ஏன்? எப்படி? என்றால் மூச்சே விடுவதில்லை.
       ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் பாராளுமன்றத் தேர்தலை திருவிழாவாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது இந்து அரசியல்.
       ஆனால், பாராளுமன்ற தேர்தல் சமூகத்தின் ஒரு அங்கம். சமூகத்தின் அவலங்கள் அனைத்தும் தேர்தலில் விளையாடிவிட்டது. துட்டுக்கு ஓட்டு ; வாக்குச் சாவடிகள் கைப்பற்றுதல் ; லட்ச லட்சமாய் பறக்கும்படையின் வீரப்பிரதாபங்கள்.
       முரண்பாடான , ஒன்றையொன்று விலக்கிக் கொள்கிற , எதிரிடைப் போக்கு உற்பத்தி முறைகளை சீராட்டுகிறார்கள். தன்னியல்பான வளர்ச்சியை வேரறுக்கிறார்கள். இந்திய விவசாயிகள் உள்நாட்டு அகதிகள் ஆகப்போகிறார்கள்.
       இனியும் இந்த முதலாளித்துவ ஜனநாயகம் வக்கிரங்களைத் தவிர வேறெதையும் கொடுக்கப் போவதில்லை.
       வங்கிகளை கடன்கொள்ளையர்கள் சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது. என்ன செய்கிறது மோடி அரசாங்கம்.
       அண்டை அயலாரை  “ பச்சை “ வைரஸ் என்று குறிப்பிட்டு வக்கிர வெறுப்புணர்வை மக்களிடையே விசிறி விடுவது ஒரு சாமியார் முதல்வர்க்கு புனித வேலையாக உள்ளது..
       தன் சுயமோக பிரதிபலிப்பாக வானுயர்ந்த பட்டேல் சிலை பிறர் வழிபாட்டிற்காக        கட்டப்பட்டது.
       பாராளுமன்றத் தேர்தல் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாக உள்ளது. அதாவது, மக்களின் வரிப்பணம்,சாராயம் விற்றுக் கிடைத்த லாபம், பெட்ரோல் விற்பனை லாபங்களை கோடிகோடியாகப் பெருக்கி, அதில் கொஞ்சம் இலவசமாக வீசி எறிகிறார்கள், எறிவார்கள்..
       பரந்துபட்ட மக்கள் வர்க்கமாகத் திரள்வதற்கு முட்டுக்கட்டையாய் தொழிற்சங்கவாதம் ;        அதன் விளைவாக மக்கள் தங்களின் மூதாதையர் வழியான சாதியரீதியில்     திரள்கிறார்கள்.                                                                               
       சாதியத்தை ஒழிக்க எந்தக் கட்சியும் மறந்தும்கூட மூச்சு விடுவதில்லை.    மற்றொருபுறம் டிஜிட்டல் உலகை விஸ்தரிக்க முஸ்தீபு ; மலைகளையும், மரங்களையும் , தாவரங்களையும் அழித்து , எட்டு வழி, ஆறுவழி சூப்பர் ஹைவேக்கள். பன்னாட்டு பகாசுரர்களுக்கு தரகு முதலாளிகள் தொழில் புரிகிறார்கள்.
     
       விடிவு……?   காலம்தான் பதில்கூறும்.
                                                                                  க.செ

7 Apr 2019

அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி----- பகுதி - 3


மோடி அரசு தமிழகத்திற்கு ஒரு முக்கிய சடங்கை ,அதன் முக்கியத்துவத்தை   உணர்த்திவிட்டது.
       அதுதான் பாராளுமன்ற தேர்தல் , அழகர் ஆற்றில் இறங்கும் நாள்தான் [ சித்திரைத் திருவிழாவில் அதிமுக்கிய நிகழ்வு ] இதுவரை மிகப்பெரிய திருவிழாவாக இருந்து வந்திருக்கிறது.
       அந்த வரலாற்று நம்பிக்கையை எளிமையாகப் புறந்தள்ளிவிட்டு , பாராளுமன்ற தேர்தல் எதற்காகவும் காத்திருக்காது என்றும், தேர்தல் தேதியை தள்ளிவைக்க முடியாது என்றும் சொல்லிவிட்டது.
       முதலாளித்துவ பாராளுமன்றம் வைணவ ( அத்வைதம்) கட்டிலில் இடம் பிடித்துக் கொண்டது.
       பரம்பரை நம்பிக்கையின் ( சடங்கு ) இடத்தில் நவீன விழாவின் ( பாராளுமன்ற தேர்தல் ) வித்தை ஊன்றி புதிய நம்பிக்கைக்கு காவிக்கொடி அசைக்கப்பட்டிருக்கிறது.
       “ நம்பிக்கையானது மறைமுகமாக செயல்படுகிறது ; அதாவது , கருத்தியல் அடையாளத்திலிருந்து ( ideological identity ) சிந்தித்தலை நீக்கிவிடுகிறது ; கருத்தியல் நம்மீது ஒரு பிடிமானத்தை செலுத்துவதற்கு இது வழிவகுக்கிறது “ என்கிறார் சிசெக். கூடுதலாக  “ நம்பிக்கையும் ஆசையும் ( desire ) ஒன்றோடொன்று உறவுடையதாகும் “
       சென்ற பகுதியில் காமம் என்பது ஆசையில் ( desire ) அடக்கம் என்பதைத் தெரிந்தோம்.
       ” கூடுதலாக , மனிதகுல இருத்தல் ( humans being ) ஆசையாக இருக்கிறது ;         ஆசையானது இதரரின் ஆசையாக இருக்கிறது . இது புகழ்பெற்ற தத்துவார்த்த      விசயங்களாக உள்ளது ” என்கிறார் Kojeve.
       Kojeve ஆசையை பார்க்கும்விதம் புதினமாக உள்ளது.
       ” ஆசையானது இயற்கையானதாக இல்லாத ( non - natural  ) பொருளின் மீது செலுத்தப்படும்பொழுது மட்டுமே விலங்கின ஆசையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய மனிதகுல ஆசையாக இருக்கிறது .
        இன்னும் காத்திரமாக அவர் “ பிறரின் பௌதீக உடல்மீதல்லாமல் இதரரின் ஆசையை நோக்கி ஒருவரின் ஆசை செலுத்தப்படும்பொழுது மட்டுமே இந்த ஆசையை மனிதகுல ஆசையாகக் கருதமுடியும் “ என்கிறார்..
              ஆக , பெண் உடல் மீது செலுத்தப்படும் ஆசை , மிருக ( விலங்கின )ஆசையே ;
       அது மனிதத்தின் விருப்பமோ , காதலோ இல்லை என்றாகிறது.

       ஆசை குறித்த லெக்கானிய கருதுகோள்:
       ஆசை நனவிலியாக ( unconcious ) உள்ளது என்கிறார் லெக்கான்.
       ……”ஆசையும் இல்லாமையும் ( lack ) மற்றமையின் இல்லாமை ( lack of the Other )    குறித்த பிரச்சினையாக உள்ளது. அது தன்னிலையின் ( subject ) இல்லாமை ( lack )    குறித்ததல்ல “ என்பதில்தான் லெக்கானின் கண்டுபிடிப்பு உள்ளது .

       இனி சுயமோக வெறி ( narcissistic rage ) :
        ஆசைப்பட்ட பெண்ணால் , தான் மறுக்கப்படும் பொழுது., சுயமோக மனக்காயம் ஏற்பட்டுவிடுகிறது . அந்தப் பெண்ணைக் கொல்வது , அவள்மீது ஆசிட் ஊற்றுவது என்பது சுயமோக மனக்காயத்திற்கான (narcissistic injury ) ஒரு எதிர்வினையாகும். சுயமோகியின் சுயகௌரவம் ( self esteem ) சுயமதிப்பிற்கு எதிரான உணரப்பட்ட அச்சுறுத்தலாகும் . இதுவே சுயமோக வெறியாகிறது என்கிறார் ஹோகட்.
       சுயமோக வெறி உண்மையான தன்முனைப்பாக ( real assertiveness )  வெளிப்பட முடியாது ; சுயமோகிகளால் உணரப்பட்ட அல்லது கற்பனை செய்துகொண்ட ( தன்னைத்தானே) ( perceived or imagined ) சுயமோக மனக்காயங்கள் குறித்து மிக அதீத உணர்ச்சியாக ( over sensitivity ) இருப்பார்கள். இதன் விளைவு சுயமோக வெறியாக உள்ளது.
        இந்த வெறி எந்த வகையிலாவது பழியெடுப்பதற்கான மார்க்கத்தைத் தேடுகிறது .        இது ஹோகட்டின் கொடை. இது மிக கவனத்திற்குரியதாகவும் உள்ளது.
       “அடைந்தால் மகாதேவி இல்லையேல்…….”
                                                                                  க.செ