23 Feb 2019

இலவசமும் சுயமரியாதையும்


“ பெரியாரின் பெயரை மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிப்பது சுலபம்”,

                இலவசம்  நாளொன்றுக்கு 27 ரூபாய் விவசாயிகளுக்கு; 2018-ல் விவசாயிகளின் தற்கொலைக்கான காரணம் இன்னும் போகவில்லை.
                புயலாலும், மழை பொய்த்ததாலும் விவசாயம் விவசாயிகளின் குடியை கெடுத்து விட்டது.
                விவசாய கடன் தள்ளுபடி இல்லை.  விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் மூடி 6 வழிச் சாலை, 8 வழிச் சலை, மீத்தேன் வாயு, உயர் அழுத்த மின் கோபுரங்கள் என்று, கான்ட்ராக்டர்களுக்கும், மோட்டார் உற்பத்தி முதலாளிகளுக்கும், துணைபோகும் மந்திரிகள், அரசு ஊழிய உடம்புகள் அனைவரும் பெருக்க , வாழ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
                இந்த ரோடு போடுவதற்காக ஆயிரக்கக்கான மரங்கள் வெட்டப்படுகிறது, அழிக்கப்படுகிறது.செம்மரம் கடத்தலுக்கு துப்பாக்கிச் சூடு, அடிதடி.
                ஆனால், ரோடு போடுவதற்காக ஆயிரக்கணக்கில் மரங்கள் உயிரிழந்து, எரிபொருளாக, இன்ன பிறவாக ஆகிவிடுகிறது.
                உற்பத்திப் பெருக்கத்திற்கு நிலம் விஸ்தரிப்பு அவசியம்.  ஆனால் உற்பத்தியில் இருக்கும் விவசாய நிலங்களை அழித்து, மேல்தட்டு மேம்போக்கு மனம் அம்பானிகளுக்கு ஊழியம் செய்வதை வழிபட்டுக் கொண்டிருக்கிறது.
                விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 27 ரூபாய் இனாம் என்ற குரல் கேட்டதும், அரிசி  ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் 2000 ரூபாய் இலவசம் என்னும் எதிரொலி கேட்கிறது.
                இந்த மாய்மாலம் வரும் பாராளுமன்ற தேர்தல் உற்பத்தி பண்ணியது ஒரு நீண்ட முன்னுரை  மன ஏக்கத்தால் நடந்துவிட்டது.
                மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கு இலவசம் என்கிறார்களே! இலவசம் என்று மக்களின்
 ” சுயமரியாதை“ யை செருப்புக் காலால் நசுக்க ஆரம்பிக்கிறார்களே!!
                எந்த எதிர்ப்பும், முனுமுனுப்பும் தமிழ் மன வெளியில் வெளிப்படவில்லையே ?  காரணம் பெரியார் சொன்னமாதிரியா?அல்லது வேறா?
                பெரியார் இப்படிச் சொன்னார் :
பொதுமக்களிடம் பெரிதும் புத்தியும் இல்லை ,ஒழுக்கமும் இல்லை  என்கிற நிலை இருப்பதால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆளும் கட்சியும் வயிற்றுப் பிழைப்புக்குப் பொது நல வேடம் போட்டுக் கொண்டு திரியும் எந்த அரசியல் கட்சியும் திருந்துவதற்கு வகை இல்லாமலே போய்விட்டது”                                                                                                                                                                                               -பெரியார் கணினி
                பெரியார் மக்களிடமிருந்து எதிர்பார்த்தது தேர்தலுக்கான ஓட்டு   இல்லை;  மாறாக, அவர் மக்களிடம் எதிர்பார்த்தது புத்தி, ஒழுக்கம், மானம்.              
                மக்களிடம் இது வளர்க்கப்பட்டதா ? வளர்க்கப்படுகிறதா? 
                மாறாக, இலவசத்திற்கு கையேந்த வைக்கிறார்கள்.
                பெரியாரின் எண்ணப் போக்கு சுயராச்சியம் பற்றியதாக தெரிகிறது.
                அவர் கூறுவது . . . . .” மூட விசுவாசங்களிலிருந்தும் குருட்டு நம்பிக்கை களிலிருந்தும், கட்டுப்பாடுகளிலிருந்தும் சமூகத்தை விடுவித்து நம் மக்களைச் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அருகர் ஆக்குவதே உண்மையில் மேன்மையான முயற்சியாகும்.  
அதுவே சுய ஆட்சியைக் கொடுப்பதுமாகும் (அதே நூல்)
                மக்களை சுயமரியாதைக்கும் அருகதை ஆக்குவதே  அரசியல் பணி என்கிறார் பெரியார். 
                மக்கள் சுயமரியாதை உணர்வு அடைந்துவிட்டால் அரசியல் வெளியிலே அடையாளம் இன்றி வெளித்தள்ளப்பட்டு விடுவோம் என்ற பயமே இன்றைய ஆளும் கட்சிகள் மக்களுக்கு ஏதோ இவர்கள் வீட்டுப் பணம் போல் பெருக்கம் பேசிக்கொள்கிறார்கள்.
                இலவசம்:
                 உற்பத்தி உறவில் சிறுவிவசாயி, குறு விவசாயிகளையும் அதே போல் தொழில்களில் உள்ள சிறு, குறு உற்பத்தியாளர்களையும் அவர்களின் தொழில் மூலம் விருத்தி அடைவது; உற்பத்தி உறவில் அவர்களுக்கான அடையாளத்தோடு மரியாதையோடு, மானத்தோடு வாழ அரசாங்கம் ஆவன செய்வதை விடுத்து;
                 தினம் 27 ரூபாய், போன்ற இலவசத்தால் அவர்கள், மேலும், மேலும் சுய மரியாதையோடு, அவர்கள் வாழ்வை அவர்களின் சொந்தக்காலில் நிற்பதற்குப்பதிலாக, இலவசத்தின் பிடியில் முக்கி, காலக்கிரமத்தில் உற்பத்தி உறவிலிருந்து துண்டிக்கப்பட்டு உதிரிப் பாட்டாளிகளாக, நடைபாதை வியாபாரிகளாக, மாறிவிடும் அபாயத்திற்கு ஓட்டு பொறுக்கும் ஆட்சியாளர்கள் அன்பளிப்பை ஒரு அரசியல் தொழில் நுட்பமாக பயன்படுத்துகின்றனர்.
                இவர்களின் மனப்போக்கைப் பற்றி பெரியார் சொன்னது. 
   “எப்படி பிச்சைக்கு உங்களிடம் வருபவன் தாயே மகராசி, பசிக்கா வரம் தருகின்றேன், கொஞ்சம் பழைய கஞ்சி இருந்தால் ஊற்றுங்கள் என்று கேட்கிறானோ, அது போலத்தான் . . . . இவர்களும் அதை சாதிக்கிறேன்,
இதை சாதிக்கிறேன் என்று கூறி உங்கள் உள்ளம் குளிரும்படி புகழ்ந்து
ஓட்டுப் பிச்சைக்கு வருவார்கள்“
                மக்களை இந்த இலவச நுட்ப அரசியல்வாதிகளிடம் இருந்து விடுபட வானத்திலிருந்து எந்த வெண்புறாவும், கழுகு வாகனத்தில் பரந்து வந்துவிடமாட்டார்கள் பரந்தாமன்கள்  மக்கள்.
                 இந்த யோக்கிய மற்றவர்களை ஆட்சி கட்டிலில் ஏற்றியது யார்?
                மீண்டும் பெரியார்:
          “ஜனநாயகத்தில் மக்கள் அறிவுள்ளவர்களாகவும், கவலையுள்ளவர்களாகவும் இருந்தால்தான் யோக்கியர்கள்,
ஆட்சி செய்ய முடியும்.  மக்கள் முட்டாள்களாகவும், கவலை யற்றவர்களாகவும் இருந்தால் யோக்கியமில்லாதவர்கள் தான்  ஆட்சி ஆற்றுவார்கள்,”
                ஆக பெரியாரின் குரல் இங்கு ஆட்சிக்கட்டிலில் ஏறாமல், ஆண்டு தவறாமல் அவருக்கு மாலை மரியாதை செய்யும் கூத்து வழமையாக உள்ளது.  
                விவசாய உற்பத்தி பெருகவேண்டும் என்றால்,விவசாயிகள் உற்பத்தி செய்ய ஊக்கம் பெறவேண்டுமென்றால் பெரியார் கூறுகிறார்;
      ” விளைவிக்கப்படும் பொருளுக்கோ போதுமான விலை கொடுப்பதில்லை.இதனால் விளைபொருள் உற்பத்தியில் விவசாயிகளுக்கு ஆறுதலும் ஊக்கமும் இல்லாமல் போய்விடுகிறது “.

                இலவசம் பற்றிப் பேசுபவர்கள் பெரியார் யோசனை பற்றி என்ன சொல்லுவார்கள்.
                                                                                                                                                                - க.செ


14 Feb 2019

நனவிலி ( UNCONSCIOUS )

 ஒருசந்தி பானையை  அறியுமா நாய்?

                இந்தச் சொல்லாடல் மொழியில் உள்ளது.  ஆகவே இது ஒரு பிரக்ஞை.

                இந்த  பிரக்ஞைபூர்வமான மொழியின் கருத்து என்ன?
               
                புனித காரியத்திற்கான பானை என்று நாய் அறியாததால் அதைத் தொட்டு, நக்கி இருக்கலாம்.

                ஆக, நாய்க்கு புனிதம் /  புனிதமற்றது தெரியாது என்பது உள்ளுரை.
               
                இந்தச் சொல்லாடலைச் சொன்னவர், நாய்க்காக இதைச் சொல்லியிருக்க மாட்டார் எனப்          புரிகிறது.

                அப்படியானால், வேறு எதற்காக இது சொல்லப்பட்டிருக்கிறது.

                இங்குதான் நனவிலி ( UNCONSCIOUS ) பற்றி அறிய வேண்டிய அவசியம் வருகிறது.

                “ ஒருவருக்குள் ஒடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிரதிநிதித்துவமும் / காட்சியும் / மனநிலையும்
 ( repressed presentation ) ஒரே சமயத்தில் நனவுநிலை /  பிரக்ஞை (conscious  ) சார்ந்ததாகவும்  நனவிலி
 ( unconscious ) சார்ந்ததாகவும் இருக்கக்கூடும்.

                ஒடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் / காட்சி / மனநிலையானது, அன்றாட வாழ்வில் புழங்கும் மொழியில் உள்ள வார்த்தை என்பதால், அது பிரக்ஞை சார்ந்ததாகவும் ; ஒன்றோடொன்று தொடர்புடைய நனவிலிக் கூறுகளின் வலைப்பின்னலை ( network ) மீண்டும் ஒன்றிணைக்கக்கூடிய முரண்பட்டதொரு கூறாக  இருப்பதால் ( conflictual element  ) அது நனவிலி சார்ந்ததாகவும் இருக்கக்கூடும்.” என்கிறார் Anika .

                ஒருசந்தி  பானை, நாய் என்பதில் என்ன உறவு உள்ளது. இது  ஒரு முரண்பாடாக  தெரிகிறது.

                இங்கு ஒருசந்தி  பானை- நாய் என்பது ஒரு முரண் உறவாக வருகிறது.  ஏன் முரண்பட்ட ஒன்று பிரக்ஞை மொழியில் உள்ளது.

                “ நாய் “ என்ற முரண்பட்ட அச்சொல்லானது, நனவிலியில் பிறருக்கிடையிலான உறவில் உள்ள கூறாகும்” (element ).

                “ ஒருசந்தி  பானை அறியுமா நாய் ”

                இது ஒரு சொல்லாடல். நனவிலியானது  இரண்டு குறிப்புகளை   ( Inscriptions )  கோட்பாட்டு ரீதியில் தொடர்புபடுத்துகிறது, அதாவது “ நாய் ” என்ற குறிப்பானானது இரண்டுவித குறிப்புகளை ஒரே நேரத்தில் பதிவு செய்கிறது; ஆனால் வித்தியாசமான தளங்களில் ( Topographically) .

                ஒன்று உளவியல் பிரதிநிதித்துவம். அதாவது , நனவிலியில் பிரதிநிதித்துவப்படுகின்ற ஒன்று. அது, காயம்பட்ட / பாதிக்கப்பட்ட ,வாழும் / வாழ்ந்த அனுபவத்தின்   ( imaginary ) ஆற்றல் /  Counter Cathexes  (எதிர்பாற்றல்) ஆகும்.

                அதாவது, சம்பந்தப்பட்டவர் வாழ்வில் அனுபவமாக இருப்பது இது ;  தன் அருமை / பெருமை உணராது, தன்னை ஒருவர் அவமதித்துவிட்டதாக நினைக்கும்பொழுது  தன் மேன்மையை ஒருசந்தி  பானையாகவும் ; பாதிப்பவரை / தன்னை மதிக்காதவரை, ஒருசந்தி பானையின் அருமை தெரியாமல் நக்கிச் செல்லும் நாயாகவும் நனவிலியில் உள்ளது.  தன் சொந்த மனக்காயத்தை உருவகமாக சொல்லாடலில் வெளிப்படுத்துகிறது.

                சற்று விரிவாக இதுபற்றி பேசினால் .  . . . . .

                மனித அனுபவத்தின் அனுபவத்தளம் ஒன்றுள்ளது – (மொத்தம் அல்ல) .  அந்த மனித அனுபவம் வெளிப்படுத்த சாத்யமற்றதாக ( real  ) உள்ளது.  ஏற்பட்ட அதீதமான வலி அது.  இதை எதிர்கொள்ள  சாத்யமற்ற சூழலில் செயல்பட ஒருவகையான புனைவு பாதிக்கப்பட்டரிடமிருந்து பிறக்கிறது.
                 “ஒரே நேரத்தில் நனவுநிலை / பிரக்ஞை  ( conscious  ) சார்ந்ததாகவும் நனவிலி சார்ந்ததாகவும்
 ( unconscious  ) அது இருக்கக்கூடும்.
                பாதிக்கப்பட்டவரின் பிரதிநிதித்துவம், மனநிலை அன்றாட வாழ்வில் புழங்கும் மொழியில் உள்ள வார்த்தையாக இருக்கும் பொழுது, அது பிரக்ஞை சார்ந்ததாகத் தெரிகிறது.  இங்கு ஒருசந்தி பானையும்  நாயும்  புனைவு (myth ) வகைப்பட்டது. அது  பாதிப்பின் (affect ) பிரதிநிதித்துவம்;

                தன்னைப்  பாதித்தவர் நாயாக உருவகமாகிறது ; நான் /  தான் என்ற சுய மோகம் (அகந்தை)
 ” ஒருசந்தி  பானை” யாகிறது.
                அதாவது மதரீதியிலான கருத்தாக்கமாக; அதாவது, ஒருசந்தி  பானை  புனிதமானது.
                  நோன்பு , விரதம்விடுதல் போன்றவற்றுடன் சம்பந்தமில்லாத நபர்கள் ஒருசந்தி பானையைத்               தொட்டால் தீட்டு, புனிதம் கெட்டுவிடும் என்பதாகும்.
                ஆனால், புனிதம் / தீட்டு என்பது பற்றி நாய்க்கு தெரியுமா.
                 இந்தப் போக்கானது, பாதித்த நபரை சமூக மனிதனாக ஏற்பதில்லை ;  தன்னைப் புனிதனாகவும் ,தான் எதிர்கொண்ட நபரை தன் அருமை தெரியாத முண்டமாக, நாயாக (உருவகம்) பாவித்துவிடுகிறது..
                இந்த எதிர்வினை மற்றொரு முரண்பாட்டை துவக்குகிறது.  இதில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.
                ஆனால், பாதிப்புக்குள்ளானவர் பாதகமான / முட்டுச்சந்து  ( impasse ) சூழலில் தன்னை புனிதனாக / ஒருசந்தி பானையாக பிரதிநிதித்துவப்படுத்தியும், பாதித்தவரை  நாயாக உருவகமாக்கியும் சூழலை எதிர்கொள்கிறார் எனலாம்.  சொல்ல முடியாத , வெளிப்படுத்த முடியாத வலியை (real ) இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.

                இந்த பிரக்ஞைமொழியுடன் நனவிலிமொழி சேர்ந்தும் ஒரு கவித்துவம் / புனைவு நனவிலியாக,
 ” ஒருசந்தி  பானையை  அறியுமா நாய் “ என்று உருவகமாக்குகிறது எனலாம்.

                லெக்கான் Myth  பற்றிய விளக்கத்தில் “ Myth is a way of confronting an impossible situation by the successive articulation of all of the forms of impossibility of solution” என்கிறார்.                                                                                                                                                                                                                                                                                                                                  -க.செ