8 Feb 2014

படேல் ஒரு 3-ம் தனிமம்






 
ரேந்திரமோடி:
 ..... "குஜராத் அரசு சார்பில் நர்மதா நதிக்கரையில் உள்ள தீவுப்பகுதியான பஹ்ரவுச்சில் இரும்பு மனிதர் படேலுக்கு ரூ 2500 கோடியில் சிலைஅமைக்கப்படுகிறது. சுமார் 600 அடி உயரத்தில் எழுப்பப்படவுள்ள இந்தச் சிலை அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைவிட இரண்டு மடங்கு பெரியது.....
... "படேல் மதச்சார்பற்றவர்தான்.ஆனால்,சோமநாதர் கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச் சார்பின்மை குறுக்கிடவில்லை. அவர் கடைப்பிடித்த மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை, ஒன்றிணைத்து வலுப்படுத்தியது",என்றார்.                                                      -தி இந்து நவம் 1 -2013

இந்தத் திடீர் படேலின் மோகம் பற்றி அறிய வேண்டிய அவசியம் உள்ளது.
2014-ல் நடக்கவிருக்கும் தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், B.J.P-   யின் அரசியல் சொல்லாடல்களில் உள்ள திரைமறைவுப் பிரதேசங்கள் தெரிந்தால் அவர்களின் 21ம் நூற்றாண்டின் அரசியல் சொல்லாடல்களின் வர்ணங்கள் புலப்படும்.
இனி, படேலை  B.J.P ஏன் கண்டுபிடிக்கின்றனர் என்ற கேள்விக்கான பதிலைஅறியும் முன்;     B.J.P- யின் மூத்த தலைவரும்  B.J.P- யின் அடிக்கட்டுமானத்தின் முக்கியமானவருமான எல்.கே.அத்வானியின் படேல் பற்றிய நிலைப்பாட்டை அவரின் வலைத்தளத்தில் வெளியிட்டாராம்.
அது இங்கே ஆய்வுப்பொருளாக ஏற்கப்படுகிறது,
[ இது மறைவுப் பிரதேசம் (unconscious); பிரக்ஞையுடன் செயல்படும்போது மொழி எப்படியெல்லாம் பிறக்கிறது. JustificationRe-interpretation-ஆக வெளிப்படுகின்றன.  இது B.J.P- க்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் - தமிழகத்து அரசியல்வெளி உட்பட.-பொருந்தும்; மற்றபடி எந்தக் கட்சிக்கானதாகவும் இருக்கப்போவதில்லை].
படேலை வகுப்புவாதி என்றார் நேரு: அத்வானி தகவல்.
.......தனது வலைப்பூவில் அத்வானி கூறியுள்ளதாவது: "நாடு சுதந்திரமடைந்தபோது ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆட்சி செய்த நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்து வந்தார்.  அப்போது அவரது ஆதரவாகச் செயல்பட்ட தீவிரவாதப் படையினரான ரஸாக்கர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் அங்கு  ராணுவத்தை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படேல் வலியுறுத்தினார்.இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நேருவுக்கும் படேலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த நேரு,படேலை வகுப்புவாதம் செய்பவர் என விமர்சித்தார். அத்தோடு படேலின் யோசனையை ஏற்றுக் கொள்ள நேரு மறுத்துவிட்டார்....                        -தி இந்து .நவம். 6- 2013
(ஆனால் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது- இணைத்தவர் படேல். ம.ஆ.)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப நேரு தயங்கினார்.
"பாகிஸ்தான் துருப்புகள் 1948-ம் ஆண்டு காஷ்மீரை நெருங்கியபோதிலும் அங்கு ராணுவத்தை அனுப்ப அப்போதைய பிரதமர் நேரு தயங்கினார் என்று B.J.P- ன் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் ‘சர்தார் வல்லபாய் படேலை முழுமையான வகுப்புவாதி என்று நேரு விமர்சித்ததாக அத்வானி சமீபத்தில் தனது இணையதள வலைப்பூவில் தெரிவித்திருந்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது......
-தினமணி நவ.8-2013
இன்றைய அரசியல்,காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியினர் B.J.P -யை மதவாதிகள், மதவாதம்என்று சொல்லுகின்றனர்.குறிப்பாக அத்வானி,மோடி போன்றவர்களுக்கான செல்லப்பெயர் அது.
பாபர் மஜீத் இடிக்கப்பட்டபின்பும், குஜராத்தின் மோடி அரசாங்கத்தில் நடந்த குஜராத் மதக் கலவரத்திற்குப் பின்பும் 'மதவாதம்' என்ற சொல்லும், அதன் அரசியல் நடைமுறையும் இப்பெயரால் இனம் காணப்படுகிறது. 

படேல் பற்றிய அத்வானி, மோடியின் கருத்துக்கள் செய்தியல்ல.அது கூற்றல்ல. அவைகள் விளக்கமளித்தல்( interpretations)  எனும் வகை சார்ந்தது. 
இந்த மறுவாசிப்பு  நனவிலி ரீதியில் நடைபெறுவது. இதற்கான காரணம் மற்றமை தான்(Other).அதாவது மக்களும்,மொழியும்,கூடவே ஊடகங்களும்.
காங்கிரஸ் எனும் அரசியல் சொல்லாடலானது நேரு பரம்பரையுடன் கட்டப்பட்டுள்ள கருத்துருவம். அத்துடன் அது சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்ததாயும், தியாகப் பரம்பரையாயும் சொல்லாக்கம்,பொருளாக்கம்  பெற்று ஊடகங்களிலும்     அரசியல் பொது வெளியிலும் உலாவி வருகிறது,
நேரு பரம்பரையாகத்தான் ராகுல்காந்தி அறிமுகப்படுத்தப்படுகிறார்.  ராகுல்காந்தியும் தியாகப்பரம்பரை என்ற பதாகையை ("தானும் சுட்டுக் கொல்லப்படலாம்"- ராகுல்) உயர்த்திப் பிடிக்கிறார்,அதாவது  phallic -ஆகவும்,தங்களை மாஸ்டர் சொல்லாடலாகவும் பாவித்துக் கொள்கின்றனர். இது நேற்றைய , இன்றைய மற்றமைச் சொல்லாடல். அதாவது வெகுஜனங்களின் ஆசைக்குரிய பொருளின் இடத்தில் காங்கிரஸ், ராகுல் உள்ளனர்.
அதுவாக B.J.P  இல்லை-மற்றமையின் ஆசைப்பொருளாக,  அந்தஸ்தான பரம்பரா இடம்(phallic­) என்று ஏதுமில்லை(lack).
இது B.J.P-க்கு உளவியலாக இடைவெளியை(gap),  இல்லாமையைக் (lack) கொடுக்கிறது.
ஆகவே இந்த இடைவெளியை அடைக்க, சமூகத்தில் நேரு என்ற ஓர்மையான இடத்தைப் பிளக்க மக்கள் மனத்தில் சுதந்திரத்துடன் பிணைக்கப்பட்ட, ஆனால் காங்கிரஸால் புறக்கணிக்கப்படும்,மேலும் தங்களின் அகண்ட பாரதம்,மதவிசுவாச அடையாளத் தேடலில் B.J.P -க்குக் கிடைத்த அருமருந்துதான் படேல் என்ற மனிதர்.
இவரைப்பற்றி மோடியின் கருத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கலாம்.
..."படேல் மதச்சார்பற்றவர்தான்.ஆனால் சோமநாதர் கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச்சார்பின்மை குறுக்கிடவில்லை...” -மோடி. அதாவது, படேல் மதச் சார்புள்ளவராக நடந்துகொண்டார்  அல்லது அதற்கு ஆதரவாக நடந்து கொண்டார். அதனால் மோடியின் பாசம் படேலின் பக்கம். அதாவது,அடையாளத்தேடலில் அடையாளம் கிடைத்துவிட்டது.
மற்றொன்று..."அவரின் மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை,ஒன்றிணைத்து வலுப்படுத்தியது"....மோடி.
அதாவது, முஸ்லீம் ராஜ்யங்களான ஹைதராபாத்,காஷ்மீர் இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. இன்றைய தேசிய இனங்களின் சிறையாய் இந்தியா இருப்பதற்கு படேல் ஒரு காரணம்.அதாவது, B.J.P-யின் அகண்ட பாரதத்தின் கனவை ஓரளவாவது செயலாக்கத்திற்கு வித்திட்டவர் படேல் என்ற மற்றொரு அடையாளமும் பட்டயமும் படேலுக்கு.
படேலின் எந்தத்தன்னிலையை ஏற்றிருக்கிறார்கள் என்று கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இவர்களின் அடையாளத்துடன் ஒத்துப்போகும்(simile) தன்னிலைத் தன்மையையே ஏற்றிருக்கிறார்கள்.படேலுடனான ஐக்கியம்  other-உடனான ஐக்கியம் அல்ல;ஒத்த தன்னிலைகளுக்கிடையிலான ஐக்கியமே.
இப்போது மோடியும், B.J.P-யும் படேலின் வாரிசு.அதை நிலைநாட்ட,மக்கள் மனத்தில் நேருவுடன் படேலையும் அக்கம் பக்கமாக நிறுத்த 600 அடி உயர சுதந்திரச்சிலை உருவாகிறது.
தொழில்நுட்பரீதியில் படேலின் மீதான ஆசை எப்போது எழுந்தது?(Desire can only exist as unsatisfied-Lacan).
அதிருப்தியில் ஆசை எழுகிறது ”.
மற்றமையில் தானும். B.J.P-யும் ஆசைப்பொருளாக இல்லாததால்;அதுவும் காங்கிரஸின் வீழ்ச்சி நேரம் என எண்ணும் கணத்தில், தாங்கள் மரபின் நீடிப்பு என மற்றமை ஏற்கவில்லையோ என்ற எண்ணமே ,அதனால் ஏற்பட்ட மனப்பதட்டமே (anxiety) படேல்.
ஆக, அத்வானி, மோடியின் ஆகுபெயர்தான் (metonymy) படேல் (displacement) என்றாகிறது.
கூடுதலாக படேல் ஒரு குஜராத்தியும் கூட. மேலும் B.J.P-யின் மரபுரீதியான அடையாளத் தேர்வு(identity) ஒரு குழந்தையின் கண்ணாடிப்பருவத்தைக் காட்டுகிறது. கண்ணாடிப் பிம்பத்தை (3-ம் element) தானாக (அடையாளமாக) குழந்தை கருதுவது குழந்தைத் தனத்தால். ஆனால் மோடி, அத்வானியின் 3ம் மூலாதாரத்தை - படேலிடம்-தேடுவது நனவிலி விருப்பமே.
Spatial- realism மேற்கூறிய அடையாளம் பற்றியதை மன அலசல் இப்படிக் கூறுகிறது :
“… where   am I’. It has no idea of itself as a whole.         When it sees itself in the mirror, however it does see itself as a whole, but it is only  an  image  of  the whole.  The other in the mirror is Imaginary.  The child will now identify itself with the image.  This is called a dual kind of relation.  As will be argued later, this is not yet a real relation, because therefore a third element is needed.  This is also not only a stage in the development of the child, but will be important for the rest of its life, notably in relation to ‘the other who is the same’….”.
                                                                                                                                                                Zizek  Slavoj: 1991.
இவர்களுக்கு வெறும் அடையாளம் உள்ளது. தேவை எதுவென்றால் நேருவிற்கிணையான அடையாளம் அது. லட்சியத் தன்னிலை (ideal subject )  வேண்டும்;அதுதான் படேல்; அது B.J.P  தலைமைத் தன்னிலையைத் தவிர வேறு ஒன்றுமில்லை,
மேற்கூறிய ஆய்வுக்கு மிக நெருக்கமாக உள்ளது மோடியின் கூ,ற்று
"படேல் மதச்சார்பற்றவர்தான்,  ஆனால் சோமநாதர் கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச்சார்பின்மை குறுக்கிடவில்லை,  அவர் கடைப்பிடித்த மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை, ஒன்றிணைத்து வலுப்படுத்தியது.
அதாவது B.J.P-யின் ஆசையான அகண்ட பாரதமும், இராமர் கோவில் புனரமைப்பு ஆசையுடன் படேலிடம் (குறிப்பிட்ட விசயத்தில்) ஒத்த தன்மை காணப்படுவதால் லட்சிய அகனாக ஏற்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
படேலின் சிறப்பான தன்மைக்கு சில எடுத்துக்காட்டுகள்:  லட்சத்தீவுக்கும் படேலுக்கும் உறவு உள்ளது, 
லட்சத்தீவுகள் 
இத்தீவுகள் இந்திய நிலப்பரப்பிலிருந்து பல மைல்கள் அப்பால் உள்ளவை. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த இத்தீவுகள் சென்னை ராஜதானியின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, இந்தியா சுதந்திரம் அடைந்தது பற்றி இங்கு வசித்துவந்த மக்களுக்கு 1947 ஆகஸ்ட் 15க்கு பிறகு சில நாட்கள் சென்ற பிறகுதான் தெரியவந்தது.  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய சுதந்திரச் சட்டம் 1947-ன்படி இத்தீவுகள் இந்திய யூனியனுக்கு உட்பட்டதாக மாறியது.  இங்கு வசித்து வந்த மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் இத்தீவுகள் மீது பாகிஸ்தானும் உரிமை கோருவதற்கான சாத்தியங்கள் இருந்தது.  அதனால் இந்தியாவின் கடற்படை இத்தீவுகளுக்குச் சென்று அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றி அவை இந்தியாவுடன் இணைந்துவிட்ட பகுதி என்பதை உறுதி செய்தது.  இதற்குச் சில மணிநேரங்கள் கழித்து அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படை நிலைமையைப் புரிந்து கொண்டு கராச்சிக்குத் திரும்பின.
நாடு பிரிவினையாகும்போது 1.5 கோடி மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். இந்நிலையில் இந்து    முஸ்லிம் கலவரம் வெடித்தது, அப்போது டெல்லி, பஞ்சாப் போலீஸ் பிரிவினரின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. பஞ்சாப், டெல்லி போலீசாரே முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.  இதைப்புரிந்த பட்டேல் இப்பகுதிகளுக்குத் தென்னிந்திய ராணுவப் படைப்பிரிவை அனுப்பி அமைதியை நிலைநாட்டினார்.
.......காங்கிரஸ் தலைமைப் பதவிக்கான போட்டியிலிருந்து விலகிவிடுமாறு காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று படேல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காங்கிரஸின் தலைவரே சுதந்திர இந்தியாவில் அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துவார் என்ற அடிப்படையில் இத்தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும்.

சரியான நபரைத் தேர்வு செய்யுமாறு காந்தி மாகாணப் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டார். 16 மாகாணப் பிரதிநிதிகளில் 13பேர் படேலை முன்மொழிந்தனர், ஆனால் இந்தியாவின் முதல் பிரதமராக படேல் இருக்க வேண்டாம் என்ற காந்தியின் வேண்டுகோளிற்கு படேல் மதிப்பளித்து ஏற்றுக் கொண்டார்.

16 மாகாணப் பிரதிநிதிகளில் 13 பேர் படேல் தலைவராக முன்மொழிந்தனர்.
காந்தி படேலை மறுத்துவிட்டார். அதைப் படேல் ஏற்றுக்கொண்டு நேருவுக்கு வழிவிட்டிருக்கிறார் தலைமைக்குக் கட்டுப்பட்டு.

நவீன காலத்தில் அத்வானிக்கும் மோடிக்கும் தலைமைபற்றிய பிணக்கில் என்னவிதமான போக்கை இவர்கள் கடைப்பிடித்தார்கள்? வரலாற்றைப் பார்க்கவும்.

படேலின் இருப்பைக்கூட நேருவின் குலப்பெருமை இல்லாமல் ஆக்கிவிட்டது.
இப்போது மோடி,அத்வானியின் ஆசையானது நேருவின் இருப்பை இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. இது நாணயத்தின் அடுத்த பக்கம் அவ்வளவே.


காந்தியின் பேரன் ராஜ்மோகன் கூறியது:

....குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தனது கொள்கைரீதியான வாரிசாக நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அங்கீகரிக்க மறுத்திருப்பார்”....


"....2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜநீதியை மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர்மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜராத்தைச் சேர்ந்த படேல், கலவரத்தைத் தடுக்க மோடி அரசு தவறிவிட்டது குறித்தும், துயரச் சம்பவத்தைக் கண்டும் மிகவும் வருந்தியிருப்பார்"

..."ஒரு காங்கிரஸ்காரனாக இருப்பதில் படேல் மிகவும் பெருமை கொண்டிருந்தார்.1947-ம் ஆண்டுவரை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பணிகளைப் பாராட்டிவந்த படேல் காந்தி படுகொலைக்குப்பின் இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார்...                                    

தி இந்து நவம்.5-2013
                                                                                    -க.செ
 

19 Jan 2014

நித்ய உபவாசியும் நித்ய பிரம்மச்சாரியும்


நீங்கள் வாசிக்கப் போகும் தொன்மம் அனேகமாக எல்லோரும் வாசித்த / கேட்ட கதையாகத்தான் இருக்கும்.  இக்கதை மற்றமையின் சிறப்பாசிரியரால் கட்டுடைப்புக்காக அனுப்பப்பட்டது. 
 இனி கதை.......        

நித்ய பிரம்மச்சாரி.....!
ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள்.  மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது.  அன்று ரோகிணி நட்சத்திர தினம்.  பிருந்தாவனம் கோலாகலமாக இருந்தது.  கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவுப் பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகரைக்குச் செல்ல முயன்றனர்.
யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படிச் சந்திப்போம் என குழப்பமானார்கள்.
யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார்.  அவர்களிடம் கோபியர்கள் சென்று ரிஷிகளின் ரிஷியே!  இன்று கிருஷ்ணனின் அவதார தினம்.  அவனைச் சந்திக்க வேண்டும்.  ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றைக் கடக்க முடியுமா எனத் தெரியவில்லை.  நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும் என்றார்கள்.
கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்குக் கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்என்றார் வியாச மஹரிஷி.
கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார்.  கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனைப் பிறந்த நாள் அன்றே சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.
அனைத்துக் கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி.  பிறகு கூறினார், கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள்.  யமுனை வழிவிடும், நீங்கள் கூற வேண்டியது இது தான்,  வியாசர் நித்ய உபவாசி.
கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.  உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன்.  இவரோ அனைத்து கூடையையும் காலி செய்துவிட்டார்.  மேலும் நித்ய உபவாசி என்கிறார் என்றும், உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா எனச் சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்,
யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.
யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.
மறுகரைக்குச் சென்று கிருஷ்ணனைச் சந்தித்தனர்.  கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.

எங்களைக் காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூறச் சொன்னார்.  யமுனை வழிவிட்டது.  நாங்கள் மீண்டும் அதே விஷயத்தைக் கூறி யமுனையைக் கடக்கலாம் என நினைக்கிறோம்.  நீ அருள் தர வேண்டும் எனக் கிருஷ்ணனிடம் கேட்டனர்.
மாயப் புன்னகையுடன் கிருஷ்ணன், பக்தியில்l சிறந்த கோபிகைகளே யமுனையைக் கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள்.  கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரிஎன்றார்.  கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரிகூறினார்கள்.  யமுனை வழிவிட்டது.
புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.
மஹரிஷியே இது என்ன முரண்பாடு நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள்.  சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே?  இது என்ன மாய வேலையா?
கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாகக் கருதுகிறேன் இறைவனே என் உணவை உண்கிறார்.  அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.
கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளைச் செய்கிறான்.  அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை.  ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான்.  அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”.
ஆய்விற்கான ஆய்வுப் பொருளாக முதலில், யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படிச் சந்திப்போம் எனக் குழப்பமானார்கள் கோபியர்.
இப்போது கோபியரின் ஆசை காயடிக்கப்பட்டுவிட்டது  யமுனையின் திடீர் வெள்ளத்தால்.  விளைவு கோபியர்களின் மனச்சோர்வு (frustration )  இதன் விளைவு குழப்பம், பயம்; பின்பு ஆசை அதாவது ( desire of object seeking ) கிருஷ்ணனைப் பார்க்கும் ஆசையால் வியாசமுனிவரிடம் சரணடைகிறார்கள்.
மேலும், கிருஷ்ணனுக்கான உணவை முனிவரிடம் படைத்துவிடுகிறார்கள்.  இத்தோடு தாங்கள் கொடுத்த உணவை தங்கள் முன்னேயே உண்டுவிட்டு வியாசர் நித்ய உபவாசி என்று யமுனையிடம் சொல்லுங்கள் என்கிறார்.  இது உண்மையல்ல என்பது தெரியும் அவர்களுக்கு.
தங்களின் ஆசைப் பொருளான கிருஷ்ணனை அடையும் ஆசையால் அந்த உண்மையற்ற கூற்றையும் கூறத்தயங்கவில்லை கோபியர்.
யமுனை கோபியருக்கு வழிவிட்டது.  ( மேற்கத்திய வேதாகமத்தில் மோசேவுக்கு கடல் வழி விட்டிருக்கிறது.)
ராசலீலை முடிவடைந்து கோபியர் திரும்பிச் செல்ல யமுனைக்கான விதைச் சொல்லாக மாயக் கண்ணன் கூறியது கிருஷ்ணன் நித்ய பிரமச்சாரிஎன்பது தான்.
கோபியர்களுக்கு யமுனைக்கரையில் நின்று கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி என்று கூறியவுடன் அச்சொல்லின் ஒலியானது யமுனையின் நீரோட்டத்தை நிறுத்திவிட்டது.  யமுனை சில நிமிடங்கள் இயக்கமற்று நின்றுவிட்டது.  கோபியர்கள் தாங்கள் வசிக்கும் கரைப்பக்கம் சென்றுவிட்டனர்.
அக்கரையில் இருந்த மகரிஷியிடம் நித்ய உபவாசி”, நித்ய பிரம்மச்சாரிக்கு என்ற உண்மையற்ற கூற்றுக்களை கேள்விக்குள்ளாக்கினர்.
மகரிஷி விளக்கம் அளித்துவிட்டார்.  அதாவது நித்தம் உணவருந்துகிறார் அது (Need ).  ஆனால் அதில் ருசி அறியும் செயலும், நோக்கமும் இல்லை.  (ருசியும் பசியும் கடந்து விட்டார்,  சுவாசமே உணவுதான் போலும்)  அத்துடன் உண்ணும் உணவை மனத்தில் கண்ணனுக்கு அர்ப்பணிப்பு செய்து விடுவதால் எந்த மகிழ்வும் அடைவதில்லை.  ஆதலால் உணவு உண்பது கிருஷ்ணன் ஆகிறது எனலாம்.
ருசி அறியாமலும், உண்ணும் உணவு கண்ணனுக்கே என உண்பதால், சாப்பிட்ட பொருளிலிருந்து அவர் உடல் எந்த ஆதாயத்தையும் (நிறைவு, மகிழ்வு) பெறவில்லை;  ஆகவே நான் நித்ய உபவாசி என்கிறார் அதை என வாசிக்கலாம்.
இனி நித்ய பிரம்மச்சாரி என்ற குறிப்பான் ஒரு வியப்பை அளிக்கிறது.  கிருஷ்ணனுடன் பங்கேற்பவர்களாக ராசலீலைகளைஆடியவர்களிடமே இறைவன் தான் நித்ய பிரம்மசாரிஎன்கிறான்.
என்ன கூறுகிறான் கண்ணன்?  நமது நனவிலி உடனடியாக இதை மறுக்கும், எதிர்க்கும்.  ஏனென்றால் நம்மின் புலனறிவு தட்டையான தளத்தில் இயங்கியவற்றின் அனுபவத் தொகுப்பில் இருந்தே அனைத்தையும் உண்மை / பொய் என எதிர்மறையாக (நல்லது  /கெட்டது) அறிகிறது.  அனுபவ அறிவையே தூக்கிப் பிடிக்கிறது.
ரிஷியின் கூற்றும், கண்ணனின் கூற்றும் கணினியின் Vertical Space-ல்   [ கிடைவெளி (நெட்) ] தெரியும் 3 D  படமாக இருக்கிறது.  ஆகவே தட்டையான அனுபவத்தை அளவு கோலா அதைக் கொள்ளமுடியாது.
அதாவது கிருஷ்ணன் பெண்களுடன் ஆட்டமாடுவதும், பாட்டுப்பாடுவதும் உண்மை.  ஆனால் அச்செயல்கள் அவனின் பால் தேவை [ (act ),   erotic ]  பால் இன்பத்திலிருந்து (sexuality ) நடைபெறவில்லை.  மாறாக பக்தியில் சிறந்த கோபிகளேஎனக் கூறும் குறிப்பான்; அவர்களை sex object ஆகப் பார்க்கவில்லை கிருஷ்ணன்; ஆடியதும் பாடியதும் உடலசைவின் நோக்கம் பாலியல் இன்பமற்று இருப்பதையே மகரிஷி ஞானநிலைஎன்கிறார் என்று தோன்றுகிறது.
கூடுதலாக அவர்கள் இருவரும் எந்த இன்பமும் அடையவில்லையா என்று மனத்தில் கேள்வி எழுந்தால்?  ஆம்.  உண்மைதான்.  ஆனால் mechanism -த்தின் செல்வாக்கால் கிடைக்கும் இன்பத்திற்கானதில்லை.  அது.
மாறாக, அது காமம் கடந்த, கடமை செய்யும் செயலில் கிடைக்கும் திருப்தி, சுசான்ஸ் (jouissance  ) ஒரு வேளை இருக்கலாம்.  கோபியரிடம்  தன்னை (subjectivity-யை) வெளிப்படுத்துவது கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி என்பது.
அதாவது கோபியரே உங்களுடன் இணைந்து விளையாடியது என் உடலல்ல, அது பெற்ற இன்பமும் உடலின்பமல்ல.  ஏனென்றால் நான் நித்ய பிரம்மசாரி.  அதாவது உடலின்பம் கடந்த உடலுடன்தான் நீங்கள் ஆடினீர்கள்.  அதுவும் பக்தியில் சிறந்த என் கோபியர்களுடன் நான் ஆடினேன் எனலாம்.
மீராவை என்ன சொல்லி அழைப்பது?  பக்தியில் அது ஒரு மனநிலை, சித்தநிலை; அவளை நவீன கோபி எனலாம்.  எல்லா உந்தல்கள், மமஹாரத்தையும், அகங்காரத்தையும் கடந்த (transcend  ) நிலை எனலாம்.  (மனம் நிறைய கேலி கிண்டல் பண்ணும் பண்ணட்டும்).
                                                                     க.செ