(
Between
Public intellectual and Academic Celebrity )
-Ebiran Bar – El.
“ கல்விப்புல பிரபலங்கள் ” ( Academic Celebrity ) குறித்த ஆய்வு
புதியதல்ல. இந்தத் தலைப்பில்
இல்லாவிட்டாலும் பல ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் தொடர்கின்றன . கல்விப்புல பிரபலங்கள் என்று கூறுவதன் மூலம்
நாம் குறிப்பாக எதை , எவரை அர்த்தப்படுத்துகிறோம் ? புதிய விசயங்களை வெற்றிகரமாக கண்டுபிடிக்கிற
கல்வியாளர்களை ( innovative
academic ) நாம் குறிப்பிடுகிறோமா ? உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட
கல்வியாளர்களை நாம் குறிப்பிடுகிறோமா ?
என்ற கேள்விகள் எழுகின்றன .
பொதுவாக பரந்துபட்ட அறிவாளிகளையும் , குறிப்பாக மக்கள் திரள் அறிவாளிகளையும் (
Public intellectuals ) ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் , கல்விப்புல பிரபலங்கள் ( Academic
Celebrity ) என்கிற பூடகமான சொல்லை சரியாக
வரையறுப்பதற்கும் இக்கேள்விகள் உதவக்கூடும் .
ஆக , இதன் நோக்கம் இருபடியானதாகும் .
முதலாவதாக கல்விப்புல பிரபலங்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பது ; இரண்டாவதாக , கல்வித்துறை ஆய்வுகளுக்குள்
இப்பிரச்சினை எப்படிக் கையாளப்படுகிறது என்பதை விவாதிப்பதுமாகும் .
கல்விப்புல
பிரபலங்கள் (Academic Celebrity ) யார் ?
கல்விப்புல பிரபலங்கள் எனப்படுபவர் யார் ?
இவர்களுக்கும் மக்கள் திரள் அறிவாளிகளுக்கும் ( public intellectuals )
உள்ள உறவுகள் என்ன? மக்கள் திரள் தளமும் , கல்வித்துறையும் ஒரு சமூகத்தில் வேறுபட்ட தளங்களாகும் . ஒரு சில மக்கள் திரள் அறிவாளிகள் ( கலைஞர்களைப்
போல ) கல்விப் புலம் சார்ந்தவர்கள் அல்ல .
ஒரு சில கல்விப்புல பிரபலங்கள் மக்களுக்கு அறிமுகமற்றவர்களாக உள்ளனர் ( Bruno Lator இவர்களுள் ஒருவர் ) ; ஒரு சிலர் இரண்டு பிரிவையும் சார்ந்தவர்களாக உள்ளனர் .
கல்விப்புல பிரபலங்கள் எனப்படுவோர் ஒரு உபகுழுவினர் ( sub - set ) ஆகும் ; பாப் – கலாச்சாரம் அல்லது விளையாட்டுத்துறை சார்
பிரபலங்களைப்போல இவர்களும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் , உதாரணமாக
கல்வித்துறையில் , பணிபுரிபவர்கள் . ஒரு
சிலர் மக்களுக்கு அறிமுகமற்றவர்களாக இருந்தபோதிலும் அறிவாளிகள் ( intellectual ) என்ற பரந்தபட்ட பிரிவிற்குள் இவர்களை ஏற்றுக் கொள்ளலாம் . அறிவாளிகளாக இல்லாத கல்விப்புல பிரபலங்கள்
எவரும் இருக்க முடியாது .
கல்விப்புல பிரபலங்கள் கல்வித்துறையில் உள்ள தங்களின் உயர் அந்தஸ்தாலும் ( high status ) , அங்கீகாரத்தாலும் பயன் பெற்றவர்கள் . இவர்கள் பிறரால் அறியப்பட்டவர்களாக
, கற்பிப்பாளர்களாக , பிறரால் பேசப்படுபவர்களாக (known,
taught, talked about) உள்ளதால் கல்வித்துறையில்
பெரும் பதவிகளை வகிப்பவரகள் ( occupy much room ) இசைத் துறையில் Justin Bieber போன்ற பிரபலமானவர்கள் இவர்கள் . இவர்கள் வெகுஜனப் பிரச்சினைகளில்
ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் .
மக்கள் திரள் அறிவாளிகள் ( Public
Intellectual ) யார் ?
மக்கள் திரள் அறிவாளிகள் எனப்படுவோர் வெகுஜனப் பிரச்சினைகளில் அக்கறை
செலுத்துபவர்களாவர் (intervening
in public affair) .
மக்கள் திரள் தளமானது , கல்விக் கழகங்களிலிருந்து வேறுபட்டதாகும் . உதாரணமாக , லண்டனும் , கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகமும் ; நியூயார்க்கும் ஏல் பல்கலைக்கழகமும்
வேறுபட்ட தளங்களாகும் .
மக்கள் திரள் அறிவாளிகள் , அவர்கள் செயல்படும் வழக்கமான தளத்தில் (routine
field of activity ) ( கலை அல்லது
அறிவியல் , இன்ன பிற தளத்தில் ) கண்டடைந்த குறியீட்டு ஆதாரங்களை / அறிதலை ( symbolic
capital gained
) , அரசியல் தளத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காகவும் , ஒட்டு மொத்த
மக்கள் பிரச்சினையில் ஒரு நெறிசார் நிலைப்பாட்டினை ( ethical
stand ) உருவாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்பவர்களாவர்.
கல்விப்புல
பிரபலங்களுக்கும் அறிவாளிகளுக்கும் இடையிலான உறவினை இப்போது பார்க்கலாம் . முதலாவதாக , அறிவாளிகள் (intellectual ) உள்ளனர் , அறிவாளிகளில் சிலர் கல்வித்துறை பிரபலங்களாக உருவாகிறார்கள் ; சிலர் (இவர்களாகக்கூட இருக்கலாம் ) மக்கள் திரள்
அறிவாளிகளாக உருவாகிறார்கள் .
உதாரணத்திற்கு ஸ்லவோஜ் சிசாக் ( Slavoj Zizek ) இந்த விசயத்தில் குறிப்பிடத்தக்க ஒருவராவார் . அவர் தத்துவ – சூப்பர்ஸ்டார் ( Philo – super star ) (1) அவர் ஒரு அறிவாளி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை (2) மக்கள் திரள்
அறிவாளிகள் குறித்த மேற்கூறிய வரையறைப்படி சிசாக் நிச்சயமாக ஒரு மக்கள் திரள்
அறிவாளியாவார் . (3) கல்வித்துறைக்கு
அப்பால் அவர் நன்கு அறியப்பட்டவர் . ஆனால், கல்வித்துறைக்குள் அவர் ஏற்கப்படுவதும்
, அவரது புகழும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது
. உதாரணமாக , பல்கலைக்கழக
பாடத்திட்டத்தில் ( syllabus ) அவர் பெருமளவில் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆக , கல்வித்துறைக்குள் அவரது பிரபல அந்தஸ்து (Celebrity) பெருமளவில் ஏற்கப்படவில்லை . இந்த
நிலைமையானது , அறிவாளிகளையும் , கல்விப் புலத்தவர்களையும் ஆய்வு செய்வதற்குரிய
முக்கியமான விசயத்திற்கு வழிவகுக்கிறது .
......... சிசாக் தனக்கென
ஒரு நிலைப்பாட்டினையும் ( Positioning ) செயல்பாட்டையும் (performance ) கொண்டுள்ளார்.
நான் “ சிசாக் விளைவுகள் “ ( Zizek effects ) என்று
குறிப்பிடுகின்ற கீழ்க்கண்ட முறைகளில் தனது கருத்துக்களை பரப்புகிறார் .அவை :
(1) விமர்சகர்களுடன் தெளிவான / பரந்துபட்ட தொடர்புகள் : ( Intricate relation to critic )
பெர்ரி ஆண்டர்சன் , ஜுடித் பட்லர் , அலென் பேடோ , ப்ரட்ரிக் ஜேம்சன் ( Perry
Anderson, Judith Butler , Alain Badiou , Fredric Jameson ) இன்னும் பலருடன் இணைந்து , உலகளாவிய சூழல்கள்
குறித்த தீவிரமான , விமர்சன ரீதியான சிந்தனைப் போக்கில் முன்னணியில் உள்ளார் ;
உள்நாட்டுச் சூழல் குறித்த பிரச்சினைகளில் அவர் மூவரணியுடன் சேர்ந்து
ஹெகலிய – லக்கானிய அடிப்படையில் ஆய்வுகளை முன்வைக்கிறார் .
(2) இதழியலாளர்களுடன் ( Journalists ) நெருக்கமான
உறவுகள்
9 / 11 மனக்காயம் ,
2008 களின் பொருளாதார நெருக்கடிகள் முதல் அராப் வசந்தம் ( Arab Spring ) , அகதிகள் பிரச்சினை வரை ,
உலகளாவிய மாபெரும் நிகழ்வுகள் குறித்து தனது கருத்தையும் ; ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த
கருத்துகள் இக்காலக்கட்டத்தில் எப்படி தங்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன
என்பதையும் ; இக்கருத்துகளுக்கு பதிலாக மாற்றுக்
கருத்துக்களையும் இதழ்கள் மூலம் தொடர்நது முன்வைத்து வருகிறார் .
(3) புத்தக வெளியீட்டு
தொழிலில் உறுதியான நிலைப்பாடு ( Strong
Position in the Publishing Industry ) .
VERSO , MIT ,
DUK போன்ற பதிப்பகங்களில் சிசாக் ஒரு பதிப்பாசிரியராக (Editor ) பல ஆண்டுகளாள
தனித்தன்மையான நிலைப்பாட்டினை பேணி வருகிறார் .
இந்நிலைப்பாடு அவரை மிகச் சிறந்த படைப்பாளராக ஆக்கியுள்ளது . அவர் சுமார் 70 புத்தகங்கள் பதிப்பித்துள்ளார்
. பதிப்பாசிரியராக அவர் சக படைப்பாளிகளை
அறிமுகப்படுத்தியுள்ளார் .
4 ) பல்வேறு
செய்திப் பரவல் சாதனங்களைப் பயன்படுத்துவது : -
பல்வேறு செய்திப்பரவல் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக அணுகக்
கூடியவராக உள்ளார் . அவரது புத்தகங்கள் ,
திரைப்படங்கள் வலைத் தளங்களில் கிடைக்கின்றன .
இவற்றின் மூலம் அவரது கருத்துரைகளையும் , போதனைகளையும் மணிக்கணக்காக
பார்க்க முடியும் . இவைகள் அறிவார்ந்த
நடவடிக்கையில் பங்கேற்கின்றன .
(5) கலாச்சார உணர்வுகளைப் பிரதிபலிக்கினற ஆய்வுகள்
.
தற்போதைய உலகச்
சூழலையும் , அதனை வரையறுத்தவர்கள் குறித்தும் அவரது சமசரமற்ற நிலைப்பாடானது அவரை
ஒரு தார்மீகமான அளவுகோலாக ( moral compass) கருதுவதற்கு இடமளித்துள்ளது . ( குறைந்தபட்சம் இடது சாரிகளுக்கு ) ; against
the usual notion that any grand claim for truth and universality is doomed for
being proto – facist .
மேற்கூறிய
5 செயல்பாடுகளிலும் சிசாக் ஈடுபடுகிறார். அவர் தனித்துவமும் செயல்பாட்டுத் திறனும்
கொண்ட சொல்லாடல்களைப் பயன்படுத்துகிறார் . பொதுவாக , அவரது மொழி தனித்துவமான ஒன்றாகும் . அவர் மக்கள் திரளால் வரவேற்கப் படுவதற்கும் ,
கல்விப் புலத்தால் புறக்கணிக்கப்படுவதற்கும் அவரது மொழி முக்கியமான காரணமாகும் . நோம்
சாம்ஸ்கியுடனான ( Noam
Chomsky ) விவாதங்களில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும்
.
அவர் பிறரைச் சாடுகிறார் / சபிக்கிறார் ( curses ) ; ஆபாசமான எள்ளல்களையும் ( dirty jokes ) , AND ஜோக்குகளையும் பயன்படுத்துவதை தனது வழிமுறையாகக்
கடைப்பிடிக்கிறார் . சிசாக்கின் விவாதங்களில் இந்த விசயங்கள் தன்னளவில் பெரும்
பங்காற்றுகின்றன . அவை ஒரு கருத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் கருத்தை
உருவாக்கவும் செய்கின்றன . ஹெகல் , லெக்கான் கருத்துக்களை கையாண்டுகொண்டு சிசாக் தன்னை ஒரு அறிவாளியாக ( intellectual ) நிலைநிறுத்திக்
கொள்கிறார் ; அத்துடன் , மக்கள் திரள் போராட்டங்களில் மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு செயல் பாட்டாளராகவும் ( activist ) உள்ளார். பொது அறிவையும் , அன்றாட
உதாரணங்களையும் பயன்படுத்தி மக்கள் திரள் போராட்டங்களுக்கு அர்த்தத்தை / நியாயத்தை
( meaning ) கொடுக்கிறார்.
மொழியாக்கம் : பிட்சு
குறிப்பாக , மேற்கூறியவைகள் அறிவாளிகளின்
அடிப்படைக்குணாம்சமாகச் சுட்டப்படுகிறது . இங்கு , நமது சூழலில் பல்கலைக் கழக
துணைவேந்தர் பதவிகள் கூட விலை பேசப்பட்டதாக உள்ளது . இதையும் மீறித்தான்
கல்வியாளர்கள் இயங்க வேண்டியுள்ளது . கல்விப்புலங்கள் எல்லாம் நிவாகத்தினரின்
மனப்போக்கு ( mood ) பார்த்து இயங்குகின்றன. பொத்தாம் பொதுவான சுதந்திரம் மட்டுமே
பேராசிரியர்களுக்கு உண்டு .
இதை எதிர்த்த சமூகப் போராட்டக்
களம் தயாரான மாதிரி காணப்படவில்லை என்ற விசனம் சில கல்வியாளர்களிடமிருப்பது
உண்மைதான். ஆனால் , எதிரில் இருக்கும் மலை போன்ற நிலப்பிரபுவத்த அமைப்பை
கேள்விக்குட்படுத்த ஒரு ஊழிக் காற்றாவது தேவைப்படுகிறது.
அது எங்கிருந்து புறப்படும் ? கல்விப்புலம் கடந்த சமூகத் தளத்துடன்
உறவில்லாமலேயே இது நடப்பது சாத்தியமா ? ஒரு வெளிப்படையான விவாதம் சமூகத் தளத்தில்
பேசப்படவேண்டிய அவசியம் தெரிகிறது .
வருமானம் லகரங்களை நெருங்க , நெருங்க பார்வையின் கோணங்கள் குறுகி விடுகிறது
என்பதை அரசியல் ஆட்சியாளர்கள் தெரிந்துள்ளனர் . அதை நன்றாக உபயோகப்படுத்தவும்
செய்கின்றனர். இதுவும் ஒரு தடைக்கல்தான் சமூகப் பார்வைக்கு.
அறிவாளிகளின் தளம் ஆரோக்கியமாகப்
படவில்லை . முதலாளியப் பத்திரிக்கைகளை உபயோகப்படுத்துவது வேறு ; அதை நம்புவது
என்பது ( குத்தகைக்கு எடுப்பது ) வேறு. தொழில்முறை அரசியல்வாதிகளை ( professional politicians ) மையப்படுத்தும் போக்கும் கேள்விக்குரியதே . தொழில்முறை அரசியல் நடைமுறையை
விமர்ச்சிப்பதும் பரபரப்புகளை ( sensational )
காட்சிப்படுத்தும் ஊடகங்களை அலங்கரித்து கருத்துரைகள் சொல்வதும்
அறிவுப்புலத்திற்கு எவ்விதத்திலும் உதவி புரியாது .
ஆசிரியர்
க.செ