5 Aug 2019

பெரியண்ணனின் திண்ணைப் பஞ்சாயத்து


டிரம்ப்  vs      இந்தியா
     ஜூலை 23ல் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
அது யார் உண்மை பேசுவது ( டிரம்ப் அல்லது மோடி ) என்ற கேள்வி எழுந்தது.
       அதாவது உலக போலீஸ் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்குமாறு பிரதமர் மோடி தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக டிரம்ப் தெரிவித்தார்.   “ தினமணி 24 ஜூலை “
இதை டிரம்ப் எத்தருணத்தில் தெரிவிக்கிறார் என்றால் . . . ?
       அண்டை நாட்டு பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க அதிபரை 22 ஜூலை வாக்கில் சந்தித்து பேசினார்.  அப்போது அவர் இம்ரானிடம்
“ காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என இந்தியா விரும்புகிறது.  அதையே நீங்களும் விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன் . . . .  நான் மத்தியஸ்தம் செய்வதற்கு , நான் தயாராக உள்ளேன் ,  “ தினமலர் ஜூலை 24
       இம்ரான் வரவேற்பு
       டிரம்பின் இந்த பேச்சிற்கு ( இந்தியா – பாகிஸ்தான் ) இடையிலான பிரச்சினைகளுக்கு , இரு தரப்பு பேச்சு மூலம் மட்டுமே தீர்வுகாண முடியாது.  இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு , - டொனால்டு டிரம்ப் முன் வந்துள்ளது , மகிழ்ச்சி அளிக்கிறது .  அதை வரவேற்கிறேன் .
       இந்த செய்தி வெளிவந்தவுடன் எதிர்கட்சிகள் கச்சை கட்டி களம் இறங்கிவிட்டனர்.
மோடி விளக்கமளிக்க ராகுல் வலியுறுத்தல் , தினமணி ஜூலை 24.
மேலும்  . . . “ காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி உதவி கோரியிருந்தால் அது நம் நாட்டுக்கு பிரதமர் மோடி இழைத்த மிகப்பெரிய துரோகம் “ என்றுள்ளார்.
       டிரம்ப் பிரதமர் மோடியை சந்தித்தது பற்றி இப்படி சொல்கிறார்.
       “ ஜப்பானில் நடந்த ஜி – 20 நாடுகள் மாநாட்டின் போது , பிரதமர் மோடியை சந்தித்தேன் , அப்போது , காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாண மத்தியஸ்தம் செய்ய முடியுமா என அவர் என்னிடம் கேட்டார் ,
“ அதே நாளிதழில் இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசிய போது, “ காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை என்பது இந்தியாவின் கொள்கை .  ஆனால் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் உதவி கோரியுள்ளார் .  இது குறித்து அவர் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் , “ என்றார்.
       இந்த இரண்டு விமர்சனத்திற்கும் மோடி வழக்கம் போல் பேசாமல் இருந்து கொண்டார் .  பிரதமர் ( தமிழகத்து விவசாயிகள் 100 நாள் அரை நிர்வாண போராட்டமெல்லாம் நடத்தியும் அவர்களை இதுவரை சந்திக்கவில்லை ) , மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய போது காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை என்பது இந்தியாவின் கொள்கை .  அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் நரேந்திர மோடி , எந்த கோரிக்கையும் , முன் வைக்கவில்லை “ என்றார் .  இந்து – தமிழ் – ஜூலை 24.
       இந்த நேரத்தில் ஆளும் கட்சியும் , எதிர்கட்சியும் சிம்லா , லாகூர் ஒப்பந்தம் அடிப்படையில்தான் இருதரப்பு பேச்சு நடத்த வேண்டும் . . . . என்பதில் ஒத்த கருத்தில் உள்ளனர் .  அதாவது லாகூர் , சிம்லா ஒப்பந்தம் என்பது தான் சமாதான பேச்சுக்கு அடிகட்டுமானம் என்கின்றனர்.  ( இப்போது பயங்கரவாதமும் ஒரு கண்டிசன் ) .
       இந்த இரண்டு ஒப்பந்தங்கள் மூலம் இதுவரை எதையும் சாதிக்க முடியவில்லை.  ஏனென்றால் இரு தரப்பும் மேஜையில் உட்காருவதற்கே வாய்ப்பை ஒருவருக்கு ஒருவர் மறுக்கிறார்கள்.
       இப்போது இம்ரான் , இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளுக்கு , இருதரப்பு பேச்சு மூலம் மட்டுமே தீர்வு காணமுடியாது ,  இந்த விசயத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு , டிரம்ப் முன் வந்துள்ளது , மகிழ்ச்சி அளிக்கிறது . “
       இம்ரானின் பயம் . . .  எதிர்காலத்தில் இந்தியா ஆப்கன் நாடுகளுக்கிடையே பாகிஸ்தான் சிக்கி பெரும் நெருக்குதலுக்கு உள்ளாகும் என அஞ்சுகிறோம்.  பாகிஸ்தான் ராணுவத்திடமும் அந்த அச்சம் நிலவுகிறது . “ , இந்து – தமிழ் ஜூலை 25.
தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்க எம்.பிக்கள் மத்தியில் உரையாற்றிய போது ,  
“எனது தலைமையிலான ஆட்சி அமைந்ததற்கு பிறகே , தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது .  தீவிரவாதத்தின் பாதையில் பாகிஸ்தான் செல்வதை எனது அரசாங்கம் விரும்பவில்லை , “
மேலும் 40 தீவிரவாத குழுக்கள் உள்ளன என்றும் , அவர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 ஆயிரம் வரை இருக்கும் என்றும் இவர்கள் ஆப்கானிஸ்தான் , காஷ்மீரில் சண்டையிட்டவர்கள் ஆவர் என்றும் , இதனை நிறுத்திக் கொள்ள எனது அரசாங்கம் தற்போது முடிவு செய்துள்ளது , “ என்று இம்ரான் பேசியுள்ளார் .  அதே பத்திரிக்கை .
       அமெரிக்காவின் எச்சரிக்கை மேலும் , “ தீவிரவாத ஒழிப்பு , ஆப்கான் அமைதி பேச்சு வார்த்தைக்கு உதவுவது தொடர்பாக அமெரிக்காவிற்கு அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செயல்படுத்த வேண்டும் ,  தினகரன் ஜூலை 27 .
       “ இதுவரை இந்த மனப்போக்கு பாகிஸ்தானிடம் வெளிப்பட்டதில்லை “ .
       இது சமாதானத்திற்கான நல்ல சமிக்கை இல்லையா ?  இப்போது இந்தியா , பாகிஸ்தான் முரண்பாடுகளைப் பற்றிய அரசியல் பேச்சு முற்றிலும் நின்று போயிற்று .
       பிரதமர் மோடி டிரம்ப்பிடம் கோரிக்கை வைத்தாரா ?  இல்லை டிரம்ப் இப்படத்திற்கு கதையாக்குகிறாரா ?  யாரும் இதுபற்றி பேசவில்லை .
       டிரம்ப்பின் ராணுவ அரசியல் போர் தந்திரத்தை இந்தியா , பாகிஸ்தானிடம் காட்ட முயற்சிக்கிறாரா ?  இது பற்றி ஆளும் கட்சி , எதிர்கட்சி , திராவிட கட்சிகளிடம் பேச்சில்லை .
       சமாதானத்திற்கு பேச்சு பற்றி பேசும் காலத்திலேயே , கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளம் பிரதமர் மோடி பெருமிதம் .  தந்தி – ஜூலை 28 .
       கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது .  இது கோலிப் பண்டிகை கொண்டாட்டம் அல்ல .  போர் நடவடிக்கை சம்பந்தப்பட்டது .  இந்தியாவின் ஜீபிளி கொண்டாட்டம் .  தோற்றவரின் மனக்காயத்தை கீறுவதாக இருந்துவிடக் கூடாது .  அது வன்மத்தை தூண்டி சுயமோக வெறிக்கு வித்திடும் .
பாகிஸ்தானில் பல அதிபர்கள் வந்து போய்விட்டனர் .  இவர்களில் பிரதமர் இம்ரான்கான் வித்தியாசப்படவில்லையா ? பயங்கரவாதம் பற்றிய அவரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கதா ?  இல்லையா ?
       இம்ரான்கானின் அச்சம் இந்தியா , ஆப்கான் பற்றிய அவரின் அச்சம் உண்மையானதா ? இல்லையா ?
       பெரிய அளவிலான குணரீதியிலான மாற்றம் இல்லாவிட்டாலும் , சில அம்சங்களில் தெரியும் மாற்றம் கவனத்துக்குரியதாக ஆகாதா ?
       முற்றிலும் தடாலடியாக மறுக்கும் போது , ஒரு நாட்டின் பிரதமரின் முக்கியத்துவம் கேள்விக்குள்ளாகாதா ?  இதனால் அவருக்கும்  , மக்களுக்கும் ஆரோக்கியமற்ற சுயமோக மன உளைச்சலை இந்தியா கொடுப்பதாக ஒரு எண்ணம் தோன்றாதா .  அது சமாதான தேவையின் முக்கியத்துவத்தை பாதிக்காதா ?  கார்கில் வெற்றியை ஆளும்கட்சி தன் அரசியலின் பகடையாய் மாற்றி காட்டுகிறது .  நினைவு நாளை அடக்கி வாசித்தால் என்ன கெட்டுவிடும் .
       கொண்டாட்டம் தோல்வியை சந்தித்த எதிரிக்கு அவமானத்தை விளைவித்து சுயபோக வெறிக்கு வித்திடும் .  சுயகௌரவம் , சுயமதிப்புக்கான அச்சுறுத்தல் ஆகும் .  அது கட்டுக்கடந்த கோபம் , பல உணர்ச்சியை தூண்டும் .  சுயமோகிகளின் வெறியானது பயத்தின் அடிப்படையிலானது என்கிறது மனஅலசல்.  “ வெறி அவர்களின் பகுத்தறிவை சிதறடிக்கிறது. “
       பிரதமர் இம்ரான்கானின் மேற்கூரிய மாற்றம் அங்கீகரிக்காத போது இப்போதுள்ள உறவும் வக்கரிக்காதா ?
       “ அங்கீகரிப்பு மறுக்கப்படும் போதும் தப்பாக புரிந்து கொள்ளப்படும் போதும் இது நடக்கிறது , “
இந்தியா , பாகிஸ்தான் மக்களிடையே , விலக்குதலும் , மனிதாபிமானமற்ற தன்மையும் தீவிரமான அரசியல் முரண்பாடுகளிலும் , நிஜகரமான வெறுப்பு மனப்பான்மை நிலவுகிறது என்பது யதார்த்த உண்மைதானே !
இந்திய , பாகிஸ்தான் மக்கள் இரு அரசுகளின் அரசியல் சொல்லாடல்களையே கேள்விக்கு இடமின்றி தலையில் வைத்து கொண்டாடுகின்றனர் .
       சமரசரத்திற்கான முன் நிபந்தனைகள் ஆரோக்கியத்திற்கான நெறிகளை உள் அடக்கித்தானே இருக்க வேண்டும் . 
       ( மீடியாக்கள் இது பற்றி ஏதும் ஆரோக்கியமாக பேசினார்களா ?  என்ன ? )
                                                                     
                                   க . செ .

No comments:

Post a Comment