எப்படி , என்ன பெயர் சூட்டுவது ? ... இதற்கு . பிந்தைய நவீனத்தில் , புராதான காலத்து
இன்பத் துய்ப்பு , விருப்பு , என்னென்ன வடிவங்கள் , தனிமனிதர்களுக்கிடையிலான
உறவுகளில் ( inter
personal relations ) மாற்றங்கள் ; பதிலிகளாக ; இப்போது
ஓர் நவீனத்தின் Myth - ஆக , கட்டுடைக்கப்படவேண்டிய ஒன்றாகத்
தெரிகிறது இந்நிகழ்வு .
இந்த சான்பிராசிஸ்கோ ,
இந்திய சாப்ட்வேர்காரர்களின் பிழைப்பு நிலமது .
இயற்கைச் சீற்றத்திற்கும்
பஞ்சமில்லாதது . கொடைப் பணக்காரர்களின் கூடாரமது .
நிகழ்வு இதுதான் :
புதிய சமூக நிகழ்வுக்
கதைகள் ( Tales of new social order )
- “ Commanded
to Enjoy ” - Gary S. Marshall -ல்
“ சான்பிராசிஸ்கோ நகருக்கு மட்டுமேயான
நிர்வாக ஆவணத்தை (administrative document ) பயன்படுத்தி ஆண்பாலின ஓரினச் சேர்க்கையாளர் இருவர் ( two subjects forming
a gay couple ) திருமணம்
செய்துகொண்டனர் .
இந்த ஆவணத்தை
கலிபோர்னியா மாநிலமோ அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சி அரசாங்கமோ
சட்டபூர்வமாக ஏற்பதில்லை .
திருமணம்
புரிந்துகொண்ட இந்த இணை / தம்பதிகள்/ etc குழந்தை பெற விரும்பினர் ; குறிப்பாக , உயிரியல் ரீதியான குழந்தையை ( biological child ) பெற விரும்பினர் . அவர்கள் இந்த விசயத்தில்
தீர்மானகரமாக இருந்தனர் .
இந்த இணை இரண்டு
பெண்களை “ வாடகைக்கு” ( hire ) அமர்த்திக் கொண்டது .
இவர்களில் ஒருவர் கரு முட்டை வழங்குபவர் (
Egg donor ) ;
மற்றவர் , கருவினைச்
சுமந்து பெற்றெடுப்பவர் ( Surrogate mother) ;
செயற்கைக் கருத்தரிப்பு மூலம் ( in – vitro fertilization )
கருத்தரிக்கப்பட்டது.
|
கருமுட்டை வழங்கியவர் , பிறக்கும் குழந்தைக்கு
16 வயது ஆகும்போது குழந்தையைப் பார்க்கலாம் ; கருவைச் சுமந்து பெற்றெடுத்தவர்
குழந்தை பிறப்பிலிருந்தே குழந்தையைப் பார்க்கலாம் என்ற ஒரு
ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டது .
மகப்பேறு ....?
இப்போது புதியதொரு எல்லை / விதி ( frontier ) வரையறுக்கப்பட்டு
விட்டது . இந்தச் சட்டப் பிரிவில் ( legal clause ) மரபு ( tradition ) மாற்றப்பட்டுவிட்டது ; மகப்பேறு (maternity ) குறித்த புதிய
வரையறை வகுக்கப்பட்டுவிட்டது .
“ இந்தத்
தாய்களின் சங்கிலித் தொடரை “ ( chain of mothers ) ஒருமுறை அனுமதித்து விட்டால் இச்சங்கிலித்
தொடரை நீங்கள் பல்கிப் பெருக்கிவிடலாம் ( multiply in plural) [விவிலிய அர்த்தத்தில் ( Biblical sense ) ] என்கிறார் Laurent ( in Marshall 2007 )
இந்த மறு உற்பத்தி தொழில் நுட்பத்தில் ( technology of reproduction ) ஒரு பெண் என்ன பங்கு வகிக்கிறார் என்பதைப்
பொருத்து ஒவ்வொரு தாயின் அந்தஸ்தும் வரையறுக்கப்படும் .
சான்பிராசிஸ்கோவில் ,
பொதுசேவை நிறுவனங்கள் ( public service entities ) , இவற்றின் முகவர்களாக( agents ) உள்ள பொது நிர்வாகம் , நிர்வாகிகள் ( public administration
,administrators ) போன்றவை (புதிய)
அடையாளம் , சுயம் ( Identity , Self hood ) குறித்த சொல்லாடலில் நன்கு
வரையறுக்கப்பட்டுவிட்டன .
இனிவரும் காலத்தில் இதன் புரிதலை ஒட்டியே அரசு
நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் இயங்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் உள்ளன .
சமூக வாழ்வும் ( social life ) ; மரபு வழி அதிகார அமைப்புகளானது ( traditional authority structures ) தனித்தன்மைகளை ( peculiarity ) வலியுறுத்துகிற , நெகிழ்வுப்போக்குடைய கட்டமைப்புகளாகவும் ( diffused structures ) எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மேற்கூறிய
உதாரணம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. ஆனாலும் , ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக்
கொள்ளும் நிலையில் ( in isolation ) அடையாளமானது ( identity ) பெறப்படுவதில்லை ;
மாறாக , ஒரு சமூகச் சூழலிலேயே அடையாளம் பெறப்படுகிறது .
அதாவது ,பிறருடனான கூட்டுறவில்தான் நமது
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இந்த அர்த்தத்தில் இந்த சமூக உறவுகளின்
கட்டமைப்பினால் நாம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறோம் . ( சமூக உறவுகளின்
வலைப்பின்னல் ) அதிகாரக் கட்டமைப்பு மாறும்போது ; சமூகம் திறம்பட செயல்படுவதற்கு
பெருமளவில் பொறுப்புடையவர்களாக , பொது நிர்வாகத்தில் உள்ள நாம் தற்போதைய
மாற்றங்களுக்கு ஏற்ற விதத்தில் செயல்படவேண்டியுள்ளது.
நீடித்து நிலவுகிற சமூக உறவுகளானது ( social bonds ) , எவ்வளவுதான் மறைக்கப்பட்டாலும் , சமூக
ஒழுங்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றங்களுக்கு ஏற்புடையதாகவே தெரிகின்றன . தந்தை
அதிகாரம் ( paternal authority ) குறித்த மரபான கருத்துக்களுடன் , தற்போதைய “
கட்டளைக்கிணங்க அனுபவித்தல் “ ( commanded to enjoy ) என்பதையும் எப்படி எதிர் கொள்வது என்பதே
இப்போதுள்ள பிரச்சினையாக உள்ளது சான்பிரான்சிஸ்கோவில் “ .
தமிழாக்கம் : பிட்சு
( ஆதாரம் : University of Nebraska
, Omaha )
மற்றமையின் அடுத்த கட்டுரையாக ,
ப்ராய்டின் “ படைப்பாளிகளும் பகற்கனவு காணலும் ”
( 1908 ) என்ற தமிழாக்க கட்டுரை இரண்டு அல்லது
மூன்று பகுதிகளாக வெளிவர இருக்கிறது .
- தமிழாக்கம்
: முனைவர் கனக விநாயகம்.
|